என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகளின் பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
    இன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே பிளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    * பயண தூரம் குறைவாக / வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது நலம். இதனால், அலைச்சல்/அசதியைத் தவிர்க்கலாம்.

    * குழந்தைகளைத் தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களை நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று சில மணி நேரமாவது அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகவைக்க வேண்டும்.

    * கிண்டர் கார்டன், கேஜி வகுப்புகளில் குழந்தைகளை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்கவைக்கலாம். எனவே, பள்ளி செல்வதற்கு முன்னர், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்கவைத்துப் பழக்கலாம்.

    * ஆரம்பத்தில் சில வாரங்களுக்குக் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடித்து அழுவது இயல்பானதே. அதுவே மாதங்களைக் கடந்தும் அழுகை தொடர்ந்தால், என்ன பிரச்னை என்பதைக் குழந்தையிடமும் பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.



    * பென்சில், சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களைக் கடிக்கும் மற்றும் சாப்பிடும் பழக்கம் (Pica) சில குழந்தைகளுக்கு இருக்கும். இதை முன்பே சரிசெய்ய வேண்டும். பள்ளித் தரப்பிடம் தெரிவித்துக் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்கச் சொல்லலாம்.

    * தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருள்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இந்தப் பழக்கம் பள்ளியில் நிகழ்வது நல்லதல்ல. இதனால், பள்ளியில் சேர்க்கும் சில மாதங்களுக்கு முன்பே, செய்முறையுடன் விளக்கி, ‘இது தவறு’ எனக் குழந்தைக்குப் புரியும்படிப் பெற்றோர் தீர்க்கமாகப் புரியவைக்க வேண்டும்.

    * சில குழந்தைகள் மற்றவர்களை அடிப்பது, கையில் உள்ளதைப் பிறரின் மீது எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகப் பெற்றோர், கதைகள், தொடர் உரையாடல்கள், தேவைப்பட்டால் கண்டிப்பின் மூலம் இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    * பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூம் சென்று கழிப்பது, சளி வந்தால் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

    * குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதேபோல, பெற்றோர் சார்பாக யாராவது தன்னைப் பள்ளியிலோ, வேறெங்கும் வெளியிடத்திலோ வந்து அழைத்தால், அவர்களிடம் பாஸ்வேர்டு சொல்லச் சொல்லிக் கேட்கப் பழக்க வேண்டும். (அந்த பாஸ்வேர்டை, ஏற்கெனவே பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்)

    தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம். இன்று தேங்காய் பாலை பயன்படுத்தி சரும அழகை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேங்காய் பாலில் எண்ணற்ற மூல பொருட்களும், தாதுக்களும், வைட்டமின்களும் உடலின் ஆரோக்கியத்திற்கு அதிகம் உதவும். தேங்காயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் முகம் மற்றும் முடியின் அழகையும் நாம் பராமரிக்கலாம்.

    வறண்ட சருமத்திற்கு

    முகம் மிகவும் வறட்சியாக உள்ளதா..? பல வகையான வேதி பொருட்களையும் பயன்படுத்தி சோர்ந்து விட்டீர்களா..? இனி கவலையை விட்டு தள்ளுங்கள் நண்பர்களே. உங்களுக்கென்றே இந்த குறிப்பு உள்ளது.

    தேவையான பொருட்கள்

    தேங்காய் பால் - 1/2 கப்
    ரோஸ் நீர் - 1/2 கப்
    ரோஜா இதழ்கள் - சிறிதளவு

    செய்முறை :

    முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும். அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.

    இளமையான முகத்திற்கு


    நீண்ட நாட்கள் இளமையாக் இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி வாருங்கள் நண்பர்களே. இது மிகவும் நல்ல பலனை ஒரு வாரத்திலே தரும்.



    தேவையான பொருட்கள் :


    பாதாம் - 6
    தேங்காய் பால் - 1 ஸ்பூன்

    செய்முறை :

    முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொள்ள வேண்டும். பிறகு, தேங்காய் பாலை சேர்த்து இவற்றை நன்கு அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக மாறுவீர்கள்.

    பளபளப்பான முகத்தை பெற

    முகம் மிகவும் பளபளப்பாக இருக்க ஒரு அருமையான வழி உள்ளது. அதற்கு இந்த குறிப்பை தொடர்ந்து பயன்படுத்தினாலே போதும்.

    தேவையான பொருட்கள்  :

    சந்தன பவுடர் - 1 ஸ்பூன்
    தேங்காய் பால் - 1 ஸ்பூன்
    தேன் - 1 ஸ்பூன்
    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை :

    முதலில் சந்தன பவுடர், தேங்காய் பால் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இவற்றுடன் தேன் மற்றும் குங்கும பூ சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் மின்னும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
    தினமும் காலையில் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    கிரீன் ஆப்பிள் - பெரியது 1
    வெங்காயம் - 1
    தக்காளி - சிறியது 2
    எலுமிச்சை சாறு - சுவைக்கு
    சிவப்பு மிளகாய் தூள் - சுவைக்கு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - சுவைக்கு
    தக்காளி சாஸ் - சுவைக்கு



    செய்முறை :

    ஆப்பிள், வெங்காயம், நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளியை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய ஆப்பிள், வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதில் சிவப்பு மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ஸ்பைசி கிரீன் ஆப்பிள் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும். இதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
    ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

    பயிற்சியும் செய்முறையும்

    8 type walking Exercies- க்கு மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

    நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.



    தினமும் காலையும் மாலையும் 15 - 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 - 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

    நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரையில் நடக்கலாம்.

    இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.


    கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் சிகிச்சை அளிக்கலாம்.
    இப்போதைய சூழலில் கர்ப்பிணியை மனதளவில் தயார்படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.

    கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப்பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும். நம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.

    கர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.

    * கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.

    * போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.

    * புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.

    * உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    * கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.

    * வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    * எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம்     இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.

    * சினிமா தியேட்டருக்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தினமும் இரவு ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூங்கவேண்டும். இல்லாவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாத பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 35 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்.

    கனடாவில் உள்ள மெக் மாஸ்டர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. ஆய்வு குழுவில் இடம்பெற்ற மாணவர், சுங்ஷி வாக்ன், ‘‘தூங்கும் நேரத்தை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டோம். அந்த நேரத்தை கடந்து அதிகம் தூங்குபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

    ஆய்வின் முடிவில் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து எட்டு முதல் ஒன்பது மணி வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒன்பது முதல் 10 மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பதும் தெரியவந்துள்ளது. 10 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும். அதுபோல் ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும்.
    நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இந்த சர்க்கரை முதல் இடத்தில் உள்ளது. சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் கடினம் என்றாலும், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.

    சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி பிறகு உங்களின் உடலில் இந்த மாற்றம் நடக்க கூடும். அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், தொப்பையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் இந்த நல்ல தீர்வை தரும்.

    இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். இவை தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்ளும். மேலும், சீக்கிரமே வயதாகாமல் மிக இளமையாக இருப்பீர்கள். அத்துடன் முக சுருக்கங்களும் வராது.

    பொதுவாக சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட பலருக்கு இதய நோய்கள் சாதாரணமாகவே வர கூடும். அந்த வகையில் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இதயத்திற்கு வர கூடிய பாதிப்புகள் மிக குறைவு. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்து கொள்ளும்.

    சர்க்கரை சாப்பிட கூடிய பல ஆண்களுக்கு கலவியில் ஆர்வம் சீக்கிரமாகவே குறைந்து விடும். மேலும், இது ஆண்களின் உடலில் சில சீரற்ற மாற்றங்களையும் ஏற்படுத்தும்.

    பெண்களின் செக்ஸ் ஹார்மோன், சர்க்கரை எடுத்து கொள்வதால் குறையவும் கூடும். எனவே, இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

    சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் மூளையின் செயல்திறன் அதி வேகமாகவே இருக்க கூடும். மேலும், நல்ல மனநிலையும் உங்களுக்கு ஏற்படும். வேலை பளுவால் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் பலருக்கு இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நமது உயிர் இயங்க முக்கிய காரணமாக இருக்க கூடிய இந்த சுவாசம் சுத்தமாக இருத்தலே நல்லது. சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த பயனும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது, பற்களில் துர்நாற்றம் வீசாமல் இனிமையான சுவாசம் உங்களுக்கு கிடைக்கும்.

    சர்க்கரை சேர்த்த பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தினால் இந்த பயன் உங்களுக்கு சுலபமாகவே கிடைக்கும். உண்மைதாங்க, முகத்தில் ஏற்பட கூடிய பருக்களை இந்த சர்க்கரை இல்லாத பழக்கம் குறைத்து விடும். மேலும், சரும வறட்சியையும் இது தடுக்கும்.

    சர்க்கரையை பற்றி பேசும் போது எப்படி சர்க்கரை நோயை பற்றி பேசாமல் இருக்க முடியும். ஆமாங்க, சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் சர்க்கரை நோயினால் வர கூடிய அபாயம் உங்களுக்கு மிக குறைவு. மேலும், இது இன்சுலினையும் நன்கு சுரக்க வைக்கும்.

    இன்று பலர் அவதிப்படும் விஷயத்தை எளிதாக கையாளுகிறது இந்த சர்க்கரை பழக்கம். சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதால் எளிதில் உங்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். இரவில் நல்ல தூக்கம் வருவதால் ஹார்மோன்களும் சம அளவில் சுரந்து உடல்நல குறைபாட்டை தவிர்த்து விடும். 
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று கரும்புச்சாறு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பேரீச்சை - 10
    கரும்புச்சாறு - 1 கப்
    நெய் - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 10
    ஏலக்காய்த்தூள் - சிறிதளவு



    செய்முறை :

    பேரீச்சம் பழத்தை கொட்டை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும்.

    பின்னர் அதனை பச்சரிசியோடு சேர்த்து நீரில் கழுவி குக்கரில் கொட்டவும்.

    அதனுடன் கரும்புச் சாறு மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    நான்கு விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்.

    வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள், பேரீச்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

    பின்னர் அதனை பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கி ருசிக்கவும்.

    சூப்பரான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.
    முதியவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா? என்று கேட்டவுடன் எம்மில் பலரும் செய்யலாம் என்று சொல்வதைக் காட்டிலும். அவர்களால் செய்ய இயலுமா? என்று திருப்பிக்கேட்பர். ஆனால் முதுமையை மருந்து, மாத்திரை, வைத்திய செலவுகள் இல்லாமல் செய்வது உடற்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

    தற்போது ஐம்பது வயதைக் கடந்தவர்கள் முதுமையின் தொடக்க நிலையினர் என்பதை உணர்ந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மனதை இயல்பாக வைத்துக் கொள்வது போன்றவற்றில் ஈடுபடவேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்கள் முதுமைக்கான வைத்தியம் பார்க்கும் வைத்திய நிபுணர்கள்.

    பெரும்பாலானவர் இந்த வயதில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறிவிட்டு படுக்கையில் படுத்தேகிடப்பதையோ அல்லது வீட்டிற்குள் சும்மாவேயிருப்பதையோ தெரிவு செய்கிறார்கள். இவர்களுக்கு வாய்ப்பிருந்தும் பல்வேறு சமூக காரணங்களால் நாளாந்தம் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சியை செய்வதில்லை.

    ஆனால் உடற்பயிற்சி செய்தால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். சிலர் தவிர்க்க முடியாத வைத்திய காரணங்களால் படுக்கையிலேயே காலத்தைக் கடத்துவர். ஆனால் அவர்களும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வைப் பெற்றால் அதிலிருந்து மீளலாம்.

    நடக்க இயலாத நிலையில் இருப்பவர்கள், வேறு உடலியல் சிக்கல் காரணமாக இருப்பவர்கள் தினமும் சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சியை செய்யவேண்டும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்ணைத் தவிர்க்கலாம். தசைகள் தளர்ச்சியடைவதை தடுக்கலாம். எலும்பின் வலிமை குறைவதை தடுக்கலாம்.

    நெஞ்சில் சளி கட்டுவதை தடுக்கலாம். மலச்சிக்கலை மற்றும் மனச்சோர்வையும் தடுக்க இயலும். உங்களால் முடியும் என்ற மனப்பான்மையுடன் முப்பது நிமிடமாவது உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியோ மேற்கொண்டால் ஆயுள் முழுவதும் நலம் பயக்கும். வைத்திய செலவு குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவுகள் கொண்டாடும். முதுமை இனிமையாக இருக்கும். 
    நாளை பொங்கல் பண்டிகைக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துங்கள். இன்று பனங்கற்கண்டு பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - அரை கப்
    பாசிப்பருப்பு - 100 கிராம்
    பனங்கற்கண்டு - 100 கிராம்
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    ஏலக்காய், உலர் திராட்சை - சிறிதளவு
    முந்திரி - 5
    பால் - தேவையான அளவு
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    பனங்கற்கண்டை பொடித்து கொள்ளவும்.

    வாணலியில் பாசிப்பருப்பை கொட்டி பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

    பச்சரிசியை நீரில் அலசி வைக்கவும்.

    கழுவிய பச்சரிசியுடன் பாசிப் பருப்பு, பால் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    நன்கு வெந்ததும், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் சேர்க்கவும்.

    பின்னர் பனங்கற்கண்டு, தேங்காய் துருவல் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.

    இறுதியில் சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கி ருசிக்கலாம்.

    சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தயிர் நல்ல தீர்வை தருகிறது. இன்று தயிரை எந்த முறையில் பயன்படுத்தி சருமம், கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    உங்கள் கூந்தல் வறட்சியானதாக இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலைமுடியில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது  குறையும்.

    எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில்  தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்.

    டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய தயிருடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப்பருக்கள்  மறையும்.

    தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியில் தடவி காய்ந்ததும் கழுவினால் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதை வாரம் இருமுறை  செய்தாலே போதுமானது.

    1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி 
    அவலை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று அவலில் வெண் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அவல் - அரை கப்
    பாசிப்பருப்பு - கால் கப்
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    எண்ணெய், நெய் - தேவைக்கு
    மிளகு, சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - 1 துண்டு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு- தேவைக்கு



    செய்முறை :

    ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் பாசிப்பருப்பை உதிரியாக வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கி பின்னர் அதனுடன் அவலை கொட்டி கிளறுங்கள்.

    மேலும் பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றுடன் போதுமான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.

    பொங்கல் பதத்துக்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    அவல் கார பொங்கல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×