என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மீன் புட்டு
    X
    மீன் புட்டு

    மீன் புட்டு

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் புட்டு எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மீன் - அரைகிலோ
    இஞ்சி - 1 துண்டு
    பெ.வெங்காயம் - அரைகிலோ
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 5 பல்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு


    செய்முறை:

    மீனை நன்றாக சுத்தம் செய்து இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை எடுத்து விட்டு உதிர்த்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டுவை கொட்டி வதக்கவும்.

    அதைத்தொடர்ந்து வெங்காயம், மிளகாயை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் உதிர்த்த மீன் கலவை, உப்பு சேர்த்து சிறுதீயில் வேகவைத்து இறக்கி பரிமாறலாம்.

    சுவையான மீன் புட்டு தயார்.

    Next Story
    ×