search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahatma Gandhi Jayanti"

    • முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
    • 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் போலீஸ் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்படும் எனவும், முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    விற்பனை தொடங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க கடையில் குவிந்தனர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.

    • மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    சென்னை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    மேலும் அங்கு மகாத்மா காந்தியின் புகழை போற்றி பாடும் பஜனை பாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கொண்ட பஜனை குழுவினர் பங்கேற்று மகாத்மா காந்தியின் புகழை போற்றும் வகையில் பஜனை பாடல்களை பாடினார்கள்.

    இதனை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கேட்டு ரசித்தனர்.

    ×