search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhrapradesh Train Accident"

    • முதற்கட்ட விசாரணையில் ரெயில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
    • ரெயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரெயில் சேவை படிப்படியாக சீராகும் என தகவல்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெயில் விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணையில் ராயகடா பயணிகள் ரெயிலின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் செய்த தவறால் தான் ரெயில் விபத்தில் சிக்கியது என கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    ஏழுபேர் கையொப்பமிட்ட முதற்கட்ட ஆய்வு அறிக்கையில் விபத்துக்குள்ளான இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள், கிடைக்கப் பெற்ற ஆதாரங்கள், அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகள், தரவுகள் அடங்கிய அறிக்கை மற்றும் ஸ்பீடோமீட்டர் விவரம் உள்ளிட்டவை மிக கவனமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

     

    ராயகடா பயணிகள் ரெயிலில் இருந்த ஓட்டுனர்கள் தவறான ஆட்டோ சிக்னல்களை வழங்கியதால் தான், இந்த ரெயிலின் பின்புறம் விசாகபட்டினம் பாலசா பயணிகள் ரெயில் மீது மோதியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி ராயகடா பயணிகள் ரெயிலின் லோக்கோ பைலட் எஸ்.எம்.எஸ். ராவ் மற்றும் துணை லோக்கோ பைலட் ஆகியோர் தான் ரெயில் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ரெயில்வே விதிகளின் படி ராயகடா ரெயில் இரண்டு நிமிடங்களுக்கு நின்று, பிறகு மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பி சென்றிருக்க வேண்டும். ரெயில் இவ்வாறு நிற்காமல் சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

    ராயகடா பயணிகள் ரெயில் விசாகபட்டினம் பாலசா ரெயிலின் மீது அக்டோபர் 29-ம் தேதி இரவு 7 மணி அளவில் மோதியது. இந்த விபத்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் விழியநகரம் மாவட்டத்தில் அரங்கேறியது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

    • மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

    ஆந்திரா மாநிலம் கந்தகபள்ளி பகுதியில் உள்ள ரெயில் தடத்தில் விசாகா- ராயகாடா பயணிகள் ரெயில் பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அதே தண்டவாளத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ் ரெயில் அதன் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

    இதில், பயணிகள் ரெயிலின் 3 பெண்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

    தற்போது மேலும் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனால் உயரிழப்பு எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து ரெயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.

    மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

    ரெயிலில் பயணிகள் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ×