என் மலர்
நீங்கள் தேடியது "மாணவி மர்ம மரணம்"
- மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
- பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சோமபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் தங்களது நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர்.
இந்த நிலையில் மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதாக அக்கம் பக்கத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர் மகள் தூக்கில் தூங்குவது கண்டு கதறி துடித்தனர்.
தங்களது மகளை யாரோ பலாத்காரம் செய்து தூக்கில் தொங்க விட்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தீவிர விசாரணைக்கு பின்னரே மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தெரியவரும் என்றனர்.
- ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
- மாணவி பாக்கியலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர், திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி (வயது 14). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை மாணவி பாக்கியலட்சுமி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் கழிவறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்கியலட்சுமியை மீட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






