என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.
    குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாக இருப்பதால் வெயில் காலத்தில் வியர்க்குரு மற்றும் சரும நோய்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை தினமும் காலை, மாலை என இரு வேளையும் குளிக்க வையுங்கள்.

    அதிகமாக தண்ணீர், மோர், பழச்சாறு ஆகியவற்றைக் குடிக்கக் கொடுங்கள். விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு உடனடியாக குளிர்ந்த நீர் கொடுக்கக் கூடாது. முதலில் சாதாரண தண்ணீரைக் கொடுங்கள். அரை மணி நேரம் கழித்து, வேண்டும் என்றால் குளிர்ந்த நீர் கொடுங்கள்.

    அதேபோல் பருத்தி உடைகளை குழந்தைகளுக்கு அணிவியுங்கள். உடலை ஒட்டிய இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது. வியர்க்குரு அதிகமாக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    பிறந்து சில நாட்களான பச்சிளம் குழந்தைகளை வெயில் காலத்தில் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் நன்றாகச் சிறுநீர் கழிக்க வேண்டும். பருத்தித் துணிகளை அணிவிக்க வேண்டும்.

    வெயில் காலத்தில் குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல காற்றோட்டமாக உள்ள இடத்தில் குழந்தையை சிறிது நேரம் வைத்துக்கொள்ளலாம்.

    முகம், கழுத்து, கழுத்தின் பின்பகுதி, கை போன்ற இடங்களில் தோலின் நிறம் மாறும். வெயில் காலத்தில் படர்தாமரை, பூஞ்சைத் தொற்றுகள் போன்றவையும் ஏற்படலாம். முகம், கை பகுதிகளில் வெள்ளை, சிவப்பு நிறங்களில் ஒவ்வாமை திட்டுகள் உண்டாகக்கூடும். எலுமிச்சை, ஆரஞ்சு, சந்தனம், மஞ்சள் மற்றும் கிளிசரின் அடங்கிய சோப்பு, கிரீம், லோஷன் ஆகியவை வெப்பத்தை அதிகமாக உட்கிரகிக்கும் தன்மை கொண்டவை. அதனால் அவற்றை வெயில் காலத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தலைக்குப் பூசும் சாயமும் வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது.

    பொடுகு தொல்லையை தவிர்க்க மாலை நேரத்தில் தலைக்கு குளிப்பது நல்லது. இப்படி குளிப்பதால் இரவு நேரத்தில் தலைமுடியின் வேர்க்கால்கள் இருக்கும் பகுதி சுத்தமாக இருக்கும். அதிகமாக வியர்ப்பதாலும் பொடுகுத் தொல்லை ஏற்படலாம்.

    வியர்வையை உடலில் நீண்ட நேரம் ஊறவிடாமல் உடனுக்குடன் குளிப்பதுதான் இதைத் தவிர்க்கச் சிறந்த வழி. சராசரியாக 60 கிலோ எடை கொண்ட ஒருவர் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது தலைக்குத் தொப்பி அணிந்து, கைகளை முழுமையாக மறைக்கும் கை உறைகளை அணிந்து கொண்டு செல்லலாம். குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.
    உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.
    தேவையான பொருட்கள்

    பூண்டு - 12 பற்கள்
    இஞ்சி - அரை கப்
    காய்ந்த மிளகாய் - 10
    உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
    புளி - நெல்லிக்காய் அளவு
    வெல்லத்துருவல் - அரை டீஸ்பூன்
    கடுகு மற்றும் உளுந்து - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

    இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.

    காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உலகெங்கிலும், பல தம்பதிகள் ஒரு குழந்தைக்காக முயற்சிக்கும்போது பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது.
    ஆரோக்கியமான உணவு கருவுறுதலுக்கு நல்ல பலனை கொடுக்கும். எண்ணெய் அதிகமுள்ள துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது, இது நீரிழிவு, உடல் பருமன், இதயம் தொடர்பான நோய்கள், பி.சி.ஓ.டி போன்ற பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

    ஆல்கஹால், மற்றும் புகைபிடித்தல் பழக்கம் ஆகியவை அதிகப்படியான கருவுறாமைக்கு காரணமாக இருக்கலாம். நமது உணவுச் உற்பத்தியில் இரசாயனங்கள் சேர்ப்பது மனித மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். உங்கள் உணவில் உங்கள் புரதத்தை அதிகரிக்கவும், கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கவும். தாவர புரதம், பால் பொருட்கள், அயன் , வைட்டமின் பி 12, , ஃபோலேட், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை மலட்டுத்தன்மையுள்ள தம்பதியினருக்கு உணவாக பரிந்துரைக்கலாம்.

    ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்காது. விந்தணுக்கள் உங்கள் உடலுக்குள் 5 நாட்கள் வரை வாழவேண்டும். இறுக்கமான ஆடைகளை அணிவது, சூடான குளியல் தொட்டியில் அதிக நேரத்தை செலவிடுவது போன்ற பழக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும். உங்கள் செல்போன் பழக்கத்தையும் கொஞ்சம் குறையுங்கள் . உடலுறவுக்குப் பிறகு சில நிமிடங்கள் படுக்கையில் இருங்கள் – நீங்கள் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்தால், கருப்பைக்குள் விந்து சென்று விடும்.

    உங்கள் மாதவிடாய் சுழற்சி வழக்கமானதாக இருந்தால் – ஒவ்வொரு 28-30 நாட்களுக்கும் – சுழற்சியின் 8-9 நாள் முதல் சுழற்சியின் 18 ஆம் நாள் வரை முயற்சி செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு நல்ல கர்ப்ப வீதத்தைப் பெற ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடலுறவு கொள்வது போதுமானது.குழந்தையின்மைக்கு இன்னொரு முக்கிய காரணம், இப்போது பெரும்பாலானோர் தாமதமாக 30,35 வயதுக்கு மேல் திருமணம் செய்வதும் ஒரு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    செவித்திறன் குறைபாடு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒலி நரம்புக் குறைபாடு, செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு, இந்த இரண்டும் சேர்ந்த குறைபாடு.
    “சொல்றது எதையாவது காதுல வாங்குறீயா?” என்ற வசவு வார்த்தைகளை கிட்டத்தட்ட யாரிடம் இருந்தாவது வாங்கியிருப்போம். ஆனால் நாம் சாதாரணமாகக் கேட்கிற ஒலி என்பது, காற்று வழியாக அதிர்வுகள் காதுக்குள் புகுந்து உள்காதில் இருக்கும் காக்லியா என்னும் நத்தை ஓடு போன்ற பகுதிக்குச் செல்கின்றன. அங்கிருந்து செவிப்பறை மூலம் ஒலி நரம்புக்குத் தகவல் கடத்தப்பட்டு மூளைக்குத் தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், ஏகப்பட்ட எலும்புகள் இருக்கும் தலைப் பகுதிக்குள், எலும்புகள் மூலமாகவும் ஒலி பயணிக்கலாம்.

    நாம் பேசும்போது, நம் பேச்சின் ஒரு பகுதி நம் மூளைக்கு எலும்புகள் வழியாகவே சென்று சேர்கிறது. இப்படி எலும்புகள் மூலம் ஒலி கடத்தப்படுவதை எலும்பு ஒலிக் கடத்தல் என்கிறார்கள்.

    ஒலியை அதிர்வுகளாக மாற்றித் தலையில் எலும்புகளுக்குக் கொடுத்து அதிரவைத்தாலும் ஒலி கேட்கும். இந்தத் தொழில்நுட்பத்தில் இசை கேட்கும் கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால், விலை சற்று அதிகம். காதுக்கு முன்புறம் கீழ்த்தாடை எலும்புகள் வந்து சேருமிடத்தில் அவை பொருத்தப்பட்டு தாடை எலும்பு வழியாக காக்லியா பகுதிக்குச் சேதி செல்லும். ஆனால், இதன் மருத்துவப் பயன்பாடுதான் முக்கியமானது.

    செவித்திறன் குறைபாடு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒலி நரம்புக் குறைபாடு, செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு, இந்த இரண்டும் சேர்ந்த குறைபாடு.

    இவற்றில் செவிப்பறை அல்லது செவிக்குழாய் குறைபாடு இருப்பவர்களுக்கு, செவிப்பறையில் மோதும் ஒலி அதிர்ந்து, நரம்புக்குத் தகவல் போகாது. அவர்களுக்கு எலும்புகள் மூலம் ஒலி செலுத்தும் உபகரணங்களைக் கொண்டு கேட்கும் திறனைத் திரும்பப்பெற வைக்கலாம். புகழ்பெற்ற இசை மேதை பீத்தோவன், கேட்கும் திறனை இழந்ததும் தன் பியானோவில் ஒரு இரும்புக் கம்பியை இணைத்து அதைப் பல்லில் கடித்துக்கொள்வதன் மூலம் தொடர்ந்து இசையமைத்ததாகக் குறிப்பு உண்டு.

    இதைத் தவிர சில நாடுகளில் ராணுவ வீரர்களுக்கான, தகவல் தொடர்புக் கருவிகள் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. அந்தக் கருவிகள் நேரடியாகக் காதுக்குள் பொருத்தப்படாததால் சுற்றுப்புற ஒலிகளையும் அவர்களால் கேட்க முடியும், அந்தக் கருவிகள் மூலம் தொடர்புகொள்ளவும் முடியும். சமீபகாலமாக மேலை நாடுகளில் மாரத்தான் ஓட்டக்காரர்கள், மிதிவண்டி பயன்படுத்துபவர்கள் ஆகியோரிடையே இதன் பயன்பாடு அதிகரித்துவருகிறது.
    பிரசவத்துக்கு பிறகு மார்பகங்கள் தளரத்தான் செய்யும். உடல் எடை அதிகரித்த பின், வயதாக வயதாக மார்பகங்கள் (Sagging Breast) தளர்வடையும். மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
    மார்பகங்கள் தளர்வடைய நிறைய காரணங்கள் உள்ளன. வயதாக, வயதாக மார்பகங்களை தாங்கும் தசைகள் பலவீனமாகும். பிரசவத்துக்கு பின் குழந்தைகளுக்கான மார்பகங்களில் பால் சுரக்கும். அப்போது மார்பகங்கள் பெரிதாகின்றன. குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் தருவதை நிறுத்திய பிறகு, பால் சுரப்பது நிற்கும். இப்போதும் மார்பகங்கள் தளர்வடையும். உடல் எடையை குறைக்க முயற்சித்தால் மார்பகங்களை ஓரளவுக்கு தளர்வடையாமல் தடுக்கலாம். கர்ப்பமான பின் மார்பகங்களின் அளவு பெரிசாகும் பிரசவத்துக்கு பின் பால் ஊட்டுவதை நிறுத்திய பின் மார்பகங்களின் அளவில் மாற்றம் நடக்கும். இதனால் சருமத்தில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன.

    உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் மாதம் 2-3 கிலோ என மெதுவாக, நிதானமாக பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கலாம். ஒரே மாதத்தில் அதிக ஒர்க் அவுட் செய்து 5 அல்லது 5 + கிலோக்கு மேல் குறைக்க முயற்சி செய்தால் மார்பகங்கள் தளர்ந்துவிடும். சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு, விரைவில் மார்பகங்கள் தளரும். புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் அதிகம். அதிக உடல் எடை இருந்தால் அதைக் குறைக்க பாருங்கள். அதிக குண்டாக இருந்தால், பெரிய மார்பகங்களாக மாறி கொண்டே வரும். தளர்வதும் விரைவில் ஏற்படும். சரியான அளவில் பிராவை அணிவது நல்லது. இரவில் தூங்கும்போது மட்டும் பிராவை தவிர்க்கலாம்.
    தாய்மார்களின் மார்பகங்கள் தளராமல் இருக்க இயற்கை வழிகள்…

    புஜங்காசனா

    புஜங்கா என்றால் கோப்ரா (பாம்பு). பாம்பு படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அதுபோல பார்ப்பதற்கு தெரியும் இந்த ஆசனத்தின் செயல்முறை.

    குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள். கால்கள் சரியாக நீட்டி இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்களது கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வாருங்கள். அப்படியே மெதுவாக மூச்சு இழுத்தபடி தலை, தோள்பட்டை, மார்பகங்கள், நெஞ்சு, வயிறு பகுதியை தூக்குங்கள். இடுப்பு, தொடை, கால்கள் தரையிலே பதிந்திருக்க வேண்டும். 10 நொடி மூச்சை ஹோல்ட் செய்த பின் பிறகு மெதுவாக மூச்சைவிட்டபடி முன்னே இருந்த அதே நிலையில் கீழே படுத்துக் கொள்ளுங்கள்.
    இதுபோல 3 முறை செய்யுங்கள்.

    இந்த ஆசனம் தளர்ந்த மார்பகங்களை டைட்டாகும். குறைந்தது 3-4 மாதங்கள் வரை சரியாக செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

    ஐஸ் மசாஜ்

    ஐஸ் மசாஜ் செய்தால் தளர்ந்த தசைகள் மீண்டும் டைட்டாக உதவும். 2 ஐஸ் கட்டிகளை துணியில் வைத்து, கட்டி, ஒரு மார்பகத்துக்கு ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள். அதற்கு மேல் செய்தால், மறுத்துபோகிவிடும். எனவே ஒரு நிமிடம் போதும். சர்குலர் மோஷனாக மசாஜ் செய்ய வேண்டும்.
    உலர்ந்த, சாஃப்டான துணியால் துடைத்து விட்டு, சரியான அளவில் இருக்கும் பிராவை அணிந்து கொள்ளுங்கள். பின்னே சாய்ந்த சேர் அல்லது தலையணை வைத்தோ 30 நிமிடங்களுக்கு சாய்ந்து கொள்ளுங்கள். இதுபோல தினமும் 2 முறை செய்யுங்கள். 3 மாதம் கழித்து உங்களுக்கு மாற்றம் தெரியும்.

    ஆலிவ் எண்ணெய்

    உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள். இப்போது கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும். வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
    ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.

    வெள்ளை முட்டை மாஸ்க்

    ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் இருமுறை செய்து வரலாம்.

    நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை...

    அதிகமான டயட்டில் இருக்கவே கூடாது.
    உணவை சாப்பிடாமல் தவிர்க்க கூடாது.
    நேரம் கிடைக்கும் நீச்சல் அடிக்கலாம்.
    ஜாக்கிங், ரன்னிங் போன்றவை செய்ய வேண்டாம்.
    வாக்கிங் சென்றால் சரியான டைட்டான பிராவை அணிந்து கொள்ளுங்கள்.
    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.
    கூன்போட்டு நடக்க வேண்டாம்.
    ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுங்கள்.
    பிராவை சரியான அளவில் அணிவது மிக மிக முக்கியம்.
    வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.
    பெண்கள் எப்பொழுதும் தங்கள் பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். ஏனெனில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களையே அதிகம் குறிவைக்கின்றன.

    தனிமையில் இருப்பது அமைதியையும் ஆனந்தத்தையும் தரும் என்றாலும், அதில் ஆபத்தும் உள்ளது என்பதை முதலில் உணர வேண்டும். எனவே தன்னை மறந்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் தனியாக உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய எதிரி பயம்தான். எந்த சூழ்நிலையையும் பயமில்லாமல் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.

    இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் தங்கள் அருகில் வசிப்பவர்களை பற்றி அறிந்து கொள்ள நேரமும், விருப்பமும் இருப்பதில்லை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கட்டாயம் தங்களது அண்டை வீட்டாருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள வேண்டும். ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வருவார்கள்.

    அறிமுகம் இல்லாதவர்களுக்கு வீட்டு முகவரியை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கிறீர்கள் என்றால் இணையத்தில் பொருட்கள் ஆர்டர் செய்யும் போது உங்கள் கதவு எண்ணுக்கு பதிலாக அப்பார்ட்மெண்ட் எண்ணை மட்டும் கொடுக்கலாம். டெலிவரி செய்பவர்களை அப்பார்ட்மெண்ட் வாசலுக்கு வந்து உங்களை தொடர்பு கொள்ளும் படி அறிவுறுத்தலாம். அப்பார்ட்மெண்ட் வாசலில் உள்ள பாதுகாவலர் பகுதியில் நீங்கள் அவற்றை பெற்று கொள்ளலாம்.

    பெண்களின் பாதுகாப்பை மையமாககொண்டு ஏராளமான பாதுகாப்பு செயலிகள் இணையத்தில் தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்வது நல்லது. அவசர அலாரங்களை அமைத்தல் ஆடியோ பதிவுகளை அனுப்புதல் ஒரே நேரத்தில் பல அவசர எண்களுக்கு செய்திகளை அனுப்புதல் ஜி.பி.எஸ். இருப்பிடங்களை அனுப்புதல் போன்ற செயலிகளை தரவிறக்கம் செய்து பயன்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

    நம்முடைய பாதுகாப்பிற்கு தொழில் நுட்ப  வசதிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போன் வழியாகவே வீட்டில் உள்ள மின்விளக்குகளை எரிய வைக்கும் வசதி, பாதுகாப்பு உபகரணங்களை செயல்பட வைக்கும் வசதி போன்றவை தற்போது பயன்பாட்டில் உள்ளன. அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டிற்குள் நுழைவது போன்ற ஆபத்தை நீங்கள் உணரும்போது ஒரு அறையிலிருந்தே மற்ற அறைகளின் மின் விளக்குகளை எரிய விடுதல், தொலைக்காட்சியை செயல்பட வைத்தல் போன்றவைகளை செய்யலாம்.

    இதனால் வீட்டுக்குள் நுழைய முற்படும் நபர்களுக்கு நீங்கள் வீட்டில் தனியாக இல்லை, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் உள்ளனர் எனும் எச்சரிக்கையை கொடுக்கலாம். இதன் மூலம் ஆபத்துகளை தவிர்க்க முடியும்.
    கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமானது.
    கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பை ஈடு செய்ய நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியமானது. உடலில் நீர்ச்சத்தின் அளவை பராமரிக்காவிட்டால் தலைவலி, பசியின்மை, சரும பாதிப்பு, சோர்வு, தசை பிடிப்பு, ரத்த அழுத்த குறைவு, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். சிலவகை பழங்கள், காய்கறிகள், தானியங்கள் இயற்கையாகவே நீர்ச்சத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. அவைகளுள் ஏதாவது ஒன்றையாவது தினமும் தவறாமல் சாப்பிட வேண்டும். 80 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்தை மட்டுமே உள்ளடக்கிய பழங்களும் இருக்கின்றன.

    பிளம்ஸ் பழம், 85 சதவீதம் நீர்ச்சத்து கொண்டது. வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பை ஈடு செய்யும் வல்லமை கொண்டது.

    ஆப்பிள் பழத்தில் 86 சதவீதம் நீர் சத்து இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் பழம் சாப்பிடுவது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    அவகொடா பழமும் 86 சதவீதம் நீர் சத்து நிறைந்தது. இது உடலில் திரவ நிலையை சீராக பராமரிக்க உதவி செய்யும்.

    அன்னாசி, ஆரஞ்சு பழங்கள் 87 சதவீதம் நீர் சத்து கொண்டவை.

    முலாம் பழம் 90 சதவீதம் நீர்சத்து கொண்டது. இது கோடை வெப்பத்தை விரட்டி அடித்து உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் தன்மை கொண்டது.

    ஆரஞ்சு வகையை சேர்ந்த ‘கிரேப் புரூட்’ உடலில் நீர் இழப்பை ஈடு செய்யக்கூடியது. இதில் 91 சதவீதம் நீர் சத்து உள்ளது.

    ஸ்டாபெர்ரி பழங்கள் 92 சதவீதம் நீர் சத்து கொண்டவை. தர்பூசணியிலும் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது.
    பாகற்காய் சாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டது. பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேக வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
    தேவையான பொருட்கள்

    பாகற்காய் - 150 கிராம்
    முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
    தனியா - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 6
    புளி மற்றும் வெல்லம் - சிறிதளவு
    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்
    கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை

    விதையை நீக்கி பாகற்காயை நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுந்து, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

    பின் பாகற்காயை சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

    வதக்கிய பொருட்களுடன் புளி, வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    அத்துடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்த்து பரிமாறவும்.

    பாகற்காய் சட்னி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.
    பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது பெற்றோர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்று. அதற்கான முதல்படி அவர்களுக்கு ஏற்ற சரியான பள்ளியை தேர்வு செய்வது ஆகும். இன்றைய சூழலில், கல்வி நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. அதனால் கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு பெற்றோரும் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை சமச்சீர், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி, சிஐஇ என பல்வேறு பாடத்திட்ட முறைகள் உள்ளன. இதில் உங்கள் பிள்ளையின் எதிர்கால கனவிற்கு ஏற்ற பாடத்திட்டம் கொண்ட பள்ளியை தேர்வு செய்யுங்கள். போட்டித் தேர்வுகள், வெளிநாட்டில் மேற்படிப்பை தொடர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் என பலதரப்பட்ட தேர்வுகளை திறனுடன் எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் விதமாக அந்த பாடத்திட்டம் அமைந்திருப்பது அவசியம்.

    பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தினமும் பயணம் செய்வது என்பது உங்கள் குழந்தைக்கு உடல் சோர்வுடன் மனச்சோர்வையும் ஏற்படுத்தி விடும். ஆகையால் முடிந்தவரை வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியை தேர்வு செய்வது நல்லது.

    பள்ளியில் சேர்க்கை நடைபெறுவதற்கு முன்னதாக அந்த பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ள பள்ளியை தேர்வு பட்டியலில் வைக்காதீர்கள். 20 முதல் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதம் உள்ள பள்ளியில் தான் ஆசிரியரின் கவனம் மாணவர்கள் மீது முழுமையாக கிடைக்கும். போட்டி அதிகம் இருக்கும் வகுப்பு என்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பள்ளியில் சேர்த்தால் குழந்தை கூட்டத்தில் ஒருவராக மாறி வளர்ச்சியை எட்டிப்பிடிப்பதில் சிக்கல் உருவாகலாம்.

    காற்றோட்டமாக அமைதியான சூழலே கல்வி கற்பதற்கு ஏற்றது. எனவே வகுப்பறை கணினி அறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரடியாக சென்று பாருங்கள். கழிவறை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் கவனித்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.

    கல்வி என்பது ஏட்டு கல்வியை மட்டும் குறிப்பது அல்ல. அதனால் அந்த பள்ளியில் விளையாட்டு மற்றும் மாணவர்களின் பிற திறன்களை வளர்க்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று கவனியுங்கள். மாணவர்களுக்கு எத்தகைய வாய்ப்புகளை தருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்து பள்ளியை தேர்வு செய்யுங்கள்.
    முதுமை தெரியாத அளவுக்கு இளமையோடு வாழவேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், சிலர் மட்டுமே வெகுகாலமாக இளமையுடன் தோன்றுகிறார்கள்.
    லர் இளம் வயதிலேயே முதிய தோற்றத்துடன் வலம் வருவதையும் காணமுடிகிறது. உண்மையான வயதை மறைக்க முடியாது என்பது நிஜமாக இருந்தாலும் உடலைப் பேணுவதிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தினால் பெரும்பாலானவர்களால் இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்.சமச்சீரான சத்துணவை போதுமான அளவில் தினமும் உட்கொண்டால் இளமையை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்போது, ஆரோக்கியத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். அப்போது நோய்கள் ஏற்படாது. உடல் எடையும்

    கட்டுக்குள் இருக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வது இளமையின் முதல் படி என்பதை உணரவேண்டும்.

    ஒருவர் இளமையோடு இருக்கிறார் என்பதை அவரது சருமம்தான் முதலில் அடையாளம் காட்டுகிறது. சருமத்தில் இளமையை பொலிவூட்டவேண்டும் என்றால் சிலவகை உணவுகளை தவிர்க்கவேண்டும். குளிர்பானத்தை அறவே தவிர்த்திடுங்கள். காபி, டீ பருகுவதை குறைத்திடுங்கள். மதுப்பழக்கமும், புகைப்பழக்கமும் சரும அழகின் எதிரிகள் என்பதை உணர்ந்திடுங்கள். பழங்களை சாப்பிடலாம். பால், சர்க்கரை போன்றவை சேர்க்காத கிரீன் டீ பருகுவதையும் பழக்கத்தில் கொண்டுவரலாம்.

    உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால் உங்கள் உடலை இளமை ததும்பச் செய்ய முடியாது. உடல் இயக்கத்தை சீராக்கி, சிறப்பாக்க தினமும் 45 நிமிட இலகுவான உடற்பயிற்சி அவசியம். நீச்சல், ஓட்டம், சைக்கிளிங், ஏரோபிக்ஸ் போன்றவை எலும்பு, மூட்டுகளின் இயக்கத்திற்கு சிறந்த பயிற்சிகள் என்றாலும், இவைகளில் எதையும் செய்ய முடியாவிட்டாலும் தினமும் முக்கால் மணிநேரம் வேகமாக நடக்கும் நடைப்பயிற்சியையாவது செய்யுங்கள். வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நம்பியிருக்காமல் நீங்களே செய்யுங்கள். வீட்டிலே சிறிதாக ஒரு தோட்டத்தை உருவாக்கி பராமரியுங்கள்.

    சோம்பேறித்தனத்தை அகற்றிவிட்டு வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். உடலுக்கு ஏதாவது ஒருவகையில் வேலைகொடுங்கள்.உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, அதில் உங்கள் இளமைக்கு எதிராக என்னவெல்லாம் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும். கண்களில் கருவளையம் இருந்தால் பளிச்சென்று மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். கண்களை சுற்றியுள்ள சருமத்தில் இருக்கும் ஹுமோகுளோபினை சில என்சைம்கள் சிதைக்கும்போது, அது கருவளையமாக தென்படும். இதற்கு சரும டாக்டர்களிடம் இருந்து ‘ஜெல்’ வாங்கி பூசலாம் என்றாலும், இயற்கையான சிறந்த மருந்து ஆழ்ந்த உறக்கம்தான். தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்கி எழுந்தால் கருவளையம் அகலும். தினமும் போதுமான அளவு தண்ணீரும் பருகவேண்டும்.

    சிலரது முகத்தில் இளமை கொலுவிருக்கும். ஆனால் அவர்களது கையின் புறப்பகுதியில் சரும சுருக்கங்கள் ஏற்பட்டு, முதுமையை பறைசாற்றிவிடும். நடுத்தர வயதை கடக்கும்போது உடலில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் குறைய தொடங்கும். அப்போது கோலாஜென், எலாஸ்டின் போன்றவை தளர்ச்சியடையும். அதனால்தான் சரும சுருக்கம் தோன்றுகிறது. இதற்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும். பழம், காய்கறி, பழம் போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ப்பது அவசியம்.

    சிறிதளவு சர்க்கரையை ஆலிவ் எண்ணெய்யில் கலந்து குழைத்து சருமத்தில் பூசும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் இறந்த செல்கள் அகன்று சருமம் புதுப்பொலிவுபெறும். சருமத்தின் அழகுக்கு வெளியே எத்தனை வேலைப்பாடுகள் செய்தாலும், உடலுக்கு உள்ளே அதற்கான சரியான மாற்றங்கள் உருவாகவேண்டும். உள்ளே ஏற்படும் இயக்கங்களில் குறிப்பிடத்தக்கது, சீரான ரத்த ஓட்டம். ரத்தத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தால்தான் ரத்த ஓட்டம் துரிதப்படும். கூடுதல் ஆக்சிஜன் கிடைக்க நன்றாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    எவ்வளவு இளமையோடு நீங்கள் ஜொலித்தாலும், அதற்கு புன்னகைதான் கிரீடம் சூட்டும். அதனால் சிரிப்பை எல்லா நேரங்களிலும் தக்கவைத்துக்கொள்ளுங்கள். சிரிக்கும்போது முகத்திற்கு கூடுதல் ரத்த ஓட்டம் செல்லும். ஏராளமான தசைகள் செயல்பட்டு முகத்திற்கு கூடுதல் அழகு கிடைக்கும். இளமை கொலுவிருக்க இதழ்விரித்து சிரியுங்கள்!
    கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!
    பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் வயிறு பெரிதாகிவிடுகிறது. வயிற்றை சுற்றிலும் கொழுப்பு படிவதே அதற்கு காரணம். இது ‘பேபி கொழுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் விரிவடையும் வயிற்று தசை பகுதிகள் சுருங்காமல் இருப்பது கொழுப்பு சேர்வதற்கு காரணமாகிவிடுகிறது. அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!

    தூக்கம்: 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை 16 ஆண்டுகளாக கண்காணித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் உடல் எடை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கம் உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளுடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்துள்ளது. உடல் பருமன், கொழுப்பு பிரச்சினையை தவிர்ப்பதற்கு 7 மணி நேர தூக்கம் அவசியமானது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புரோபயாடிக் பயன்பாடு: புரோபயாடிக்குகள் நல்ல பாக்டீரியாக்களை கொண்டவை. அவை செரிமான மண்டலம் சீராக செயல்படு வதற்கு உதவும். அத்துடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த பாக்டீரியாக்கள் சமநிலையுடன் உடல் எடையை ஒழுங்குபடுத்தவும், வயிற்றில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. லாக்டோ பேசில்லஸ் பெர்மென்டம், லாக்டோபேசில்லஸ் அமைலோவோரஸ், லாக்டோபேசில்லஸ் கேஸ்ஸரி போன்ற லாக்டோபேசில்லஸ் குடும்பத்தை சேர்ந்த பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து கட்டுக்கோப்பான உடல்வாகுவை கட்டமைக்க உதவும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எடை தூக்கும் பயிற்சி: இந்த பயிற்சியை மேற்கொள்வது தசைகளை வலுவாக்குவதற்கு வழிவகுக்கும். அதற்காக கடினமான எடைகளை தூக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. கைக்கு அடக்கமான உபகரணங்களை கொண்டே பயிற்சிகளை தொடரலாம். ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வதும் பொருத் தமானது. இவை உள்ளுறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்துவதற்கும் உதவும்.

    வெள்ளை சர்க்கரை: இது உடல் உறுப்புகளுக்கு கெடுதல் விளைவிக்கக்கூடியது. உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்தால் இதய நோய்கள், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் நோய்கள் ஏற்படலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் சர்க்கரையின் அளவை பாதியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
    குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
    குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

    5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

    `கண்ணாடி குவளையை கையில் தூக்காதே.. அது கீழே விழுந்தால் உடைந்துவிடும்..' என்று குழந்தைகளிடம் சொன்னால், சில குழந்தைகள் `அதெல்லாம் எனக்கு தெரியும். உங்க வேலையை நீங்கள் பாருங்கள்' என்று சொல்லும். பெற்றோர் ஒன்று சொன்னால், சில குழந்தைகள் பதிலுக்கு ஒன்பது சொல்லும். இது பெற்றோருக்கு பிடிக்காதபோது அந்த குழந்தைக்கு `வாயாடி' பட்டம் சூட்டிவிடுவார்கள். பெரும்பாலும் சிறுமிகள்தான் இந்த பட்டத்தை சுமக்கிறார்கள்.

    `கண்ணாடி குவளையை தூக்காதே' என்று தாயார் சொல்லும்போது, அந்த குழந்தையின் மனதில் `நீங்கள் மட்டும் தூக்குகிறீர்கள். உங்களால் சரியாக செய்ய முடிந்த காரியத்தை என்னால் சரியாக செய்ய முடியாது என்று நீங்கள் நினைப்பது ஏன்?' என்ற கேள்வி எழும். தனது திறன் அங்கே குறைத்து மதிப்பிடப்படுவதாக அந்த குழந்தை நினைத்து ஆத்திரப்படுவதால்தான் அந்த கேள்வி எழுகிறது.

    `அந்த கண்ணாடி குவளையை உன்னாலும் தூக்க முடியும். மெதுவாக, கவனமாக அதை பிடித்து தூக்கவேண்டும். ஆனால் இப்போது அதை தூக்கவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். அதை தூக்கவேண்டிய அவசியம் ஏற்படும்போது உன்னை அழைக்கிறேன்' என்று கூறினால், குழந்தை பெரும்பாலும் அமைதியாகிவிடும். பதிலுக்கு பதில் பேசாது.

    தாங்கள் விரும்பும்படிதான் பெண் குழந்தைகளின் இயல்பு இருக்கவேண்டும் என்று கருதும் தாய்மார்கள், அந்த குழந்தைகள் பதிலுக்கு பதில் பேசிவிட்டாலே வாயாடி என்று பட்டம் கொடுத்துவிடுகிறார்கள். அந்த வார்த்தையின் வலி, பிரயோகிப்பவர்களுக்கு தெரிவதில்லை. தாங்கிக்கொள்ளும் குழந்தைக்குதான் தெரியும்.

    குழந்தைகளின் கருத்துக்களை சரியாக கேட்காமலும், அவர்கள் சொல்வதை சரிவர புரிந்துகொள்ளாமலும் `பொய் சொல்கிறார்கள்' என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள். ஆகவே விளையாட்டுத்தனமாக பொய் சொல்லத் தொடங்கும் காலகட்டத்திலே குழந்தைகளை முறைப்படுத்தி உண்மையை பேச பழக்கவேண்டும்.
    ×