search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாகற்காய் பக்கோடா
    X
    பாகற்காய் பக்கோடா

    சூப்பரான பாகற்காய் பக்கோடா

    வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாகற்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    பாகற்காய் - 2
    அரிசி களைந்த நீர் - 1 கப்
    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

    பாகற்காய் பக்கோடா

    செய்முறை:

    முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி அரிசி களைந்த நீரில் போடவும்.

    அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.

    அடுத்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.

    மொறு மொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால் கசப்பு தெரியாது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×