என் மலர்
உலக கோப்பைச்செய்திகள்
லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பக்கு 264 ரன் எடுத்தது. முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 3-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 113 ரன்னும் (10 பவுண்டரி, 2 சிக்சர்), திரிமானே 53 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட்டும், ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 265 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சதத்தால் இந்திய அணி 265 ரன் இலக்கை எளிதில் எடுத்தது. 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 265 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா 94 பந்தில் 103 ரன்னும் (14 பவுண்டரி, 2 சிக்சர்), ராகுல் 118 பந்தில் 111 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் வீராட்கோலி 34 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர்.
இந்தியா பெற்ற 7-வது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-
உலகக்கோப்பையில் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் 7-1 என்ற கணக்கில் முடிவு அமையும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதாவது 7 ஆட்டத்தில் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது உண்மையிலேயே எனக்கு கிடைத்த கவுரவமாகும். இந்த அணியில் நானும் இடம் பெற்று இருப்பது அற்புதமானது.
அரையிறுதி சிறப்பாகவோ அல்லது மோமாகவோ அமையலாம். எது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் மோசமாக அமைவதை நாங்கள் விரும்பவில்லை. இதனால் எங்களது மற்றொரு சிறப்பான ஆட்டத்தை அரை இறுதியிலும் வெளிப்படுத்துவோம்.
அரையிறுதியில் எந்த அணியை சந்திப்பது என்பது விஷயமில்லை. நாங்கள் சிறப்பாக ஆடாவிட்டால் எந்த அணியும் எங்களை தோற்கடிக்கும். நாங்கள் சிறப்பாக ஆடினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டு பணி முக்கியமானது. அவர் ஒரு அற்புதமான வீரர். அணியை மேம்பாடு அடைய வைப்பதில் சிறந்தவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நேற்றுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தன. மொத்தம் 45 ‘லீக்’ ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ‘லீக்’ முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்தன.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். முதல் அரையிறுதி ஆட்டம் வருகிற 9-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மான்செஸ்டரில் மதியம் 3 மணிக்கு நடக்கிறது. இதில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
2-வது அரையிறுதி ஆட்டம் வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) பர்மிங்காமில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா- மூன்றாம் இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.



ஐதராபாத்:
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வரிசையில் இடம் பெற்று இருப்பவர் ரவிந்திர ஜடேஜா. உலககோப்பை அணியில் அவருக்கு இதுவரை 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
இந்த நிலையில் அரை இறுதி போட்டி யில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அசாருதீன், டீன் ஜோன்ஸ் வலியுறுத்தி உள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அசாருதீன் இது தொடர்பாக கூறியதாவது:-
ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டர் மிடில் ஆர்டர் வரிசையில் சிறப்பாக விளையாடக்கூடியவர். நல்ல சுழற்பந்து வீரர். அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அரை இறுதியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியிலேயே அவரை ஆட வைத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து ஆடுகளத்துக்கு அவர் மிகுந்த பயன் உள்ளதாக இருப்பார். அரைஇறுதி ஆட்டம் முக்கியமானது. தேர்வு கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் கூறியதாவது:-
இந்திய அணி இங்கிலாந்துக்கு இணையாக சமபலத்துடன் இருப்பதாக நினைக்கவில்லை. அரை இறுதியில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். குல்தீப் யாதவ் அல்லது யசுவேந்திர சாஹலை நீக்கி விட்டு அவரை கொண்டு வரவேண்டும்.
இந்திய அணியின் பேட்டிங் ரோகித்சர்மா, வீராட்கோலியை அதிகமாக நம்பி இருக்கிறது. இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் 5-வது வெற்றியை பெற்றது. ஆனாலும் இதனால் எந்த பலனும் இல்லை. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் குவித்தது.
தொடக்க வீரர் இமாம்- உல்-ஹக் சதம் அடித்தார். அவர் 100 ரன்னும், பாபர் ஆசம் 96 ரன்னும், இமாத் வாசிம் 43 ரன்னும் எடுத்தனர். முஷ்பிகுர் ரகுமான் 5 விக்கெட்டும், முகமது சைபுதீன் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 94 ரன்னில் வெற்றி பெற்றது.
சகீப்-அல்-ஹசன் அதிக பட்சமாக 64 ரன்னும், லிட்டன் தாஸ், 32 ரன்னும் எடுத்தனர். வேகப்பந்து வீரர் ஷகீன்ஷா அப்ரிடி 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். சதாப்கான் 2 விக்கெட்டும், முகமது அமீர், வகாப் ரியாஸ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பாகிஸ்தானின் இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லை. அந்த அணி மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டும். அதிசயம் நிகழ்ந்தால்தான் அப்படி செய்திருக்க முடியம்.
6-வது வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி நியூசிலாந்தைவிட ரன் ரேட்டில் பின்தங்கி இருந்ததால் அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இரு அணிகளும் தலா 11 புள்ளிகளைப் பெற்றிருந்தது.
ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 4-வது இடத்தைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 5-வது இடத்துடன் போட்டியில் இருந்து வெளியேறியது.
பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாதது குறித்து அந்த அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது கூறியதாவது:-
உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியும் அரை இறுதிக்கு நுழைய முடியாமல் போனது துரதிர்ஷ்டமே. ஒரு ஆட்டம் எங்களை மாற்றி விட்டது. வெஸ்ட்இன்டீசுக்கு எதிராக மோசமாக ஆடியதால் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எங்களது பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையும் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இமாம்-உல்- ஹக், பாபர்ஆசம், ஹாரிஸ் சோகைல் ஆகியோரும் பந்து வீச்சில் அமீர், சதாப், வகாப், ஷகீன் அப்ரிடி ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். நான் பார்த்த சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.


ஆனால் அணியின் ஸ்கோர் 180 ரன்னாக இருக்கும்போது பாபர் ஆசம் 96 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய இமாம் உல் ஹக் சதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஹட்அவுட் மூலம் வெளியேறினார். இமாம் உல் ஹக் ஆட்டமிழக்கும்போது பாகிஸ்தான் 41.5 ஓவரில் 246 ரன்கள் சேர்த்திருந்தது.

கடைசி கட்டத்தில் இமாத் வாசிம் 26 பந்தில் 43 ரன்கள் விளாச பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் அடித்துள்ளது. வங்காள தேச அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐந்து விக்கெட்டுக்களும், சாய்புதீன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணியின் இளம் விக்கெட் கீப்பர் இக்ரம் அலி கில் சிறப்பாக விளையாடி 86 ரன்கள் குவித்தார். 18 வயதேயாகும் இக்ரம் அலி கில், இதன்மூலம் உலகக்கோப்பையில் இளம் வயதில் அதிக ரன்கள் குவித்து சாதனைப் படைத்திருந்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் லெஜெண்ட் ஆன சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததால் மிகவும் பெருமையடைகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இடது கை பேட்ஸ்மேனான நான், பேட்டிங் செய்ய வரும்போதெல்லாம் சங்ககராதான் என் மனிதில் இருப்பார். அவர்தான என் ரோல் மாடல்’’ என்றார்.






