என் மலர்
இந்தியா

15 நாட்களில் 4 லட்சம் பேர் வங்கி கணக்கில் ரூ.602 கோடி வெள்ள நிவாரணம்- சந்திரபாபு நாயுடு அரசு சாதனை
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரண உதவி வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- ஊழியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்களை பதிவு செய்தனர்.
ஆந்திராவில் இந்த மாத தொடக்கத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது.
இதனால் வரலாறு காணாத அளவு பேரிழப்பு ஏற்பட்டது.
முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரண உதவி வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி 1600 பேருக்கு கையடக்க அளவிலான கம்ப்யூட்டர் வழங்கப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு எண்களை பதிவு செய்தனர்.
இதனால் 15 நாட்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்தனர். பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேர் வங்கி கணக்கில் ரூ.602 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதில் அரசு சாதனை படைத்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.






