என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது.
    உணவகங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் உணவு முதல் உலக பிரசித்தி பெற்ற உணவுகள்கூட நடந்து போய் சாப்பிடக்கூடிய அளவுக்கு அருகே வந்துவிட்டது. இவ்வளவு உணவகங்கள் பெருக முக்கியமான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, உணவுக்காக மக்கள் அதிகமாக செலவிட விரும்புவது. இரண்டு, வித்தியாசமான உணவுகளை மக்கள் சுவைக்க விரும்புவது.

    இன்று, உணவகங்களில் வித விதமாக ஆர்டர் செய்து ருசித்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான விஷயமாகிவிட்டது. எவ்வளவுதான் பிடித்தமான உணவுகளை வீட்டில் சமைத்து சுவைத்தாலும், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது தனிக் கொண்டாட்டம் தான்.

    ஆண்களைப் போன்று பெண்களும் வேலைக்கு செல்வதால் ஏற்பட்ட மாற்றம் இது. வேலைக்கு சென்றுவிட்டு தாமதமாகவோ, களைத்தோ வீடு திரும்பும்போது, ‘குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெளியே சாப்பிட்டால் என்ன?’ என்ற சிந்தனை எழுகிறது. திடீர் விருந்தாளிகள் வரும்போதும், திருமணநாள், பிறந்தநாள் போன்ற முக்கிய விழாக்களை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்பும்போதும் உணவுக்காக ஓட்டல்களை நாடுகிறார்கள். பள்ளி விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்க, நண்பர்களோடு உட்கார்ந்து அரட்டையடிக்கவும் உணவகங்கள் பயன்படுகின்றன.

    இப்போதெல்லாம் ஆண்களும் சுவையாக சமைக்கிறார்கள். காரணம் உணவகங்கள். ஒரு பொருளை சாப்பிடும் போதே, இது எதனால் செய்யப்பட்டது, எப்படி செய்யப்பட்டது என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சாப்பிடும் போது அந்த உணவுப் பொருளின் உள்ளடக்கமும், செய்முறையும் தெரிந்துவிடும். பிறகு அதை வீட்டில் செய்துபார்க்கிறார்கள். எதிர்பார்த்த சுவை கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, ஓரளவு அதில் வெற்றிபெற்று மகிழ்ச்சி அடைகிறார்கள். இப்படித்தான் பல பெண்கள் புதிய வகை உணவுகளை சமைக்க கற்றுக் கொள்கிறார்கள். இதனால் உணவகங்களில் சாப்பிடுவது ஒரு படிப்பினையாகிவிடுகிறது. ஒரு சில உணவகங்களில் தங்களது சுவைமிகுந்த ரெசிபிகளை, எப்படி தயாரிப்பது என்று வாடிக்கையாளர் களுக்கு கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்கள்.

    ஓட்டல்களின் பெயர்கள் மாறினாலும், பெரும்பாலும் உணவுகளுக்கு ஒரே பெயர்தான் வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஒரே மாதிரியான பொருட்களைத்தான் சேர்க்கவும் செய்கிறார்கள். ஆனால் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. அப்படி சுவை அதிகமுள்ள உணவகங்களில்தான் கூட்டம் சேருகிறது. சாதாரண உணவுப் பொருட்களைக் கொண்டு இப்படி எல்லாம் தயாரிக்க முடியுமா என்று வியக்கும் வண்ணம் உணவகங்கள் வித்தியாசமான உணவுவகைகளை தயாரிக்கின்றன. பாரம்பரிய உணவுகள், கான்டினென்டல், சைனீஷ், கிரேக்கம், இத்தாலி என்று பல்வேறு நாட்டு உணவுகள் இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. வட இந்திய, தென் இந்திய உணவுகளும் மக்களை கவர்கிறவே செய்கிறது.

    உணவகங்கள் இப்போது, ‘உணவுத் திருவிழா’வும் நடத்துகின்றன. அப்போது சிறப்புக்குரிய உணவுகள் பலவற்றை சுடச்சுட தயாரித்து மக்களுக்கு கொடுத்து அவர்களை உணவுப்பிரியர்களாக மாற்றிவிடுகிறது. உணவு மட்டும் சுவையாக இருந்தால் போதாது. அவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தின் சூழ்நிலையும், அழகும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் இருக்கவேண்டும். அதோடு உணவு பரிமாறுகிறவர்களும் இதமாக நடந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இப்படி எல்லாவற்றிலும் திருப்திபடுத்தும் உணவகங்களே மக்கள் நாவில் மட்டுமல்ல, மனதிலும் இடம் பிடிக்கின்றன. 
    அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    மிளகாய்தூள் - 50 கிராம்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

    பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.

    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்களில் சிலர் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்துகின்றனர். ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    தற்போது ஆண்களிடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்துவிட்டது. மேலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    சிக்ஸ் பேக் என்றால் என்ன? பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.

    ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.

    ஸ்டீராய்டு எடுப்பதால், ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



    சிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.

    சிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.

    சிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.

    நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம்.
    பெண்கள் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு விஷயம் மாதவிலக்கு. சிலருக்கு எளிதாய் கடந்து போய்விடும் அந்த மூன்று நாட்கள். பலருக்கு ஒரு யுகமாக கடக்கிறது. இந்த மாதவிலக்கு இன்னும் சிலருக்கு கூடுதலாக மேலும் சில பிரச்சினைகளை தருகிறது. இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ என்று அழைக்கிறார்கள். அதாவது மாதவிலக்கு வருவதற்கு முன் பெண்களுக்கு ஏற்படுகிற உடல்நல பிரச்சினைகள்.

    பல பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் படபடப்பு, எரிச்சல், காரணமற்ற கோபம், உடல் எடை அதிகரித்து வயிறு உப்பியது போன்ற எண்ணம், மார்பகம் கனமாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், உணவு பிடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, அழுகை வருவது போன்ற பலவகையான உணர்வுகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்த உணர்வுகள் எல்லாம் ‘ப்ரீ மென்ஸ்சுரல் சிண்ட்ரோம்’ பாதிப்பு என்கிறது மருத்துவம். சிலருக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் மாதவிலக்கு சமயத்திலும் தொடர்கின்றன.

    இந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகளும் திணறுகிறார்கள். இதில் என்னவொரு வேடிக்கை என்றால் இந்த பிரச்சினையைப்பற்றி அந்தப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் கூட புரிந்துகொள்வதில்லை என்பதுதான். ஏன் ஒவ்வொரு மாசமும் இப்படி பிரச்சினை பண்ற என்பதுதான் அவர்களின் பார்வையாக இருக்கிறது.

    அந்தப் பெண்கள் ‘பி.எம்.எஸ்.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் மாதவிலக்குக்கு முந்தைய பிரச்சினையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இது நோயல்ல மாதவிலக்குக்கு முந்தைய சமயத்திலும் சிலருக்கு மாதவிலக்கு சமயத்திலும் ஏற்படுகிற சிறிய அளவிலான மன அழுத்தம் என்பதை புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

    பொதுவாக மாதவிலக்கு ஏற்படுவதற்கு சில நாட்கள் முன்பாக சாப்பாட்டில் உப்பின் அளவை குறைக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். டென்சன் காரணமாக ரத்த அழுத்தம் உயராமல் இருக்கத்தான் இந்த உப்புக் கட்டுப்பாடு. இதோடு கூட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்தால் மன அமைதி கிடைக்கும். அந்த சமயத்தில் மன இறுக்கத்தால் தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள் மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

    வைட்டமின் குறைபாடு இருந்தால் மட்டும் மருத்துவரின் அறிவுரைப்படி மாதவிலக்கு நாட்களில் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம். நன்றாக சாப்பிடுவது, தூங்குவது என்று மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டாலே மாதவிலக்குக்கு முந்தைய சங்கடங்களை தவிர்க்கலாம். மாதவிலக்கு முடியும் போது இந்தப் பிரச்சினையும் தானாக மறைந்துவிடும். 
    இந்த முத்திரையை செய்து வந்தால் சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும்.
    செய்முறை: ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டும் கட்டைவிரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கஙள நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    10 நிமிடங்கள் வரை, ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம்.

    பலன்கள் : சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும். வெயிலால் ஏற்படும் பக்கவாதம், படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.
    கம்பு வெஜிடபிள் கஞ்சி இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. இந்த இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஊறவைத்த கம்பு - அரை கப்,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    கடுகு, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
    ஏலக்காய் - 2,
    பிரியாணி இலை - 1,
    வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, அரைத்தது) - 3 கப்,
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    உப்பு, மிளகுத் தூள் - சுவைக்கேற்ப,
    எலுமிச்சைப்பழம் - அரை மூடி.



    செய்முறை :

    கம்பை நன்றாகச் சுத்தம் செய்து ஊறவைக்கவும்.

    இதனுடன், வெஜிடபிள் ஸ்டாக், சீரகம், மிளகு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, வேகவைக்கவும்.

    பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் பூண்டு சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தேவைப்பட்டால், சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும்.

    இதில், எலுமிச்சைப் பழச்சாறு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

    பலன்கள்: இதில் இரும்புச் சத்து மிக அதிகம். இரத்தசோகை இருப்பவர்களுக்குச் சரியான உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கு அடிக்கடி தரலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...
    ‘எவ்வளவு வருமானம் வந்தாலும் பத்தல...’ என்பதே பெண்கள் பலரின் புலம்பலாக உள்ளது. அவர்கள் பெரும்பாலும் வீண் செலவு வழிகளை அடைக்காமல் இருப்பார்கள். சரி, செலவை எப்படிக் குறைக்கலாம் என்று கூறுங்களேன் என்கிறீர்களா? இதோ, சில ‘டிப்ஸ்’...

    போக்குவரத்துச் செலவை கூடியமட்டும் குறைக்க முயலுங்கள். ஒரே பகுதியில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள், வாகனத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம்.

    தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஏ.சி., மின்விசிறி போன்றவற்றை அணைப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

    சில பெரும் நிறுவனங்கள், கடைகள், குறிப்பிட்ட காலத்தில் தள்ளுபடி வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதைக் கவனித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சிறிய கடைகளில் என்றில்லை, ஆச்சரியப்படுத்தும்வகையில், பெரிய கடைகளிலும் பேரம் பேசுவது சில நேரங்களில் பலன் கொடுக்கும். பேரம் பேச கவுரவம் பார்க்க வேண்டாம்.



    வெளியிடங்களில் சாப்பிடு வதைக் குறைத்துக்கொள்வது, பர்சுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் நல்லது.

    திரையரங்கில் படம் பார்ப்பது செலவு பிடிக்கும் விஷயமாகிவரு கிறது. சிறிது காலம் பொறுத்திருந்தால், முறைப்படி இணையத்திலேயே பணம் செலுத்திப் பார்க்க முடியும்.

    ‘ஜிம்’முக்கு பணம் கட்டிவிட்டு, போகாமல் இருப்பதைவிட, வீட்டி லேயே உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    பழையதாகிவிட்டது என்பதாலேயே ஒரு பொருளை தூக்கிப் போட்டுவிடாமல், அதிகபட்சம் எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

    வீட்டில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் தனித்தனி செல்போன், அவற்றுக்கான செலவு தேவையா என யோசியுங்கள்.

    பணமாக எடுத்துக் கொடுப்பதைவிட, கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நாம் அதிகம் செலவழித்துவிடுகிறோம். எனவே கிரெடிட் கார்டை பர்சை விட்டு வெளியே எடுப்பதை கூடியவரை தவிருங்கள். 
    சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும்.
    கொய்யாவுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. ஆம்… உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் வல்லமை கொண்டது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே பலன் தரும் பழம் இது.

    கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங்கள்சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.

    சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், கொய்யா அவர்களுக்கும் நண்பனே! காரணம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து.

    வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது. வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள், அதற்குப் பதிலாக பக்கவிளைவற்ற… இயற்கையான கொய்யாவை முயற்சி செய்து பார்க்கலாம்.

    சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான சாய்ஸ். பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்… அமோகம்.

    ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர்களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவர்களும் கொய்யாவோடு ஃப்ரண்ட்ஷிப் வைத்து கொள்வது நல்லது.

    உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டையிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாவிலிருக்கும் Lycopene சத்துதான்அதன் ராஜ ரகசியம்.

    Last but not least… கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.
    அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.
    துங்கபத்ரா மற்றும் கிருஷ்ணா நதிக்கு மத்தியில் உள்ள சிறு நகரமே கத்வால். இந்நகரம் கைத்தறி நெசவுக்கு மிகவும் பிரபலமானது. அதாவது கத்வால் பட்டு சேலை என்றாலே அதன் புகழ் அறிய வரும். கத்வால் சேலைகள் அழகிய சரிகை வேலைப்பாடு, நன்கு நெய்யப்பட்டு குட்டு பார்டர்கள் என்பது எடை குறைந்தவாறு சுலபமாக பராமரிக்க கூடிய வேலையாகவும் விளங்குகிறது. அதிகபட்ச அழகும், அணிவதற்கு இலகுவான சேலையாகவும் விளங்கும் கத்வால் சேலைகள் என்பது பருத்தி சேலைகள் மற்றும் பட்டு சேலைகளாக கிடைக்கின்றன.

    கத்வால் சேலையை நெய்பவர்கள் என்பவர் இந்து தெய்வங்களுக்கு நெசவு செய்து தந்த ஜிவேஷ்ஹர் மகராஜ் வழி வந்தவர்களாம். இச்சேலை என்பது பெரும்பாலும் பண்டிகை மற்றும் விழாக்களுக்கு மட்டும் பயன்படுத்த ஏற்ற சேலையாக நெய்யப்பட்டன. அதாவது இறையம்சம் பொருந்திய சேலையாகவே கத்வால் சேலைகள் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் 1946-ல் ஆரம்பிக்கப்பட்ட கத்வால் சென்டர்-மூலமே இதன் சிறப்பு இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம்.

    கத்வால் சேலை என்பது ஜரிகை பேட்டர்ன் தனியாகவும், சேலை தனியாகவும், குட்டு பார்டர் தனியாக நெய்யப்பட்டு பின் இணைக்கப்படுகிறது. முழு புடவை என்பது பருத்தி நூலால் நெய்யப்பட்டு அதன் பார்டர்கள் மட்டும் தூய்மையான மல்பெரி பட்டு மற்றும் டஸ்ஸர் பட்டுகளால் நெய்யப்படுகிறது.

    கத்வால் சேலை நெய்யும் முறை என்பது “குப்படம்” என கூறப்படுகிறது. இதன் பார்டர் நெய்யும் ஸ்டைல் “கும்பம்” என கூறப்படுகிறது. கத்வால் சேலைகள் மிகவும் எடை குறைவானவை. இந்த முழு சேலையை அப்படியே மடித்து கொண்டே வந்தால் ஒரு தீப்பெட்டி அளவிற்கு கொண்டு வரமுடியும். பட்டு நூல் மற்றும் பருத்தி நூல் இணைந்தவாறு கத்வால் சேலைகள் நெய்யப்படுகின்றன. நாகரிக வடிவமைப்புடன் அனைத்து வயதினரும் அணிய ஏற்றவாறு அழகுடன் கத்வால் சேலைகளின் உருவாக்கம் உள்ளன.



    வண்ணமயமான கத்வால் சேலைகள்

    அனைத்து வண்ணங்களிலும் அழகிய கத்வால் சேலைகள் கிடைக்கின்றன. இயற்கை நிறச்சாயல் மற்றும் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் வண்ண சிறப்பு என்றவகையில் கத்வால் சேலைகள் சிறப்பிடம் பெறுகின்றன. மாறுபட்ட வண்ண சேர்க்கை மற்றும் உலகளாவிய சிறப்பை பெறும் வகையில் இருவகை வண்ண கலவை என புதிய வடிவில் கத்வால் சேலைகள் வந்துள்ளன.

    சேலையில் பதியப்படும் உருவங்கள், சிற்பங்கள் என்பவை கோவில் சின்னங்கள், பூக்கள், இயற்கை வடிவங்கள் என்பதுடன் நவீன கணினி வடிவமைப்புகளாக கணித உருவங்கள் போன்றவை பதியப்படுகின்றன. சரிகை வேலைப்பாடு என்பது தங்க சரிகை மற்றும் வெள்ளி சரிகை கொண்டவாறு நெய்யப்படுகின்றன. பார்டர் மற்றும் புட்டா பகுதிகள் பட்டு நூல் பின்னணியில் நெய்யப்படுவதால் சரிகையின் ஜொலிப்பு அழகுடன் வெளிப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகளிலும் விரும்பப்படும் கத்வால் சேலைகள்

    அதிக மவுசு மற்றும் விற்பனை பொருளாக கருதப்படும் கத்வால் சேலைகள் மேற்கத்திய நாடுகளில் அதிகமாக விரும்பப்படுகிறது. மிக சிறப்புமிகு பரிசளிப்பு பொருளாக கத்வால் சேலைகள் இருப்பதுடன், நிறைய சேலைகள் எடுத்து சென்றாலும் எடை அதிகம் இருக்காது என்பதும் மிக முக்கிய காரணமாக உள்ளது. கத்வால் சேலையை பராமரிப்பது சுலபமானதாக உள்ளதாலும் அனைவரும் அதிகமாக விரும்புகின்றனர். வீட்டில் கத்வால் சேலையை துவைக்கும்போது முதல் மூன்று முறை வெறும் தண்ணீரில் மட்டும் அலசி காய வைத்திட வேண்டும். அதன் பின்னரே குறைவான சோப்புதூள் போட்டு துவைத்து கொள்ளலாம். அதுபோல் அதிக சூரிய ஒளி படும்படி காய வைக்காமல் சற்று நிழலில் காய வைப்பது சிறந்தது.

    கத்வால் சேலைகள் என்பது சிகோ சேலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. கத்வால் சேலைகள் அதில் உள்ள கைவினை நெசவிற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. திருமணம் மற்றும் முக்கிய விழாவிற்கு என பிரத்யேக ஆர்டர் மூலம் நெய்யப்படும் சேலைகளின் விலை மிக கூடுதலாக இருக்கும். சுமார் ரூ.10,000/- லிருந்து ஆரம்பிக்கும் கத்வால் பட்டு சேலைகள், பருத்தி சேலை எனும்போது சற்று விலை குறைவாகவே காணப்படுகிறது. 
    குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலிகளையும், மேசைகளையும், ஊஞ்சல்களையும் வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
    குழந்தைகளுக்கான துணி மணிகள், பொம்மைகள், நகைகள் என்று பிரத்யேகமாக வாங்குவது போல் அவர்களுக்கான, ஃபர்னிச்சர்களை வாங்க பெரும்பாலோர் நினைப்பதில்லை. குழந்தைகள் வளர்ந்து விட்டால் அது வீண்தானே என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ற பிரத்யேகமான நாற்காலிகளையும், மேசைகளையும், ஊஞ்சல்களையும் வாங்குவது என்பது மிகவும் அவசியமான ஒன்று. அப்படி வாங்க வேண்டிய சிலவற்றைப் பற்றி கீழ்வருமாறு பார்க்கலாம்.

    கூடை சேர்: ஹாலில் பெரிய சோபா, ஈசிசேர், பீன்பேக், டீபாய் என்று பல ஃபர்னிச்சர்களை நாம் வைத்திருப்போம். அங்கு நாம் உட்கார்ந்து டிவி பார்க்கும் போதோ, புத்தகம் படிக்கும் போதோ குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். அல்லது அவர்களுக்கே பிடித்த நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்ப்பதாக இருந்தாலும் சோபாவில் படுத்துக் கொண்டோ, முதுகை வளைத்து தாறுமாறாக தொங்கிக் கொண்டோ பார்ப்பார்கள். இதற்கு காரணம் இந்த ஃபர்னிச்சர்கள் அவர்களின் உடல் அளவிற்கு பொருத்தமானவை அல்ல என்பதேயாகும் எனவே பிரம்பினாலோ, மரத்தினாலோ ஆன சிறு கூடை சேர்கள் குழந்தைகள் கச்சிதமாக அமர்ந்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

    டைனிங் சேர்: பல வீடுகளில் பெரியவர்கள் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்துசாப்பிடும் போது குழந்தைகள் தங்களுடன் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்று புலம்புவார்கள். ஆனால் பல வீடுகளில் டைனிங் டேபிள் மற்றும் சேர்கள் அகலமாக பெரியவர்களுக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கான பிரத்யேக டைனிங் சேர்கள் உயரம் கூடுதலாகவும், பகுதி குறுகலாகவும் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும். அதில் உட்கார்ந்து சாப்பிடும்போது குழந்தைகள் கீழே இரங்காமலும், கைகளை சரியாக டேபிளில் ஊன்றி வசதியாக சாப்பிடவும் செய்வார்கள்.

    படிக்கும் மேஜை: நிறைய வீடுகளில் குழந்தைகள் தரையிலோ, சோபாவிலோ அமர்ந்து படிப்பார்கள். அப்போது அவர்களின் கவனம் டிவி மேலேயோ, மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதிலேயோ இருக்கும். ஆனால் அவர்களுக்கென்று பிரத்யேகமான படிக்கும் மேஜை இருந்தால் அவர்களின் கவனம் சிதறாது. உட்காரும் சேரிலேயே இணைந்த மேஜை மாதிரியோ, சேரிலேயே ஒரு பலகை இணைத்து அதன் மேல் புத்தகம் வைத்துக் கொள்வது போன்று எளிய மாடலோ, உயரமான புத்தக அலமாரியுடன் கூடிய படிக்கும் மேஜை, கம்ப்யூட்டர் வைக்கும் வசதி, அதற்கு தோதான சேர் என்பது போன்ற வடிவிலோ இந்த படிக்கும் மேஜை இருக்கலாம்.

    மேல் குறிப்பிடப்பட்டவை தவிர, சிறு ஊஞ்சல் அல்லது ஜீலா, சாய்ந்து ஆடக்கூடிய ராக்கிங் சேர், குட்டி அளவிலான பீன் பேக், அவர்களின் பொம்மை, துணிகள் போன்றவற்றை சுலபமாக வைத்து எடுப்பதற்கு வசதியான அலமாரிகள், ஒன்றிற்கு மேற்பட்ட குழந்தைகள் படுத்துறங்க வசதியான பங்கர் கட்டில்கள் என்று குழந்தைகளுக்கான ஃபர்னிச்சர்கள் பல இருக்கின்றன. 
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க சிக்கன் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - 2
    ப.மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    முட்டை - 1
    கறிமசாலா துள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு,
    மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

    மிக்சியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.

    பிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கறிமசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

    பின்னர் இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். நன்கு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.

    சூடான சிக்கன் வடை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோபமாக இருக்கும் குழந்தையை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.
    குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல. கோபத்தில் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம்.

    குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி காப்பது வேண்டாத விளைவுகளைத் தடுப்பதுடன், குழப்பங்களையும் குறைக்கும். உங்கள் அமைதியான நிலை, கோபத்தில் இருக்கும் உங்கள் குழந்தையை அமைதிப்படுத்தும். குழந்தைகள் அமைதியடைந்தவுடன் அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

    குழந்தைகள் கோபத்தின் உச்சிக்கு செல்லும்போது பதிலுக்கு நீங்களும் கோபத்தின் உச்சிக்கு சென்று அவர்களை அடிக்க கூடாது. அவ்வாறு உடல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டால், பின்னர் குழந்தைகளை அமைதிப்படுத்தும் உங்கள் முயற்சியில் நீங்கள் நம்பிக்கையிழக்க வேண்டியிருக்கும். கலவரம் புகுந்து கொண்டு அமைதி என்பது பெற முடியாத ஒன்றாக ஆகிவிடும்.



    உடல் ரீதியான உணர்வு வெளிப்பாடுகள் உங்கள் குழந்தையின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்து, உங்கள் எதிர்ப்பார்ப்பிற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட வழிவகுக்கும். அவ்வாறு கோபம் கொள்வது எந்த விதத்திலும் நிலைமையை சரிசெய்யவோ அல்லது அமைதியை ஏற்படுத்தவோ உதவாது என்பதால், இந்த வழிமுறை பயனற்றுவிடுகிறது.

    கோபத்திற்குப் பிறகு அமைதி திரும்பியவுடன், நடந்தவற்றைக் குறித்துப் பேசுவது மிகவும் முக்கியம். குழந்தையை அரவணைத்துப் பேசுவதன் மூலம் அந்தக் குழந்தை தான் கவனிக்கப்படுவதை உணர்கிறது. கோபத்தின் போது உணர்வுகளை வெளிக்காட்ட உள்ள பல்வேறு வழிமுறைகள் குறித்து குழந்தைக்கு அறிவுறுத்துவது ஒரு சிறப்பான தொடக்கமாக அமையும். நீங்கள் கோபத்தை எப்படி சமாளிப்பீர்கள் என்று காண்பியுங்கள்.

    மற்றவர்களை பார்த்து தெரிந்து கொள்வதில் குழந்தைகள் கில்லாடிகள். இதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு கோபத்தை சமாளிப்பது எப்படி என்பதைக் காண்பிப்பது அவசியமாகிறது. உங்களை வெறுப்படையச் செய்யும் விஷயங்களைக் குறித்துப் பேசுங்கள். நீங்கள் அதை எப்படிச் சமாளிப்பீர்கள் என்பதை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி அவர்களுக்குக் காட்டுங்கள். குழந்தை தேவையான போது உங்களை அரவணைக்க ஊக்கப்படுத்துங்கள்.
    ×