என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
- சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று பட்ட பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் வந்தார்.
அவரிடம் முகமூடியை கழட்டி விட்டு உள்ளே செல்லுங்கள் என அங்கிருந்த காவலாளி தெரிவித்தார். அப்போது மர்ம நபர் தன்னுடைய முகத்தில் கொடூரமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை மறைப்பதற்காக தான் முகமூடி அணிந்துள்ளேன். மேலும் எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. அதனால் நகை அடகு வைக்க வந்துள்ளேன் என கூறினார். இதனை நம்பிய காவலாளி அவரை வங்கிக்குள் அனுமதித்தார்.
இதை தொடர்ந்து மர்ம நபர் கேஷியரிடம் சென்றார். நகை அடகு வைக்க வேண்டும் என கூறினார்.
அப்போது கேஷியர் காத்திருக்கும் படி வலியுறுத்தினார். மர்ம நபர் அங்கு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
அப்போது காத்திருந்த முகமூடி நபர் திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து கேஷியரின் கழுத்தில் வைத்தார். பணம் முழுவதையும் தர வேண்டும் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார்.
இதனைக் கண்டு வங்கிக்கு வந்திருந்த பொதுமக்கள் ஊழியர்கள் காவலாளி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
ஒரு கையில் கத்தியை பிடித்தபடி மற்றொரு கையில் கேஷியர் முன்பு இருந்த பணத்தை தனது பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். பின்னர் கத்தியை வெட்டுவது போல ஏந்திக்கொண்டு வங்கிக்கு வெளியே சென்றார். அங்கிருந்து அவரது வாகனம் மூலம் கில்லாடி திருடன் தப்பி சென்று விட்டார்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதன் மூலம் திருடனை தேடி வருகின்றனர். வங்கியில் பட்டப் பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
- அதானியின் வங்கிக்கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன.
- சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு.
திருப்பதி:
தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று தெலுங்கானா மாநிலத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
நான் நரேந்திர மோடி அல்ல. நான் ஒரு வாக்குறுதியை அளிக்கும்போது அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன்.
பொதுமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் வெளிநாட்டில் மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் இருந்து டெபாசிட் செய்வதாக மோடி உறுதி அளித்தார்.
ஆனால் இதுவரை உங்கள் கணக்குகளுக்கு ஒரு பைசா கூட மாற்றப்படவில்லை.
ஆனால் அதானியின் வங்கிக் கணக்கில் பல லட்சங்கள் குவிந்துள்ளன. மோடி போல் இல்லாமல் நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
தெலுங்கானா மக்கள் உடனான உறவு எனக்கு மட்டுமல்ல எனது தாத்தா நேரு, பாட்டி இந்திரா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் உள்ளது.
நாங்கள் இங்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி கொண்டு உள்ளோம்.
சந்திரசேகரராவ் கொள்ளை அடித்த பணம் பொதுமக்கள் வங்கி கணக்கில் மீண்டும் போடப்படும். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது குடும்பத்தினர் தெலுங்கானாவை தங்களின் திருட்டு தளமாக கருதுகின்றனர்.
சந்திரசேகரராவிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுடைய கனவு. தெலுங்கானா மாநிலத்தை ஒரு மன்னனும் அவனது குடும்பமும் தங்களின் ராஜ்ஜியம் போல ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி மக்களுடைய அனைத்து கொள்கைகளையும் வேண்டிய வசதிகளையும் நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
- மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி:
மகாராஷ்டிரா மாநிலம், சாங்வி நகரை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகுவில் தங்கத்தை உருக்கி நகை செய்தல், அடகு கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார்.
ராம்தேவ் நகை கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.
சூரஜ் குமார், ராம்தேவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நட்பாக பழகினார். இதனால் ராம்தேவ் குடும்பத்தினர் சூரஜ் குமாரை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்குள் அனுமதித்தனர்.
இதனால் சூரஜ்குமார் ராம்தேவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது எந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சூரஜ் குமாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சூரஜ் குமார் சமீபத்தில் சொந்த ஊரான சாங்லிக்கு சென்றார். தனது நண்பர்களான நிதின் பாண்டுரங்க ஜாதவ், ஓம்கார் ஜாதவ் ஆகியோருடன் சேர்ந்து முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
சூரஜ்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் தனுகுவிற்கு வந்தார். நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
பின்னர் முகமூடி அணிந்து முதலாளி வீட்டிற்கு சென்ற சூரஜ் குமார் கும்பல், ராம்தேவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கினர்.
பீரோவை உடைத்து அதிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். மொத்தம் 8 கிலோ தங்கம் கொள்ளை போனது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூரஜ் குமார் தலைமையிலான கும்பல் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.
- 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
- மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-
எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.
எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.
தற்போது திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.
மேலும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு வர தயங்குகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 62,269 பேர் தரிசனம் செய்தனர். 19,255 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
- ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.
ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
- அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அமராவதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, பைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது.
இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில ஐகோர்ட்டு, அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திரா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு ஆணை ஜெயிலில் வழங்கப்பட்டதும் சந்திரபாபு நாயுடு ஜெயலில் இருந்து வெளியே வருவார் என தெரிவித்துள்ளனர்.
.
- ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அலர்ட் சிஸ்டம் ஏன் செயல்படவில்லை, சிக்னலில்லிங் ஏன் தோல்வியடைந்தது.
தகவல் தொடர்பு அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.
விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆதரவு, பிரார்த்தனைகளும் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
- தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன
- மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு விஜயநகரம் நோக்கி பாலசா பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. விஜயநகரம் மாவட்டம், கொத்தவலசா மண்டலம், கண்டகபள்ளி அலமண்டா இடையே ரெயில் வந்தபோது சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த பாலசா ரெயிலின் பின்புறத்தில் பயங்கர வேகத்துடன் மோதியது.
இந்த விபத்தில் பாலசா ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. ராயகடா நோக்கி சென்ற ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
கவிழ்ந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் பலத்த காயமடைந்து கூச்சலிட்டனர். ரெயில் பெட்டிகளின் அவசரவழி வழியாக சில பயணிகள் வெளியே வந்தனர். அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்ததால் எதுவும் தெரியவில்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர. சம்பவ நடந்த இடம் முழுவதும் இருட்டாக இருந்தால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெனரேட்டர்கள் கொண்டு வரப்பட்டு மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
ரெயில் பெட்டிகளை வெட்டி எடுத்து அதிலிருந்த பயணிகள் மீட்கப்பட்டனர். நேற்று இரவு பயணிகள் 8 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு முதல் விடிய விடிய ரெயில் பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது.
காயமடைந்த 40 பயணிகள், விஜயநகரம் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 50 மருத்துவர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயம் அடைந்தவர்கள் திருமலை- மெடிகோவர் மருத்துவமனைகள் மற்றும் விஜயநகரத்தின் குயின்ஸ் என்ஆர்ஐ மருத்துவமனை உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று காலையில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.
ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை தொடர்பு கொண்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
ரெயில் விபத்து காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 22 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் கிடக்கும் ரெயில் பெட்டிகளை அகற்றும் பணி இன்று காலையில் தொடர்ந்து நடந்தது.
விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் குறித்து தகவல் பெற ரெயில்வே துறை சார்பில் 8106053051, 8106053021, 8500041670, 8500041671, 0891 2746330, 0891 2744619, 8300383004 என்ற இலவச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மனித தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக கிழக்கு ரெயில்வே செய்தி பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயில் விபத்தில் பயணிகள் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
- பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.
பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதில் நவம்பர் 9-ந்தேதி மாதாந்திர ஏகாதசி, 11-ந்தேதி சிவராத்திரி, 12-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம், 13-ந்தேதி வரலட்சுமி விரதம், 14-ந்தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ந்தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17-ந்தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.
18-ந்தேதி வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19-ந்தேதி ஏழுமலையான் கோவில் புஷ்பயாகம், 26-ந் தேதி கார்த்திகை மாத பவுர்ணமி, 27-ந்தேதி திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28-ந்தேதி திருப்பானழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 85,497 பேர் தரிசனம் செய்தனர். 24 ,873 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும்
- படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- மத்திய மந்திரி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்டகப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.
அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.
அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணி துரிதமான நடைபெற்று வருகிறது.






