search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு
    X

    ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

    • உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும்
    • படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்- மத்திய மந்திரி

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்டகப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து நின்றது.

    அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு மற்றொரு பயணிகள் ரெயில் சென்றது. அது, நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம்- பாலசா பயணிகள் ரெயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.

    அதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய், லோசான காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் வழங்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி தெரிவித்துள்ளார்.

    மீட்புப் பணி துரிதமான நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×