என் மலர்
புதுச்சேரி

வாழை இலையில் முட்டையுடன் சிக்கன் பிரியாணி சாப்பிடும் மாணவர்கள்
சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்த வாழை இலையில் முட்டையுடன் சிக்கன் பிரியாணி: பள்ளி ஆசிரியர் அசத்தல்
- சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர்.
- பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
புதுச்சேரி:
புதுவை சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. கல் மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இவர் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வாழை இலை போட்டு முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் தவறாது வருகின்றனர். மாணவர்கள் பசியுடன் சிறப்பு வகுப்புக்கு வரக்கூடாது என்பதற்காகவும் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க ஊக்குவிக்கும் விதமாகவும் ஆசிரியர் செய்துள்ளார்.
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலையில் அதிக முடியுடன் வந்தால் அவர்களை முடி திருத்துவர்களை கொண்டு சிகை அலங்காரம் செய்தார்.
பள்ளியில் பயிலும் மாணவியர் கலை நிகழ்ச்சிகள் பங்கேற்க சென்றபோது அவர்களின் ஏழ்மை கருதி அனைவருக்கும் ஒரே வண்ணத்தில் கலாச்சார உடையையும் ஆசிரியர் கிருஷ்ணசாமி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






