என் மலர்
ஆரோக்கியம்
ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகளை பார்க்கலாம்.
ஷாப்பிங் என்றால் உடை, அலங்கார நகைகள், காலணி ஆகியவற்றுடன் கைப்பைகளும் இப்போது இணைந்து விட்டன. அணியும் உடைக்கு ஏற்ப ஹேண்ட்பேக் வாங்குவது தான் இப்போது பேஷன். அதனாலேயே இதில் தினமும் புதுப்புது டிரெண்டிங் வரத்தொடங்கி விட்டது.
இவற்றின் ரகங்களை போலவே விலையும் பலவிதம்
ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகள்
1. இப்போது கைப்பைகளுடன் பர்ஸ், மினி ஹேண்ட்பேக் என ஐந்து இணைப்புகள் இணைந்து வருகின்றன. லெதரில் கிடைக்கும் இந்த ரகபைகள் தான் இப்போது பேஷன் இதில் பணம், மொபைல் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு இடவசதி உண்டு. விலைரூ 800 முதல் தொடங்குகிறது.
2. சூட்கேஸ் வடிவிலான கைப்பைகள் இது கையில் எடுத்து கொள்ளும் வகையில் இலகுவாக இருக்கும் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கைப்பைகள் போல் தோற்றமளித்தாலும், இதன் விலை ரூ900 முதல் துவங்குகிறது. பார்ட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எடுத்து சென்றால் ரிச் லுக் கிடைக்கும். இதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்க கைப்பிடி வைரத்தில் பட்டன் என பதித்து கொள்ளலாம்.
3. அக்காலத்தில் பாட்டிகள் பயன்படுத்தி வந்த சுருக்குப்பை வடிவத்திலான கைப்பைகள் இப்போதைய இளசுகள் மனதை பெரிதும் ஈர்த்துள்ளது. லெதர் மட்டுமின்றி சணல், துணி வகைகளிலும் இது போன்று கைப்பைகள் கிடைக்கின்றன. சிறிதளவு பணம், மொபைல் போன் உள்ளிட்ட ஒரிரு பொருட்கள் வைத்துகொள்ள ஏற்றதாக இருக்கும். இவற்றின் விலை ரகத்தை பொறுத்து ரூ 300 முதல் ரூ 2000 வரையாகும்.
4. இந்த ஆண்டின் டிரெண்டிங்காக இருப்பது ஆடைகளுக்கு மேட்சிங்கான கைப்பைகள் தான். இப்போது, ஆடை, அணிகலன், மாஸ்க், கைப்பை காலணி என அனைத்தும் ஒரே மாதிரி அணிவதையே மாடர்ன் இளசுகள் விரும்புகின்றனர். இதனாலேயே இந்த ரக கைப்பைகள் பெரிதும் அவர்களை கவர்ந்துள்ளது. ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் இந்த ரக கைப்பைகள் ஆர்டரின் பேரில் தயாரித்து தரப்படுகிறது. ரூ1600 முதல் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
5, முத்து, குந்தன் கற்கள் கொண்டு இவை தயாரிக்கப்படுவதால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பிரபலங்கள் அதிகமாக இந்த ரக விலையுயர்ந்த பர்ஸ்களை பயன்படுத்துகின்றனர். அதில் பதிக்கும் கற்கள் முத்துகளை பொறுத்து ரூ 3000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.
இதுபோல பல ரகங்கள், வடிவமைப்புகளில் கிடைக்கும் கைப்பைகளை வாங்குபவர்கள் அவற்றை சரியான வகையில் ஆர்கனைஸ் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை அவற்றில் போட்டு நிரப்பாமல் இருந்தால் ஹேண்ட்பேக் அழகு கூடும்.

தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.
தொழில்நுட்பம் வளர்ந்த இன்றைய சமூக சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது சிக்கலானதாக மாறி வருகிறது. சமூக ஊடகங்கள், வெளியுலத் தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள் என பல காரணிகள் குழந்தைகளின் குணநலனை கட்டமைக்கின்றன. பெற்றோர்கள், குறிப்பிட்ட நேரத்தை குழந்தைகளோடு செலவழித்து அவர்களது நலனுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றி ய சிந்தனை தொகுப்பே இது.
குழந்தைக்கு முதலில் அன்பாக பேச கற்றுத்தர வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர் அன்பாக பேச வேண்டும். பெற்றோர் வழியில் தான் குழந்தைகளும் நடப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும்.
எப்போதும் குழந்தைகளுக்கு நல்ல சொற்களை பேச கற்று கொடுங்கள். குழந்தைகள் இருக்கும் போது வசவுச்சொற்களை பயன்படுத்த வேண்டாம். பள்ளியில் அல்லது விளையாட செல்லும் இடங்களில் குழந்தை பிற குழந்தைகளிடம் இருந்தோ அல்லது சுற்று வட்டார நபர்கள் மூலமாகவோ தவறான சொற்களை கற்று கொள்ளலாம். வார்த்தைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என எடுத்துசொன்னால் குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.
அனைவரும் வேலையை விரைவாக முடித்து விட்டு வீடு திரும்பவும் தங்கள் தேவைகளை பார்த்து கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். வீட்டிலும் அப்படி இல்லாமல் பெரியோர்களையும் உறவினர்களையும், நண்பர்களையும் மதித்து நடப்பதன முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும். கொடுத்தால் திருப்பி கிடைப்பதில் மரியாதையும் ஒன்று என்பதை அவர்கள் மனதில் பதிவு செய்ய வேண்டும்.
இன்று பல குழந்தைகள் உறவினர்களை பிரிந்து தாய், தந்தையோடு அடுக்குமாடி குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் வாழ்கின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை தனிமையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் பல விஷயங்களில் எப்படி நடந்த கொள்வது எப்படி சூழலை சமாளிப்பத என்று தெரியாமல் பயம் கொள்கிறார்கள். கவமாக இருக்க வேண்டுமே தவிர பயந்து போய் இருக்க வேண்டியதில்லை என்பதை குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
குழந்தைகள் உற்சாகத்தோடு இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலைமை நேர்மாறாக உள்ளது. காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான். அவர்கள் சுறுசுறுப்பாக பிற குழந்தைகளோடு கூடி விளையாடும் சூழலை உருவாக்க வேண்டும். பெற்றோர்களும் குழந்தையோடு விளையாடி சிரித்து மகிழ வேண்டும். நிறைய வெளி இடங்களுக்கு அவர்களை அழைத்து செல்ல வேண்டும்.
விரும்பிய பொருளோ அல்லது விஷயமோ பெற்றோர், உறவினர்கள, நண்பர்கள் அல்லது பிற மனிதர்கள் மூலம் கிடைக்க நேர்ந்தால் உடனே அவர்களுக்கு நன்றி சொல்லும் பண்பை கற்றுகொடுங்கள். அது நன்றி உணர்வை அதிகரித்து அவர்களை பண்பாளராக வளரச்செய்யும்.

சிகரெட் புகைப்பது உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.
சிகரெட் புகைப்பது நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளை மட்டும் பாதிப்பதில்லை. வெளிப்புற சருமத்திற்கும் கேடு விளைவிக்கும். எந்தெந்த வகையில் சருமத்திற்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பார்ப்போம்.
கண் சோர்வு: இரவில் தூங்கி எழுந்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு சில சமயம் ஏற்படும். புகைபிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு இத்தகைய சோர்வு நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகை பழக்கத்திற்கு அடிமையாவது தூக்கத்தை பாதிக்கும். அப்படி தூக்கமின்மையால் அவதிப்பட்டால் சரும அழகு பாதிப்புக்குள்ளாகும்.
சரும சுருக்கம்: வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் புகை பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் எட்டிப்பார்க்கத்தொடங்கிவிடும். புகை பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு வயது அதிகமான தோற்றம் உருவாகிவிடும். அத்துடன் சரும திசுக்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கும் ரத்த வினியோகத்தை புகைப்பழக்கம் தடை செய்துவிடும். ரத்த ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படுவதால் சருமம் பொலிவை இழந்துவிடுகிறது.
முடி பாதிப்பு: புகைப்பழக்கம் முடியையும் பாதிக்கும். புகையிலையில் இருக்கும் வேதிப்பொருட்கள் மயிர்க்கால்களில் இருக்கும் டி.என்.ஏ.வை சேதப்படுத்திவிடும். புகைப்பிடிக்காதவர்களை காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் முடி மெலிந்து வலுவிழந்து காணப்படும். விரைவில் நரை முடி பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். புகைப்பிடிப்பவர்களின் முடி அதிகமாக உதிரும். அதனால் அவர்களுக்கு விரைவில் வழுக்கையாகிவிடும். புகைபிடிப்பவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அது தாமதமாகவே குணமாகும். நிகோட்டினால் அவர்களது ரத்த நாளங்கள் சுருங்கிப்போவதுதான் அதற்கான காரணமாகும்.
நிறமாற்றம்: புகைபிடிப்பவர்களின் சரும நிறத்தில் மாறுதல் உண்டாகும். புகையில் இருக்கும் கார்பன்மோனாக்ஸைடு சருமத்தில் உள்ள ஆக்சிஜனை இடம் பெயர வைத்துவிடும். அதிலிருக்கும் நிகோடின் ரத்த ஓட்டத்தை குறைக்கும். அதனால் சருமம் உலர்ந்து, மென்மையை இழந்து நிற மாற்றத்திற்கு உள்ளாகும். புகைப்பழக்கம் வைட்டமின் சி உள்பட பல ஊட்டச்சத்துக்கள் இழப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த சத்துகள்தான் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்க உதவுபவை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவை சிகிச்சை: புகைப்பிடிப்பவரின் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டால் அதனை சரிப்படுத்த முடியாது. அவர்களுக்கு முக அறுவைசிகிச்சை மேற்கொள்வது கூட கடினமானது.
சரும புற்றுநோய் : நுரையீரல், தொண்டை, வாய் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகைபிடிப்பது முக்கிய காரணம். சிகரெட்டுகள் சரும புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகரெட்டில் காணப்படும் நிகோடின் சரும இழைகள் மற்றும் இணைப்பு திசுக்களை சேதப்படுத்தும். அதன் வலிமையையும் இழக்கச்செய்யும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை தொடர்பவர்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும்.
பசியின்மை: சிகரெட் புகைப்பது பசியை கட்டுப்படுத்தும். மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களின் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்திருக்கும். அப்படி உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்வது நீரிழிவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.
விரல் நிறம்: புகைப்பிடிப்பவர்களின் பற்கள் மட்டுமின்றி, கைவிரல்களிலும் நிறமாற்றம் தென்படும். அதாவது விரல் நகங்களிலும் கறை படிவது, நிறம் மாறுவது போன்ற அறிகுறிகள் உருவாகும்.

குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.
குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.
5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.
`அய்யோ.. அம்மா இங்கே ஓடி வா..' என்று சிறுவன் அலறியபடி அழைப்பான். எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு அம்மா ஓடிவந்து பார்த்தால், அங்கே ஒரே ஒரு கரப்பான் பூச்சி நின்றுகொண்டிருக்கும். `இதற்கா இவ்வளவு பயந்தாய்? நீ சரியான பயந்தாங்கொள்ளி' என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.
தனது குழந்தையை பயந்தாங்கொள்ளி என்று அம்மா சொல்லிவிட்டு அதோடு மறந்துவிடுவார். அவரைப் பொறுத்தவரையில் அந்த பிரச்சினை அப்போதே தீர்த்துவிடும். ஆனால் பயந்த அந்த குழந்தையிடம் அப்போதுதான் பிரச்சினையே தொடங்கும்.
எதிர்காலத்தில் எது தன்னை பயமுறுத்தினாலும், அம்மா ஏற்கனவே சொன்ன `பயந்தாங்கொள்ளி' என்ற வார்த்தைதான் உடனே அவனது நினைவுக்கு வரும். அதனால் தாயிடம் மட்டுமின்றி யாரிடமும் தனது பயத்தை வெளிப்படுத்தாமல், பயத்தை தனக்குள்ளே புதைத்துக்கொள்வதால் எதிர்காலத்திலும் பயம் அவனிடமிருந்து விலகாமல் அப்படியே இருந்துவிடும்.
பயம் கொண்ட குழந்தைகளை அதை கூறி கிண்டல் அடிப்பதோ, கேலி செய்வதோ அவர்களை தைரியமானவர்களாக மாற்றாது. மாறாக தங்களை பயந்தாங்கொள்ளி, தைரியமற்றவர்கள் என்று முடிவுசெய்து தங்களை தாங்களே மன அழுத்தத்திற்குள்ளாக்கிக் கொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பயம் எப்படி எல்லாம் உருவாகுகிறது- ஏன் உருவாகிறது என்பதை கண்டறிந்து, அதன் உண்மைத்தன்மையை விளக்கி, அந்த பயத்தில் இருந்து அகல வழிகாட்டவேண்டும். சைக்கிள் மிதித்தல், ஸ்கேட்டிங் செய்தல் போன்றவைகளில் ஈடுபட குழந்தைகள் ஆசைப்பட்டால் பயமுறுத்தி அவைகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லக்கூடாது. எப்போதுமே குழந்தைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டவேண்டும்.

பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்த குடும்பத்தில் (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
`குடும்பங்களில் திருமணத்திற்கு பிந்தைய தொடர்புகள் அதிகரித்து வருவதாகவும், சில குடும்பங்களில் ஏற்கனவே அறிமுகமாகி நட்புவட்டத்தில் இருந்தவர்களே வில்லன்களாக மாறுவதாகவும்..' போலீஸ் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளியில் நண்பர்களாக இருந்தவர்களும், கல்லூரிகளில் நண்பர்களாக இருந்தவர்களும் சமூக இணையத்தள சாட் ஆப்ஸ் வழியாக திருமணத்திற்கு பின்பு தங்கள் நட்பை புதுப்பித்துக்கொண்டு தினமும் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.
அந்த பேச்சு ஒருகட்டத்தில் அந்தரங்க உரையாடலாக மாறிவிடுகிறது. `அந்த காலகட்டத்திலே நீ மிக அழகாக இருப்பாய். அப்போது நீ என் கனவில் வந்து எப்படி எல்லாம் தொந்தரவு செய்தாய் தெரியுமா? அதை வெளியே சொல்லவே கூச்சமாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு தாயாகி விட்ட பின்பும், இப்போது உன்னை பார்த்ததும் எனக்கு அந்த கனவுதான் மீண்டும் வருகிறது' என்பதுபோல் பேசி, பெண்களின் மனதில் சலனத்தை உருவாக்கிவிடுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.
இத்தகைய கிளுகிளுப்பு உரையாடல் வெடிகுண்டுபோல் செயல்பட்டு பலரது நிம்மதியான குடும்ப வாழ்க்கை வெடித்து சிதற காரணமாகியிருக்கிறது. அதன் தாக்கம் போலீஸ் நிலையங்களிலும், குடும்ப நல நீதிமன்றங்களிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கணவனோ, மனைவியோ எதிர்பாலினத்தவரிடம் கொண்டிருக்கும் அத்தனை நட்பும் பிரச்சினைக்குரியவை என்ற சந்தேகமும் தம்பதிகளிடம் வந்துவிடவும்கூடாது. அதுவும் குடும்ப மகிழ்ச்சியை சிதறடித்துவிடும்.
பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்த குடும்பத்தில் (ஆணுக்கோ, பெண்ணுக்கோ) மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
கண்களில் தெரியும் உண்மை
கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்துவைத்தால் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும். அதனால்தான் ஆத்மாவின் வாசலாக கண்களை வர்ணிக்கிறோம். கண்களை மனசாட்சியின் கண்ணாடி என்றும் சொல்கிறோம். வாழ்க்கைத் துணை, உங்கள் கண்களை நோக்கி பேச வேண்டும். முகத்துக்கு நேராக பார்த்து பதிலளிக்கவேண்டும். சிலர் குற்ற உணர்ச்சிகள் கண்களில் வெளிப்படாமல் இருக்க கூடுதலாக நடிக்கவும் செய்வார்கள். தவறான நட்புவைத்திருக்கும் ஆணோ, பெண்ணோ தன் இணையோடு வெளி இடங்களுக்கு வரும்போது, மற்றவர்களை அதிகம் கவர முயற்சிப்பார்கள். அதாவது தாங்கள்தான் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழும் பொருத்தமான ஜோடி என்று காட்டிக்கொள்வார்கள். பொது இடத்தில் இணையோடு சிரித்து சிரித்து பேசுவார்கள். சந்தோஷ சிலுமிஷ சேட்டைகள் வழியாகவும் அடுத்தவர்களை கவர்வார்கள்.
தோற்றத்தில் திடீர் மாற்றங்கள்
தோற்றத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதவராக உங்கள் இணை இருந்திருக்கலாம். அழகில் அக்கறை செலுத்தாத அவர் திடீரென்று தனது உடை அலங்காரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். கூந்தல் அலங்காரத்தில் புதுமைகளை கையாளலாம். மேக்அப் செய்துகொள்ள அதிக நேரத்தை செலவிடலாம். (ஆண்கள் என்றால்) குறுந்தாடி வைக்கலாம் அல்லது வழக்கமான தாடி முகத்தை மழித்துவிடலாம். உணவில் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதோடு, உடல் எடையை பற்றி வருத்தப்பட்டுக்கொண்டு ஜிம்மிற்கு செல்லலாம்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் வரவேற்கத் தகுந்த பாசிட்டிவ்வான விஷயங்கள்தான் என்றாலும், அடிப்படையான காரணமில்லாமல் திடீரென்று ஏற்படும் இத்தகைய மாற்றங்கள் கவனிக்கத்தகுந்தவை. ஒருசிலரிடம் ஏற்படும் இத்தகைய மாற்றங்களுக்கு `மூன்றாம் நபரின் வருகை' காரணமாக இருக்கும் என்பது செக்ஸாலஜிஸ்டுகளின் கணிப்பாக இருக்கிறது.
சிறப்பு கவனிப்பு பெறும் செல்போன்
சிலர் செல்போனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். அலுவலகம் முடிந்து வீடு திரும்பி வந்ததும், ஏதாவது ஒரு மூலையில் செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு கண்டுகொள்ளாமலே இருப்பார்கள். அப்படிப்பட்ட இயல்பை கொண்டவர்கள் திடீரென்று செல்போனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் அது ஒருவகையில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். செல்போன் மற்றவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒளித்துவைக்கவும் செய்யலாம்.
திடீரென்று செல்போன் பயன்பாட்டை அதிகரித்திருப்பார்கள். தொடர்ச்சியாக சாட்டிங் செய்வார்கள். ஆனால் சாட் பாக்சை திறந்தால் பதிவு ஒன்றும் இருக்காது. சாட் ஹிஸ்டரியை கிளீயர் செய்வது போன்ற செயல்களில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். இவைகளை செய்வதன் மூலம் தவறான தொடர்பினை மறைத்துவிட முடியும் என்பது அவர்களது எண்ணமாக இருக்கலாம்.
அன்றாட செயல்பாடுகளில் திடீர் பரபரப்பு
அலுவலகத்தில் அவருக்கு பதவி உயர்வு போன்ற எதுவும் கிடைக்காத நிலையில் தனது வேலையில் திடீரென்று அதிக பரபரப்பு காட்டினால் கவனியுங்கள். அதில் பதற்றமும் தென்பட்டால் அவர் மீது ஒரு கண் வையுங்கள். வீட்டிற்கு வர தாமதமாகுதல், லீவு நாட்களிலும் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுதல், அதுவரை இல்லாத புதிய விஷயங்களை கூறுதல் போன்றவை சந்தேகத்திற்கிடமானவை. அலுவலக ரீதியாக புதிய பயிற்சிகளுக்கு செல்வதாக கூறுவது, ஓவர்டைம் வேலைபார்த்ததாக சொல்வது, நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது- நண்பரின் பெற்றோர் மரணமடைந்துவிட்டதாக கூறுவது, பீல்டு ஒர்க்குக்காக சென்றது என்பன போன்றவை (வழக்கத்திற்கு மாறானதாக இருந்தால்) சந்தேகத்திற்கிடமானவை.
தான் எப்போதும் பிசியாக இருப்பதாக சிலர் சொல்வார்கள். அலுவலகத்தில் பரபரப்பு காட்டுவார்கள். அவர்களது செல்போன் பெரும்பாலும் பிசியாக இருக்கும். சாப்பிடக்கூட நேரமில்லை என்பார்கள் அல்லது மதிய சாப்பாட்டையே மறந்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் பிசியாக இருப்பதாக காட்டிக்கொண்டு தனது மனைவி, குழந்தைகளிடம்கூட பேசமாட்டார்கள். அந்த நேரத்தையும் சேர்த்து `புதிய' உறவுக்காக செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.
எங்கும், எதிலும் ரகசியம்
வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லாமல் எல்லாவற்றையும் ரகசியமாக பாதுகாப்பதும் கவனிக்கத்தகுந்தது. லேப்டாப், செல்போன் போன்றவைகளை பயன்படுத்தும்போது அறைக்குள் யாராவது வந்தால் உடனே மறைப்பது, சாட் செய்யும்போது யாராவது வந்தால் அதை மறைத்துவிட்டு உடனே ஆன்லைன் ஷாப்பிங் சைட்டுக்கு சென்று துழாவிக்கொண்டிருப்பது.. போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டால் கண்காணிக்க வேண்டும்தான்.
சுபாவங்களில் ஏற்படும் மாற்றங்களையும் கவனியுங்கள். காரணமே இல்லாமல் திடீரென்று கோபம்கொள்வது, பொருட்களை தூக்கி வீசுவது, மூலையில் போய் சோகமாக உட்கார்ந்துவிடுவது, இழக்கக்கூடாத எதையோ இழந்தது போன்று காணப்படுவது போன்றவை, மீண்டும் ஒரு காதலில் விழுந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
அன்பு குறைதல்
குடும்ப நலனுக்கு ஆதாரமான மிகப்பெரிய செல்வம் அன்புதான். சேர்த்து வைத்திருக்கும் அன்பை எல்லாம் வீட்டில் தம்பதிகள் தங்களுக்குள் செலவிடும்போது அங்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் வீட்டிற்கு வெளியே இன்னொரு உறவை ஏற்படுத்திக்கொள்ளும்போது அந்த புதிய நபரிடம் அன்பை செலவிட்டுவிட்டு, காலியான நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேர்வார். வீட்டில் இருக்கும் தனது இணையிடம் செலவிட அவரிடம் அன்பு இருக்காது. அதனால் வீட்டில் கோபதாபங்களும், எரிச்சலும், விரக்தியும் ஏற்படும்.
திருமணத்திற்கு பின்பு ஆணோ, பெண்ணோ மூன்றாம் நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது `தப்பு செய்துவிட்டோமே' என்ற குற்ற உணர்ச்சியும், `நாம் செய்யும் தப்பு வெளியே தெரிந்துவிடுமோ' என்ற பயமும் ஏற்படும். இரண்டும் சேர்ந்து அவரிடமிருந்து நிம்மதியை பறித்துவிடும்.
அதே நேரம் தனது திருட்டுத்தனம் வெளியே தெரியாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம்போட்டு, தனது இணையிடம் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றிக்கொண்டிருப்பார்கள். அதாவது, அளவுக்கு அதிகமாக தனது இணையிடம் அன்பு பாராட்டுவார்கள். மற்றவர்கள் பார்வையில் படும்படி அவர் மீது அளவு கடந்த அக்கறையை வெளிப்படுத்துவார்கள். `இப்படிப்பட்ட பெண்ணை நாம் சந்தேகப்படலாமா?' என்ற கேள்வி, அவருக்குள் எழும்நிலையை உருவாக்கிவிடுவார்கள்.
இத்தகைய அறிகுறிகள் அனைத்தும் தவறான தொடர்பின் வெளிப்பாடு என்ற இறுதியான கருத்து ஓட்டத்திற்கு சென்றுவிடாதீர்கள். இப்படியும் இருக்கலாம் என்பதுதான் இதன் சாராம்சம். இருந்தால் என்ன செய்வது? அன்பால் திருத்திக்கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். பொறுமை, பக்குவத்தோடு செயல்பட்டால் அது முடியும். மாறாக, தங்கள் குடும்பத்திற்குள் மூன்றாம் நபரின் தலையீடு எந்த விதத்திலும் உருவாகிவிடாத அளவுக்கு தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.

சிவப்பு அவல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
கெட்டித் தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
ரஸ்க்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரத்தில் சிவப்பு அவலைச் சேர்த்து தண்ணீரில் அலசி, பிறகு 10 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீரை ஒட்டப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
இதனுடன் மற்ற பொருள்கள் பொருள்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) சேர்த்துப் பிசையவும்.
இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து தட்டையாகத் தட்டவும்.
இதை ரஸ்க்தூளில் புரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய்விட்டு சூடாக்கி இந்த அவல் மினி ரொட்டியைப் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

சத்தான அவல் ரொட்டி ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை.
மாறிவரும் வாழ்க்கை முறையால் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம். அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம். அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர் இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு எட்டு மணிக்கு மிதமான சிற்றுண்டி. இதுதான் சரியான உணவுப் பழக்கம்.
சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்கு சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம். பொதுவாக முப்பது வயதை கடந்து விட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை குறைவாகவும், புரதமும், விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும்.
நம் உடலை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கியப் பங்கு உண்டு. தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்க முடியாது அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றை குடிக்கலாம். இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையே, சரிவிகித உணவுதான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்...!

கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். அத்துடன் உலகளவில் இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் பாதிப்பாக பக்கவாதம் விளங்குகிறது. நோய்களால் மரணமடையும் 10 பெண்களில் 6 பேர் பக்கவாத பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் குறைபாடு, பேச்சில் தடுமாற்றம், உடல் ஒருங்கிணைப்பை இழப்பது போன்றவை பக்கவாத பாதிப்பின் வெளிப்பாடாகும்.
மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ, ரத்த நாளங்கள் சிதைவடைவதாலோ பக்கவாதம் ஏற்படலாம். இதனால் மூளை செல்கள் இறக்கக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதும், வயது அதிகரிப்பதற்கு ஏற்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதும் பாதகமான அம்சங்களாக இருக்கின்றன. அதிலும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் பக்கவாத பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து போவது அதற்கான காரணமாக அமைந்திருக்கிறது.
பக்கவாத பாதிப்பு விஷயத்தில் ஆண், பெண் இருவரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. கரோனரி தமனி நோய், இதய செயலிழப்பு போன்றவை ஆண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கின்றன. பெரும்பாலும் இதய நோய்கள் பெண்களுக்கு பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பெண்கள், ஆண்களுடன் ஒப்பிடுகையில் காலதாமதமாகவே மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண் நோயாளிகளை பொறுத்தவரை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர் இல்லாமல் போவது பாதிப்பை அதிகப்படுத்திவிடுகிறது.

மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் அசவுகரியத்தை அது போக்கினாலும், அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
மாதவிடாய் நாட்களில் பெரும்பாலான பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள். அந்த நாட்களில் ஏற்படும் அசவுகரியத்தை அது போக்கினாலும், அதில் கலந்திருக்கும் சில ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் தான் ரசாயன கலப்பில்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத நாப்கின்களை தயாரிப்பது, அவற்றை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு பெருகிக்கொண்டிருக்கிறது.
‘‘நாப்கின்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவைதான் என்றாலும் மாதவிடாய் உதிரப்போக்கை உறிஞ்சக்கூடிய டையாக்சின் மற்றும் பாலிமர் போன்ற சில வேதிப்பொருட்கள் அதில் இடம்பெற்றிருப்பது பிறப்பு உறுப்பில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கக்கூடும். அத்துடன் டையாக்சின் உடலில் சேர்ந்தால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படலாம். அதனால்தான் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றிவிட வேண்டும்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவர் அருணா கல்ரா.

டையாக்சின் என்பது நாப்கின்களை பிளீச்சிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். இது பலவிதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல் நாப்கின்களில் வாசனைக்காக செயற்கை நறுமண பொருட்களை சேர்க்கிறார்கள். அதுவும் ஆபத்தானது. நாப்கின்களை முறையாக பயன்படுத்தாவிட்டால் கருத்தரிப்பதில் சிக்கல், ஹார்மோன் பிறழ்ச்சி, உறுப்பு பகுதியில் ஒவ்வாமை, இடுப்பு பகுதியில் அழற்சி, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகளும் உருவாகக்கூடும்.
நாப்கின் தயாரிப்பில் பருத்தி பயன்படுத்தப்பட்டாலும் அதனை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கூட பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் பருத்தியை பளிச்சென்ற வெண்மை நிறத்திற்கு மாற்றுவதற்கும் டையாக்சினை பயன்படுத்துகிறார்கள். டையாக்சின் அதிகம் கலப்பது, பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் ரசாயனம் குறைந்த நாப்கின்கள் புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் சராசரியாக 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் நாப்கின்களை பயன்படுத்துகிறார். அப்படியென்றால் டையாக்சின் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும் நாப்கின் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். ரசாயன கலப்பில்லாத நாப்கின்களை பயன்படுத்துவதே உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும். குழந்தைகளின் சண்டை, அடம் தற்காலிகமானதுதான். ஆனால், அதை நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். குழந்தைகளுக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம். அதுபோல் ‘அது வேண்டும் இது வேண்டும்’ எனச் சொல்லி அடம் பிடிப்பதும் சகஜம்.
ஏன் குழந்தைகளுக்குள் சண்டை வருகிறது?
அடமும் சண்டையும் போட்டும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?
குழந்தையின் இந்தக் குணங்களுக்கு பின்னால் காரணங்கள் இருக்கும். அதைக் கண்டறிந்து சரி செய்யுங்கள். குழந்தைகளை அடிப்பதோ மனம் நோகும்படி திட்டுவதோ கூடாது. குழந்தைகளை தனியாக கூட்டி சென்று பக்குவமாக மென்மையாக பேசி புரிய வைப்பது அவசியம். குழந்தைகளை கவனிப்பில்லாமல் அப்படியே விட்டுவிடுவது பெரும் தவறு. குழந்தைகளுக்குள் சண்டை வரும்போது பெரியவர்கள் சமாதானப்படுத்த வேண்டும்.
வீட்டு பெரியவர்கள் சொல்வதையும் அவர்கள் சொல்லும் கருத்துகளையும் நியதியையும் ஏற்றுகொள்ள குழந்தைகளை ஆரம்ப காலத்திலே பழக்கப்படுத்த வேண்டும். சண்டை போட்டாலும் அடம் பிடித்தால் நல்ல குழந்தைக்கு அழகல்ல எனச் சொல்லி புரிய வைக்கலாம். சண்டை போட்டாலும் அடம் பிடித்தாலும் வெறுப்பும் கோபமும் மட்டுமே மிஞ்சும். ஆனால், விட்டுக்கொடுத்தோ சமூக நட்புடன் நடந்துகொண்டாலோ அலாதியான இன்பம் கிடைக்கும் எனச் சொல்லுங்கள். கதைகள் மூலம் குழந்தைக்கு நற்பண்புகளை வளர்ப்பது எளிது. அடம் பிடிப்பதைக் கண்டிக்கலாம்.
ஆனால், அதற்கு அவர்களை அடிக்க கூடாது. அடிக்க அடிக்க சண்டியாகிவிடுவர். எப்போதும் பெரியவர்கள் அடம் பிடிக்கும் குழந்தையிடமும் சண்டையிடும் குழந்தையிடமும் அவர்களின் முழுமையான பேச்சை கேட்ட பின் பதில் சொல்லலாம். பெற்றோர் இவர்களுக்கு பதில் சொல்லும் முன் குழந்தைகளின் உணர்வையும் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் பேச்சை கேட்ட பின்பு, பெரியவர்கள் ஒருதலை பட்சமாக தீர்ப்பளிக்க கூடாது. இதனால் வெறுப்பும் தோல்வி மனப்பான்மையும் வந்துவிடும். இது வேண்டும் என அடம் பிடித்து சண்டை போட்டாலோ வேறு காரணங்களுக்காக சண்டை போட்டாலோ பெற்றோர் இரண்டு முடிவுகளைச் சொல்லி அதில் ஒன்றை குழந்தைகளைத் தேர்ந்தெடுக்க செய்ய வேண்டும். இதனால் குழந்தைகள் சமாதானம் அடைவார்கள்.
அதே சமயம் தன்னை கவனிக்கவில்லை தனக்கு சாதகமாக எதுவும் செய்யவில்லை போன்ற எண்ணங்கள் எழாமல் தடுக்க முடியும். ஒருவரை அடிப்பது, அடித்து காயப்படுத்துவது குற்றம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்க வேண்டும். மனதிலும் உடலிலும் காயங்கள் ஏற்படாதவாறு நடந்துகொள்ள குழந்தைகளை பழக்க வேண்டும். பெரியோர், சிறியோர் என அனைவரிடமும் அன்பும் அக்கறையும் காட்ட குழந்தைக்கு கற்றுத் தர வேண்டும். உணவு ஊட்டுவது போல குளிப்பாட்டுவது போல அன்றாடம் நீதி கதைகளை சொல்லி தருவது நல்லது.
அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் தற்போதைக்கு இந்த விஷயம் கிடைக்காது. ஏனெனில் இந்தக் காரணத்தால் என எடுத்து சொல்லுங்கள். அடம் பிடித்தார்கள் என்றால் உன்னிடம் இவ்வளவு பொம்மைகள் உள்ளன. மற்ற குழந்தைகளிடம் இவ்வளவு கிடையாது. இது உனக்கு கிடைத்த நல்ல விஷயம் என நேர்மறை கருத்துகளை சொல்லி புரிய வைக்கலாம். குழந்தைகள் திருப்தி அடைவர். சண்டையை எப்போது தீவிரமாக்காமல் இருக்க பெற்றோர் தலையிடுவது முக்கியம்.
புரிதலை குழந்தைக்கு ஏற்படுத்திவிட்டால் பிரச்னைக்கு இடமில்லை. அடம் பிடிப்பதை வாங்கி தர வாய்ப்பு, வசதி வரும். அப்போது வாங்கி தருகிறேன் என எடுத்து சொல்லலாம். பக்கத்து வீட்டு குழந்தையுடன் தன் குழந்தை சண்டை போடுவதை சில பெற்றோர் தீவிரமாக்கி விடுகின்றனர். சமூக நட்பை குழந்தையிலே வளர்த்தால்தான் பெரியவர் ஆனதும் சமூகத்துடன் வாழ குழந்தைகளால் முடியும்.

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு சில விஷயங்களை தவிர்க்கவும், சில விஷயங்களை சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். திடீரென்று உடலில் வெப்பம் அதிகரிப்பது வளர்சிதை மாற்றத்தில் சீரற்ற நிலையை ஏற்படுத்தும். அதனால் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தலைதூக்கும். முகப்பரு, நெஞ்செரிச்சல், சருமத்தில் வெடிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை உடலில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்புகளாகும். கோடைகாலத்தில் எண்ணெய்யில் வறுத்த, காரமான உணவுகளை தவிர்ப்பது உடலின் வெப்பநிலை சீராக இருப்பதற்கு துணை புரியும். வேகவைத்த காய்கறிகள், வெள்ளரி, முலாம்பழம், மோர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
சப்ஜா விதைகளை சிறிது நேரம் நீரில் ஊறவைத்துவிட்டு அதனுடன் பால் மற்றும் ரோஸ்வாட்டர் கலந்து பருகுவதும் உடல் வெப்பம் தணிவதற்கு வழிவகுக்கும். பிராணயாமா, சூரியநமஸ்காரம், திரிகோணாசனா போன்ற யோகாசனங்கள் உடலை குளிர்விக்க உதவும். தியானமும் செய்துவரலாம். அவை உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும்.
கொத்தமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், ரோஸ்வாட்டர் போன்றவற்றை பயன்படுத்தி மூலிகை டீ தயாரித்தும் பருகலாம். அவை உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்க வழிவகை செய்யும்.

மூலிகை எண்ணெய்களை கொண்டு உடலை மசாஜ் செய்யலாம். அது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலை குளிர்விக்கவும் உதவும். உடலின் வெப்பநிலையை பராமரிக்க தேங்காய் எண்ணெய் சிறந்ததாக கருதப்படுகிறது. அதனை உணவிலும், கூந்தலிலும் உபயோகித்து வருவது பலன் தரும்.
கோடை காலத்தில் சர்க்கரை பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். அதற்கு பதிலாக தேன், நாட்டுச்சர்க்கரையை பயன்படுத்தலாம். தயிர் இயற்கையாகவே உடலை குளிரூட்டும் தன்மை கொண்டது என்பதால் சாப்பிட்டு முடிந்ததும் அரை கப் தயிர் பருகலாம். நீச்சல் அடித்தாலும், தோட்ட வேலைகளில் ஈடுபட்டாலும் உடல் குளிர்ச்சியடையும். மனமும் அமைதி அடையும். வெளிர் நிற ஆடைகள், கைத்தறி, பருத்தி ஆடைகள் அணிவதும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
உணவில் உப்பை அதிகமாக சேர்த்தால், உடலில் வெப்பம் அதிகரித்துவிடும். கோடைகாலத்தில் எண்ணெய் அதிகம் சேர்த்த மற்றும் கார வகை மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். துரித உணவுகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.

காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். இன்று பச்சரிசி, மிளகு சேர்த்து தவலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - கால் கப்,
கடுகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய்,

செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.
ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
பச்சரிசி - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - கால் கப்,
கடுகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.
அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.
ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான தவலை அடை ரெடி.