குழந்தை பருவம் முதல் உடற்பயிற்சி அவசியம்: ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நோய் பாதிப்பு- தமிழிசை பேச்சு

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.
குழந்தை பருவம் முதல் உடற்பயிற்சி அவசியம்: ஆண்களைவிட பெண்களுக்கு அதிக நோய் பாதிப்பு- தமிழிசை பேச்சு
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் பெண்களின் சுகாதாரத் தேவைகள் முற்றிலும் தீர்க்கப்படாத ஒன்றாக உள்ளது.

பொது சுகாதார வல்லுநர்கள் நீண்ட காலமாக பெண்களைப் பாதிக்கும் நோய்களைப் பற்றி போதுமான அளவுக்கு கணிக்கவில்லை.

இது இலக்கு வைக்கப்பட்ட சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கும் முயற்சிகளைத் தடுக்கிறது. அரசு வழங்கும் சுகாதார சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக கிராமப்புறங்களில், சுகாதார சேவையை மேம்படுத்த நடமாடும் மருத்துவ பிரிவுகளை நிறுவ வேண்டும்.

ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரகம், இதயம், எலும்பியல் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் இருக்கிறது. குழந்தை பருவத்திலிருந்தே, பெண்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com