என் மலர்
மகாராஷ்டிரா
- தீ விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் இருந்து தீயணைக்கும் பணி நடைபெறுகிறது.
மும்பை:
மும்பையின் கல்பாதேவி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரசித்தி பெற்ற மும்பாதேவி ஆலயத்தின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது. தீப்பற்றிய கட்டிடத்தில் வசித்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வெளியேற முடியாமல் தவித்த 50க்கும் மேற்பட்ட மக்கள், அருகில் உள்ள கட்டிடத்தின் படிக்கட்டுகள் வழியாக மீட்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளத்தின் மேற்கூரையின் சில பகுதிகள், படிக்கட்டுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு வெளிப்பகுதியில் இருந்து தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் ஐந்து தளங்களில் தீ பரவி உள்ளது. தீயை கட்டுப்படுத்தியபிறகு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்.
- 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.
- சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது.
மும்பை:
சொகுசு கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த அந்த காரை ஒரு டீக்கடையாக நினைத்து பார்க்க முடியுமா!. ஆனால் மும்பையில் 2 வாலிபர்கள் தங்கள் சொகுசு காரை டீக்கடையாக மாற்றி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.
மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் தான் அந்த வாலிபர்கள். அவர்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் 20 ரூபாய்க்கு டீ விற்கின்றனர். அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, 'டீ'யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர்.
அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், "கடந்த 2 மாதங்களாக நான் இங்கு 'டீ' குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன் சுவை அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அவர்களின் 'டீ'யை வாங்கி குடிக்க விரும்புகிறேன்" என்கிறார்.
இந்த நூதன முயற்சி குறித்து மன்னு சர்மா கூறியதாவது:-
நாங்கள் இரவில் ஒருநாள் 'டீ' குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக 'டீ' ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம்.
நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கு சைக்கிளில் செல்பவர்களும் டீ குடிக்கிறார். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் 'டீ'யை ருசிக்கிறார்கள்.
இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே 'டீ' தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டீ கடை தொடங்குவதற்கு முன்பு அரியானாவை சேர்ந்த மன்னு சர்மா ஆப்பிரிக்க நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதேபோல அமித் கஷ்யப் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீ கடைக்காரராகவும் மாறியுள்ளார்.
இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீ கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
- வாடகை வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
- கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் இவருக்கும் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யா (36) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சரஸ்வதி யாரும் இல்லாத அனாதை என்பதால் அவருக்கு மனோஜ் ஆறுதலாக இருந்து வந்தார். 2 பேருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் என்றாலும் அதையும் மீறி அவர்களுக்குள் இடையே கள்ளக்காதல் உருவானது. தினமும் தனியாக சந்தித்து தங்கள் உறவை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மீராரோடு கீதா நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 7- வது மாடியில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன்- மனைவி போல வாழ்க்கையை தொடங்கினார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வசித்தனர். இந்தநிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி 2 பேருக்கும் இடையே சண்டை மூண்டது. இதனால் காதலி மீது மனோஜ் சகானி வெறுப்பு அடைந்தார். தினமும் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்ததால் சரஸ்வதி வைத்யாவை போட்டு தள்ள அவர் முடிவு செய்தார்.
சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்ததால் ஆத்திரம் அடைந்த மனோஜ் சகானி காதலி சரஸ்வதி வைத்யாவை சரமரியாக அடித்து உதைத்தார். அரிவாளாலும் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். எங்கே போலீசில் சிக்கி விடுவோமோ? என மனோஜ் பயந்தார். அவரது மனதில் கொடூரமான எண்ணம் உதித்தது. அதன்படி சரஸ்வதி உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டினார்.
கை,கால்கள், விரல்கள் என உடல் உறுப்புகள் அனைத்தையும் தனியாக துண்டித்து எடுத்தார். பின்னர் அந்த உடல் உறுப்புகளை ஒரு பெரிய குக்கரில் போட்டு அடுப்பில் வேக வைத்தார். தடயங்களை அழிக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார்.
ஆனால் சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதை தாங்க முடியாத அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பொதுமக்கள் ஏதோ விபரீதம் நடந்து இருக்கிறது என நினைத்து நயாநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மனோஜ் சகானி தங்கி இருந்து வீட்டு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
அப்போது அங்கு சரஸ்வதி வைத்யா அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டு பாதியாக இருந்தது.
சமையல் அறையில் இருந்த குக்கரில் வேக வைத்த நிலையில் இருந்த உடல் உறுப்புகளை போலீசார் மீட்டனர். ஒரு பாலிதீன் கவரில் அந்த உறுப்புகளை சுற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த மனோஜ் சகானியை போலீசார் கைது செய்தனர். கொலையுண்ட பெண்ணின் உடலில் சில உறுப்புகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த உறுப்புகளை மனோஜ் ஏதாவது ஒரு இடத்தில் புதைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுபற்றி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன காரணத்துக்காக இந்த கொடூர கொலை நடந்தது என தெரியவில்லை.
டெல்லியில் கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் (வயது 26) என்ற பெண் காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரால் கொல்லப்பட்டார். தாலி கட்டாமல் அவர்கள் குடும்பம் நடத்தினார்கள். அப்போது ஷரத்தா வாக்கர் தன்னை திருமணம் செய்ய காதலனை வற்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட தகறாரில் அப்தாப் காதலியை கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்னர் ஷரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்தார். 3 வாரம் அதில் வைத்து இருந்த காதலியின் உடல் உறுப்புகளை பின்னர் பிளாஸ்டிக் பையில் சுற்றி குப்பைத்தொட்டி, நீர் நிலைகள், வனப்பகுதியில் வீசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திகளை படித்த மனோஜ் அதே போன்று கொலை செய்ய திட்டமிட்டதாவும்,அதனால் காதலி உடலை துண்டு துண்டாக வெட்டியதாகவும் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என தெரிகிறது.
- பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது.
- ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
தானே :
தேசிவயாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், " கர்நாடக தேர்தல் முடிவு அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலின் முடிவை பிரதிபலிக்கிறது. பா.ஜனதா எதிர்ப்பு அலை நாட்டில் தற்போது உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.
இந்தநிலையில் நவிமும்பை புதிய விமான நிலைய பணிகளை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது சரத்பவாரின் விமர்சனத்துக்கு பதில் அளித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், "2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சரத்பவாரின் கணிப்புகள் அனைத்து தவறாகி உள்ளன. இனியும் அவரது கணிப்புகள் அனைத்து பொய்யாகிவிடும். ஆளும் கட்சியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக எப்படி கூற முடியும்" என்றார்.
மேலும் நவிமும்பை விமான நிலைய பணிகள் குறித்து பேசிய அவர், " இந்த புதிய விமான நிலையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 கோடி பயணிகள் பயன் அடைவார்கள். இந்த திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்த மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். புனே மற்றும் கோவாவை தவிர்த்து மும்பை பெருநகர பகுதியின் தேவையும் இந்த விமான நிலையம் பூர்த்தி செய்யும்" என்றார்.
- நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுகிறது.
- நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை.
சரத்பவார், பாஜக, பாராளுமன்ற தேர்தல், BJP, Sharad Pawar, parliament election
மும்பை :
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜனதாவிற்க எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போதைய சூழ்நிலையை பார்க்கும்போது நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக நான் கருதுகிறேன். கர்நாடக தேர்தல் முடிவை பார்க்கும்போது மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பது தெரிகிறது. மக்களின் மனநிலை இதேபோல தொடர்ந்தால் நாட்டில் புதிய மாற்றம் ஏற்படும். இதை கூறுவதற்கு வருங்காலத்தை கணிக்கும் ஜோதிடம் தெரிந்திருக்க அவசியம் இல்லை.
பாராளுமன்ற தேர்தலுடன் மராட்டிய சட்டமன்ற தேர்தலையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, "எங்களது கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் இதே கருத்தை கொண்டுள்ளனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஆளும் கட்சியினர் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொள்வார்கள். எனவே சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி குழப்பத்திற்கு ஆளாக ஆட்சியாளர்கள் கருதமாட்டார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்" என்று பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு ஆட்சியில் பிடித்த மத்திய மந்திரி யார் என்ற கேள்விக்கு பதில் அளித்த சரத்பவார், " சிலரின் சீரிய பணிகளை ஒருபோதும் மறுத்துவிட முடியாது. உதாரணத்திற்கு நிதின் கட்காரி கட்சியின் கோணத்தில் சிந்திப்பதில்லை. நாம் ஒரு பிரச்சினையை அவரிடம் கொண்டு சென்றால் அவர் அதன் முக்கியத்துவத்தை மட்டுமே பார்ப்பார்" என்றார்.
மராட்டியத்தில் சமீப காலமாக சட்டம்- ஒழுங்கு நிலை மற்றும் வன்முறைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரும் சாலையில் இறங்கி இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் அது நல்ல அறிகுறியாக தெரியவில்லை.
அவுரங்காபாத்தில் ஒரு பேரணியில் சில நபர்களின் படங்களை பயன்படுத்தியதற்கு, புனேயில் வன்முறை நடக்க வேண்டிய தேவை என்ன உள்ளது. ஆனால் அப்படி செய்யப்படுகிறது.
சமீபத்தில் அவுரங்காபாத்தில் இதுபோன்ற சம்பவத்தை கேள்விப்பட்டோம். இன்று கோலாப்பூரில் இருந்து ஒரு செய்தியை பார்தேன். மக்கள் சாலைக்கு வருவதும், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் ஒரு சிறிய சம்பவத்திற்கு மத சாயம் பூசுவதும் நல்ல அறிகுறியாக தெரியவில்லை. ஆளும் கட்சி இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்கிறது" என்றார்.
- உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது.
மும்பை:
மும்பையில் 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சார்னி சாலையில் உள்ள அரசு விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவியை காணவில்லை என நேற்று மாலை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விடுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். விடுதியின் நான்காவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த மாணவியின் கழுத்து துணியால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
மாணவியின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், இந்த வழக்கில் விடுதி காவலாளி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க தொடங்கிய சமயத்தில், அவர் நேற்று காலையிலேயே சார்னி சாலை ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அவர் மாணவியை கொலை செய்தபின்னர், ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
- ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் விபத்தில் சிக்கின.
- இந்த கோர விபத்தில் சிக்கி 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலகவேண்டும் என்றார் தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், லால் பகதூர் சாஸ்திரி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ஒரு விபத்து நடந்து, அது மீண்டும் நடந்தது. அதன்பிறகு, ராஜினாமா செய்யும் முடிவை ஜவகர்லால் நேரு எதிர்த்தார். ஆனால் அதற்கு எனது தார்மீக பொறுப்பு என்று சாஸ்திரி கூறிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்ற சம்பவத்தை நாடு எதிர்கொள்கிறது, அரசியல்வாதிகள் சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
- மும்பையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற ஹிரோஷி சுசுகி லோக்கல் ரெயிலில் பயணம் செய்தார்.
- ஹிரோஷி சுசுகியின் டுவிட் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இந்தியாவுக்கான ஜப்பானிய தூதராக ஹிரோஷி சுசுகி உள்ளார். இவர் நேற்று மும்பை சென்றிருந்த நிலையில், அங்கு மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
பின்னர் மும்பையில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் லோக்கல் ரெயிலில் பயணம் செய்தார். மேலும் நடைபாதை கடைகளுக்கு ஷாப்பிங் சென்ற அவர், ஒரு ஜவுளி கடையில் 100 ரூபாய்க்கு சட்டை என்ற அறிவிப்பை பார்த்து கடைக்கு சென்றுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார். அதில், நான் மும்பையில் இருக்கிறேன் என ஒரு பதிவும், மற்றொரு பதிவில் 100 ரூபாய்க்கு சட்டை விற்கும் கடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, என்ன பேரம் பேசலாம்? நான் வாங்கட்டுமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது. அவரது டுவிட் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
- பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
- மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்
பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.
கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.
இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.
இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.
- 38 வினாடிகள் கொண்ட வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
- தரமற்ற சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவிற்குட்பட்ட ஒரு கிராமத்தில் சமீபத்தில் தார் சாலை போடப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் போடப்பட்ட இந்த சாலையின் பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்றதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை போடப்படுவதாக ஒப்பந்ததாரர் கூறினார்.
இந்நிலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை தார்பாய் போன்று அப்பகுதி மக்கள் வெறும் கைகளால் தூக்குவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 38 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், சாலை தார்பாய் போல இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தரமற்ற இந்த சாலை பணிக்கு ஒப்புதல் அளித்த என்ஜினீயர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் மகாராஷ்டிரா அரசை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Video Shows Maharashtra Villagers Lifting Newly-Made Road With Bare Hands https://t.co/R9JaB0eDMh pic.twitter.com/QyF45StasI
— NDTV (@ndtv) June 1, 2023
- மாநில பாஜகவால் பங்கஜா முண்டே ஓரங்கட்டப்பட்டதாக யூகமான செய்திகள் பரவி வருகின்றன.
- தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பங்கஜா முண்டே கேபினட் அமைச்சராக இருந்தார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே, பாஜக குறித்து கூறிய கருத்து மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் மகளான பங்கஜா முண்டே, 2019ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என செயல்பட்டு வருகிறார். அரசியல் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்த்து வருகிறார். 2014-2019 காலகட்டத்தில் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பங்கஜா முண்டே கேபினட் அமைச்சராக இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, மாநில பாஜகவால் பங்கஜா முண்டே ஓரங்கட்டப்பட்டதாக யூகமான செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கஜா முண்டே பேசியது அரசியல் அரங்கில் விவாதப்பொருளாகி உள்ளது. அவர் பேசும்போது, பாஜக ஒரு பெரிய கட்சி என்றும், அது தனக்கு சொந்தமானது அல்ல என்றும் கூறினார். மகாதேவ் ஜங்கரின் ஆர்எஸ்பி கட்சியை குறிப்பிட்டு பேசிய அவர், "நான் பாஜகவைச் சேர்ந்தவள். என் தந்தையுடன் ஏதாவது பிரச்சனை என்றால், என் சகோதரரின் வீட்டுக்கு செல்வேன்" என்றார்.
கோபிநாத் முண்டேவுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்த மகாதேவ் ஜங்கர் கூறுகையில், வேறு யாரிடமோ ரிமோட் கண்ட்ரோல் இருக்ககூடிய என் சகோதரியின் கட்சியால் நமது சமூகத்திற்கு பயன் கிடைக்காது என்றார்.
பங்கஜா முண்டேவின் இன்றைய கருத்தை வைத்து பார்க்கும்போது, அவர் ஆர்எஸ்பி கட்சிக்கு செல்ல உள்ளதாக சூசகமாக கூறியிருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
- மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் எம்.எஸ்.டோனி அனுமதிக்கப்பட்டார்.
- நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இடது முழங்காலில் வலியுடனேயே டோனி விளையாடி வந்தார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.
இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார்.
இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி இன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






