என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.
    • ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும்.

    முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல், ஜலதோஷம், சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் நோய்கள் பறந்தோடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும்.

    * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

    * ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

    * மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

    * பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

    * ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

    • ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது.
    • மாதம் இருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்.

    1. ஃபிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

    2. ஃபிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.

    3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக்கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

    4. ஃபிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

    5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜை காயவைத்துச் செல்ல வேண்டும். மாதம் இருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும்.

    6. ஃபிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக்கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

    7. ஃபிரிட்ஜ்ஜில் இருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

    8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

    9. ஃபிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் கொடுக்க வேண்டும்.

    10. ஃபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். ஃபிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

    11. ஃபிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

    12. உணவுப் பொருட்களை சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

    13. ஃபிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

    14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். ஃபிரிட்ஜில் வைக்கும் உணவுப்பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

     15. ஃபிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சை பழ தோல்களையோ வைக்கலாம்.

    16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

    17. ஃபிரிட்ஜின் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப்போகாமல் இருக்கும்.

    18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

    19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

    20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்த முடியும்.

    • குழந்தை பெற்றோரின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறது.
    • மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள்.

    உங்கள் குழந்தை தனது செயல்களை ரகசியமாக செய்கிறது என்றால், குழந்தை செய்யும் சிறிய தவறுகளை கூட பெற்றோர்கள் பெரிதாக்கி குத்திக்காட்டி பேசுகிறார்கள் என்று பொருள்.

    உங்கள் குழந்தைக்கு முன்கோபம் அதிகமாக வருகிறது என்றால், பெற்றோர் அவர்களை பாராட்டி பேசுவதில்லை என்று பொருள். அதனால் குழந்தை பெற்றோரின் கவனத்தை ஈர்க்க நினைக்கிறது.

    உங்கள் குழந்தை பயந்த சுபாவத்துடன் இருந்தால், பெற்றோர் அவர்கள் எதையும் கேட்பதற்கு முன்பே வாங்கி கொடுக்குறீர்கள். அவர்கள் பாதையில் உள்ள எல்லா தடைகளையும் நீங்களே எளிதாக்கி கொடுக்காதீர்கள். தடைகளை அவர்களே தடுப்பதற்கு அவகாசம் கொடுங்கள்.

    குழந்தை பொறாமை எண்ணத்துடன் இருந்தால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் மற்ற குழந்தைகளை காட்டி ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்று பொருள்.

    குழந்தை பொய் சொல்கிறது என்றால், குழந்தைகளை ஒவ்வொரு செயல்களுக்கு அதிகமாக திட்டி, அடிக்கிறீர்கள் என்று பொருள். குழந்தைகள் வேண்டுமென்றே பொற்றோர்களை தொந்தரவு செய்கிறது என்றால், பெற்றோர்கள், குழந்தைகளை அரவணைக்க அதாவது கட்டியணைத்து பாராட்டவே இல்லை என்று பொருள்.

     குழந்தைக்கு எந்த பொருள் வாங்கிக்கொடுத்தாலும் அவர்கள் அந்த பொருள் மீது விருப்பம் கொள்ளவில்லை என்றால், பெற்றோர்கள் அவர்கள் விரும்பும் பொருளை வாங்க பெற்றோர்கள் விருப்பம் கொடுக்கவில்லை என்றுபொருள்.

    குழந்தை சுயமாக முடிவெடுக்க தயங்குகிறது என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறுவயதில் இருந்தே குடும்பத்தார் அல்லது அனைவரது முன்னிலையிலும் அவர்களின் செயல்களை உங்களுக்கு தகுந்தார்போல் ஒழுங்குபடுத்தி உள்ளீர்கள் என்று பொருள்.

    குழந்தைகள் மற்றவர்களிம் உணர்வுகளை பொருட்படுத்தவே இல்லை என்றால், பெற்றோர்கள் குழந்தைகளிம் உணர்வுக்கு மதிப்பளித்து பேசுவதில்லை, அவர்களுக்கு உத்தரவிடுகிறீர்கள் என்று பொருள்.

    குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொள்கிறார்கள் என்றால், இந்த நடத்தையை குழந்தைகள் பெற்றோரிடம் இருந்தோ, அல்லது குழந்தைகள் அதிகம் பழகும் நபரிடம் இருந்தோ இதனை கற்றுக்கொள்கிறார்கள் என்று பொருள்.

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும். ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.


    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.
    • பழச்சாறுகள் தினமும் பருகுவது அவசியம்.

    * தர்பூசணியை ஃப்ரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.

    * நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.

    * கரும்புச்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.

    * பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொள்ளலாம்.

    * வியர்வையை போக்கி ஃப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளித்துப் பாருங்கள்.

    * நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.

    * கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.

    * நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.

    * கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    * மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.

    * வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டில் உள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.

    * வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்சியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.

    * வெயில் காலத்தில் மிக அதிகாலையில் அல்லது மாலையில் நன்றாக வெயில் தாழ்ந்த பிறகு செடிகளுக்கு நீர்விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

    * செடி தொட்டிகளில் நீர் விட்டபின் ஒரு பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டு பரத்தி ஒரு கல்லை வெயிட்டாக வைத்து விட்டால் எளிதில் நீர் ஆவியாகாது.

    * கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ஃப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

    * கோடை காலத்தில் வடாம் போடுபவர்கள் வெயிட் வைக்க கற்களை பாலிதீன் பைகளில் போட்டு வைத்தால் கல்லிலிருக்கும் மண், தூசி வடாமில் கலக்காது.

    * வெயில் காலத்தில் கார இனிப்பு பண்டங்களை ஹாட்பாக்ஸ் இவற்றில் வைத்துவிடுங்கள். எறும்பு பற்றிய கவலை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

    * மொட்டை மாடியிலும் முன் முற்றத்திலும் தென்னை ஓலையில் கொட்டகை கட்டிவிடுங்கள். இரவில் ஓலையில் நீர் தெளித்துவிட்டால் ஏ.சி.யில் இருப்பது போல இருக்கும்.

    • கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான்.
    • கரு உருவாகும் போது, ஒருவிதமான வலி அடிவயிற்றில் ஏற்படும்.

    கர்ப்ப காலத்தில் குழந்தை வளரும் போது குழந்தைக்கு ஏற்றவாறு உடல் மாறும் போது கர்ப்பிணிகளுக்கு மேல் வயிற்றில் வலி ஏற்படும். பொதுவாகவே இந்த வயிற்று வலிக்கு அபாயகரமான காரணங்கள் இல்லை என்றாலும் சில தீவிரமானதாக இருக்கலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களில் ஒரு கட்டத்தில் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் வருவது இயல்பானது. கர்ப்ப காலத்தில் வயிறு வலியே வரக்கூடாது, என்று நினைக்க கூடாது. வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இயல்பானது.

    பெரும்பாலான நேரங்களில் அது சாதாரணமாக இருக்கும். ஏனெனில் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அதீத அழுத்தம் உங்கள் வயிற்றை சில நேரங்களில் அசெளகரியமாக உணர்த்தலாம்.

    பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி வலி ஏற்பட்டால், மிகவும் பயமாக இருக்கும். அதிலும் முதல் தடவை லேசான வலி ஏற்பட்டாலே, அனைவரும் பதட்டம் அடைவோம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது, இவ்வாறான வலிகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதற்காக சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் சிக்கலான பிரசவம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகவும் அடிவயிற்றி வலி ஏற்படும்.

    மேலும் இத்தகைய வலி, கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் ஏற்படும். சொல்லப்போனால், கர்ப்பத்தில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான வலி அடிவயிற்றில் ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் வலிகளை விட, இரண்டாம் கட்டத்தில் ஏற்படும் வலியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரி, இப்போது அத்தகைய வலி அடிவயிற்றில் ஏற்படுவதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்....

    * கர்ப்பத்தின் 2 முதல் 6 வாரங்களில், கருவானது உருவாக ஆரம்பிக்கும். அவ்வாறு அவை உருவாகும் போது, ஒருவிதமான வலி, அடிவயிற்றில் ஏற்படும். சொல்லப்போனால், இந்த காலத்தில் மாதவிடாய் சுழற்சி ஏற்படப்போவது போன்று உணர்வு இருக்கும். ஆனால் உண்மையில், இந்த காலத்தில் வலி ஏற்பட்டால், கரு உருவாக ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம்.

    * கர்ப்பமாக இருக்கும் போது ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இத்தகைய ஹார்மோன் மாற்றங்களாலும், வயிற்றில் வலி அல்லது ஒருவித பிடிப்பு ஏற்படும். இது கூட, கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தான் உண்டாகும்.

    * சில சமயங்களில் கருமுட்டையானது கருப்பையில் இல்லாமல், பெல்லோப்பியன் குழாய்களில் இருந்தால், அது வளரும் போது மிகவும் கடுமையான வலியானது ஏற்படும். இந்த நிலையில் மருத்துவரிடம் சென்றால், நிச்சயம் கருவை அகற்றிவிட வேண்டும். இல்லையெனில் கருச்சிதைவு ஏற்படும். இந்த மாதிரியான வலி, 4-6 வாரங்களில் ஏற்படாது. ஆனால் அதற்கு பின்னர் வலியானது ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். ஏனெனில் கரு வளரும் போது, குழாயும் விரிவடைந்து கடும் வலி ஏற்படும்.

    * கர்ப்பமாக இருக்கும் போது வலியுடன் கூடிய ரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். அதிலும் ரத்தப்போக்கு அதிகமாக இருந்து, வலி தொடர்ந்து அரை மணிநேரத்திற்கு இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

    * பொதுவாகவே 36 வாரங்கள் முடிந்ததும், எந்த நேரத்திலும் பிரசவ வலி ஏற்படலாம். சில நேரங்களில் அவை பிரசவ வலியாக இல்லாவிட்டாலும், சில சமயங்களில் குறை பிரசவத்தை ஏற்படுத்தும். அதிலும் 7 அல்லது 8 -வது மாதத்தில், இந்த மாதிரியான வலி ஏற்பட்டால், அது குறைபிரவத்திற்கான அறிகுறியாக இருக்கும்.

    * நஞ்சுக்கொடி சிதைவு என்பது உயிருக்கு ஆபத்தான நிலை. இதில் குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிரிந்துவிடும். இதன் அறிகுறியே நிலையான இடைவிடாத வயிறு வலி தான். இது உங்கள் வயிற்றில் நிவாரணம் இல்லாமல் நீண்ட காலத்துக்கு கடினமாக இருக்கும்.

    மற்றொன்று ரத்தம் தோய்ந்த திரவம் அல்லது பனிக்குட நீர் கசிவு. கூடுதல் அறிகுறிகளில் உங்கள் அடிவயிற்றில் மென்மை, முதுகுவலி, அல்லது ரத்தத்தின் தடயங்களை உள்ளடக்கிய திரவ வெளியேற்றம் ஆகியவை அடங்கும்.

    • எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது.
    • உடற்பயிற்சி செய்வது நல்லது.

    ஒரு பெண்ணுடைய சராசரி எடையை காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த பிறகு ஆறு முதல் ஏழு கிலோ வரை உடல் எடை குறைவது இயல்பாக நடக்கும் விஷயம். மீதம் உள்ள எடையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

    நம் ஊரில், 'தாய்ப்பால் கொடுக்கப்போகிறாய், இரண்டு பேருக்கும் சேர்த்து சாப்பிடு' என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதனால், அளவுக்கு அதிகமான உணவையும், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் இளம்தாய்மார்கள் சாப்பிடுகிறார்கள். உடல் எடை குறையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணம்.

    அதேபோல பூண்டு நல்லதுதான். ஆனால், பூண்டை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், உடல் எடை கூடிவிடும். சுகப் பிரசவம் ஆனவர்களாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் சரி... மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் சாப்பாட்டை மட்டும் அதிகரித்தால், எடை குறையாது. மாறாக எடை கூடிவிடும்.

    தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

    'ஆரோக்கிய உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை இரண்டே மாதங்களில் குறைத்துவிட முடியும்.

    ''கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்த எல்லோரும் உடனடியாக உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு அளிக்கும் முதல் அட்வைஸ், 'பொறுமை' என்பதுதான். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை.

    எடை அதிகரிக்க ஒன்பது மாதங்கள் ஆனது. அதனால், உடல் எடைக் குறைப்பு என்பது மிக வேகமாக நடந்துவிடாது. மற்ற பெண்களுடனோ, சினிமா பிரபலங்களுடனோ தங்களை ஒருவர் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்பதுதான் முக்கிய அறிவுரை.

     எடை குறைப்பதற்கான வழிகள்:

    சாப்பாடு

    குழந்தைப் பேறு என்பது மனதளவில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தால், அது மேலும் மன இறுக்கம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, உணவுக் கட்டுப்பாடோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ வேண்டாம். பசிக்கும்போது சாப்பிடுங்கள். நொறுக்குத் தீனிக்குப் பதிலாக, பழங்கள், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். இவை உங்கள் கலோரி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில், உங்கள் தினசரி உணவில் 300 கலோரி கூடுதலாகச் சேர்த்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் கொழுப்பு குறைந்ததாகவும் இருக்கட்டும். அதிக சர்க்கரை, க்ரீம், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

    தண்ணீர் குடியுங்கள்

    உடலின் நீர் பற்றாக்குறையைத் தீர்க்க, நாளன்றுக்கு இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கவும் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டவும் உதவும். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் போக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றைத் தவிர்க்கும்.

    கை கால்களுக்கும் வேலை கொடுங்கள்

    உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். இதற்காக ஜிம்முக்குச் சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை.

    தினமும் நடைப்பயிற்சி செய்தாலே போதும். யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் தீவிர உடற்பயிற்சி கூடாது. அது பாலில் லாக்டிக் அமிலத்தின் அளவை அதிகரித்துப் புளிப்புத் தன்மையைக் கூட்டிவிடும்.

    தூக்கம்

    இரவு நேரத்தில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் பசித்தால் காய்கறி மற்றும் பழங்கள் மட்டுமே சாப்பிடலாம். குழந்தை தூங்கி எழும் நேரத்தில் நீங்களும் எழுங்கள். சரியாகத் தூங்காமல் இருப்பதும் தேவைக்கு அதிக நேரம் தூங்குவதும் உடல் எடையை அதிகரித்துவிடும். தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது நல்லது.

    பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகுதான் பெண்களுக்கு எடை கூடுகிறது. வயது அதிகரிப்பது மற்றும் இரண்டு குழந்தைகளை பராமரிப்பதால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையே இதற்கு காரணம். முன் எச்சரிக்கையுடன் இருந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். இவ்வளவையும் மீறி உடல் எடை கூடினால், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
    • வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

    அறிகுறிகள்:

    · பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

    · வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

    · வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    · சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

    · வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

    · இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

    · பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

    · ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

    · அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    · தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

    · சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

    · அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

    · அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

    வெள்ளைபடுதலை தவிர்க்க

    · உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    · பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    · உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

    · நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வீட்டுமருத்துவம்

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    * அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

    வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து

    நன்னாரி வேர் - 10 கிராம்

    அதிமதுரம் - 5 கிராம்

    காய்ந்த திராட்சை - 5 கிராம்

    மணத்தக்காளி விதை - 5 கிராம்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்

    காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்

    சின்ன வெங்காயம் - 3

    நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.

    · சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.

    · மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப்போக்கை சரி செய்யும்.

    · ரத்தத்தை சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றி உள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.

    · உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    · மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.

    சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப்பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.

    உணவு முறை

    · அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.

    · உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    · தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

    மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளைப்படுதல்  பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

    • ரேசர் பயன்படுத்துவதால் அக்குள் கருமையாகும்.
    • ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும்.

    சருமத்தை சரியாக கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முகத்துடன், உடலின் மற்ற பாகங்களின் தோலுக்கும் சமமான கவனிப்பு தேவைப்படுகிறது. அதை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம்.

    உடலில் மெலனின் அதிகரிக்கத் தொடங்கும் போது, உடலின் சில பகுதிகள் கருமையாகத் தொடங்கும். இதில் கழுத்து, தொடை இடுக்கு மற்றும் அக்குள்களும் அடங்கும். முடியை அகற்றும் கிரீம் அதிகமாக பயன்படுத்துவதால், அக்குள்களின் நிறமும் கருப்பாக மாறத்தொடங்குகிறது. எனவேதான், இந்த பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். முடி அகற்றுவதற்கு ரேசர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அக்குள் கருமையாகும்

    முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் தவிர, நம்மில் பலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். அக்குள் கருமையாக இருந்தால், நம்மால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும். அக்குள் கருமையை போக்க எந்த சிகிச்சையும், விலை உயர்ந்த கிரீம்களை தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஒரே வாரத்தில் அக்குள் கருமையை நீக்கிவிடலாம்.

     எலுமிச்சை

    அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    மஞ்சள், தயிர்

    மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

    தயிர், எலுமிச்சை

    தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். காட்டனில் உதவியுடன் அக்குள்களில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இதை அடிக்கடி செய்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

    குங்குமப்பூ

    குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

    டீ ட்ரீ ஆயில்

    தேயிலை மர எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் தோல் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அக்குள் கருமையால் அவதிப்பட்டு வந்தால், தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீரில் 5 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்க்கவும். தினமும் குளித்த பிறகு, டீ ட்ரீ ஆயிலை அக்குள்களில் தெளித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

    • ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று.
    • வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது.

    உடல் ஆரோக்கியத்துக்கு மிகச்சிறந்த கீரைகளுள் மணத்தக்காளியும் ஒன்று. குளிர்ச்சியான தன்மை கொண்ட மணத்தக்காளி கீரை, வறண்ட பகுதிகளில் அதிகம் விளையக்கூடியது. வீட்டிலும் விளைவிக்கலாம். எல்லா காலங்களிலும் ஓரளவு கிடைக்கக் கூடியது இது.

    மணத்தக்காளி கீரையின் காய், பச்சை மணியைப் போல இருப்பதால், மணித்தக்காளி என்றும் அழைப்பார்கள். இதன் பழம் மிளகு போல உள்ளதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும்.

    மணத்தக்காளி கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படும். கொஞ்சம் கசப்புத்தன்மை கொண்டதாகும் இக்கீரை. மணத்தக்காளி கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவைதான். இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாது உப்புகள் நிறைந்துள்ளன. இந்தக் கீரையுடன் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.

    மணத்தக்காளி கீரையின் மருத்துவ குணங்கள் வருமாறு:-

    வாய்ப்புண்: மணத்தக்காளி கீரையை சாறு எடுத்து வாயிலிட்டு சிறிதுநேரம், தொண்டையில் வைத்து கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.

    வயிற்றுப்புண்: தீராத வயிற்றுப் புண்ணை மணத்தக்காளி ஆற்றும். மணத்தக்காளி கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது இவ்வாறு பருக வேண்டும்.

    இதய பலவீனம்: இதய பலவீனம் உடையவர்கள் வாரம் மூன்று முறை மணத்தக்காளி கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும். பொதுவாக மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், உடல் நலம் பெறும். ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகும். சிறந்த மருத்துவ உணவாக பயன்படும் மணத் தக்காளி கீரையை அடிக்கடி நமது உணவில் சேர்த்துக்கொள்வது நலம்.

    • 'பெடிக்யூர்' செய்வதற்கு பியூட்டி பார்லர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
    • பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    கால் விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் 'பெடிக்யூர்' செய்வதற்கு அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியேகூட அதை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்...

     முதலில் பாதங்களைச் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாதியளவு ஊற்றினாலே போதுமானது. அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் வைக்க வேண்டும்.

    நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் வைத்து பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையில் இருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டிவிடலாம்.

    அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும்வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை கழுவிக்கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக, 'ஸ்கிரப்பிங்' செய்ய வேண்டும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த திரவத்தை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

     கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை கால்களில் தடவி, உலரவிடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலீஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உங்கள் கால் பாதங்களைப் பாருங்கள். உங்களுக்கே ரசிக்கத் தோன்றும்.

    இதுபோல பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது. இறந்த செல்கள் அகற்றப்படும். பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

    • சப்பாத்தி மாவு பிசையும் போது பால் சேர்த்து பிசைந்தால் சுவையாக இருக்கும்.
    • கருணைக்கிழங்கு பொரியலுக்கு வேர்க்கடலையை பொடி சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    1. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி, புதினா துவையல் அரைக்கும்போது அதனுடன் சேர்த்து அரைத்தால் சுவையான நெல்லி-புதினா துவையல் ரெடி.

    2. எந்த பதத்தில் அரைத்தாலும் இட்லி பூ போல மென்மையாக வரவில்லையா? கவலை வேண்டாம். கழுவி ஊற வைத்த அரிசியுடன் ஒரு டம்ளருக்கு நான்கு ஸ்பூன் என்ற விகிதத்தில் பொட்டுக் கடலையை சேர்க்கவும். இதை எப்போதும் போல அரைத்து இட்லி சுட்டால் பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

    3. சாம்பாரிலோ அல்லது காரக்குழம்பிலோ புளிப்புச்சுவை அதிகமாகிவிட்டால் ஒரு துண்டு வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொதிக்க விடவும். புளிப்பு சுவை மட்டுப்படும்.

    4. கருணைக்கிழங்கு பொரியல் செய்யும்போது அதனுடன் வறுத்த வேர்க்கடலையை பொடி செய்து சேர்த்தால் கருணைக்கிழங்கு பொரியல் சுவையாக இருக்கும்.

    5. புட்டுமாவு அரைக்கும்போது அதனுடன் நான்கிற்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுதானியமான கம்பு சேர்த்து அரைத்து வேகவைத்து அதனுடன் வெல்லம், நெய், துருவிய தேங்காய், வாழைப்பழத் துண்டுகள் மற்றும் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் சத்து நிறைந்த புட்டு தயார்.

    6. முள்ளங்கியை நறுக்கிய பிறகு அந்தத் துண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் ஊற வைத்துப் பின்னர் சமைத்தால் முள்ளங்கியின் வாடை துளி கூட வராது.

    7. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் வெந்நீர் அல்லது சூடான பால் சேர்த்துப் பிசைந்தால் சுவையான சப்பாத்தி செய்யலாம்.

    8. பூரிக்கு கிழங்கு மசால் செய்யும்போது மற்ற பொருள்களுடன் பொட்டுக்கடலைப் பொடியை சிறிதளவு சேர்த்தால் கிழங்கு மசாலாவின் சுவையும், மணமும் கூடும்.

    9. தயார் செய்த குழம்பில் உப்பு அதிகமானால் வறுத்து அரைத்த அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு இவையில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கலாம். உப்பு மட்டுப்படும்.

    10. மெதுவடை செய்யும்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன், ஊற வைத்த பயத்தம் பருப்பை சிறிதளவு கலந்து வடை சுட்டெடுங்கள். வடை வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

    11. பஜ்ஜி செய்யும்போது சோடா மாவு சேர்ப்பதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக ஒரு கரண்டி அளவு தோசை மாவு சேர்த்தால் பஜ்ஜி உப்பலாகவும், மொறுமொறுப்பாகவும் வரும்.

    12. கோதுமை மாவுடன் வறுத்து அரைத்த வேர்க்கடலை மாவைச் சிறிது கலந்து சத்து நிறைந்த பூரி செய்யலாம்.

    ×