என் மலர்
ஆரோக்கியம்
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
பெண்களின் உதடுகளில் வெடிப்பு ஏற்படுவது இப்போது பொதுவான பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது. பாதிப்பு அதிகமானால் அது நோய்த்தொற்றாகிவிடும். சில எளிய வீட்டு வைத்தியத்தின் மூலம் இதற்கு தீர்வு காணலாம்.
கற்றாழை ஜெல்: இது குளிர்ச்சி தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி பூஞ்சை எதிர்ப்பு பண்பு கொண்டது. உதடு உலர்ந்து வெடிப்புடன் வலியும் ஏற்பட்டால் கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். இது பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடியது. கற்றாழை ஜெல்லை எடுத்து குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் குளிரவைக்க வேண்டும். பின்பு ஆன்டி பாக்டீரியல் கிளீன்சர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்திவிட்டு கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பின்பு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
தயிர்: உதடு வெடிப்புக்கு மற்றொரு ஆன்டி பாக்டீரியல் தீர்வாக தயிர் அமைந்திருக்கிறது. இது நல்ல பாக்டீரியாக்களை கொண்டது. தயிர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதுபோல் வெடிப்பு உள்ள சருமத்தில் தயிரை தடவி வரலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா எரிச்சலை குறைக்கும். சருமத்திற்கும் இதமளிக்கும். இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் தயிரை தடவி விட்டு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளவும் வேண்டும்.

தேங்காய் எண்ணெய்: இது அனைத்து விதமான சரும பிரச்சினைக்கும் தீர்வு தரக்கூடியது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மையும் கொண்டது. வறண்ட, வறட்சியான சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடி நிவாரணம் தரும். தேங்காய் எண்ணெய்யுடன் அதே அளவு பாதாம் எண்ணெய் கலந்து உதடு, வாய் மூலையில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு, மூன்று முறை செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும். எந்தவொரு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்கும் தன்மை தேங்காய் எண்ணெய்க்கு இருக்கிறது.
விளக்கெண்ணெய்: இது சரும வறட்சியை சரிசெய்யக்கூடியது. வெடிப்பு, வலி, நோய்த்தொற்றை தடுக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது. உதடு, வாய் மூலைகளில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெய் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய்யுடன் இரண்டு துளி டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அதனை காட்டன் பஞ்சுவில் முக்கி வெடிப்புள்ள பகுதியில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவிவிடலாம். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்துவந்தால் விரைவில் வெடிப்பு குணமாகிவிடும். சிலருடைய சருமத்திற்கு விளக்கெண்ணெய் ஒத்துக்கொள்ளாது. அப்படி ஒவ்வாமை பிரச்சிைனயை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை தவிர்த்துவிடலாம்.

அலுவலக வேலை நெருக்கடிகளை மறந்தும், வெளிவட்டார பிரச்சினைகளில் இருந்து அகன்றும், அந்த நாளில் மீதமுள்ள நேரத்தை சந்தோஷமாக செலவிட மகிழ்ச்சி அறை தேவைப்படுகிறது.
வந்தவர்: `உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?'
வீட்டுக்காரர்: `நான்கு பேர் இருக்கிறோம்'
வந்தவர்: `யாரையும் இங்கு காணோம்.. எங்கே இருக்கிறார்கள்?'
வீட்டுக்காரர்: `ஒவ்வொருவரும் தனித்தனி அறையில் அமர்ந்து வேறு யாருடனாவது செல்போனில் பேசிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருப்பார்கள்'
விடுமுறை நாட்களில் பல வீடுகளில் உண்மையான நிலவரம் இதுதான். இப்படி ஆளுக்கொரு அறையில் அடைந்துகிடக்காமல், குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஒன்றுகூடி உறவாட `மகிழ்ச்சி அறை' ஒன்று தேவை. அலுவலக வேலை நெருக்கடிகளை மறந்தும், வெளிவட்டார பிரச்சினைகளில் இருந்து அகன்றும், அந்த நாளில் மீதமுள்ள நேரத்தை சந்தோஷமாக செலவிட மகிழ்ச்சி அறை தேவைப்படுகிறது. அங்கு `பேம்லி டைம்' செலவிடப்படவேண்டும்.
மகிழ்ச்சி அறை என்று தனியாக ஒன்றை உருவாக்க முடியாதவர்களும், ஒதுக்க வாய்ப்பில்லாதவர்களும் அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டின் ஏதாவது ஒரு பகுதியில் அதற்காக சிறிய இடத்தை ஒதுக்கினால்போதும். லிவிங் ரூமில் இருக்கும் பொது இடம்- டைனிங் ஏரியாவில் கிடைக்கும் செமி பிரைவேட் ஸ்பேஸ்- தனிப்பகுதியான பெட் ரூம் போன்ற மூன்று பகுதிகளோடு சேர்ந்து இந்த மகிழ்ச்சி அறை அமைவது சிறந்தது.
பார்மல் லிவிங் ரூம் தவிர வேறு எந்த இடத்திலும் இதை அமைத்துக்கொள்ளலாம். டைனிங் ஏரியாவின் ஒரு மூலை, பால்கனி, பேக்யார்டு ஸ்பேஸ் போன்றவைகளிலும் மகிழ்ச்சி அறை அமைத்துக்கொள்ளலாம். சமையல் அறையோடு சேர்ந்து அல்லது அதன் அருகில் இதனை அமைப்பது சிறந்தது. சமையல் அறை அருகில் என்றால் அம்மாவும் உடன் சேர்ந்துகொள்ள அதிக வாய்ப்பிருக்கும். அம்மாவுக்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் சமையல் பணிகளில் ஒத்துழைப்பு கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
மகிழ்ச்சி அறையை தரைத் தளத்திலோ, முதல் தளத்திலோ அமைக்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் சிரமமின்றி வந்து கூடும் விதத்தில் அந்த பகுதி அமைவது அவசியம். தரைத்தளமாக இருந்தால் லிவிங் ரூமின் மிக அருகில் இது இருக்கவேண்டாம். குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உற்சாகமாக சிரித்து பேசி ஜாலியாக அந்த இடத்தில் இருக்கவேண்டும். அந்த சூழல் லிவிங் ரூமில் இருப்பவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு தரும் விதத்தில் அமைந்துவிடக்கூடாது.
மகிழ்ச்சிக்கான இடத்தை உருவாக்க வீட்டிற்குள் எங்கேயும் இடமில்லை என்றால், வீட்டின் பின்பகுதியில் அதற்கான இடத்தை தேர்வு செய்யலாம். பேக்யார்டின் ஒரு பகுதியில் இருக்கைகளை போட்டு அமரலாம். வீட்டின் அருகில் இடமிருந்தால் தடுப்புகள் மூலம் சிறிய அறை போன்றும் உருவாக்கலாம்.
அந்த இடம் நெருக்கடி நிறைந்ததாக இருக்கக்கூடாது. எல்லோரும் ஒன்றாக அமர்ந்து அரட்டையடிக்கவும், செஸ் விளையாடவும், ஓய்வாக கை கால்களை மடக்கி அமரவும் தேவையான இடவசதி இருக்கவேண்டும். திறந்த வெளியாக இருந்தால் சின்னசின்ன பார்ட்டிகளை அங்கே அமைத்துக்கொள்ளலாம். விருந்து, விழாக் காலங்களில் அங்கே தேவையான டெக்கரேஷன்களையும் உருவாக்கலாம்.
`இதற்கெல்லாம் எங்கள் வீட்டில் இடமே இல்லை' என்று கூறுகிறவர்கள், பெரிய பெட்ஷீட் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உட்கார்வதற்கு எந்த இடம் சவுகரியம் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் அதை விரியுங்கள். அந்த இடத்தில் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்ந்து, அதனை மகிழ்ச்சிக்கான இடமாக அங்கீகரித்துவிடுங்கள்.

குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஒரு இடத்தை அமைக்கும்போது அங்கே குடும்பத்தினர் அனைவரும் அமர்வதற்கான இட வசதி இருக்கவேண்டும் என்பதுபோல், அவர்கள் அனைவரின் மகிழ்ச்சிக்கு தேவையான பொருட்களும் அங்கே இடம்பிடித்திருக்கவேண்டும். ஆனால் அங்கிருந்துகொண்டு தனிப்பட்ட முறையிலான செயல்களை செய்துகொண்டிருக்கக்கூடாது. எல்லோரும் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியாக இருந்து அந்த பொழுதைக்கழிக்கவேண்டும் என்பது மிக முக்கியம்.
பார்மல் லிவிங் ரூமுக்கும், இந்த மகிழ்ச்சிப் பகுதிக்கும் வித்தியாசம் உண்டு. லிவிங் ரூமில் ஒவ்வொரு பொருளும் அது அதற்குரிய இடத்தில் கச்சிதமாக உட்கார்ந்திருக்கும். அங்கே எடுப்பதை எடுத்த இடத்தில்வைக்கவேண்டும் என்ற நிர்பந்தமும் உண்டு. ஆனால் மகிழ்ச்சிப் பகுதி அப்படி அல்ல. அங்கு ஓரளவு பொருட்கள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடக்கலாம். வரைமுறை அவசியமில்லை. ஆனாலும் ஒரு ஒழுங்குமுறையை அனைவரும் பின்பற்றவேண்டும். எல்லோரும் சுதந்திரமாக புழங்குவதற்கு அங்கே வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.
அங்கு பர்னிச்சர் குறைவாக இருந்தாலும், குஷன் தரை விரிப்புகளை நிறைய பயன்படுத்திக்கொள்ளலாம். இருக்கவும், படுக்கவும் உதவும் விதத்தில் அவை இருக்கவேண்டும். மகிழ்ச்சி அறையை இன்டீரியர் செய்யும்போது அதிக கவனம் தேவை. எளிதில் அழுக்கடையாத சாப்ட் பர்னிஷிங், எளிதாக சுத்தப்படுத்தும் விதத்திலான ப்ளோரிங் அவசியம். அந்த அறை சுத்தமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மனமகிழ்ச்சி குறைந்துபோய் விடும்.
அந்த அறை முழுக்க மகிழ்ச்சி ததும்பவேண்டும். அதனால் அந்த இடம் உங்களுக்கு ஸ்பெஷலானதாக இருக்கவேண்டியது அவசியம். அதற்காக சில விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும். உங்கள் குடும்பத்தினருக்கு ஓவியம் வரைவதிலோ, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதிலோ ஆர்வம் இருந்தால், அதனை அவரவரே தயார்செய்து அங்கு வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் அந்த அறைக்கு `பெர்சனல் டச்' கொடுத்ததுபோல் இருக்கும். புதிய படைப்புகளை உருவாக்கும்போது பழையவற்றை எடுத்து மாற்றிவிடவேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் இருந்திருக்கும். அதனை போட்டோவாக படம்பிடித்து வைத்திருப்பீர்கள். அதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் போட்டோக்களை மட்டும் தேர்ந்தெடுத்து பிரேம்செய்து அந்த அறைக்குள் மாட்டுங்கள். அது வழக்கமான பிரேம் ஆக இருக்கவேண்டியதில்லை. வித்தியாசமான வடிவங்களில் கோணல்மானலாககூட காட்சியளிக்கலாம். அந்த போட்டோக்களுக்கு அடிக்குறிப்பு வாசகங்கள் கொடுத்து, ஒரு கதைபோன்றுகூட உருவாக்கிவைக்கலாம்.
நீங்கள் அடிக்கடி வெளியூர் சுற்றுலா செல்லும் குடும்பமாக இருந்தால், மகிழ்ச்சி அறையின் சுவரில் பெரிய `மேப்' ஒன்றை ஒட்டிவையுங்கள். அதில் நீங்கள் இதுவரை சென்ற இடங்களை வட்டமிட்டுவைத்திடுங்கள். அதை பார்க்கும்போதெல்லாம் அங்கு சுற்றுலா சென்ற அந்த மகிழ்ச்சியான மனநிலைக்கு உங்களால் செல்ல முடியும். அந்த மேப்பை பார்க்கும்போது, அடுத்து எந்த இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை பற்றி விவாதித்து முடிவெடுக்கவும் வசதியாக இருக்கும்.
மகிழ்ச்சி அறையில் ஒரு ரைட்டிங் போர்டும் வைத்திருங்கள். அதில் மகிழ்ச்சியான- முக்கியமான விஷயங்களை எழுதிவையுங்கள். நீங்கள் மேற்கொள்ளவேண்டிய வழிபாடு- பிரார்த்தனைகளை பற்றிய குறிப்பும் அதில் இடம்பெறலாம். உங்கள் அடுத்த தலைமுறை பின்பற்ற வேண்டிய கொள்கை அடிப்படையான விஷயங்கள் அதில் இடம்பெறலாம். நீங்கள் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை அதன் மூலம் உங்களது புதிய தலைமுறையும் புரிந்துகொள்ளும்.
விரைவாக உங்கள் வீட்டில் ஒரு மகிழ்ச்சி அறையை உருவாக்குங்கள். எல்லோரும் ஒன்றுகூடுங்கள். ஜாலியாக பொழுதைக் கழியுங்கள். அங்கு நடைபெறும் முதல் மகிழ்ச்சியான தருணத்தை படம்பிடித்து, போட்டோவாக்கி சுவரில் பதியுங்கள்.

பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!
பழ மார்க்கெட்டுகளில் புதிய ரக பழங்களை நிறைய பார்க்க முடிகிறது. புதுமையான பெயர்களும், அவற்றின் வினோதமான வடிவங்களும் ஆச்சரியத்தைத் தூண்டுகிறது. இவையெல்லாம் என்ன பழங்கள், எங்கிருந்து வருகின்றன, என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன போன்றவற்றை அலசும் சின்ன ஆராய்ச்சி கட்டுரைதான் இது!
டிராகன் ப்ரூட் (Dragon Fruit)
சிவப்பு நிறத்தில் இருக்கும் டிராகன் பழத்தின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. இனிப்பு சுவைகொண்ட இந்தப்பழம் மேற்புறம் கரடு முரடாக பார்ப்பதற்கு அன்னாசிப்பழம் போல் இருந்தாலும் உள்ளே மிருதுவாக சதைப்பற்று மிகுந்து இருக்கும். அதிகமான நீர்ச்சத்துடைய இந்த பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. கொழுப்பைக் குறைக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல்பருமனை குறைக்க விரும்புபவர் களுக்கு டிராகன் ப்ரூட் ஏற்றது.
ரம்பூட்டான் ப்ரூட் (Rambutan fruit)
வைட்டமின் பி-3 சத்து அதிகம் உள்ள பழம் இது. உடலில் கொழுப்பு அளவைக் குறைத்து, இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் மிகுந்துள்ளது. உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் ரம்பூட்டான் பழத்தை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, ஆஸ்துமா நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஜபூடிகாபா ப்ரூட்(Jabuticaba Fruit)
பார்ப்பதற்கு கருப்பு திராட்சையைப் போலவே இருக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் தென் அமெரிக்கா. இதை பிரேசிலியன் திராட்சை என்றும் சொல்வார்கள். வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த பழம், புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கக்கூடியது. புற்றுநோய்க்கு எதிரான மருந்தாக இந்தப்பழத்தின் சாற்றையும் உபயோகிக்கிறார்கள். இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் வயதான தோற்றத்தை தாமதப்படுத்துகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது.
மங்குஸ்தான் ப்ரூட் (Mangosteen fruit)
மலேசியா, மியான்மர், இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் அதிகம் விளையும் பழம் இது. மங்குஸ்தான் பழத்தின் தோல் தடிமனாக இருக்கும். இதை உடைத்தால் சுளைகள் மென்மையாக இருக்கும். மங்குஸ்தான் பழம் வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைப் போக்கும் தன்மை உடையது. வாய் துர்நாற்றத்தை நீக்கவும் சிறந்த மருந்து. உடல் சூட்டைத் தணித்து உடலின் சூட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது. இந்த பழத்தின் தோல் பல் வலிக்கும் மருந்தாவதுடன் தொற்று நோய் கிருமிகளையும், பூஞ்சைத் தொற்று களையும் அழிக்கிறது. மனநோய்க்கான மருந்தாகவே சர்வதேச அளவில் பயன்படுத்தப்படுகிறது.
பெப்பினோ மெலன் (Pepino melon)
இது பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, பெரு, சிலி நாடுகளில் அதிகமாக விளைகிறது. இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் வைட்டமின் ஏ, சி, கே, பி மற்றும் புரதச்சத்துகள் நிறைந்தது. இதில் இருக்கும் கால்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாகவோ, என்னவோ இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சூப்பர் ப்ரூட்!
ஸ்டார் ப்ரூட் (Star Fruit)
கோல்டன் கிரீன் நிறத்தில் இருக்கும் இந்தப்பழம் இலங்கையில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. திராட்சை மற்றும் ஆப்பிள் போன்று புளிப்பு, இனிப்பு கலந்த சுவையுடையது. ஜெல்லி போன்று வழுவழுப்பாக இருப்பதால் சாலட், ஸ்மூத்தி, ஜூஸ், ஃபலூடா போன்றவற்றில் பயன்படுத்துகிறார்கள். நார்ச்சத்து மிகுந்த இந்தப்பழம் உணவில் உள்ள கெட்ட கொழுப்பு குடலில் சேராமல் தடுக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத் துடிப்பை சீராக்குகிறது. இப்பழத்தின் சாறினை இருமலுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிவது எப்படி என்று டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார்.
நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பது குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. இந்த சந்தேகத்திற்கு கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
சர்க்கரை நோயை கண்டறிய டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் டயாபட்டிக் ரிஸ்க் ஸ்கோர்( Diabetes Risk Score) என்று முறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும் எளிமையானது. இந்த முறையில் இரத்த பரிசோதனை செய்யாமலேயே உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
முதலாவது முறையில் உங்கள் வயது அடிப்படையில் கணக்கிடப்படும். 2-வது பாரம்பரியம் முறையில் உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும்.

3-வது உங்களது BMI அல்லது உடல் எடை கணக்கிடப்படும். 4-வதாக உங்கள் இடுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்படும்
5வது உடற்பயிற்சி செய்யாதவர்கள், அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு என்ற அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த மதிப்பெண்களை கூட்டிப்பார்த்தால் வரும் மதிப்பெண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா, இல்லையா என்பதை ரத்த பரிசோதனை செய்யாமல் எளிய முறையில் கண்டுபிடித்து விடலாம்.
இந்த மதிப்பெண் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மருந்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மார்பக கட்டிகள் அனைத்தும் புற்றுநோயாக இருக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் மார்பகத்தில் கட்டி தென்பட்டால் உடனடியாக புற்று்நோய் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
மார்பகப் புற்றுநோய் இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண்கள் மனம் தளரக்கூடாது. மற்ற பல நோய்களைப் போல மார்பக புற்று நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் அதற்கு தொடர் சிகிச்சை மிகவும் அவசியம். எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த சிகிச்சை மட்டும் போதாது. அதிலும் மார்பக புற்று நோயில் இருந்து மீள அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை அவசியம்.
இந்த நோயிலிருந்து நான் மீண்டு வருவேன் என்று சம்பந்தப்பட்ட பெண் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை மட்டுமே அந்தப் பெண்ணை நோயிலிருந்து முழுமையாக காப்பாற்றும் சக்தி பெற்றது.
மார்பக புற்று நோயால் பாதிப்படைந்த பெண்களை சமூகம் ஒதுக்கி வைத்தல் கூடாது. சமூகத்தின் தவறான நடவடிக்கைகளாலும், பேச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மன உளைச்சலும், விரக்தியும் அடைய வாய்ப்புள்ளது. அதனால் சமூகம் பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் நடந்து கொள்வது இன்றியமையாதது.
மார்பக புற்று நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது சாப்பிட வேண்டிய உணவுகள்
1. வைட்டமின் டி & ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

2. நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.
3. பழங்களில் பெர்ரிஸ் மற்றும் பீச் உகந்தது.
4. பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் சாப்பிட ஏற்றது. இது மார்பக புற்று நோயைக் குணப்படுத்த உதவுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
5. வைட்டமின் டி சத்து நிறைந்த முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். மாலை வெயிலில் சிறிது நேரம் நடப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி-யைப் பெற இயலும்.
6. கிரின் டி புற்று நோய்க்கு எதிராக செயல்பட உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மார்பக புற்று நோயிலிருந்து மீண்டு வர உதவுகிறது.
7. மஞ்சள் ஒரு மகத்துவமான குணம் கொண்ட மருந்து பொருள். நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை இயற்கையிலேயே மஞ்சளில் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, மார்பக புற்று செல்கள் வராமல் கட்டுப்படுத்தப்படுகின்றது.
8. சீரான உடல் எடையோடு இருப்பது நல்லது. தினம் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். போதிய உடல் உழைப்பு உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முறையான உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம் உடலை எந்த விதமான நோயிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பெண்ணும் தன் உடலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தீ காயங்களிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பது எப்படி? சிகிச்சை அளிக்கும் முறை என்ன? என்ன முதலுதவி? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுப்பது? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
குழந்தைகளைக் காயங்களிலிருந்து, குறிப்பாகத் தீ காயங்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். குறிப்பாக தீ காயம் என்பது அச்சமூட்டக்கூடிய ஒன்று.
தீ காயம் என்றால் பட்டாசு வெடிப்பதாலோ அல்லது கையில் தீ படுவதாலோ ஏற்படும் காயம் என்று அலட்சியமாக நினைத்து விட வேண்டாம். குழந்தைகளைப் பொருத்தவரை வெப்பமான எதைக் கையில் எடுத்துச் சுட்டுக்கொண்டாலும் அது தீ காயம்தான். சூடான உணவு, தண்ணீர், பாத்திரம் ஆகியவற்றைத் தொடுவதால் ஏற்படுவதோ, பட்டாசு வெடிக்கும்போது கையில் சுட்டுவிடுவதோ அல்லது வேறு ஏதேனும் தீ விபத்துகளோ குழந்தைக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும்.
தீ காயங்களைப் பொருத்தவரை, காயம் ஏற்பட்டு அடுத்த சில நொடிகளில் தண்ணீரில் நனைக்க வேண்டும். தேங்கியிருக்கும் நீராக இல்லாமல், ஓடும் நீராக இருப்பது நல்லது. உடையைக் கழட்டுவதில் நேரத்தைச் செலவிடாமல் சுமார் 10 நிமிடம் வரையிலாவது, காயம் பட்ட குழந்தைக்கு இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கையை உலர வைத்து, அதன் தீவிரத்தைப் பார்க்க வேண்டும். பார்க்கும்போதே சில நாட்களில் ஆறிவிடுமா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதன் பிறகு மருத்துவரை ஆலோசிப்பதும் வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதும் செய்யலாம். எந்த காரணத்துக்காகவும் தண்ணீருக்குப் பதிலாக வேறு ஏதேனும் களிம்பைப் பயன்படுத்தக்கூடாது. அது காயத்தை ஆறவிடாமல் தடுத்து, அந்த இடத்தை மேலும் பாதிக்கும்.
பெரிய காயம் என்றால், தண்ணீரில், நனைத்தபடியே பிணியூர்திக்கு அழைத்துவிட வேண்டும். அல்லது உதவிக்கு யாரையாவது வாகனத்தைத் தயார் செய்யச் சொல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை, அது சில நிமிடங்களாக இருந்தாலும், தண்ணீர் முதலுதவி அவசியம்.
பெரும்பாலான காயங்களுக்குத் தண்ணீரில் நனைப்பதே போதுமானது. காயத்தைச் சுற்றிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடைக்க வேண்டாம். அந்த கொப்புளங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த உதவும்.
தண்ணீரில் குளித்த பிறகு, காயம் ஏற்பட்ட இடத்தை தூய்மையான துணி அல்லது நெகிழி காகிதத்தைக் கொண்டு மூட வேண்டும். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கலாம்.
வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, அதற்கேற்ற வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம்.
தயிர் குளிர்ச்சி தானே? வெண்ணெய் குளிர்ச்சி தானே என அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா எனக் கேட்காதீர்கள். தண்ணீரைத் தவிர எதையும் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு யாரோ கொடுத்த அறிவுரை போல, பற்பசை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது பார்த்திருப்பீர்கள். அதுவும் மிகத் தவறான விஷயம். மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தீ காயத்துக்கு முதலுதவி என்றால் அது தண்ணீர் மட்டும்தான்.

முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.

கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.

நீர்ச்சத்து மிகுந்த முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நலம். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க

செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.
இதனை சட்டியிலும் சமைக்கலாம். நீர் சத்துள்ள காய்கறி என்பதால் சமைக்கும் போது அதிகம் தண்ணீர் விட்டு வேக வைக்க தேவை இல்லை.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்படுகிறது. எனவே வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
எண் சாண் உடம்புக்கு தலையே பிரதானம் என்றாலும் தலைக்கே வாய் தான் கண்ணாடியாக திகழ்கிறது. வாயின் ஆரோக்கியம் என்பது பற்களை பராமரிப்பதில் இருக்கிறது. ஆரோக்கியமான பற்களே உடலுக்கு நல்லது. வாயிலும், பற்களிலும் ஏற்படும் நோய்களால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்படுகிறது. எனவே வாயையும், பற்களையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.குழந்தைகளுக்கு பிறந்த 6 மாதத்தில் பல் முளைக்க தொடங்கும். 5 வயது வரை பெற்றோர் உதவியுடன் பல் துலக்க வேண்டும்.
வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன?
பீடி, சிகரெட் பிடித்தல், புகையிலை, பாக்கு போடுதல் போன்ற பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு வாய்ப்புண் ஏற்படும். இதனால் உதடு, கண்ணம், தசைகளில் நெகிழித் தன்மை குறைந்து வாய் திறக்க முடியாமலும் போகும். அதிகமான காரம், புளிப்பு உணவுகளாலும் வாயில் எரிச்சல் தன்மை கூடிய வாய்ப்புண் ஏற்பட வழிவகுக்கும்.
வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்?
வாயில் உள்ள அழுக்குகளே காரணம். வாயிலும் பற்களிலும் உணவு துகள்களுடன் சேர்ந்து கெட்டுப்போய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் இரண்டு முறை பல் துலக்குவதுடன் நாக்கை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் தெத்துப்பற்கள், பற்களுக்கு இடையில் இடைவெளியில் அதிகம் உள்ள பல் அமைப்பு, நெருங்கிய பற்கள் ஆகியவற்றால் பல் ஈறுநோய் ஏற்படும். கெட்டுபோன சொத்தை பற்களை எடுக்காமல் விட்டால் தோல் நோய்கள், மூட்டு, இடுப்பு வலி, மூட்டுகளில் வீக்கம், கண்களில் புரை மற்றும் இருதய நோய் கூட ஏற்படலாம்.

பல் சொத்தை வராமல்முன்கூட்டியே தடுக்கலாமா?
பற்களின் மேலே படியும் கரை அல்லது உணவு படலத்தின் மீது நுண்ணுயிரிகள் உண்டாக்கும் அமிலம் பற்களை பாதித்து பல் சொத்தை வருவதை தடுத்தல் என்பது கடினமான செயல். ஏனெனில் நமது பற்களின் அமைப்பு, உணவு முறை, துலக்கும் முறைகளை பொறுத்தே பல் சொத்தை ஏற்படுவதால் அதை துல்லியமாக முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது.
செயற்கை பல்
விபத்தால் பல் உடைதல் உள்ளிட்ட காரணங்களால் பற்களை இழக்க நேரிடும் போது பல் கட்டப்படுகிறது. தேவைக்கேற்ப அகற்றக்கூடிய அளவிலும் அல்லது நிரந்தரமாக பொருந்தியும் பல் கட்டப்படுகிறது.
பற்களை பாதுகாப்பது எப்படி?
காலை, இரவு பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை குச்சி, ஊசிகளை கொண்டு எடுக்கக்கூடாது. பிரஷ்களையே பயன்படுத்த வேண்டும். உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது பல் மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றால் பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.
டாக்டர் மணிகண்டன் Dr.மணீஸ் பல் மருத்துவமனை காரைக்குடி

பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்து கொள்ள சட்டம் தக்க வழிவகைகளை செய்துள்ளது.
அசையா சொத்துக்களான வீடு, மனை மற்றும் நிலம் ஆகியவற்றை பாகப்பிரிவினை செய்யும்போது, குடும்ப அங்கத்தினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடுகின்றன. உறவு மற்றும் உணர்வு ரீதியான சிக்கல்களை உருவாக்கும் இந்த பிரச்சினை பற்றி ரியல் எஸ்டேட் சொத்து ஆலோசகர்கள் அளிக்கும் முக்கியமான தகவல்கள் பற்றி இங்கே காணலாம்.
கூட்டுக் குடும்பச் சொத்து, குடும்ப வியாபாரம், விவசாய பூமி, தோட்டம், காடு போன்ற சொத்துகளை குடும்பத் தலைவரை மையமாக வைத்து பரம்பரை சந்ததிகள் அனுபவித்து வரும் நிலையில், கால நிலைக்கேற்ப குடும்ப நலன், குடும்ப அங்கத்தினர்களுக்குள் சுமுக உறவு தொடர பாகப்பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. பாகப்பிரிவினை செய்ய வேண்டிய வீடு அல்லது நிலம் கிழக்கு, மேற்கு திசை பார்த்ததாக இருந்தால் கிழக்கு பகுதி தம்பிக்கும், மேற்கு பகுதி அண்ணனுக்கும் அளிக்க வேண்டும். வடக்கு, தெற்கு திசை பார்த்ததாக இருந்தால் வடக்கு பகுதி தம்பிக்கும், தெற்கு பகுதி அண்ணனுக்கும் பிரித்து அளிக்கப்படுவது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகும். மேலும், பாகப்பிரிவினை சமயத்தில் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு கிரவுண்டு (40 x 60) அளவுள்ள இடத்தை அண்ணன், தம்பி இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யும்போது வீட்டின் முன்பகுதியில் 40 அடி அகலம் அமைந்திருந்தால், அதை 20 x 60 என்ற அளவில் கிழக்கு, மேற்கு பகுதிகளை விதிமுறைப்படி பிரித்துக்கொள்ளலாம். அகலம் குறுகலாக இருந்தால் பின் பக்கம், முன் பக்கம் என்று பிரித்து, பின் பக்க இடம் கிடைப்பவருக்கு நடைபாதை ஒதுக்கீடு செய்து, அதை அவருக்கு கொடுக்க வேண்டும். இடம் மூன்றாக பிரிக்கப்படும் நிலையில் பொதுப்பாதை விட்டு பிரிக்க வேண்டும். பின் பக்க இடம் வருபவர்களுக்கு வாகனம் செல்ல, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் செல்ல இந்த பாதையை பயன்படுத்த வேண்டும்.
தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என்ற அடுக்கு மாடி வீடுகளில் பிரிவினை செய்யும்போது, குடும்பத்தில் மூத்தவர் இரண்டாம் தளத்தையும், இரண்டாமவர் முதல் தளத்தையும், இளையவர் தரைத் தளத்தையும் பிரித்துக்கொள்ளலாம். நிலம் அல்லது வீடுகள் மூன்று இருந்து, வாரிசுகளும் மூவர் இருந்தால், யாருக்கு எந்த இடம், வீடு என்பதை முன்னதாகவே பிரிவினை செய்து வைத்து விடுவது நல்லது. இல்லாவிட்டால், பெற்றோர்களின் காலத்துக்குப் பிறகு, அரசு பதிவு பெற்ற மதிப்பாளரை அணுகி, சொத்தின் சந்தை மதிப்பை அறிந்து பிரிக்க வேண்டிய சிக்கல் ஏற்படக்கூடும்.
சில உணர்வுப்பூர்வமான பாகப்பிரிவினை சூழலில் வாரிசுகளில் ஒருவர் படிக்காதவராகவும், மற்றவர் படித்தவராகவும் இருப்பது, ஒருவர் மட்டும் வேலையின்றி இருப்பது, மற்றவர் வேலையிலும் இருப்பது போன்ற சூழலில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிவை இல்லாதவருக்குச் சற்று கூடுதலாக பாகப்பிரிவினை செய்வது நடைமுறையில் உள்ளது. மனை அல்லது நிலத்தில் தெற்கு பாகத்தைப் பெற வேண்டியவர் வடக்கு பாகத்தைத் தரும்படி கேட்கும் நிலையில் அனைவரது ஒப்புதலோடு சட்டமும் அதை ஏற்றுக்கொள்கிறது. பாகப்பிரிவினை செய்யும்போது சம்பந்தப்பட்டவர்கள் சார்ந்த மத ரீதியான சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு உட்பட்டு பாகப்பிரிவினையை செய்து கொள்ள சட்டம் தக்க வழிவகைகளை செய்துள்ளது.
ஒரு கூட்டுக் குடும்பத்தை சேர்ந்த மகன்கள் மற்றும் மகள்கள் அனைவரும் தங்களுக்குள் விட்டுக்கொடுத்து செய்யப்படும் கூட்டுக்குடும்ப ஏற்பாடு (Joint Family Arrangement) என்ற நிலையில் சொத்தை அபிவிருத்தி செய்து, கிடைக்கும் வருவாயில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அனைவருக்கும் கிடைக்கும் பொதுவான நன்மைகளுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாகி விடக்கூடும் என்று சொத்து முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.

மன அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. கவனிக்கப்படாமல் இருக்கும் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.
மன அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய வாழ்க்கை முறை. கவனிக்கப்படாமல் இருக்கும் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.
காய்ச்சல், சளி மாதிரி சுலபமாகவும், வெளிப்படையாகவும் மன அழுத்தத்தை கண்டு பிடிக்க முடியாது. உங்கள் துணையிடம் திடீரென அதிக பரபரப்பு, சோர்வு, திடீர் அமைதி, தனிமையில் இருக்க விரும்புதல், மனதில் எரிச்சல் உணர்வு போன்றவை இருந்தால் நீங்கள் உஷாராக செயல்பட வேண்டும்.
மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும தென்பட்டால் உடனே உங்கள் துணையிடம் மனம் விட்டு பேச வேண்டும். என்னப்பா என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? என்று கனிவாக விசாரியுங்கள். மனம் விட்டு அக்கறையாக பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். சிலர் சுலபத்தில் மனதில் இருப்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள். நாமாக விசாரிப்பதன் மூலம் தங்கள் மீது அன்பு செலுத்தும் துணை உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.
வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலைக்கு செல்பவர்கள் விடுறை கிடைத்தால் ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த சமயத்தில் உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் போது பயணங்கள் மேற்கொள்வது சிறந்தது. வாரம் ஒருமுறையேனும் பக்கத்தில் இருக்கும் பூங்கா, ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம். அப்போது மனம் விட்டு பேசவும் நிறைய நேரம் கிடைக்கும். பார்க்கில் விளையாடும் குழந்தைகளை பார்க்கும் போது மனம் லேசாக மாறி உங்கள் துணையின் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.
சினிமா பார்ப்பது புத்தகங்கள் வாசிப்பது கார்ட்டூன் பார்ப்பது வெளியே செல்வது விதவிதமான உணவு வகைகளை உண்பது என்று ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும். நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து செய்ய விரும்பும் விஷயங்களை பட்டியலிடுங்கள். உடனடியாக அவர் விரும்புவதை கேட்டறிந்து அதை செய்யத் தொடங்குங்கள்.
உங்கள் துணையின் மனநிலையை அறிந்து கொள்ள அவரிடம் பேசுங்கள். மனதை லேசாக மாற்ற மேற்கொண்ட செயல்கள் பலன் அளித்திருக்கிறதா என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அவரது வேலை, குடும்ப ரீதியான பிரச்சனைகள் அனைத்திலும் அவருக்கு துணையாக இருங்கள். கண்டிப்பாக கேலி, கிண்டல் செய்வது குறை கூறுவது ஆகியவை கூடாது. அப்படி செய்தால் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து காலப்போக்கில் உங்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாத மனநிலை அவருக்கு உருவாகக்கூடும்.
ஒரு குடும்பத்தில் அதன் உறுப்பினர்களது மன மகிழ்ச்சியின் அடிப்படையில் தான் இனிமையான வாழ்க்கை பயணத்தை தொடர முடியும். அதன் அடிப்படையில் குடும்பத்தில் குதூகலம் நிலவ உதவும் நம்முடைய துணையின் மகிழ்ச்சி உங்கள் கைகளில் தான் உள்ளது.

பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!
தலைமுடி, முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் உடலின் வேறு எந்த பகுதிக்கும் கொடுப்பது இல்லை. அதிகம் பயன்படுத்தும் கைகளுக்கு கூட நாம் முக்கியத்துவம் தருவது இல்லை. உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களை கண்டுகொள்வதே இல்லை என்று சொல்லலாம். பாதங்களை புறக்கணிப்பது அங்கு பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று, பாத வெடிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
பாதங்கள் தான் நம்முடைய உடலைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம். அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பாதிப்புகள் ஒரு கட்டத்தில் வெளியே சுதந்திரமாக நடமாடும் இயல்பையே முடக்கி வீட்டுக்குள் நம்மை சிறை படுத்திவிடும்.
பாதங்களை பராமரிக்கத் தினமும் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் துளியாவது பாதத்துக்கு கொடுத்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். விரல்களுக்கு இடைப்பட்ட இடத்தில் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். எனவே, இந்த பகுதிகளில் நன்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
பாதங்கள் எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டும். வியர்வை, ஈரப்பதம் இருந்தால் காலில் அரிப்புகள் ஏற்படும். இது கால், பாத சருமத்தை பாதிப்படையச் செய்யும். குளித்து முடித்ததும் சரியாக கால்களை துடைக்காமல் சாக்ஸ், ஷூ அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
முகம் மற்றும் கைகளுக்கு எந்த அளவுக்கு மாய்ஸ்ச்சரைசிங் க்ரீம் தேவையோ, அதே போல் பாதத்துக்கும் அது தேவை. க்ரீம் தடவுவது பாத சருமம் வறண்டு விடாமல் இருக்க உதவும்.
இறந்த செல்களால் எந்த பயனும் இல்லை. எனவே, மாதத்துக்கு ஒரு முறையாவது கால்களை நன்கு அதிகமாக அழுத்தம் தராமல் மென்மையாக தேய்த்து சுத்தம் செய்து இறந்த செல்களை அகற்ற வேண்டும். மாலையில் இதைச் செய்துவிட்டு மாஸ்ச்சைரைசிங் க்ரீம் தடவி இரவு முழுக்க டீஹைட்ரேஷன் கிடைக்க செய்ய வேண்டும்.
முடிந்த வரை சாக்ஸ் அணிவது நல்லது. இது பாதங்களை பாதுகாப்பதுடன், அழுக்கு உள்ளிட்டவை பாதங்களில் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. உயரமான ஹீல்ஸ் தவிர்த்திடுங்கள். பாதத்துக்கு ஏற்ற காலணிகளைப் பயன்படுத்துவதும் பாதத்தைக் காக்கும்!