என் மலர்
சமையல்
பாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்

செய்முறை:
பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.
பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.
பாதாம் பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 400 கிராம்

செய்முறை:
பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.
பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.
சூப்பரான பாதாம் பருப்பு பர்ஃபி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ஓட்ஸ், கேரட் சேர்த்து பான் கேக் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கேரட் -2
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, கேரட் துருவல், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே மாவை ஊற விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான ஓட்ஸ் பான்கேக் ரெடி.
ஓட்ஸ் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கேரட் -2
வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
தண்ணீர், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் பவுடர், கடலை மாவு, கேரட் துருவல், வெங்காயம், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். 10 நிமிடம் அப்படியே மாவை ஊற விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சின்ன சின்ன பான்கேக்காக ஊற்றி, நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான ஓட்ஸ் பான்கேக் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
அனைவரும் காலையில் செய்யக்கூடிய வகையிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும், ஒரு ஆரோக்கியமான முறையில் பரோட்டா செய்ய வேண்டுமெனில், அதற்கு காளான் சீஸ் பரோட்டா சரியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
காளான் - 6
வெங்காயம் - 1
சீஸ் - 10 கிராம்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:
வெங்காயம், காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்
சீஸை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் உப்பு போட்டு, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து, ஈரமான துணியால் சுற்றி தனியாக சிறிது நேரம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் காளான் மற்றும் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் மிளகு தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி இறக்கிய பின்னர் துருவிய சீஸ் சேர்த்து கலந்து குளிர வைக்க வேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து, அதன் நடுவே பெருவிரலை வைத்து ஓட்டை போட்டு, செய்து வைத்துள்ள காளான் கலவையை சிறிது வைத்து, மீண்டும் உருண்டையாக்கி, பின் சப்பாத்தி போல் தேய்த்து, தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தேய்த்து வைத்து பரோட்டாக்களை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
காளான் - 6
வெங்காயம் - 1
சீஸ் - 10 கிராம்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

இப்போது சுவையான காளான் சீஸ் பரோட்டா ரெடி!!!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு சத்தான உணவை தினந்தோறும் கொடுக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் சூப் குழந்தைகளுக்கான சிறந்த உணவு. இன்று சிறுகீரை சூப் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிறுகீரை - அரை கட்டு
பருப்பு தண்ணீர் - 1 கப்
மிளகு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை
இந்துப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இறக்கும் முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கிவிடலாம்.
சிறுகீரை - அரை கட்டு
பருப்பு தண்ணீர் - 1 கப்
மிளகு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை
இந்துப்பு - ஒரு சிட்டிகை
சீரகம் - ½ டீஸ்பூன்

செய்முறை
சிறுகீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய சிறுகீரையை, சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
நன்கு வெந்ததும் அதில் பருப்பு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இறக்கும் முன் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்து இறக்கிவிடலாம்.
6+ மாத குழந்தைகளுக்கு இந்த சூப்பை கொடுக்கலாம்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் மிக சுவையான ஸ்நாக்ஸ் மட்டுமல்ல, ரொம்ப சுலபமாக சமைக்கவும் முடியும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய சீஸ் கியூப்ஸ் - 6
முட்டை - 2
மைதா மாவு - கையளவு
புதினா - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு - 1/2 தேக்கரண்டி
பிரட் தூள்கள் - 1/2 கப்

செய்முறை
புதினாவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
மைதா மாவோடு உப்பு, புதினா, பொடித்த மிளகு எல்லாம் சேர்த்து உங்கள் கைகளால் நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
மற்றொரு கிண்ணத்தில் பிரெட் தூளை வைத்து கொள்ளவும்.
பெரிய சீஸ் கியூப்பை மாவில் போட்டு பிரட்டி அடுத்து முட்டையில் பிரட்டிய பின்னர் பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
இவ்வாறு மீதமிருக்கும் சீஸ் கியூப்ஸையும் இவ்வாறே கலக்குங்கள்.
ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சீஸ் பந்துகளை போட்டு பொரியுங்கள். தங்க பழுப்பு நிறம் வரும் வரை, மிதமான சூட்டில் பொரிக்கவும்.

சூடான ஃபிரைடு சீஸ் கியூப்ஸ் பரிமாற தயார்
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இந்த அடையை சாப்பிட்டால் பசி தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது. உடலில் உள்ள கொழுப்பும் கரையும். இந்த அடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1
கோதுமை ரவை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - 2
இந்துப்பு - சிறிதளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய், கேரட் துருவல், அரிசி மாவு, கோதுமை ரவை, இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் கேழ்வரகு கேரட் வெங்காய அடை தயார்.
கேழ்வரகு மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1
கோதுமை ரவை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - 2
இந்துப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய், கேரட் துருவல், அரிசி மாவு, கோதுமை ரவை, இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் கேழ்வரகு கேரட் வெங்காய அடை தயார்.
இந்த அடையை சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். இன்று சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு - அரை கப்
சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10 (சிறிதாக நறுக்கவும்)
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.
பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.
பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.

தண்ணீர் - 1 கப்

செய்முறை:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.
பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.
பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று வரகு அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வரகு அரிசி - 1 கப்,
காராமணி - 1 கைப்பிடி,
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
உப்பு - சுவைக்கேற்ப,
தண்ணீர் - 2 1/4 கப்.
தாளிக்க…
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் - 1,

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் வரகு அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
வரகு அரிசி - 1 கப்,
காராமணி - 1 கைப்பிடி,
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
மிளகு - 1/4 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
உப்பு - சுவைக்கேற்ப,
தண்ணீர் - 2 1/4 கப்.
தாளிக்க…
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து அதில் வரகு அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.
பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.
சூப்பரான வரகு அரிசி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் புட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மீன் - அரைகிலோ
இஞ்சி - 1 துண்டு
பெ.வெங்காயம் - அரைகிலோ
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 5 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.
அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறுதீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.
சுவையான மீன் புட்டு தயார்.

பாதாம் பருப்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று பாதாம் பருப்பில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாதாம் பருப்பு - 100 கிராம்
பால் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 7
முந்திரி பருப்பு - 6
பிஸ்தா பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ அல்லது கேசரிப் பவுடர்- சிறிதளவு

செய்முறை :
முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும்.
சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும்.
அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.

நெய் - 3 டீஸ்பூன்

செய்முறை :
முதலில் முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக உடைத்து கொள்ளவும்.
பின்னர் அதை பிஸ்தா பருப்புடன் சேர்த்து நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
இதையடுத்து பாதாம் பருப்பைக் கொஞ்சம் சூடான வெந்நீரில் போட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தோலை எடுத்து விட்டு, அம்மியில் அல்லது மிக்சியில் நைசாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதை 3 கப்பு தண்ணீரில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடிக்கடி கிளறிவிடவும். பச்சை வாசனை இல்லாமல் நன்றாக கொதிக்கவிட்டு, சர்க்கரையைப் போடவும்.
சர்க்கரை நன்றாக கரைந்தபின் பாலை ஊற்றி மற்ற பொருட்களையும் போட்டு கொதித்தவுடன் இறக்கிவிடவும்.
அடுத்து நெய், குங்குமப்பூ சேர்த்தால் சுவையான பாதாம் பருப்பு பாயாசம் தயார்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ஜவ்வரிசி நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது. இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - அரை கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 5 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 100 கிராம்

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதனுடன் வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர்விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அடையாகத் தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும்.
ஜவ்வரிசி - அரை கப்
பாசிப் பருப்பு - கால் கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - 5 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு அதனுடன் வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர்விட்டு சற்றே கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அடையாகத் தட்டவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேகவிடவும்.
அழகிய, சுவையான முத்து அடை ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் மட்டன் எலும்பு சால்னா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மட்டன் எலும்பு - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
கடலைபருப்பு - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
தக்காளி - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
கிராம்பு - 1 - 2
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1/4 கப்
கத்தரிக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
மட்டன் எலும்பை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலை பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி அதனுடன், மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்) விட்டு வேக வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். தக்காளியை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,
பின் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.

பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் எலும்பு சால்னா ரெடி