என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரசிகர்களுக்காக தேவரா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
- படம் பார்த்து கொண்டிருந்த மஸ்தான் வாலி தியேட்டரிலேயே மயங்கி விழுந்தார்.
ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும்.
தேவராபடம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் ரசிகர்களுக்காக தேவரா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்து கொண்டிருந்த மஸ்தான் வாலி தியேட்டரிலேயே மயங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
- லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.
திருப்பதி:
திருப்பதி லட்டு தயாரிக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த கலப்பட நெய்யை பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.
லட்டு விவகாரம் பக்தர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக அறிவித்து இருந்தார்.
அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதனால் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி வருகையை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.
இது குறித்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியதாவது:-
ஆந்திராவில் பேய்கள் ராஜ்ஜியம் நடந்து வருகிறது. லட்டு விவகாரத்தில் பா.ஜ.க. கண்ணை மூடிக்கொண்டுள்ளது.
ஒருபுறம் போலீசார் எங்கள் கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டி நோட்டீஸ் அனுப்புகின்றனர். இன்னொரு பக்கம் சந்திரபாபு நாயுடு தனது தவறுகளை மறைக்க அண்டை மாநில பா.ஜ.க.வினரை கொண்டு வந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்குகிறார்.

இது தவறான செயல். ஏழுமலையானை மதிக்கும் மற்றும் நேசிக்கும் நான் அங்கு சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அங்கு செல்ல விரும்பவில்லை.
அதனால் எனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைக்கிறேன். திருப்பதி செல்லும் பயண தேதியை பின்னர் அறிவிக்கிறேன்.
100 நாள் ஆட்சியில் நடந்த தோல்விகளை திசை திருப்பவும், மக்களின் கவனத்தை திசை திருப்பவும் லட்டு விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையில் எடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் கடிதம் எழுதினார். இதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் லட்டு விவகாரத்தில் பா.ஜ.க கண்ணை மூடிக் கொண்டுள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியிருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உறவினர் ஒருவர் மேரிஜோதியை தோளில் அமர வைத்து சுமந்துபடி வெள்ளத்தை கடந்தார்.
- மற்றொருவர் கை குழந்தையுடன் உயிரை கையில் பிடித்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து மறுகரைக்குச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜி மாவட்டம் செஞ்சேரி கொண்டாவை சேர்ந்தவர் மேரி ஜோதி. நிறைமாத கர்ப்பிணியான இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் மேரி ஜோதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நேற்று மதியம் மேரி ஜோதி ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் வந்தார். செல்லும் வழியில் மலையில் இருந்து வரும் ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் ஆட்டோ டிரைவர் ஓடையை கடக்க முடியாது என தெரிவித்தார். இதையடுத்து உறவினர் ஒருவர் மேரிஜோதியை தோளில் அமர வைத்து சுமந்துபடி வெள்ளத்தை கடந்தார். மற்றொருவர் கை குழந்தையுடன் உயிரை கையில் பிடித்தபடி ஆபத்தான முறையில் ஓடையை கடந்து மறுகரைக்குச் சென்றனர்.
இதனை சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற அவல நிலைக்கு முடிவு கட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
- ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து பேட்டியளித்த ஜெகன் மோகன் ரெட்டி, "திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ? நான் திருமலைக்கு வருவதை தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றார்.
கெஜன் மோகன் ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி அளித்துள்ளார்.
அதில், "ஜெகன் மோகன் ரெட்டி திருமலைக்கு வருவதற்கு அரசு எந்த இடையூறும் உண்டாக்கவில்லை. ஏழுமலையானை நம்புபவர்கள் திருமலைக்கு வருவதை வரவேற்கிறோம்" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
திருமலைக்கு வருவதற்கு அரசு தடை விதித்ததாக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.
வெங்கடேசப் பெருமானை நம்புபவர்கள் திருமாலை வழிபடவும், தரிசிக்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அதன் சொந்த மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன. அவை மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.
ஜெகன் மோகன் ரெட்டி கோவிலுக்கு போகக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. சமீபகால சர்ச்சைகளால், இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டு, பக்தர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவர் திருமலைக்கு வருகை தந்தால், தாங்களும் அணிதிரள்வதாக இக்குழுக்கள் தெரிவித்துள்ளன. அமைதியையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஏன் தவறான தகவல்களை பரப்புகிறார்? ஒவ்வொரு மதத்திற்கும் மரியாதைக்குரிய மரபுகள் மற்றும் கொள்கைகள் உள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.
- ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு.
- திருப்பதியில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று திருப்பதி செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சர்ச்சை எழுந்த நிலையில் பயணத்தை ஜெகன் மோகன் ரெட்டி ரத்து செய்துள்ளார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை, ஆந்திர அரசு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
ஆந்திரா அறநிலையத்துறை சட்டம் 136ன் கீழ், இறை நம்பிக்கை படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் னெ திருமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி வருவதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கூடவே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருமலையில் இந்து அல்லாதவர்களுக்காக ஏராளமான இடத்தில் பேனர்களுடன் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:-
திருப்பதி திருமலையில் பெருமாளை கும்பிட வந்தால் கைது செய்வீர்களா ? அது சட்டத்துக்கு புறம்பான செயல் என வர்ணிப்பீர்களா ?
நான் முதலமைச்சராகும் முன்பு ஏழுமலையானை வழிபட்ட பின்னரே பாத யாத்திரையை தொடங்கினேன்.
என்னுடைய மதம் என்ன என்று கேட்கிறார்கள். என்னுடைய மதம் மனிதாபிமானம், அதை டிக்ளரேஷன் படிவத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
இறைவனை சந்தித்து வழிபட கூட இந்த ஆட்சி தடை விதக்க முயற்சிக்கிறது. எனது தந்தை முதல்வராக இருந்தபோது, 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தார்.
நானும் முதல்வராக இருந்தபோது 5 முறை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்தேன்.
திருப்பதிக்கு நான் பயணம் மேற்கொள்ள இருந்த அதே நேரத்தில் பஜாகவினரும் திருப்பதியிலு குவிந்து வருகின்றனர்.
நான் வீட்டில் பைபிள் வாசிக்கிறேன். இந்து, முஸ்லீம், சீக்கியம் என அனைவரையும் நான் மதிக்கிறேன்.
முதல்வராக இருந்த ஒருவரையே கோயிலுக்கு அனுமதிக்க மறுத்தால், தலித்களை எவ்வாறு நடத்துவார்கள்?
திருப்பதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை நெய் வாங்க டெண்டர் விடுவது வழக்கம். சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சியில் 15 முறை டெண்டர் நிராகரிக்கப்பட்டுள்ளது. என்னுடைய ஆட்சி காலத்திலும் நெய்க்கான டெண்டர் 15 முறை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதால் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
- திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதியில் லட்டு செய்வதற்கான நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க ஆந்திரா முழுவதும் நாளை 28-ந் தேதி கோவில்களில் பரிகார பூஜை நடத்தி வழிபட வேண்டும் என ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுலையான் கோவிலில் நாளை தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இன்று மாலை 5 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து திருப்பதி மலைக்கு சென்று பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
நாளை காலை 10.30 மணிக்கு ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி வருகைக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏழுமலையான் கோவில் விதிகளின் படி அவர் மாற்று மதத்திற்கான பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வாரா? என கேள்வி எழுப்பியது.
இதற்கு பதில் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஜெகன் மோகன் ரெட்டி மாற்று மதத்திற்கான பதிவேட்டில் கையெழுத்திட்டால் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார் என தெரிவித்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திருப்பதியில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோ பேக் ஜெகன்மோகன் என்றும் 5 ஆண்டுகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டியை திருப்பதி மலையில் கால் வைக்க விடமாட்டோம் என கோஷம் எழுப்பினர்.
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதை தடுக்க ஆயிரக்கணக்கான இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் அலிபிரி சோதனை சாவடியில் குவிந்து வருகின்றனர்.
இதே போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு செல்லும் வரை தங்களது போராட்டம் தீவிர படுத்தப்படும் என ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
திருப்பதி நகர எல்லைகளில் போலீசார் சோதனை சாவடிகளை அமைத்து வாகனங்களில் வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மலைக்கு வருவதால் கலவரம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி திருப்பி அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருப்பதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் குவிந்து வருவதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
- பெண்ணின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.
- டாக்டர்கள் மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம் செஞ்சு குடேவை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த 21-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக கொத்த பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணை பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்தனர்.
நகரத்தில் உள்ள ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் கூறினர்.
ஆனால் பெண்ணின் உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்குமாறு வேண்டிக்கொண்டனர்.
இருப்பினும் அங்கிருந்த டாக்டர்கள் ஊழியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டனர். இதனால் கர்ப்பிணிப் பெண் பல மணி நேரம் ஆஸ்பத்திரி வராண்டாவில் காத்திருந்தார்.
இதனால் விரத்தி அடைந்த கர்ப்பிணிப் பெண்ணை வேறு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக அவரது உறவினர்கள் மாடி படிகட்டு வழியாக கீழே அழைத்து வந்தனர். படிக்கட்டில் நடந்து வந்த போது கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. இதனை அவரது உறவினர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். பின்னர் தாயும் குழந்தையும் அவரது உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
பிரசவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் என கருதிய மருத்துவமனை ஊழியர்கள் 3 நாட்களுக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றனர்.
அவரை சமாதானம் செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து பின்னர் மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள் மற்றும் மருத்துவ மனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது.
- சமூக வலைத்தளங்களில் லட்டு பரிதாபங்கள் விடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி மற்றும் சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.
லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த புகாரில், 'லட்டு பாவங்கள்' என்ற பெயரில் வெளியான வீடியோவை நீக்கியிருந்தாலும் இந்துக்களின் உணர்வுகளை அவமதித்துள்ளனர். ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரை இழிவுபடுத்தியுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரண உதவி வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- ஊழியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்களை பதிவு செய்தனர்.
ஆந்திராவில் இந்த மாத தொடக்கத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் வரலாறு காணாத அளவு பேரிழப்பு ஏற்பட்டது.
முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரண உதவி வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி 1600 பேருக்கு கையடக்க அளவிலான கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்களை பதிவு செய்தனர்.
இதனால் 15 நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்தனர். பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேர் வங்கி கணக்கில் ரூ.602 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதில் அரசு சாதனை படைத்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
- லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
- சிறப்பு பூஜை நடத்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள கோயில்கள் சிறப்பு பூஜைகள் நடத்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, ஆந்திரா மாநிலம் முழுவதும் வரும் 28ம் தேதி சிறப்பு பூஜை நடத்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில், முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தை போக்க சிறப்பு பூஜை என கூறி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகளில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.
- ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.
விலங்குகளில் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதனால், இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து.
- கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கம்மத்தில் இருந்து பிரகாசம் மாவட்டத்திற்கு உயிர் உள்ள மீன்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது.
மெகபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மரிபெடா என்ற இடத்தில் சென்ற போது திடீரென நடுரோட்டில் கவிழ்ந்தது. விபத்தில் லாரியில் உயிருடன் இருந்த மீன்கள் சாலை முழுவதும் துள்ளி குதித்தன.

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஓடிச்சென்று மீன்களை பிடித்தனர். அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாக்கு பைகள் மற்றும் பாத்திரங்களைக் கொண்டு வந்து துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீன்களை அள்ளிக் கொண்டிருந்த பொதுமக்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.






