என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
    • பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

    ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக

    காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    • சுரங்கபாதையில் மின்திட்ட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.
    • துணை போலீஸ் கமிஷனர் தேவின்ஷ் யாதவ் ஆகியோர் 4 பேர் பலியானதை உறுதிபடுத்தினர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வாரில் மின் திட்ட சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கபாதையில் மின்திட்ட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி கொண்டனர்.

    இந்த தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியானது தெரிய வந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    மத்திய மந்திரி ஜிதேந்திர சர்மா, கிஷ்த்துவார் துணை போலீஸ் கமிஷனர் தேவின்ஷ் யாதவ் ஆகியோர் 4 பேர் பலியானதை உறுதிபடுத்தினர்.

    • எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
    • அரசின் முயற்சிகள் காரணமாக லடாக்கில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை காண முடிகிறது.

    நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. 


    நிறைவு பெற்ற இந்த திட்டங்களை லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய எல்லைப்பகுதிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது.

    இந்த புதிய 75 திட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க இதுதான் காரணம். இந்த இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது.

    இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை இங்கு காண முடிகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே மத்திய அரசின் நோக்கம்.

    நாட்டின் அனைத்து தொலை தூரப்பகுதிகளையும் பிற பகுதிகளுடன் விரைவில் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அந்த பங்களா 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி கொடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை, மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் வசிப்பதற்காக அரசு சார்பில் ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் அமைந்துள்ள 'பேர்வியூ' பங்களா ஒதுக்கப்பட்டது.

    ஆனால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்த பங்களாவை காலி செய்யவில்லை.

    இந்த நிலையில் அவர் அந்த பங்களாவை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் காலி செய்தாக வேண்டும் என்று காஷ்மீர் அரசினர் எஸ்டேட் துறையினர் வெளியேற்ற உத்தரவு அனுப்பி உள்ளனர்.

    அதில் மெகபூபா, உரிய அங்கீகாரம் இன்றி அந்த பங்களாவைத் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "முதல்-மந்திரி என்ற அடிப்படையில்தான் அந்த பங்களா அவருக்கு 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டது. அடுத்து எந்த நீட்டிப்பும் வழங்கப்படவில்லை" எனவும் அந்த உத்தரவில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.

    இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அந்த பங்களாவை மெகபூபா காலி செய்யவில்லை என்றால், காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1988 இன் பிரிவு 5-ன் துணைப்பிரிவு (2) -ன் விதிகள் செயல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    • பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம்.
    • ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும்.

    கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார். அதன்பின் ராணுவ வீரர்களீடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது.

    ராணுவ வீரர்கள் என்னுடைய குடும்பத்தினர். உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தீபாவளி பண்டிகை இனிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. கார்கில் போரை நான் நினைத்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கடமைதான் என்னை அப்போது கார்கிலுக்கு அழைத்து வந்தது. வெற்றியின் ஓசைகள் எங்கும் எதிரொலித்த அந்தக் காலத்தின் பல நினைவுகள் உள்ளன. மக்கள் அன்று கொண்டாடப்பட்ட தீபாவளியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.


    கடந்த எட்டு ஆண்டுகளாக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும். ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்கும் போதுதான் ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்.

    நாட்டிற்குள் இருக்கும் எதிரிகள் மற்றும் வெளியே இருக்கும் எதிரிகளை இந்தியா வலிமையுடன் கையாள்கிறது. பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்தை நாட்டிற்குள் இருந்து வேரோடு பிடுங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது. இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்க்கவில்லை. நாம் எப்போதும் இறுதி முயற்சியாக போரைப் பார்த்திருக்கிறோம். நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது.

    எங்கள் ஆயுதப் படைகளுக்கு வியூகங்களும் வலிமையும் உள்ளன. யாரேனும் நம் மீது தீய நோக்கத்தோடு பார்வையை செலுத்தத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமது முப்படைகளுக்கும் நன்றாகத் தெரியும். தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆத்மநிர்பர் பாரத் மிக முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளில் வெளிநாட்டு சார்பு குறைவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • ஜம்மு காஷ்மீர் பயிற்சி மைய இயக்குனர் அவினாஷ் குப்தா, பெங்களூர் கம்பெனி நிர்வாகி ஆகியோர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • முறைகேட்டை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    ஜம்மு காஷ்மீர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) மருத்துவ அதிகாரி கர்ணல்சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தி விசாரணை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் பயிற்சி மைய இயக்குனர் அவினாஷ் குப்தா, பெங்களூர் கம்பெனி நிர்வாகி ஆகியோர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    • தொழிலாளர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் சமீபகாலமாக வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்

    நேற்று முன்தினம் அங்குள்ள சோபியான் மாவட்டம் ஹர்மன் பகுதியில் தூங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினார்கள். இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனீஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிசிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 2 தொழிலாளர்களை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த இம்ரான் பசீர் கனி என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவனை அழைத்துக்கொண்டு சென்று மற்றொரு பகுதியில் பயங்கரவாதிகள் வேட்டை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். சிறிது நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சண்டையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்ரான் பசீர் கனி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தான். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    • உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.
    • தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐ.நா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சித்து உள்ளது. தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன. இது எந்த மதிப்புக்கும் உரியவை அல்ல.

    ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை கேட்டு கொள்கிறோம். இதனால் எங்கள் குடிமக்கள் தங்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்" என்றார்.

    • பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.
    • பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    ஜம்மு-காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் டாங்க்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்களுடன் 'ஜூம்' என்று அழைக்கப்படும் பயிற்சி பெற்ற ராணுவ நாயும் சென்றது.

    அப்போது ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடிக்க முயன்றனர்.

    இதில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினருடன் சென்ற ராணுவ நாய் ஜூம் 4 குண்டுகள் பட்டு பலத்த காயம் அடைந்தது.

    இதற்கிடையே ஜூம் நாய் உதவியால் அங்கு பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பின்னர் காயம் அடைந்த ஜூம் நாயை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜூம் நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    எனினும் அந்த நாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூம் நாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    இதுகுறித்து ராணுவ அதிகாரி கூறியதாவது:-

    ராணுவ நாய் ஜூம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தது. காலை 11:45 மணி வரை உடல்நிலை நன்றாக முன்னேறி வந்த நிலையில் நாய், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

    தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரிகள் மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜூமின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. சம்பவத்தன்று பயங்கரவாதிகள் சுட்டதில் 4 குண்டுகள் ஜூம் மீது பாய்ந்தது. இருப்பினும் ஜூம் 2 பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியதோடு பயங்கரவாதிகளை தாக்கி பாதுகாப்பு படையினருக்கு உதவியது.

    இதனால் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலத்த காயம் பட்ட நிலையிலும் ஜூம் துணிச்சலுடன் போராடி பயங்கரவாதிகளை நிலைகுலைய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காயம் அடைந்த ஜூம் நாய்க்கு 2½ வயதாகும். இந்த நாய் கடந்த 10 மாதங்களாக ராணுவத்தின் 15 கார்ப்பிசின் தாக்குதல் பிரிவில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
    • 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த முறை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாகும்.

    ஸ்ரீநகர்:

    ஜனவரி 2022 முதல் தற்போது வரை ஜம்மு காஷ்மீருக்கு 1 கோடியே 62 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என ஜம்மு காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    மேலும், 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இந்த ஆண்டு தான் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்துள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் கூறியுள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. அதன்பின், கடந்த ஆண்டு கணிசமாகக் கூடிய இந்த எண்ணிக்கை தற்போது 1.62 கோடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

    • நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மோடி அரசு மாற்றும்.
    • காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பாரமுல்லா:

    ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    1990 ஆம் ஆண்டில் இருந்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்துள்ளனர். மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றுவோம்.

    நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்த வரும் அப்துல்லாக்கள், முஃப்திகள் மற்றும் நேரு, காந்தி குடும்பத்தினரால் ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சியடையவில்லை. சிலர் பாகிஸ்தானைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சார இணைப்புகள் உள்ளன என்பதை அறிய விரும்புகிறேன்.

    கடந்த மூன்று ஆண்டுகளில், காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். பாகிஸ்தானுடன் பேச வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். நாம் ஏன் பாகிஸ்தானுடன் பேச வேண்டும்? நாங்கள் பாரமுல்லா மக்களுடன் பேசுவோம், காஷ்மீர் மக்களுடன் பேசுவோம். பாகிஸ்தானுடன் பேச மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்று உள்ளார்.
    • அமித்ஷா இன்று இரவு பாரமுல்லாவில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    ஸ்ரீநகர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்று உள்ளார். அவர் அங்குள்ள பாதுகாப்பு குறித்து இன்று உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்கா உளவு துறை இயக்குனர் மற்றும் உயர் போலீசார், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அமித்ஷா இன்று இரவு பாரமுல்லாவில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அப்போது அவர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முடிக்கப்பட்ட சில திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    ×