என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.
    • குழந்தைகள் ரூ.5 முதல் ரூ.7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஜெகநாத சாமி கோவில் அருகே உள்ள ஹார்பர் பூங்காவில் 5 மாத பெண் குழந்தையை விற்க உள்ளதாக சிறப்பு அதிரடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையை விற்க முயன்ற 2 பேரை கைது செய்தனர்.

    அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் இருந்து 15 மாத குழந்தையை விசாகப்பட்டினத்திற்கு கடத்தி வந்து இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரிய வந்தது.

    அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அனக்கா பள்ளி, அச்யுதா புரம், பெத்தாநாவா,ஒரிசாவில் ஜெய்பூர் ஆகிய இடங்களில் இருந்து 17 பேர் கொண்ட குழந்தை கடத்தல் கும்பலை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 6 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி வரும் கும்பல் டெல்லி மும்பை ஐதராபாத் விசாகப்பட்டினம் ஆகிய மாநகரங்களை குழந்தை விற்பனை சந்தையாக கொண்டு செயல்பட்டது தெரியவந்தது.

    கடத்தி வரப்படும் குழந்தைகள் ரூ 5 முதல் 7 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

    குழந்தை கடத்தலை தடுப்பதற்காக ஆந்திராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் முழுவதும் கேமராக்களை பொறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கிறிஸ்தவ அமைப்பு விடுதியில் மாணவர்களுக்கு பிரியாணி, சமோசா வழங்கப்பட்டது.
    • விடுதியில் சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை சாப்பிட்டனர்.

    விடுதிகளில் சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கு் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால், மாணவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்திலும் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைத்து விட்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.
    • பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    திருப்பதி:

    வட மாநில தொழிலாளர்களையும் ஏழைகளையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றிச் செல்லும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ரெயில்வே துறை இயங்கி வருகிறது.

    வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரெயில்களில் முன்பை விட தற்போது பொதுபெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு வரும் வட மாநிலத்தினர் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பொதுப்பட்டிகள் குறைவாக இருந்தன.

    பொது பெட்டியில் பயணிகள் நுழைய முடியாத அளவுக்கு வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அதிக அளவில் இருந்தனர். ஏறும்போதே அவர்களுக்கு கடும் நெரிசல் சண்டை ஏற்பட்டது.

    மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் இருக்கையில் அமர்ந்தவர்களால் எழுந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் தரையிலேயே படுத்து தூங்கினர்.

    இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் காலடிகளுக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படியும் பயணத்தை கழித்தனர். பலர் கால் வைக்கக்கூட இடம் இல்லாத இடத்தில் கால்கடுக்க நின்றனர். கழிவறையிலும் பயணிகள் இருந்தனர். அவர்கள் கழிவறையில் நின்று கொண்டு சாப்பிட்டதை காண முடிந்தது.

    பொதுப்பட்டியில் இருந்த பெண்கள், ஆண்கள் என யாருமே கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகளும் அவதி அடைந்தனர்.

    தெற்கு மத்திய ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்களில் 27 சதவீதம் பேர் ஏ.சி. மற்றும் படுக்கை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.

    பொது பெட்டிகளில் 73 சதவீத பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 அல்லது 6 பொதுப்பட்டிகள் இருந்தன. வருவாயை கருத்தில் கொண்டு பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை கணிசமாக குறைத்து விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்

    பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை பற்றி ரெயில்வே நிர்வாகம் கவலைப்படவில்லை.

    அவர்களை ஒரு பூச்சிகள் போல நடத்துகின்றனர். பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பல மணி நேரம் நரக வேதனையை அனுபவித்தபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கையில் குழந்தைகளுடன் இருந்த கர்ப்பிணி ஒருவர் நெரிசலில் சிக்கி காயம் அடைந்து இறந்தார்.

    தெற்கு மத்திய ரெயில்வேயில் உள்ள பெட்டிகளில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இதுவரை 30 லட்சம் கடிதங்கள் எழுதியுள்ளோம்.

    இதே நிலை தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில ரெயில்களிலும் நீடித்து வருகிறது. நீண்ட தூர ரெயில்களில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

    • ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் விசாரணை.

    ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

    இந்த விவகாரம் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமையலறையில் இருக்க வேண்டிய சிலிண்டர், படுக்கையறைக்கு வந்தது எப்படி என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    உயிரிழந்த ரமாதேவியின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், ரமாதேவி வேறொருவடன் தொடர்பில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரமாதேவியின் கள்ளக்காதலனும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.

    நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது.

    மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார்.
    • மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபுநாயுடு முதல்-மந்திரி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே இந்த போட்டி நடத்தியதில் நடிகை ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11-ந்தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு இருப்பதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரோஜா அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    • எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பூமி கண்காணிப்பு இ.ஓ.எஸ். 08 என்ற செயற்கைகோளை எஸ்.எஸ்.எல்.வி- 3டி ராக்கெட் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எஸ்.எஸ்.எல்.வி-டி 3 ராக்கெட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து இனி வணிகரீதியாக செயல்படுத்தப்படும். பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளுக்கு இதுவரை தேவையான உதிரி பாகங்களை தனியாரிடம் பெற்று வந்தோம். தொழில்துறையை மேலும் மேம்படுத்துவதற்காக இனி ராக்கெட் தொழில் நுட்பத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பாக பல நிறுவனங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. எதிர்பார்த்த படி பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர். அதில் தகுதியான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடன் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெறும்.

    தனியார் நிறுவனங்களின் வணிக ரீதியான செயற்கைகோள்கள் இனி இஸ்ரோவின் கீழ் செயல்படும் என்.எஸ்.ஐ.எல். நிறுவன மூலம் ஏவப்படும். உள்நாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும்.

    எஸ்.எஸ்.எல்.வி- டி3 ராக்கெட் செலுத்தப்பட்ட செயற்கைகோள்கள் விண்வெளியில் புற ஊதா கதிர்கள், காமா கதிர்கள் விண்வெளியில் எப்படி இருக்கிறது? என்பதை கண்டறிந்து தகவல் தெரிவிக்கும். இது ககன்யான் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

    மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக ஆளில்லா முதல் சோதனை ராக்கெட் திட்டம் வருகிற டிசம்பரில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்துள்ளது. அதற்கான ஒருங்கிணைப்பு பணிகள் அடுத்த சில மாதங்களில் முடிக்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்.

    தெற்கு திசைக்கு அனுப்ப வேண்டிய செயற்கைகோள்கள் அனைத்தும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து அனுப்புவது தான் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது விஞ்ஞானிகள் ராஜராஜன், நாராயணன், சங்கரன், வினோத், அவினாஷ் உள்பட பலர் இருந்தனர்.

    • வயநாடு நிலச்சரிவு நிவாரண உதவித் தொகையாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி அறிவித்துள்ளார்.
    • கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.10 கோடி வழங்க உள்ளார்.

    கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு ரூ. 10 கோடி நன்கொடை அறிவித்துள்ளது.

    வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி அன்று வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 310 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

    இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கேரள அரசுக்கு ரூ.10 கோடி வழங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆந்திர அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

    முன்னதாக, தெலுங்கு திரையுலகில் இருந்து பிரபாஸ் இரண்டு கோடியும், சிரஞ்சீவி மற்றும் சரண் ஒரு கோடி ரூபாயும், அல்லு அர்ஜுன் ரூ. 25 லட்சம், ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம், தயாரிப்பாளர் நாகவம்ஷி ரூ. 5 லட்சம் என பிரபலங்கள் பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண நிதி அளித்துள்ளனர்.

    இதேபோல், நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி மற்றும் சில சினிமா நட்சத்திரங்கள் நேரடியாகச் சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும்.
    • சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் திட்டமிட்ட திசையில் சரியாக பயணித்தது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த செயற்கைக்கோள் 24 மணி நேரமும் பூமியை கண்காணிக்கும்.

    சுற்றுச்சூழல் கண்காணிப்புக்காக இரவிலும் துல்லியமான படம் எடுக்க உதவும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
    • 3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    • எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது.
    • பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்துள்ள பூமி கண்காணிப்பு செயற்கைகோள் இ.ஓ.எஸ்.08. இந்த செயற்கைகோளை சுமந்தப்படி எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் பாய்கிறது.

    பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

    3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

    • அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி.
    • ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார்.

    அதன்படி இன்று ஆந்திராவில் உள்ள 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டது.

     காலை, மதியம், இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

     உணவு தரம் சுவையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

    ×