என் மலர்
ஆரோக்கியம்

கேழ்வரகு கேரட் வெங்காய அடை
கேழ்வரகு கேரட் வெங்காய அடை
இந்த அடையை சாப்பிட்டால் பசி தாங்கும். அதே சமயம் கலோரிகளும் கிடையாது. உடலில் உள்ள கொழுப்பும் கரையும். இந்த அடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1
கோதுமை ரவை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - 2
இந்துப்பு - சிறிதளவு

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய், கேரட் துருவல், அரிசி மாவு, கோதுமை ரவை, இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் கேழ்வரகு கேரட் வெங்காய அடை தயார்.
கேழ்வரகு மாவு - 3/4 கப்
வெங்காயம் - 1
கோதுமை ரவை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கேரட் - 2
இந்துப்பு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 1

செய்முறை
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகை மாவை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம். ப.மிளகாய், கேரட் துருவல், அரிசி மாவு, கோதுமை ரவை, இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்தால் கேழ்வரகு கேரட் வெங்காய அடை தயார்.
இந்த அடையை சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story