என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான புளிக்குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இந்த புளிக்குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் - 1/2 கப்
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 2
    புளி - 1 எலுமிச்சை அளவு
    சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கடுகு - 1/2 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    வடகம் - சிறிது
    சோம்பு - 1/4 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு

    செட்டிநாடு புளிக்குழம்பு

    செய்முறை:

    சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு புளிக்குழம்பு ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மக்ரோனி குருமா சூடான சாதம், நாண், சப்பாத்தி, பூரியுடன் பரிமாற ஏற்றது. இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள்  :

    மக்ரோனி - 100 கிராம்
    தக்காளி - 1/4 கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    தனியா - 2 டீஸ்பூன்
    இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
    பூண்டு - 6 பல்
    தேங்காய் துருவல் - 1 கப்
    கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்த மல்லி புதினா - சிறிதளவு

    மக்ரோனி குருமா

    செய்முறை :

    வெறும் வாணலியில் மக்ரோனியை லேசாக வறுத்து 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து வடி கட்டி கொள்ளவும்

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

    அத்துடன் கசகசா தனியா சேர்த்து சிவக்க விடவும்.

    .தொடர்ந்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    பிறகு தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கி வைக்கவும்.

    அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி அத்துடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கறிமசாலா பொடி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் அரைத்த விழுதைப் போட்டு 4 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும் மக்ரோனியை குருமாவில் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடவும்.

    இறக்கி வைத்து அரை மூடி எலுமிச்சம் பழம் பிழியவும்.

    சூப்பரான மக்ரோனி குருமா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பு செய்வது வழக்கம். ஆனால் சிக்கனிலும் உருண்டை குழம்பு செய்யலாம். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
    தேவையான பொருட்கள் :

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லி தூள் - 1 ஸ்பூன்
    பட்டை - 2
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    புளி - சிறிது நெல்லிக்காய் அளவு
    பூண்டு - சிறிது அளவு
    இஞ்சி - சிறிது அளவு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    கசகசா - 1 டீஸ்பூன்

    உருண்டைக்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

    சிக்கன் (எலும்பில்லாதது) - கால் கிலோ
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 3
    சோம்பு - 1 ஸ்பூன்
    மிளகு - 1 ஸ்பூன்
    பொட்டுக் கடலை - 2 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    சிக்கன் கோலா உருண்டை குழம்பு

    செய்முறை:

    முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    பின்பு தேங்காய் துருவல், சோம்பு கசகசா, இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து தனியாக வைக்கவும்.

    பின்பு உருண்டைக்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

    வதக்கிய பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் குழம்புக்கு அரைத்து வைத்த மசாலாவை அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

    குழம்பு கொதித்த பின்பு அதில் உருண்டைக்கு அரைத்து வைத்ததை சிறு சிறு உருண்டையாக உருட்டி குழம்பில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

    இப்போது ருசியான சிக்கன் உருண்டை குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாக்லேட் லாவா கேக் செய்வது மிகவும் எளிமையானது. இந்த கேக்கை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 135 கிராம்
    வெண்ணெய் - 95 கிராம்
    ஐஸ்ஸிங் சுகர் - 100 கிராம்
    முட்டை - 2
    மைதா - 35 கிராம்

    சாக்லேட் லாவா கேக்

    செய்முறை

    மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

    மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ளவும்.

    மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

    சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அத்துடன் மைதா சேர்த்து நன்கு மெதுவாக கலந்து கொள்ளவும்.

    மைதா கட்டியாக இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும்.

    இதனை 5-7 நிமிடங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    க்ரீஸ் செய்யப்பட்ட ரேம்கினில் இந்த கலவையை ஊற்றவும்.

    9-10 நிமிடங்கள் வரை இந்த பேக் செய்யவும்.

    வென்னிலா ஐஸ் க்ரீம் அல்லது பழங்களுடன் சேர்த்து இந்த சாக்லேட் லாவா கேக்கை பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளித்த தயிர் - அரை கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 1
    கறிவேப்பிலை - ஒரு ஈர்க்கு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    அரைக்க :

    வறுக்காத‌ வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
    சின்ன வெங்காயம் (உரித்தது) - 2
    பூண்டு - 2 பல்
    காய்ந்த மிளகாய் - 3
    தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    சூப்பரான மோர் ரசம்

    செய்முறை:

    தயிரைக் கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    அரைக்க வேண்டிய பொருள்களை தேவையான அளவு தண்ணீர் விட்டு, பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    இதைத் தயிரில் கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள்.

    இந்த மோர் ரசம், திக்கான சாம்பார் போல இருக்க வேண்டும். அதற்கேற்ப தயிரில் தண்ணீரை ஊற்றுங்கள்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றித் தாளிக்க வேண்டியதைப் போட்டு தாளித்து தயிரில் சேருங்கள்.

    நீங்கள் சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பு இதைச் செய்து வைத்தால், தாளித்தவை எல்லாம் இறங்கி ரசம் சாப்பிட அமிர்தமாக இருக்கும்.

    சாதம் உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பருத்திக்கொட்டை, இனிப்பு சேர்த்து பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்திக் கொட்டை - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    வெல்லம் - 1 கப்
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    எண்ணெய் ‌‌ - தேவைக்கேற்ப
    தண்ணீர் - தேவைக்கேற்ப
    உப்பு - தேவைக்கேற்ப

    பருத்திக்கொட்டை

    செய்முறை:


    பருத்திக் கொட்டையை முதல் நாள் இரவே ஊறவைத்து கொள்ள வேண்டும்.

    ஊறவைத்த பருத்திக் கொட்டையை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் பருத்திக்கொட்டை விழுது, உப்பு, கோதுமை மாவு, ஏலக்காய் தூள் மற்றும் பொடித்த வெல்லம், தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    மாவை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பூரியை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்தால் சூடான சுவையான பருத்திக்கொட்டை கோதுமை இனிப்பு பூரி தயார்.

    B. இந்துமதி 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரெட் அல்வா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரஸ்க் வைத்து எளிய முறையில் அருமையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ரஸ்க் தூள் - 1 கப்
    சர்க்கரை - 1 1/2 கப்
    பால் - 2 கப்
    முந்திரி - தேவையான அளவு
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    நெய் - கால் கப்

    ரஸ்க் அல்வா

    செய்முறை

    முந்திரி,  உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரஸ்க் தூள், பால் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் சர்க்கரையை சேர்க்கவும்.

    இடைஇடையே நெய்யை சேர்க்கவும்.

    பால் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை சேர்த்து கலந்து இறக்கவும்.

    சூப்பரான ரஸ்க் அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும் முள்ளங்கி சாம்பார். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முள்ளங்கி - 1/4 கிலோ,
    சின்ன வெங்காயம் - 10,
    தக்காளி - 1,
    துவரம்பருப்பு - 1 கப்,
    மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்,
    புளி - சிறிய எலுமிச்சையளவு,
    குழம்பு மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு,
    கறிவேப்பிலை - சிறிது,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    வெந்தயம் -  1/4 டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிது.

    முள்ளங்கி சாம்பார்

    செய்முறை

    முள்ளங்கியை தோல் சீவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.

    துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    துவரம்பருப்புடன் மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் முள்ளங்கியை போட்டு வதக்கி, வேக வைத்துள்ள துவரம்பருப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மிளகாய் பொடி சேர்க்கவும்.

    முள்ளங்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான முள்ளங்கி சாம்பார் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீமா டிக்கி டெல்லி, லக்னோவில் மிகவும் பிரபலமானது. விடுமுறை நாட்களில் வீட்டில் செய்து சாப்பிட ஏற்றது. இன்று கீமா டிக்கியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் கீமா - 750 கிராம்
    வெங்காயம் - 1
    பூண்டு - 5 பற்கள்  
    பச்சை மிளகாய் - 4
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    நெய் - 1 டேபிள் ஸ்பூன்
    கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    கீமா டிக்கி

    செய்முறை:

    வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மட்டன் கீமாவை நன்கு சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டன் கீமாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    அரை மணி நேரம் கழித்து அதில் கடலை மாவை சேர்த்து கட்லெட் பிடிக்கும் வகையில் கலவை இருக்குமாறு பார்த்து கொள்ளவும். சற்று தளர்வாக இருந்தால் மேலும் கடலை மாவை சேர்த்து கொள்ளவும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    அடுத்து அதில் ஊற வைத்துள்ள கீமா கலவையை வேண்டிய வடிவத்தில் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் கீமா டிக்கி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹோட்டலில் மெக்சிகன் ரைஸ் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்
    குடை மிளகாய் - 3 (பச்சை, மஞ்சள், சிவப்பு ஒவ்வொன்றிலும் ஒன்று)
    வெங்காயத்தாள் - 1 கட்டு
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    தக்காளி பேஸ்டு - 1/2 கப்
    மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
    வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    உப்பு எண்ணெய் - தேவையானது

    மெக்சிகன் ரைஸ்

    செய்முறை:

    பாசுமதி அரிசியை (ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர்) 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    குடைமிளகாய், வெங்காயம் இரண்டையும் நீட்ட வாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    அதனுடன் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாய், வெங்காயத்தாள், மூன்றையும் சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தக்காளி பேஸ்டு, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.

    எல்லாம் சிறிது வதங்கியதும் வெண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள அரிசியுடன் கலந்து அப்படியே Ele.cooker ல் வைத்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மெக்சிகன் ரைஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், பூரி, சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பன்னீர் புர்ஜி கிரேவி. இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    துருவிய பன்னீர் - 2 கப்
    பச்சை பட்டாணி - அரை கப்
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையானது
    கொத்தமல்லி - 1
    பட்டை, லவங்கம், கிராம்பு - தலா 4

    பன்னீர் புர்ஜி கிரேவி

    செய்முறை:

    கொத்தமல்லி, வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து துருவிய பன்னீர், வேக வைத்த பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும்.

    சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிரவுன் ரைஸில் பிஸிபேளாபாத் செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பிரவுன் ரைஸ் - 1 கப்
    துவரம்பருப்பு - 1/2 கப்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - 7 கப்
    புளி - ஒரு எலுமிச்சை அளவு
    நெய் - 1 டேபிள்ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    வெங்காயம் - 1/2 கப்
    பீன்ஸ் - 1/2 கப்
    கேரட் - 1/2 கப்
    பட்டாணி - 1/2 கப்

    பொடி பண்ண :

    கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    தனியா - 2 டேபிள்ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    மிளகு - 10
    வற்றல் மிளகாய் - 5
    பெருங்காயம் - 1 துண்டு
    கிராம்பு - 2
    பட்டை - 1 துண்டு
    துருவிய தேங்காய் - 1/2 கப்

    தாளிக்க :

    கறிவேப்பிலை - சிறிதளவு
    மிளகாய் வற்றல் - 2
    முந்திரிபருப்பு - 10
    நிலக்கடலை - 10 (உடைத்தது)

    பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத்

    செய்முறை:


    வெங்காயம், கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரவுன் ரைஸ் ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

    ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் பிரவுன் ரைஸையும், மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

    பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெயில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

    அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

    வேகவைத்த சாதம், பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

    அதில் வதக்கின காய்கறிகள், அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான உப்பு சேர்க்கவும்.

    சாதம், பருப்பு, காய்கறிகள், பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்) சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

    முந்திரிபருப்பு, நிலக்கடலை, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்த்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பிரவுன் ரைஸ் பிஸிபேளாபாத் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×