என் மலர்tooltip icon

    சமையல்

    வாழைப்பழம் சேர்த்து செய்யும் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 3,
    மைதா - 1 கப்,
    சர்க்கரை - /12 கப்,
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,
    ஏலக்காய் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
    பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - தேவைக்கேற்ப,
    நெய் - 1 டீஸ்பூன்.

    வாழைப்பழ பால்ஸ்

    செய்முறை

    மிக்சியில் சர்க்கரை போட்டு பவுடர் செய்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் மாவை ஊற்றி அதை 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சுடச்சுட வாழைப்பழ பால்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று 6 வகையான கீரைகளை சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கிண்ணம்,
    பாசிப்பருப்பு - கால் கிண்ணம்,
    முருங்கைக் கீரை- ஒரு கிண்ணம்,
    பொன்னாங்கண்ணி கீரை- ஒரு கிண்ணம்,
    சிறுகீரை - ஒரு கிண்ணம்.
    காம்பு ஆய்ந்த வல்லாரை - ஒரு கைப்பிடி,
    அகத்திக்கீரை - ஒரு கைப்பிடி,
    புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறு துண்டு,
    மிளகு - ஒரு தேக்கரண்டி,
    பச்சைமிளகாய் - 4,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ஆறுகீரை மிக்ஸ்டு அடை

    செய்முறை:


    பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை, புதினா, கொத்தமல்லி, அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து வடிக்கட்டி இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அடை மாவுப் பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.

    நறுக்கி வைத்துள்ள எல்லா கீரைகளையும் அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

    விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தும் செய்யலாம்.

    தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    சத்தான ஆறுகீரை மிக்ஸ்டு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் மார்குயுஸ் கடையில் வாங்கி கொடுத்திருப்பீங்க. இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    டார்க் சாக்லேட் - 600 கிராம்
    சர்க்கரை - 175 கிராம்
    முட்டையின் மஞ்சள் கரு - 6
    முட்டை - 6
    கோகோ பவுடர் - 70 கிராம்
    காபி - 10 மில்லி லிட்டர்
    கிரீம் - 500 கிராம்
    ராஸ்பெர்ரி - 50 கிராம்
    டார்க் சாக்லேட் - 200 கிராம்
    ஃப்ரஷ் கிரீம் - 100 மில்லி லிட்டர்

    சாக்லேட் மார்குயுஸ்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் முட்டை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கோகோ பவுடர் மற்றும் உருக்கிய சாக்லேட் சேர்த்து கலக்கவும்.

    கிரீம் மற்றும் காபியை சாக்லேட் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    ஒரு மோல்டில் இதனை ஊற்றி இரவு முழுவதும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

    சாக்லேட் மற்றும் கிரீம் கொண்டு சாக்லேட் ட்ரஃபில் தயார் செய்யவும்.

    மோல்டில் இருப்பதை அகற்றி விட்டு அதன் மேல் தயார் செய்து வைத்த சாக்லேட் ட்ரஃபிலை ஊற்றவும்.

    அதன்மேல் ராஸ்பெர்ரி மற்றும் ப்ளேட்டிங் வைத்து அலங்கரிக்கவும்.

    சூப்பரான சாக்லேட் மார்குயுஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மிகவும் சத்தான கேரட் பால். இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    நாட்டு சர்க்கரை - 125 கிராம்,
    ஏலக்காய் - 5 எண்ணம்,
    கேரட் - 150 கிராம்

    கேரட் பால்

    செய்முறை

    கேரட்டை நன்றாக கழுவிய பின்னர் துருவி மிக்சியில் போட்டு சாறு எடுத்து கொள்ளவும்.

    அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

    பால் கொதித்தவுடன் பாலில் கரண்டியால் கலக்கி கொண்டே கேரட் சாற்றை ஊற்ற வேண்டும்.

    கேரட்டானது நறுமண பாலுக்கு அற்புதமான நிறத்தை கொடுப்பதுடன் வைட்டமின் ஏ சத்தையும் அளிக்கின்றது.

    வாசனை மற்றும் சுவைக்காக ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து பாலை பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.

    பின்பு பாலை ஆற வைத்து சுத்தமாக வடிகட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ச்சியாவும் குடிக்கவும், சூடாகவும் குடிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு சத்துக்கள் அடங்கிய பச்சை பயறை வேக வைத்து சாப்பிடுவதை விட இனிப்பு சுவையில் பாயாசமாக செய்தால் கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்

    பச்சை பயறு - 1 கப்
    வெல்லம் - அரை கப்
    தேங்காய் - அரை கப்
    ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
    முந்திரி - கால் கப்
    நெய் - 2 ஸ்பூன்

    பச்சை பயறு பாயாசம்

    செய்முறை :

    பச்சைப் பயறை இரவு ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் குக்கரில் வேக வைத்து 4 விசில் வரை காத்திருக்கவும்.

    பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி பாகு போல் உருக வையுங்கள். உருகியதும் வடிகட்டி கொள்ளவும்.

    பயறை இறக்கியதும் அதை ஒன்றும் பாதியுமாக கடைந்துகொள்ளுங்கள். கெட்டியாக இருக்கும் பயறு கொதிக்க போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

    அதை அடுப்பில் நன்கு கொதிக்க வைக்கவும்.

    வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி நன்குக் கலக்கி கொதிக்க விடுங்கள். கொதி நிலை வந்ததும் துருவிய தேங்காயை போட்டுக் கலக்குங்கள்.

    போதுமான கெட்டிப் பதம் வந்ததும் இறக்கிவிட்டு நெய்யில் முந்திரி பருப்பை தாளித்து அதோடு ஏலக்காய் பொடியும் சேர்த்துக் கொட்டிக் கிளறுங்கள்.

    சுவையான பச்சை பயறு பாயாசம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமை, பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று இந்த இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    விதை நீக்கி பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்
    கோதுமை ரவை - ஒரு கப்
    சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
    பட்டை - சிறிய துண்டு
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    கிராம்பு ஏலக்காய் - தலா 2
    பிரியாணி இலை - ஒன்று
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி (சேர்த்து) - கால் கப்
    உப்பு, நெய், எண்ணெய் - தேவையான அளவு.

    பாகற்காய் கோதுமை புலாவ்

    செய்முறை:

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும்.

    அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலையை சேர்த்து செய்யும் உணவிற்கு பெயர் கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி. இதை பூரி, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டு உண்ணலாம்.
    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 2
    கொண்டைக்கடலை - 1 கப்
    நெய் - 2 ஸ்பூன்
    சீரக விதைகள் - 1ஸ்பூன்
    மஞ்சள் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    மசித்த தக்காளி - 2
    மிளகாய் பொடி - 1 ஸ்பூன்,
    தனியா பொடி - 1 ஸ்பூன்,
    வெந்தய தூள் - 1 ஸ்பூன்,
    கரம் மசாலா தூள்  - 1 ஸ்பூன்
    பெருங்காய தூள் - தேவையான அளவு
    கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

    கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி

    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து வெந்ததும் தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    கொண்டைக்கடலையை வேக வைத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயத்தூள், மற்றும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி சாறை ஊற்றிக் கிளற வேண்டும். சிம்மில் வைத்து ஆறு முதல் ஏழு நிமிடங்கள் வரை வதக்க செய்யலாம்.

    தக்காளி நன்றாக வதங்கிய பின்பு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். உங்களுடைய தேவைக்கு உப்பு சேர்த்து 3 நிமிடம் வரை வதக்க செய்யலாம்.

    மேற்சொன்ன மசாலா நன்றாக வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை, மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

    மசாலாவை பொறுத்து தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

    மசாலா நன்கு வேகும் பொழுது அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

    கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு சப்ஜி ரெடி!

    நீங்கள் விரும்பிய பூரி, சப்பாத்தி அல்லது நாண் உடன் மசாலாவை வைத்து உண்ணுங்கள் இது அதீத சுவையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோயா பீன்ஸ் வைத்து செய்யும் சத்தான புதுமையான இந்தக் கொழுகட்டை எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது. இன்று இந்த கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - ஒரு கப்
    சோயா பீன்ஸ் - அரை கப்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 4
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    தண்ணீர் - ஒன்றரை கப்
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு.

    புரோட்டீன் கொழுக்கட்டை

    செய்முறை:

    சோயா பீன்ஸை ஊற வைத்து ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும்.

    கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

    அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.

    கடாயில் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.

    இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும்.

    ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.

    தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எப்பொழுதும் ஒரே மாதிரி இனிப்பு பலகாரம் செய்து சலிப்படைந்திருக்கும். இன்று பனங்கிழங்கு வைத்து பாயாசம் செய்யலாம். இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பனங்கிழங்கு - 4
    தேங்காய்ப்பால் - ஒரு கப்
    பனை வெல்லக் கரைசல் - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
    நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - ஒரு ஸ்பூன்.

    பனங்கிழங்கு

    செய்முறை:

    பனங்கிழங்கை முழுதாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெளியில் உள்ள தோல் பகுதியையும், உள்ளே உள்ள தண்டு பகுதியையும் நீக்கி விட வேண்டும்.  இதனை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியில் நெய்யை சேர்த்து சூடானதும் பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடிபிடிக்காதவாறு 3 நிமிடம் வரை அடுப்பை சிம்மில் வைத்து வதக்க வேண்டும்.

    அதனுடன் பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதித்து வரும் போது இறக்கிக் கொள்ளலாம்.

    கொஞ்சம் சூடு தணிந்த பின்பு தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலக்கி பரிமாறவும்.

    தித்திப்பான பனங்கிழங்கு பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பனங்கிழங்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனங்கிழங்கில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பனங்கிழங்கு - 5
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகு - அரை டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - 1/2 கப்
    சின்ன வெங்காயம் - 4,
    உப்பு - தேவைக்கேற்ப.

     பனங்கிழங்கு

    செய்முறை

    பனங்கிழங்கை வேக வைத்து மேல் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயம், மிளகாயை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

    மிக்சியில் வதங்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    அனைத்தும் ஓரளவு அரைப்பட்டதும் கடைசியில் பனங்கிழங்கை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    இப்போது சூப்பரான பனங்கிழங்கு துவையல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாகற்காயை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கடலை மாவு - 1 கப்
    அரிசி மாவு - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
    பாகற்காய் - 2
    அரிசி களைந்த நீர் - 1 கப்
    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

    பாகற்காய் பக்கோடா

    செய்முறை:

    முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி அரிசி களைந்த நீரில் போடவும்.

    அரை மணி நேரத்துக்குப் பின் பாகற்காயை சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போடவும்.

    அடுத்து அதில் அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சோம்பு, பெருங்காய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த பாகற்காயை பகோடாவாகப் போடவும்.

    மொறு மொறு என்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான பாகற்காய் பக்கோடா ரெடி.

    அரிசி களைந்த நீரில் சுத்தம் செய்வதால் கசப்பு தெரியாது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழை இலையில் இட்லி செய்தால் அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். இன்று இந்த இட்லியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி மாவு - ஒரு கப்
    கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உடைத்த முந்திரிப் பருப்பு - 10
    வாழை இலை - 2 (டிபன் சாப்பிட பயன்படுத்தப்படும் வாழை ஏடு)
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    தொன்னை இட்லி

    செய்முறை:


    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக உடைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உடைத்த மிளகு - சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாயை போட்டு தாளித்து இட்லி மாவுடன் கலக்கவும்.

    வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி மாவை ஊற்றி அவற்றை ஆவியில் வேக வைக்கவும்.

    இது வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும்.

    பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

    குறிப்பு: வாழை இலைகளை 15 செ.மீ. நீளம் 10 செ.மீ. அகலம் கொண்ட துண்டுகளாக வெட்டி எடுக்கவும். இரண்டு துண்டுகளை ஒன்றன்மீது ஒன்றாக நீள வாக்கில் வைத்து மையப் பகுதியிலிருந்து கணக்கிட்டு இரண்டு முனைகளையும் முக்கோணம் போல மடிக்கவும். பார்ப்பதற்கு டைமன்ட் வடிவம் போல இருக்கும். பிறகு முக்கோணமாக கிடைத்த பாகங்களை உள்பக்கமாக சிறு முக்கோணமாக மடியுங்கள். பார்ப்பதற்கு அறுங்கோண வடிவம் கிடைக்கும். இப்போது இரண்டு முனைகளில் இருக்கும் சிறுமுக்கோணங்களை உள்பக்கத்துடன் சேர்த்துப் பிரித்து ‘டூத் பிக்’ அல்லது கனமான குச்சியால் குத்துங்கள். இப்போது தொட்டி போன்ற நீள்வடிவ தொன்னை கிடைக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×