என் மலர்tooltip icon

    டெல்லி

    • தாயகம் திரும்பிய வினேஷ் போகத்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தனது ரெயில்வே பணியை வினேஷ் போகத் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டி அன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகக்கூறி அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

    ஆனாலும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட பல்வேறு கட்சியினர் வினேஷ் போகத்தை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் இன்று மதியம் டெல்லியில் உள்ள தலைமை அலுவகத்தில் பொதுச் செயலாளர் வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்திய ரெயில்வேயில் தான் வகித்து வந்த பதவியை இன்று ராஜினாமா செய்த வினேஷ் போகத், வடக்கு ரெயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாதது என தெரிவித்தார்.


    • பிஜு ஜனதா தளத்தின் மாநிலங்களவை எம்.பி. சுஜித் குமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்தவர் சுஜித் குமார். இவரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டார்.

    கட்சி விரோத நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, பிஜு ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுஜித்குமார், மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரிடம் கொடுத்தார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாநிலங்களவை செயலகம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்த சுஜித்குமார் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    • சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்துள்ளது.

    72 வயதாகும் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை குறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
    • மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை.

    டெல்லி துவாரகாவில் உள்ள சட்டப்பல்கலைக்கழக விடுதியில், தமிழக மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த அமிர்தவர்ஷினி என்ற மாணவி பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    மாணவியின் அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று மாணவி எழுதி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    படிப்பு சம்பந்தமாக மாணவி ஒருவித பதற்றத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

    மன உளைச்சலில் இருந்த மாணவியை கடந்த ஏப்ரல் மாதம் வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் ஒரு வாரத்திற்கு பின் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
    • இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 10-ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் ஜூன் 2-ம் தேதி திகார் ஜெயிலில் சரணடைந்தார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அவர் சிறையில் இருந்து வெளியே வரும் நிலையில் இதே வழக்கில் கடந்த ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. அவரை கைது செய்தது.

    சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் ஜாமின் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுமீது பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் கருத்துக்களை பெறாமல் உடனடியாக இடைக்கால ஜாமின் வழங்கமுடியாது என நீதிபதிகள் தெரிவித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இல்லை. அவரை கைதுசெய்ததற்கு எவ்வித ஆதாரமோ, முகாந்திரமோ இல்லை.

    கடந்த 2 ஆண்டாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் பெற்ற பிறகு சி.பி.ஐ. திட்டமிட்டு அவரை கைதுசெய்தது. கைது செய்வதற்கு முன் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை.

    அவர் எந்த அச்சுறுத்தலிலும் ஈடுபடமாட்டார். அவர் ஒரு அரசியலமைப்பு செயற்பாட்டாளர். எனவே கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க வேண்டும்.இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 23 வயது வரைவிலான இளைஞர்கள் 4 வருடம் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
    • 4 வருடத்திற்குப் பிறகு 15 வருடத்திற்கு 25 சதவீத வீரர்களுக்கு பணி வழங்கப்படும்.

    மத்திய அரசு முப்படைகளில் வீரர்களை சேர்ப்பதற்கான அக்னிபாத் திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் முப்படைகளில் 17 1/2 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    அவர்கள் நான்கு வருடம் பணிபுரிந்த பின்னர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன்பின் 15 வருடத்திற்கு 25 சதவீதம் பேரை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது. பின்னர் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு கோடி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

    பாதுகாப்புப் படைகளின் செலவினங்களைக் குறைப்பதற்கும், வயது வரம்பைக் குறைப்பதற்கும் மத்திய அரசால் கொண்டு வரவப்பட்டது. ஆனால், ராணுவ வீரர்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவது, அவர்களுக்கு தியாகிகள் என்ற பெயர கிடைக்காது என எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் இத்திட்டத்தை கடுமையான எதிர்த்து பேசினார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்க வந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றார்.

    இந்த நிலையில் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது 25 சதவீதம் தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளது. இந்த சதவீதத்தை அதிகரிக்க உள்ளதாகவும, வீரர்களின் சம்பளம் மற்றும் உரிமைகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பு மற்றும் பயன்களை மேம்படுத்துவதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ள இருப்பதாக பாதுகாப்புத்துறை சார்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநில நிர்வாகத்தின் தலைவர்கள் (முதலமைச்சர்கள்) கடந்த கால மன்னர்கள் போன்று தங்களை எதிர்பார்க்க முடியாது.
    • ஒரு முதலமைச்சராக, என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியுமா?

    உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குனராக ஐ.எஃப்.எஸ். அதிகாரியை சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கும் உத்தரவை பிறப்பித்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.கே. மிஷ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில முதலமைச்சர்கள் மன்னர்கள் கிடையாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விசாரணையின்போது "இந்த நாட்டில் பொது நம்பிக்கைக் கோட்பாடு போன்ற ஒன்று உள்ளது. மாநில நிர்வாகத்தின் தலைவர்கள் (முதலமைச்சர்கள்) கடந்த கால மன்னர்கள் போன்று தங்களை எதிர்பார்க்க முடியாது. என்ன சொன்னார்களோ, அதை அவர்கள் செய்வார்கள் (கடந்த கால மன்னர்கள்). நாம் நிலப்பிரபுத்துவ காலத்தில் இல்லை. ஒரு முதலமைச்சராக, அவர் என்ன வேண்டுமென்றாலும் செய்ய முடியுமா?" எனத் தெரிவித்தனர்.

    இந்த விசாரணையின்போது, முதலமைச்சர் பிறப்பித்த உத்தரவு செப்டம்பர் 3-ந்தேதி திரும்பப் பெறப்பட்டது என உத்தரகாண்ட் மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

    அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் இருப்பதைக் கவனித்த நீதிமன்றம், அந்த அதிகாரி மீது முதல்வர் ஏன் "சிறப்பு பாசம்" வைத்திருக்கிறார் என்றும் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

    • பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து, தங்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    நோயாளிகள் பொதுமக்கள் அதிகம் வரும் மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.

    டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளை உறுதிபடுத்த வேண்டும்.

    சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மருத்துவமனைகள், அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்களை நிறுவுவதோடு அவை முறையாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

    சி.சி.டி.வி. காட்சிகளை உள்ளூர் காவல்துறையிடம் விரைவாக பகிரும் வகையில் வழிமுறையை வகுக்கவேண்டும்.

    இந்த நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 10-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது.
    • பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாட்டில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும்.

    குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும். கற்பழிப்பாளர்களின் வீரியம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பெண்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தீவிரமான தண்டனை, அவர் தனது கடைசி மூச்சு வரை தனது குற்றத்திற்காக அவதிப்படுவதை உறுதி செய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள், திரை நட்சத்திரங்கள் உள்பட பலர் வயநாடு நிலச்சரிவுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தனது ஒருமாத சம்பளத்தை கேரள காங்கிரசுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.

    நிலச்சரிவில் தங்கள் அன்புக்குரி உரியவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த வயநாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பின் ஒரு பகுதியாக காங்கிரசின் மாநிலப் பிரிவு சேகரிக்கும் நிதிக்கு இந்த நன்கொடை வழங்கப்பட உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • அரியானா சட்டமன்ற தேர்தல் வினேஷ் போகத் பேட்டியிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
    • தற்போது ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

    இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினோஷ் போகத். அதன்பின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா வந்ததும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில்தான் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்துள்ளனர்.

    இதன்மூலம் அரியானா தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வியாழக்கிழமை (நாளை) இந்த கேள்விக்கு தெளிவு கிடைத்தும் என பதில் அளித்திருந்தார்.

    நேற்று பபாரியா இவ்வாறு தெரிவித்த நிலையில் இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

    மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினோஷ் போகத் ஆவார்கள்.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 15 பதக்கங்களை வென்றுள்ளது.
    • இதில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், புருனே சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற யோகேஷ், சுமித் அண்டில், ஷீதல் தேவி மற்றும் ராகேஷ்ஜ் குமார் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார்.

    ஏற்கனவே பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×