search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆரோவில் அருகே பைக் தரகர் வெட்டிக்கொலை
    X

    ஆரோவில் அருகே பைக் தரகர் வெட்டிக்கொலை

    • பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு இவரது மகன் முரளிதாஸ் (வயது 38).

    இவர் மோட்டார் சைக்கிள் அடகு வைத்து பணம் பெற்று தரும் தரகர் வேலை பார்த்து வந்தார்.

    முரளிதாஸ் அவரது நண்பரான திண்டிவனம் அடுத்த பழமுக்கல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மோட்டார் சைக்கிளை புதுச்சேரியில் அடமானம் வைத்து ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    ஆனால் பாபுவின் மோட்டார் சைக்கிளை ரூ.11 ஆயிரத்திற்கு முரளிதாஸ் அடமானம் வைத்து மீதியுள்ள ரூ.5 ஆயிரத்தை அவரே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் கழித்து இது பாபுவுக்கு தெரிய வரவே அடமானத் தொகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் தனது மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.

    பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அவர் நண்பர் இருவரும் நேற்று அச்சரம்பட்டில் உள்ள முரளிதாஸ் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் அவர் இல்லை.

    வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற பாபுவின் எதிரே திடீரென வந்த முரளிதாசை அழைத்து அங்குள்ள ஏரிக்கரையில் வைத்து மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டு பாபு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பாபு பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முரளிதாஸ் காலில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முரளிதாசை மீட்டு அங்கிருந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து முரளிதாஸ் மைத்துனர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பாபு மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×