லட்டு விவகாரம்: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்.
லட்டு விவகாரம்: ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், லட்டு தயாரிக்க கலப்பட நெய் வழங்கியதாக, திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார் தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுதொடர்பாக திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் புகார் அளித்துள்ளார்.

விலங்குகளில் கொழுப்புகள் உள்ளிட்ட பொருட்களை கலப்படம் செய்து 4 டேங்கர் நெய் சப்ளை செய்ததாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதனால், இந்த விவகாரம் குறித்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com