search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தவலை அடை
    X
    தவலை அடை

    சத்தான காலை டிபன் தவலை அடை

    காலையில் சத்தான உணவை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய முடியும். இன்று பச்சரிசி, மிளகு சேர்த்து தவலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    மிளகு - ஒரு டீஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    தேங்காய் துருவல் - கால் கப்,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய்,
    உப்பு - தேவையான அளவு.

    தவலை அடை

    செய்முறை:

    பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.

    அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

    அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும்.

    ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    சத்தான சுவையான தவலை அடை ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×