என் மலர்tooltip icon

    சமையல்

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை விதவிதமாக சமைத்து பரிமாறலாம். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரை கிலோ
    துருவிய வெல்லம் - 2 கப்
    கேசரி பவுடர் - சிறிதளவு
    நெய் - தேவைக்கு
    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா

    செய்முறை:

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்லி தட்டில் வேகவைத்து தோல் நீக்கி மசித்துக்கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    வெல்லம் கரைந்ததும் மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கை கொட்டி கிளறவும்.

    பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய், கேசரி பவுடர், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

    ருசியான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அடுப்பில் வைத்து சமைக்காமல் ஐந்து வகையான தானிய அவலை வைத்து சத்தான சுவையான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராகி அவல் - 1 கப்
    கம்பு அவல் - 1 கப்
    சோள அவல் - 1 கப்
    கொள்ளு அவல் - 1 கப்
    கருப்பு ‌கவனி அவல் - 1 கப்
    வெங்காயம் - 1 கப்  (பொடியாக நறுக்கியது)
    தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
    கொத்தமல்லி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
    சாட் மசாலா - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் தனித்தனியாக ஐந்து வகையான அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    அவலையில் உள்ள தண்ணீரை வடி கட்டிய பின் ஐந்து வகையான அவலை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த அவலுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, சிறிதளவு சாட் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.

    பிசைந்த கலவையை க ட்லெட் வடிவில் செய்தால் 5 வகை தானிய அவல் கட்லெட் அடுப்பில்லா சமையல் தயார்.

    B. இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசை, நாண், சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிட செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1/2 கிலோ
    சின்ன வெங்காயம் - 150 கிராம்
    இஞ்சி - சிறிதளவு
    பூண்டு - 10
    முந்திரி - 10
    மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
    மஞ்சள்தூள் - சிறிதளவு
    மிளகு  -  அரை ஸ்பூன்
    சீரக - அரை ஸ்பூன்
    சோம்பு - கால் ஸ்பூன்
    கசகசா - கால் ஸ்பூன்
    பட்டை, கிராம்பு - சிறிதளவு
    ஏலக்காய் - 2
    ஜாதிக்காய் - 1
    புதினா, மல்லி - சிறிதளவு
    நெய் - 4 ஸ்பூன்
    எலுமிச்சை ஜூஸ் - 1 ஸ்பூன்
    சோயா சாஸ் - ஸ்பூன்
    தயிர் - 1 ஸ்பூன்
    பால் - 2 ஸ்பூன்

    செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி

    செய்முறை

    இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய், புதினா மல்லித்தழையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு, அதில் இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி, மிளகு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், தயிர், நெய், எலுமிச்சை சாறு, சோயா சாஸ், தேவையான அளவு உப்பு, அரைத்த மசாலாவை போட்டு நன்கு பிசைந்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சிக்கன் மசாலா கலவையை போட்டு, மிதமான தீயில் கிளறவும்.

    தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.

    தண்ணீர் சுண்டி சிக்கன் வெந்ததும் இறக்கவும்.

    சூப்பரான செட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கருப்பு உளுந்தில் புரதம், நார்ச்சத்து பி காம்ப்ளக்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளன. தோலுடன் அரைத்துச் செய்வதால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - அரை கப்
    கருப்பு உளுந்து - ஒரு கப்
    சீரகம் - கால் டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    கருப்பு உளுந்து தோசை

    செய்முறை:

    இட்லி அரிசி கருப்பு முழு உளுந்து இரண்டையும் தனித்தனியே நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.

    பிறகு இதனுடன் சீரகம் இஞ்சி உப்பு சேர்த்து அரைத்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். புளிக்கத் தேவை இல்லை.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாசை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது நல்லெண்ணெய் ஊற்றி எடுக்கவும்.

    சத்தான கருப்பு உளுந்து தோசை ரெடி.

    இதற்குத் தொட்டுக்கொள்ள தேங்காய்ச்சட்னி தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாசிப்பருப்பு, ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
    பாசிப்பருப்பு - கால் கப்
    ஜவ்வரிசி -1 டேபிள்ஸ்பூன்
    துருவிய வெல்லம் - அரை கப்
    தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
    முந்திரி பருப்பு - 6
    காய்ச்சிய பால் - 1 டம்ளர்
    நெய் - சிறிதளவு

    சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

    செய்முறை:

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

    அதுபோல் ஜவ்வரிசி, பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

    கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வந்ததும் ஜவ்வரிசி சேர்க்கவும்.

    ஜவ்வரிசி வெந்ததும் பாலை ஊற்றி லேசாக கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.

    நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம்.

    சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாலட்டை சாப்பிட்டால் வயிறு நிரம்பும். மாவுச்சத்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைக்க உதவும். இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கொண்டைக்கடலை - 1 கப்
    கேரட் - 3
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் - 1
    தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    ப.மிளகாய் - 1
    மிளகு தூள் - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - தேவையான அளவு
    இந்துப்பு - சிறிதளவு

    கொண்டைக்கடலை கேரட் சாலட்

    செய்முறை

    கொண்டைக்கடலையை நன்றாக கழுவி வேக வைத்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்

    ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிபன் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் வைத்து காரப்பணியாரம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெங்காயம், கேரட் - தலா 2,
    பிரெட் துண்டுகள் - 6,
    இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் விழுது - தலா ஒரு டீஸ்பூன்,
    தயிர் - ஒரு கப்,
    கடுகு - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பிரெட் காரப்பணியாரம்

    செய்முறை:


    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    பொடித்த பிரெட்டுடன் தயிர், பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பேஸ்ட், உப்பு சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதில் துருவிய கேரட், வெங்காயத்தை சேர்த்து, கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

    பணியாரக் குழியில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான பிரெட் காரப்பணியாரம் ரெடி.

    தேங்காய்ப்பால், சர்க்கரை சேர்த்து தொட்டு சாப்பிடலாம்.

    சாஸ், சட்னி போன்றவையும் நன்றாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி மிளகு காரசட்னி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    தக்காளி  - 5 (பெரியது),
    காய்ந்த மிளகாய் - 4,
    மிளகு - 1 தேக்கரண்டி,
    வெந்தயம் - 3/4 தேக்கரண்டி,
    பெருங்காயம் - சிறிதளவு,
    நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி,
    கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
    கறிவேப்பிலை - சிறிது,
    உப்பு - தேவைக்கேற்ப.

     தக்காளி மிளகு காரசட்னி

    செய்முறை:

    தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

    வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும்.

    அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துவிடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)

    அடுப்பை அணைத்து வைத்து வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

    மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.

    சுவையான மிளகு கார சட்னி தயார்.

    இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சீஸ், இட்லி பொடி சேர்த்து சூப்பரான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசைமாவு - 1 கிண்ணம்,
    துருவிய சீஸ் - 1 கிண்ணம்
    கொத்தமல்லி  - சிறிதளவு
    இட்லி மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - தேவைக்கேற்ப

    சீஸ் பொடி தோசை

    செய்முறை:

    சூடான தோசைக் கல்லில், ஒரு கரண்டி தோசை மாவை மெல்லிய வட்டமாக பரப்பி மேலே கால் கிண்ணம் துருவிய சீஸ் பரப்பவும்.

    ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்ச் சுற்றிலும் விடவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர், கொத்தமல்லி, ஒரு தேக்கரண்டி இட்லி மிளகாய் பொடியை மேலே தூவவும்.

    ஒரு மூடி போட்டு சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும், பின், தோசையை மடித்து பரிமாறவும்.

    சூப்பரான சீஸ் பொடி தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சாலட்டில் நார்ச்சத்து, விட்டமின், தாதுக்கள், பொட்டாசியம் நிறைந்துள்ளன. நல்ல கொழுப்பும் இருப்பதால் தேவையான சத்து கிடைக்கும். அதுபோல் எடையும் குறையும்.
    தேவையான பொருட்கள்

    முட்டைக்கோஸ் - ½ கப்
    வெள்ளரி - 1
    கேரட் - 1
    உருளைக்கிழங்கு - 2
    குடைமிளகாய் சிறியது - 1
    முந்திரி - 15
    இந்துப்பு - சிறிதளவு
    மிளகுத் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு - 2

    வெயிட் லாஸ் சாலட்

    செய்முறை

    காய்கறிகளை பொடியாக அறிந்து கொள்ளுங்கள்.

    உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் நீக்கி சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அறிந்த காய்கறிகளையும், உருளைக்கிழங்கையும் சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.

    15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைக்கவும்.

    இதை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் கொள்ளவும்.

    அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குடைமிளகாய், பன்னீர் சேர்த்து தோசை செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கப்
    மஞ்சள் குடைமிளகாய் - 2
    பச்சை குடைமிளகாய் - 2
    சிவப்பு குடைமிளகாய் - 2
    பச்சைப் பட்டாணி - 1 கப்
    துருவிய பன்னீர் - கால் கப்
    பெ.வெங்காயம் - 4
    கொத்தமல்லி - சிறிதளவு தழை
    எண்ணெய் - தேவையான அளவு

    குடைமிளகாய் பன்னீர் தோசை

    செய்முறை:

    குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, வேக வைத்த பட்டாணி சேர்த்து கலந்து வைக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை மாவை சற்று கனமாக ஊற்றவும்.

    அதன் மீது குடைமிளகாய் வகைகள், வெங்காயம், கொத்தமல்லி தழை, பன்னீர் துருவர் ஆகியவற்றை பரவலாக தூவவும். தோசையை சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி மூடிவைக்கவும். ஒரு பக்கம் நன்றாக வெந்தாலே போதுமானது. அதை அப்படியே எடுத்து பரிமாறலாம்.

    சூப்பரான குடைமிளகாய் பன்னீர் தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆலிவ், காய்கறிகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து செய்யப்படும் இந்த சாலட் ஆரோக்கியம் நிறைந்தது. பசியை போக்கி உடலுக்கு கலோரிகளை கொடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    ஆலிவ் - 1/2 கப்
    சிவப்பு குடைமிளகாய் - 1
    பச்சை குடைமிளகாய் - 1
    வெள்ளரிக்காய் - 1
    எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
    பூண்டு - 1/4 கப்
    உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

    ஆலிவ் குடைமிளகாய் சாலட்

    செய்முறை


    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெள்ளரிக்காய், சிவப்பு, பச்சை குடைமிளகாயை வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பௌலில் ஆலிவ், எலுமிச்சை, பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு தட்டில் குடைமிளகாயை வட்டமாக வெட்டி வைத்து கொள்ளவும். வெள்ளரியையும் அதே போல வைக்கவும்.

    அதன்மேல் உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொள்ளவும்.

    பரிமாறுவதற்கு முன் அதன் மேல் கலந்து வைத்த ஆலிவ் கலவையை சேர்க்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×