என் மலர்
புதுச்சேரி
- திருநள்ளாறில் தூக்கு போட்டு கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- புஷ்பராஜிக்கு மது பழக்கம் இருந்தமையால், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமா விளங்கை மாதாகோவில் தெருவைச்சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது48). இவரது மனைவி சந்தா னமேரி. இவர்களுக்கு, லிட் லார்ட் ஆப் குயின் (கூயது 20), சன் சால்ட் கிங் (17) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். புஷ்பராஜ் கூலி வேலை செய்து வந்தார். புஷ்பராஜிக்கு மதுபழக்கம் இருந்தமையால், தினமும் மது குடிவுவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று பகல் வழக்கம் போல், மது அருந்தி விட்டு புஷ்பராஜ் வீட்டுக்குசென்றுள்ளார். அப்போது சில வீட்டு பொருட்கள் வீட்டின் சில பகுதிகளில் கிடந்ததாக கூறப்படுகிறது. ஏன் இப்படி கிடக்கிறது. என மனைவி சந்தான மேரியையும், மகள் லிட் லார்ட் ஆப் குயினை வீட்டை விட்டு வெளியே போகுமாறு புஷ்பராஜ் சத்தம் போட்டதாக தெரிகிறது.
தொடர்ந்து, சந்தானமேரி தனது மகளுடன், பக்கத்து தெருவான சிவன்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மாலை அதே தெருவைச்சேர்ந்த ஜான்பிட்டர் என்பவர், ஊர் கூட்டத்திற்கு புஷ்ப ராஜை அழைக்க சென்று ள்ளார். பலமுறை சத்தம் போட்டும் புஷ்பராஜ் வராததால், திறந்திருந்த கதவின் வழியே ஜான்பீட்டர் எட்டி பார்த்தார். அப்போது, புஷ்பராஜ் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இது குறித்து, சந்தானமேரிக்கு தகவல் கொடுத்து, உடலை இறக்கி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார், உடலை கைபற்றி, காரை க்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழா.
- நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம்.
புதுச்சேரி:
வில்லியனூர், திருக்காஞ்சி கோவில்களில் நடந்த ராகு-கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
18 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராகு- கேது பெயர்ச்சியானது நேற்று மாலை 3.40 மணிக்கு நடந்தது. ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிவாலயங்களில் உள்ள நவகிரக சன்னதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி திருக்காஞ்சி காமாட்சி, மீனாட்சி சமேத ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் உள்ள ராகு- கேது தனி சன்னதியில் காலை கணபதி ஹோமத்துடன் சிறப்பு பூஜை தொடங்கியது. மதியம் 3.40 மணியளவில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் பரிகார ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராகு பகவான், கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தகர்கள் கலந்துகொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.
- கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார்
- கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட் டத்தில், நேற்று மாலை நடைபெற்ற அரசு விழாக்க ளில் கலந்து கொண்ட மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபலா காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை குடும்பத்தோடு சாமி தரி சனம் செய்தார்.
முன்னதாக மத்திய மந்திரிக்கு கோவில் நிர்வா கம் சார்பில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் வரவேற்றார். தொடர்ந்து விநாயகர், முருகர் சண்டி கேஸ்வரர், உள்ளிட்ட சாமிகளை தரிசனம் செய்து விட்டு, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன், புதுச்சேரி மாநில அமைச்சர் கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கோவில் நிர்வாக அதிகாரி அருண கிரிநாதன் உடன் இருந்தனர்.
- .காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர்.
- பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
புதுச்சேரி
புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை. ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, அக்டோபர் 6-ந் தேதி முதல் 5 நாட்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மூலம், போதைப் பொருளுக்கு எதிராக, காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர். இதன் முதல் நிகழ்ச்சியாக, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பேரணி, பள்ளிகளை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் பதாதைகள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் பள்ளியில் துணை முதல்வர் கனகராஜ், வட்டார வளர்ச்சித்துறையின் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
- சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர்.
- இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவி மேலஓடுதுறை அந்தோனி யார் கோவில்தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 28). இவர், இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நிரவி காமராஜர் நகரைச்சேர்ந்த சிலம்பரசன், அவருடைய நண்பர் முகேஷ், நிசாகன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்களில் அதி வேகமாக சென்றனர். அவர்களை ஸ்டீபன்ராஜ், ஏன் தெருவில் அதிவேகமாக செல்கிறீர்கள். அங்கு நிறைய குழந்தைகள் உள்ளது. அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டால் யார் பதில் சொல்வது என கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ஸ்டீபன்ராஜை அடித்து, உதைத்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தபோது, 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜை, அங்குள்ளோர், காரைக் கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஸ்டீபன்ராஜ் நிரவி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன் சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
- மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தென்கரை பேட்டையைச்சேர்ந்தவர் மூவேந்தன்(வயது30). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது ஊரைச்சேர்ந்த ராமமூர்த்தி இறந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில் ஊர்வலம் சென்றபோது, அவ்வழியே மூவேந்தன் சென்றுள்ளார். அப்போது மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன்(21) , சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மூவேந்தன் ஏன் சாலை நடுவே ஆடுகிறாய் ஓரமாக சென்று ஆடு என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்பாண்டியன், நீ யார் என்னை கேள்வி கேட்பதற்கு என, கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நேற்று கோட்டுச்சேரி போலீசில் மூவேந்தன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
- 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் போலீஸ் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்படும் எனவும், முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விற்பனை தொடங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க கடையில் குவிந்தனர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
- ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது38). இவர் கணவரை விட்டு பிரிந்து தற்போது புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே ராஜலட்சுமி கடந்த ஆண்டு நார்வே நாட்டு தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சந்திரகுமார்(56) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். சந்திர குமார் 3 மாதத்துக்கு ஒரு புதுவைக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ராஜலட்சுமி நார்வே நாட்டில் வேலை பார்த்து வரும் சந்திரகுமாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சந்திரகுமார் கடந்த 26-ந் தேதி புதுவை வந்தார். சம்பவத்தன்று சந்திரகுமாருக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சந்திரகுமார் படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சந்திரகுமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சந்திரகுமாரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு இவரது மகன் முரளிதாஸ் (வயது 38).
இவர் மோட்டார் சைக்கிள் அடகு வைத்து பணம் பெற்று தரும் தரகர் வேலை பார்த்து வந்தார்.
முரளிதாஸ் அவரது நண்பரான திண்டிவனம் அடுத்த பழமுக்கல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மோட்டார் சைக்கிளை புதுச்சேரியில் அடமானம் வைத்து ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால் பாபுவின் மோட்டார் சைக்கிளை ரூ.11 ஆயிரத்திற்கு முரளிதாஸ் அடமானம் வைத்து மீதியுள்ள ரூ.5 ஆயிரத்தை அவரே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் கழித்து இது பாபுவுக்கு தெரிய வரவே அடமானத் தொகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் தனது மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அவர் நண்பர் இருவரும் நேற்று அச்சரம்பட்டில் உள்ள முரளிதாஸ் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் அவர் இல்லை.
வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற பாபுவின் எதிரே திடீரென வந்த முரளிதாசை அழைத்து அங்குள்ள ஏரிக்கரையில் வைத்து மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டு பாபு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாபு பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முரளிதாஸ் காலில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முரளிதாசை மீட்டு அங்கிருந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முரளிதாஸ் மைத்துனர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பாபு மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
- சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
- முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், சனிக்கி ழமை, காலாண்டு பள்ளி விடுமுறை, ஞாயிறு, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4.30 மணி முதல் திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
- புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கு வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அக்கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை நடைபெறும்.
அதன்படி, புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று வெங்கடாசலபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் யுவராஜன், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
- கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது
- பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோயாளிகள் வார்டுகள் உள்ளது. நேற்று நள்ளிரவு பெண் நோயாளி கள் தங்கி இருந்த வார்டு ஒன்றில், கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது. இதனால் அவதியடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் வார்டில் புகுந்த கழிவுநீரை சுத்தம் செய்தனர். முழு மையாக வெளியேற்றாத கழிவுநீர் துர்நாற்றத்தில் நோயாளிகள் இரவு முழுவதும் அவதி யடைந்தனர். விடிந்தபிறகு, ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர்கள் வந்து முழுமையாக சுத்தம் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும் போது, நோயாளிகள் போட்ட குப்பைகள், கழிவு நீர் செல்லும் குழாயில் அடைத்து கொண்டதால், நீர் வார்டில் புகுந்துவிட்டது. அதிகாலை என்பதால், ஊழியர்கள் இல்லை. பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.






