திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை

திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.புஷ்பராஜிக்கு மது பழக்கம் இருந்தமையால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமா விளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது48). இவரது மனைவி சந்தா னமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (கூயது 20), சன் சால்ட் கிங் (17) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் கூலி வேலை செய்து வந்தார். புஷ்பராஜிக்கு மதுபழக்கம் இருந்தமையால், தினமும் மது குடிவுவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பகல் வழக்கம் போல், மது அருந்தி விட்டு புஷ்பராஜ் வீட்டுக்குசென்றுள்ளார். அப்போது சில வீட்டு பொருட்கள் வீட்டின் சில பகுதிகளில் கிடந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி கிடக்கிறது. என மனைவி சந்தான மேரியையும், மகள் லிட் லார்ட் ஆப் குயினை வீட்டை விட்டு வெளியே போகுமாறு புஷ்பராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து, சந்தானமேரி தனது மகளுடன், பக்கத்து தெருவான சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாலை அதே தெருவைச்சேர்ந்த ஜான்பிட்டர் என்பவர், ஊர் கூட்டத்திற்கு புஷ்ப ராஜை அழைக்க சென்று ள்ளார். பலமுறை சத்தம் போட்டும் புஷ்பராஜ் வராததால், திறந்திருந்த கதவின் வழியே ஜான்பீட்டர் எட்டி பார்த்தார். அப்போது, புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து, சந்தானமேரிக்கு தகவல் கொடுத்து, உடலை இறக்கி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், உடலை கைபற்றி, காரை க்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com