search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 Lok Sabha elections"

    • பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
    • மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்

    பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.

    கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.

    வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.

    இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.

    இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.

    ×