என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சுஜாதா நகரை சேர்ந்தவர் ஜம்பங்கி சண்முகா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    தற்போது ஹக்கும் பேட்டையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்றிருந்த ஜம்பங்கி சண்முகா நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் கோபால பட்டினத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி தனது நண்பரின் பிறந்த நாளை கொண்டாடினார். மது போதையில் இருந்த இருவரும் கத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

    அப்போது அறைக்கு வந்த ஓட்டல் ஊழியர் கத்தி கூச்சலிடக் கூடாது என கூறினார். இதில் ஆத்திரமடைந்த ஜம்பங்கி சண்முகா மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து விடுதி ஊழியரை தாக்கி வெளியே அனுப்பினர்.

    அறையில் இருந்து வெளியே வந்த விடுதி ஊழியர் அறையை வெளிப்பக்கமாக தாழிட்டு பூட்டினார்.

    விடுதி ஊழியர் கதவை வெளிப்பக்கமாக பூட்டியதால் போலீசில் புகார் செய்து விடுவார் என ஜம்பங்கி சண்முகா எண்ணினார்.

    போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என எண்ணிய சம்பங்கி சண்முகா நடிகர் வடிவேலு பாணியில் அறையில் இருந்த பெட்ஷீட்டை ஜன்னலில் கட்டி அதன் மூலம் வெளிப்புறமாக கீழே குதித்தார்.

    ஆனால் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த ஜம்பங்கி கிருஷ்ணா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சோமபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் தங்களது நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர்.

    இந்த நிலையில் மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.

    தங்களது மகளை யாரோ பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தீவிர விசாரணைக்கு பின்னரே மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவரும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது.தற்போது லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுக்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.

    மேலும் லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி பின்னர் லட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றுடன் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு 308 வயது ஆகிறது.

    கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை பக்தர்களுக்கான மகா பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோவிலில் 3 வகையான லட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே கடும் கிராக்கி உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கின்றனர்.

    இதேபோல் புரோக்தம் என்ற லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் தினமும் அதிகமாக வழங்குகின்றனர். இதன் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் லட்டு எடை குறைவாக உள்ளது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50-க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்.

    திருப்பதி:

    தமிழ் திரையுலகில் 1970-ம் ஆண்டுகளில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. இவர் 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'நான் அவனில்லை', 'அபூர்வ ராகங்கள்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் அவருக்கு தாயாக நடித்திருந்தார்.

    இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பாஜ.க. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் மற்றும் தெலுங்கானா தலைவர் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சித் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். இனிவரும் காலங்களில் சினிமாவை விட அரசியலுக்கு தான் முன்னுரிமை அளிப்பேன் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.
    • பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

    பொது சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக பெண்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி போதுமான அளவுக்கு கணிக்கவில்லை.

    இது இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. அரசு வழங்கும் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

    குறிப்பாக கிராமப்புறங்களில், சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும்.

    ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரகம், இதயம், எலும்பியல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் இருக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பக்தர்கள் சிறுத்தை மீது கற்களை வீசி கூச்சலிட்டதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
    • கரடியை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக் கடனாக அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து வருகின்றனர்.

    அலிபிரியில் இருந்து திருமலைக்கு செல்லும் நடைபாதை அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி அலிபிரி நடைபாதைக்கு வருகின்றன.

    கடந்த மாதம் பக்தர் ஒருவர் தனது 4 வயது குழந்தையுடன் நடந்து சென்றார். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை குழந்தையை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது.

    அங்கிருந்த பக்தர்கள் சிறுத்தை மீது கற்களை வீசி கூச்சலிட்டதால் குழந்தையை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து அலிபிரி நடைபாதைக்கு வந்தது. கரடியை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு சில பக்தர்கள் கரடி நடந்து செல்வதை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் கரடி நடைபாதையில் இருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    அலிபிரி நடைபாதையில் வன விலங்குகள் புகாமல் இருக்க நடைபாதை முழுவதும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்படும் என ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    போர்க்கால அடிப்படையில் வேலி அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் புரோட்டாத்தூர், ஈஸ்வர ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜெய கிஷோர் குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இவரது நெருங்கிய நண்பர் சதீஷ்குமார் (வயது 42). இருவரும் கடந்த மாதம் ஜெய கிஷோர் குமார் வீட்டில் மது அருந்தினர். மது போதை தலைக்கு ஏறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஜெய கிஷோர்குமார் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து வீட்டின் பின்புறத்தில் சுவரையொட்டி பள்ளம் தோண்டி ஜெய கிருஷ்ணகுமார் உடலை புதைத்தார்.

    வீட்டில் இருந்த ரத்த கரைகளை ரசாயனங்களை ஊற்றி சுத்தம் செய்தார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டை விட்டு வெளியே சென்ற கணவர் மீண்டும் வீடு திரும்பாததால் இது குறித்து புரோட்டாத்தூர் போலீசில் சதீஷ்குமாரின் மனைவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மது போதையில் இருந்த ஜெய கிஷோர்குமார் சதீஷ்குமாரை கொலை செய்ததாக தனது நண்பர்களிடம் உளறி கொட்டினார். இதனை கேட்ட அவரின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ஜெய கிஷோர்குமாரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

    விசாரணையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். புதைக்கப்பட்ட சதீஷ்குமார் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய கிஷோர்குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது.
    • புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வருவார்கள்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்கூட்டியே தொடங்கியுள்ளனர்.

    செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ கொடியேற்ற விழா நடக்கிறது. அதே நாளில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். 22-ந் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    இதேபோல நவராத்திரி பிரம்மோற்சவ விழா அக்டோபர் மாதம் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 19-ந் தேதி கருட சேவை நடக்கிறது.

    இதனைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் வருகிறது. புரட்டாசி மாதத்தில் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வருவார்கள். குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    2 பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விஐபி தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்களை ஏற்க திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. அன்றைய நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி கருட சேவை இன்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி திருப்பதியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனபல்லி பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

    மேலும் இருவரும் திருப்பதியில் உள்ள சட் டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி இச்சாபுரம் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று திருப்பதி ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் தெரிவித்தார்.

    • கவுன்சிலர் தேர்தலின்போது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்திருந்தார்.
    • அவற்றை நிறைவேற்றாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.

    கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

    இதற்கிடையே, அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதனால் 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார்.

    இந்நிலையில், நேற்று நகரசபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறிய அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார் ராமராஜு. அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர், தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது.
    • இதையடுத்து, நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

    ஐதராபாத்:

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

    இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அதன்பின் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார்.
    • மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22).

    இவர்கள் 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தன்விதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    தற்போது அந்த சிறுமிக்கு 4 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

    கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த நவீன் குமார் (19) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாய் வீட்டிற்கு சென்று நவீன் குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதலுக்கு தன்விதா தடையாக இருப்பதாக இருவரும் எண்ணினர்.

    இதனால் மகளை கொலை செய்ய கல்யாணி முடிவு செய்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமி தன்விதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மகள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் கூறினார்.

    மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொலை செய்ததாக கல்யாணி வாக்குமூலம் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×