search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சாக்லேட் இடியாப்பம்
    X
    சாக்லேட் இடியாப்பம்

    குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட் இடியாப்பம்

    குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லேட்டை கொண்டு விதவிதமான பலகாரங்கள் செய்யலாம். இன்று சாக்லேட் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி மாவு - அரை கப்
    சாக்லேட் சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
    முந்திரி பருப்பு - 10 (சிறிதாக நறுக்கவும்)
    நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    தண்ணீர் - 1 கப்

    சாக்லேட் இடியாப்பம்

    செய்முறை:

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் நெய், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் பச்சரிசி மாவை கொட்டி லேசாக கிளறி இறக்கவும்.

    பின்னர் கட்டி பிடிக்காமல் கிளறி இடியாப்ப குழலில் போட்டு பிழிந்து ஆவியில் வேகவைத்து இடியாப்பத்தை உதிர்த்துக்கொள்ளவும்.

    அதனுடன் சாக்லேட் சாஸ், முந்திரி பருப்பு தூவி கிளறி சுவைக்கவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×