என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாலக்கீரை சேர்த்து புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    பாலக்கீரை - 1 கப்
    வெங்காயம் - 2
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சிபூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    முந்திரிபருப்பு - 10

    தாளிக்க:

    பட்டை - 1
    கிராம்பு  - 2
    ஏலக்காய் - 2
    சோம்பு - 1 தேக்கரண்டி

    பாலக் புலாவ்

    செய்முறை:

    பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தாள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, வெங்காயத்தாள், பச்சை மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

    எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் ஊறவைத்த அரிசியுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறவும்.

    சூப்பரான பாலக் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கடைகளில் காஜூ பிஸ்தா ரோல் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று இந்த ஸ்வீட்டை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 25
    பிஸ்தா - 15
    சர்க்கரை - அரை கிலோ
    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
    சில்வர் பேப்பர் இழை - தேவைக்கு

    காஜூ பிஸ்தா ரோல்

    செய்முறை:

    முந்திரி பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் பிஸ்தாவையும் தோல் நீக்கிக்கொள்ளவும்.

    பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டிலும் சர்க்கரை சேர்த்து தனித்தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    கடாயில் முந்திரி கலவையை கொட்டி அதனுடன் பாதியளவு ஏலக்காய் தூள் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் பிஸ்தாவுடன் மீதமுள்ள ஏலக்காய் தூளை சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

    அகன்ற தட்டில் முந்திரி கலவையை பரப்பி அதன் மேல் பிஸ்தா கலவையை கொட்டி உருட்டிக்கொள்ளவும்.

    அதனை சில்வர் பேப்பர் இழையை கொண்டு அலங்கரித்து பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன் ஷாவர்மா ரோலை ஹோட்டல், பாஸ்ட் புட் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே சிக்கன் ஷாவர்மா ரோல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 10
    மைதா - 1 கப்
    வெங்காயம் - 1
    நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்
    மயோனீஸ் (முட்டை பாலேடு) - 1 கப்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    எலுமிச்சைசாறு - 1 டீ ஸ்பூன்
    சர்க்கரை - கால் டீஸ்பூன்
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    சிக்கன் ஷாவர்மா ரோல்

    செய்முறை:

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காய்த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, சர்க்கரை, தயிர், உப்பு ஆகியவற்றை கொட்டி அதனுடன் சிறிதளவு தண்ணீர், எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு தயார் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.

    ஊற வைத்த சாப்பத்தி மாவை சப்பாத்திகளாக சுட்டு எடுக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சிக்கன் துண்டு கலவையை கொட்டி சிக்கன் நன்றாக வேகும் வரை புரட்டி எடுத்துக்கொள்ளவும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி சிறிய துண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும்.

    சுட்டெடுத்த ரொட்டி மீது மயோனீஸ் தடவி நடுவில் சிக்கன் துண்டு கலவையை வைக்கவும்.

    பின்னர் அதன் மேல் வெங்காயம், முட்டைக்கோஸ் தூவி ரோலாக சுருட்டி ருசிக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் 

    தோசை மாவு - 1 கப் 
    சாக்லேட் சிரப் - 1/4 கப் 
    நெய் - 4 ஸ்பூன்
    முந்திரி - தேவையான அளவு
    திராட்சை -  தேவையான அளவு
    பாதாம் - தேவையான அளவு
    செர்ரி பழம் - தேவையான அளவு
    வெண்ணெய் - தேவையான அளவு

    சாக்லேட் தோசை

    செய்முறை

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதம மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும்.

    அதன் மேல் வெண்ணெயை தடவவும். 

    அடுத்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி வேக விடவும்.

    அடுத்து அதன் மேல் முந்திரி, திராட்சை, பாதாம், செர்ரி பழத்தை தூவவும். 

    இந்த தோசையை திருப்பி போட கூடாது. அப்படியே ரோல் செய்யவும். 

    பிறகு சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிறப்பு ஊற்றி பரிமாறலாம்

    எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் தோசை தயார்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பினை சைடிஷ் ஆகவும், மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொத்தமல்லி - 1/2 கப்,
    முட்டை - 4,
    பச்சை மிளகாய் - 3,
    கேரட் - 1,
    தக்காளி - 1,
    வெங்காயம் - 1,
    உப்பு - தேவைக்கு,
    கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்,
    மொசரெல்லா சீஸ் - 1/2 கப்,
    சோளம் - 2 டீஸ்பூன்.

    முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பின்

    செய்முறை

    கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, கொரகொரப்பாக பொடித்த மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், கேரட், தக்காளி, வெங்காயம், துருவிய மொசரெல்லா சீஸ், சோளம் ஒசேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    பின் ஒரு மப்பின் சிலிகான் மோல் எடுத்து அதில் எண்ணெய் தடவி முட்டையை ஊற்றவும்.

    ஒரு கடாயை சூடு செய்துபின் அதில் ஒரு  stand-யை வைத்து அதன்மேல் சிலிகான் மோல் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும். கமகமக்கும் சுவையான முட்டை சீஸ் வெஜிடபிள் மப்பின் ரெடி.

    மைக்ரோ ஓவன் என்றால் 180c பிரீஹீட் செய்து 10 நிமிடம் வைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பழம் சேர்த்து செய்யும் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 3,
    மைதா - 1 கப்,
    சர்க்கரை - /12 கப்,
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
    ஏலக்காய் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
    பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கேற்ப,
    நெய் - 1 டீஸ்பூன்.

    வாழைப்பழ பால்ஸ்

    செய்முறை

    மிக்சியில் சர்க்கரை போட்டு பவுடர் செய்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் மாவை ஊற்றி அதை 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சுடச்சுட வாழைப்பழ பால்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மார்குயுஸ் கடையில் வாங்கி கொடுத்திருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 600 கிராம்
    சர்க்கரை - 175 கிராம்
    முட்டையின் மஞ்சள் கரு - 6
    முட்டை - 6
    கோகோ பவுடர் - 70 கிராம்
    காபி - 10 மில்லி லிட்டர்
    கிரீம் - 500 கிராம்
    ராஸ்பெர்ரி - 50 கிராம்
    டார்க் சாக்லேட் - 200 கிராம்
    ஃப்ரஷ் கிரீம் - 100 மில்லி லிட்டர்

    சாக்லேட் மார்குயுஸ்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்.

    கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு மோல்டில் இதனை ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

    சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.

    மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.

    அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.

    சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு சத்துக்கள் அடங்கிய பச்சை பயறை வேக வைத்து சாப்பிடுவதை விட இனிப்பு சுவையில் பாயாசமாக செய்தால் கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    பச்சை பயறு - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    தேங்காய் - அரை கப்
    ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
    முந்திரி - கால் கப்
    நெய் - 2 ஸ்பூன்

    பச்சை பயறு பாயாசம்

    செய்முறை :

    பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.

    பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள். உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.

    பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்துகொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

    அதை அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.

    வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.

    போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.

    சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலையை சேர்த்து செய்யும் உணவிற்கு பெயர் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி. இதை பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டு உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 2
    கொண்டைக்கடலை - 1 கப்
    நெய் - 2 ஸ்பூன்
    சீரக விதைகள் - 1ஸ்பூன்
    மஞ்சள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    மசித்த தக்காளி - 2
    மிளகாய் பொடி - 1 ஸ்பூன்,
    தனியா பொடி - 1 ஸ்பூன்,
    வெந்தய தூள் - 1 ஸ்பூன்,
    கரம் மசாலா தூள்  - 1 ஸ்பூன்
    பெருங்காய தூள் - தேவையான அளவு
    கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

    கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து வெந்ததும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி சாறை ஊற்றிக் கிளற வேண்டும். சிம்மில் வைத்து ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை வதக்க செய்யலாம்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உங்களுடைய தேவைக்கு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்க செய்யலாம்.

    மேற்சொன்ன மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலாவை பொறுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    மசாலா நன்கு வேகும் பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

    கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!

    நீங்கள் விரும்பிய பூரி, சப்பாத்தி அல்லது நாண் உடன் மசாலாவை வைத்து உண்ணுங்கள் இது அதீத சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எப்பொழுதும் ஒரே மாதிரி இனிப்பு பலகாரம் செய்து சலிப்படைந்திருக்கும். இன்று பனங்கிழங்கு வைத்து பாயாசம் செய்யலாம். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பனங்கிழங்கு - 4
    தேங்காய்ப்பால் - ஒரு கப்
    பனை வெல்லக் கரைசல் - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்.

    பனங்கிழங்கு

    செய்முறை:

    பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும்.  இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.

    அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

    கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும்.

    தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாகற்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    பாகற்காய் - 2
    அரிசி களைந்த நீர் - 1 கப்
    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

    பாகற்காய் பக்கோடா

    செய்முறை:

    முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி அரிசி களைந்த நீரில் போடவும்.

    அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.

    அடுத்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.

    மொறு மொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால் கசப்பு தெரியாது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    துருவிய வெல்லம் - 2 கப்
    கேசரி பவுடர் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா

    செய்முறை:

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    வெல்லம் கரைந்ததும் மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை கொட்டி கிளறவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய், கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×