search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி-  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
    X

    பாதுகாப்பு படையினர்

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி- மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    • ஒரு பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவன்.
    • பயங்கரவாதிகள் வைத்திருந்த ஏகே74 , ஏகே 56 ரக துப்பாக்கிகள் பறிமுதல்

    ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக

    காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. தெரிவித்தார். முக்தியார் பட் என்ற அந்த பயங்கரவாதி, சிஆர்பிஎஸ் மற்றும் ஆர்.பி.எப் அதிகாரிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் தொடர்புடையவர் என அவர் கூறினார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே74 ரகம் , ஏகே 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×