என் மலர்
புதுச்சேரி

காரைக்கால் வ.உ.சி அரசு பள்ளி சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரைக்கால் வ.உ.சி அரசு பள்ளி சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
- .காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர்.
- பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை. ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, அக்டோபர் 6-ந் தேதி முதல் 5 நாட்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மூலம், போதைப் பொருளுக்கு எதிராக, காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர். இதன் முதல் நிகழ்ச்சியாக, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பேரணி, பள்ளிகளை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் பதாதைகள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் பள்ளியில் துணை முதல்வர் கனகராஜ், வட்டார வளர்ச்சித்துறையின் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.






