என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X

    காஷ்மீரில் 2 தொழிலாளர்களை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை

    • தொழிலாளர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
    • போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் சமீபகாலமாக வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்

    நேற்று முன்தினம் அங்குள்ள சோபியான் மாவட்டம் ஹர்மன் பகுதியில் தூங்கி கொண்டு இருந்த தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினார்கள். இதில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனீஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிசிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர்.

    இதையடுத்து பாதுகாப்பு படை போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 2 தொழிலாளர்களை கொன்ற லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த இம்ரான் பசீர் கனி என்ற பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவனை அழைத்துக்கொண்டு சென்று மற்றொரு பகுதியில் பயங்கரவாதிகள் வேட்டை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் திருப்பி சுட்டனர். சிறிது நேரம் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சண்டையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இம்ரான் பசீர் கனி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தான். சம்பவம் நடந்த பகுதியில் இருந்து போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×