search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆறுகீரை மிக்ஸ்டு அடை
    X
    ஆறுகீரை மிக்ஸ்டு அடை

    சத்தான டிபன் ஆறுகீரை மிக்ஸ்டு அடை

    ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று 6 வகையான கீரைகளை சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி புழுங்கல் அரிசி - ஒரு கிண்ணம்,
    பாசிப்பருப்பு - கால் கிண்ணம்,
    முருங்கைக் கீரை- ஒரு கிண்ணம்,
    பொன்னாங்கண்ணி கீரை- ஒரு கிண்ணம்,
    சிறுகீரை - ஒரு கிண்ணம்.
    காம்பு ஆய்ந்த வல்லாரை - ஒரு கைப்பிடி,
    அகத்திக்கீரை - ஒரு கைப்பிடி,
    புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
    இஞ்சி - சிறு துண்டு,
    மிளகு - ஒரு தேக்கரண்டி,
    பச்சைமிளகாய் - 4,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ஆறுகீரை மிக்ஸ்டு அடை

    செய்முறை:


    பொன்னாங்கண்ணி கீரை, சிறுகீரை, புதினா, கொத்தமல்லி, அகத்திக்கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து வடிக்கட்டி இஞ்சி, மிளகு, பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அடை மாவுப் பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.

    நறுக்கி வைத்துள்ள எல்லா கீரைகளையும் அரைத்த மாவுடன் சேர்த்து உப்பு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி மிதமான தீயில் வைத்து இருபுறமும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

    விருப்பப்பட்டால் எண்ணெய்க்கு பதில் நெய் சேர்த்தும் செய்யலாம்.

    தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.

    சத்தான ஆறுகீரை மிக்ஸ்டு அடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×