search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பெண் அமைச்சருக்கு கொடுமை நடந்துள்ளது:  தி.மு.க., கம்யூ. மாதர் அமைப்பு கண்டனம்
    X

    புதுச்சேரியில் பெண் அமைச்சருக்கு கொடுமை நடந்துள்ளது: தி.மு.க., கம்யூ. மாதர் அமைப்பு கண்டனம்

    • அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு.
    • பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 40 ஆண்டுக்கு பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு சாதி, பாலின தாக்குதலே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசியல் கட்சியினர் அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அமைச்சர் மீது ஊழல் புகார் ஏதும் இல்லை. அவர் வகித்த துறைகளுக்கு நியமிக்கப்பட்ட செயலர்கள், தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதலமைச்சர், எம்.எல்.ஏ.க்களிடம் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என முதலமைச்சர் தெரிவிக்க வேண்டும்.

    இது காரைக்காலுக்கான பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டது. பட்டியலின அமைச்சர் பதவியை வேறு யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? முதலமைச்சர் பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் என்ற பெருமை கிடைத்திருந்தது. எனவே இதை சிந்தித்து பார்த்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம்:-

    அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானது. அவரின் குற்றச்சாட்டுகள் அரசியல் ஜனநாயகத்திற்கு இழுக்கு. தலித் பெண் என்ற காரணத்தால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன். ஆதிக்க சக்திகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். இதனால் அமைச்சராக தொடர முடியவில்லை என கூறியுள்ளது.

    என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசுக்கு பெரும் அவமானம். 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருகிறோம் என பிரதமர் மோடி வாய்ச் சவடால் விடுகிறார். பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் சக பெண் அமைச்சருக்கு எதிராக எவ்வளவு கொடுமையை செய்துள்ளது என்பதை நாடு அறிகிறது.

    சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்.எல்.ஏ.வுக்கும் வழங்கி அமைச்சர் பதவியை என்ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசு அதிகார பீடத்திலிருந்து இறக்கியுள்ளது. இது பெண் சமூகத்திற்கு எதிரான ஆணாதிக்க மன நிலையை பிரதிபலிக்கிறது. அமைச்சருக்கு ஏற்பட்ட அநீதி.

    இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தசரதா:-

    ஒரு பெண் அமைச்சருக்கே இப்படிப்பட்ட நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது என்றால் சாதாரண பெண்கள் நிலை என்ன? பாராளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேற்றப்பட்ட நேரத்தில் புதுவையில் 40 ஆண்டுக்கு பின் அமைச்சராக ஒரு பெண் இருப்பதை ஏற்க முடியாத ஆணாதிக்க அரசியல்வாதிகள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

    அமைச்சர் சந்திரபிரியங்காவின் ராஜினாமாவுக்கு காரணமான என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம்

    Next Story
    ×