என் மலர்
ஆந்திர பிரதேசம்
- கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
- ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்
இந்நிலையில் வார விடுமுறை நாள் என்பதால் நேற்று காலை முதல் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 70,158 பேர் தரிசனம் செய்தனர்.24,801 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.51 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
- 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.
திருப்பதி:
டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டல்லா லானா பொது சுகாதார மையத்தை சேர்ந்த பேராசிரியர் பிரபாத் ஜா ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
40 வயதிற்குள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டால், புகை பிடிக்காதவர்கள் போலவே நீண்ட நாள் வாழ முடியும். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கன்னடா, மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த 40 வயது முதல் 79 வயது வரை உடைய1.5 மில்லியன் சிகரெட் பிடிப்பவர்கள் மற்றும் பிடிக்காதவர்களிடம் ஆய்வு நடத்தினார்.
சிகரெட் பிடிப்பதை கைவிட்டால் 3 மடங்கு இறப்பு அபாயத்தை தவிர்க்கலாம்.
மேலும் 12 முதல் 13 ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழலாம். 3 ஆண்டுகளுக்கு குறைவாக சிகரெட் பிடிப்பவர்கள் ஆயுட்காலம் அதிகரித்து உள்ளது.
இதனால் பெரிய நோய்களிலிருந்து அபாயத்தை குறைக்கலாம் சிகரெட் பிடிப்பதன் மூலம் வாஸ்குலர் மற்றும் புற்றுநோயால் இறக்கும் ஆபத்தை குறைக்கலாம். மேலும் நுரையீரல் நோய்களிலிருந்து விடுபடலாம்.
இவ்வாறு அவர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
- சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது.
12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
ஐதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தர் தனது குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
அவரது வாயில் கடினமான பொருள் சிக்கியது. பின்னர் வாயில் சிக்கிய பொருளை எடுத்துப் பார்த்தார். அப்போது எலும்பு துண்டு இருந்தது.
புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்தார். கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஆந்திராவின் நெல்லூர் அருகே லாரி மற்றும் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
- இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் அடுத்த காவாலி, முசுனுர் சுங்கச்சாவடி அருகே லாரி ஒன்று நின்று கொண்டு இருந்தது. இன்று அதிகாலை 2 மணி அளவில் எதிரே வந்த மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத் நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பஸ் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளான லாரியின் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன் பகுதி நொறுங்கியது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் இருந்த பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
லாரியின் மீது பஸ் மோதிய அதிர்ச்சியால் பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவாலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் 2 பேர், பஸ் டிரைவர், பெண் பயணி உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு 2 பேர் இறந்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
சந்திரசேகர் (37), கோபிநாத் (23), மனோஜ் (23), ராஜ்குமார் (38), ரமணா (38), பவன் (23), தனவேஸ்வர் (28), ரந்தீர் (31), தினகரன் (46), ஸ்வேதா (19), அஜிதா (30) கண்ணன் (50), ரூபா (30) உள்ளிட்ட 15 பேர் காவாலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரத சப்தமி விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
திருப்பதி:
ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும்போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வருகிற 16-ந் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா வருகிற 16-ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும்போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெ றுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வருகிற 16-ந் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சிபாரிசு கடிதம் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம்.
- தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் கொண்டு வருவோருக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.
இவர்கள் திருமலையில் உள்ள இணை நிர்வாக அதிகாரி (ஜே.இ.ஓ.) அலுவலகம் சென்று, சிபாரிசு கடிதத்துடன் தங்களின் ஆதார் விவரத்தை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அன்று மாலை 4 மணிக்கு பிறகு செல்போனில் குறுஞ்செய்தி வரும். இவர்கள் திருமலையில் உள்ள எம்.பி.சி.-34 எனும் இடத்திற்கு சென்று, அந்த குறுந்தகவலை காண்பித்து மறுநாள் காலை தரிசனத்துக்கான வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டை பணம் செலுத்தி பெறவேண்டும்.
இந்த முறையில், மறுநாள் காலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், முந்தைய நாள் இரவு எம்.பி.சி.-34 கட்டிடத்தின் அருகே நூற்றுக்கணக்கில் காத்திருப்பார்கள். இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெறவேண்டி இருக்கும்.
சில நேரங்களில் சிபாரிசு கடிதம் கூட ரத்தாகி, டிக்கெட்டுக்கான குறுஞ்செய்தி வராமல் போவதும் உண்டு. இதைக்கூட அறிந்து கொள்ள முடியாமல் பலர் திருமலையிலேயே காத்திருப்பது வழக்கம்.
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை தேவஸ்தானம் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி அமல்படுத்தி உள்ளது.
அதாவது, திருமலையில் சிபாரிசு கடிதத்தை, ஆதாருடன் விண்ணப்பித்த பக்தர்கள் டிக்கெட்டுக்காக அன்று இரவு வரை காத்திருக்க தேவையில்லை. சிபாரிசு கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு மாலை 4 மணிக்குபிறகு செல்போனில் குறுஞ்செய்தியும், டிக்கெட் தொகையை செலுத்துவதற்காக பே லிங்க்கும் வரும்.
இதன் மூலம் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தினால், உடனே தரிசன டிக்கெட் செல்போனில் வந்துவிடும். இதை வைத்து மறுநாள் காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கு பக்தர்கள் செல்லலாம். இந்த புதிய திட்டத்துக்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- திருப்பதி கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வர விடுமுறை நாள் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதியில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் படிப்படியாக குறைந்தது. கணிசமாக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 64,512 பேர் தரிசனம் செய்தனர். 23,491 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
- செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன.
செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் அதிக அளவு மவுசு இருப்பதால் செம்மரங்களை வெட்டி கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் அன்னமய்யா மாவட்டம், பிலேரூ அருகே உள்ள குண்ட்ராவாரி பள்ளி அருகே உள்ள சோதனை சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் காரை மறித்தனர்.
ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனை கண்ட கணேஷ் என்ற போலீஸ்காரர் காரை தடுத்து நிறுத்த முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த செம்மர கடத்தல் கும்பல் காரை கணேஷ் மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காரில் இருந்த செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேர் வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர்.
அங்கிருந்த போலீசார் வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை துரத்தி சென்றனர். அதில் 2 பேரை மடக்கி பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடினர்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஏராளமான அதிரடிப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். வனப்பகுதிக்குள் தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரில் இருந்து 7 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்கியவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
செம்மர கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரஷிய நாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
- கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற காளகஸ்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிறந்த ராகு-கேது ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோவிலில் ரஷியநாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று காலையில் அங்கு நடந்த ராகு-கேது பூஜையில் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.

இக்கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்டது. அப்போது பயபக்தியுடன் அவர்கள் வழிபாடு செய்தனர்.
பூஜையின் போது ரஷிய பக்தர்கள் பூக்கள், பழங்கள், தீப விளக்குகள் வைத்து வழிபாடு செய்த நிகழ்ச்சியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.
மேலும் இந்த பூஜையில் பங்கேற்ற ரஷிய பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட்டானது.
- தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 209 ரன்னில் அவுட் ஆனார்.
இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷிர் மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டு வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஜாக் கிராலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்சும் 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதற்கிடையே, மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோகித் சர்மா 13 ரன்னும், ஜெய்ஸ்வால் 17 ரன்னும் எடுத்தனர். 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி 81 ரன் சேர்த்த நிலையில் அய்யர் 29 ரன்னில் வெளியேறினார்.
ரஜத் படிதார் 9 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் அரை சதம் கடந்தார். 3-ம் நாள் உணவு இடைவேளையில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 273 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுப்மன் கில் 60 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய சுப்மன் கில் சதமடித்து அசத்தினார். இதுவரை இந்திய அணி 350க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
- ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார்.
அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு 3 தலை நகரங்கள் என அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3 தலை நகரங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதியை தலைநகராக மாற்றுவோம் என்றார்.






