
முள்ளங்கி - கால் கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் - சிறிதளவு
தனி மிளகாய்த்தூள் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவைக்கு
சிறு பருப்பு - 50 கிராம்
கடுகு, சீரகம் - தாளிக்க

செய்முறை :
முள்ளங்கியின் தோலை சீவி விட்டு அதனை சிறு சிறு துண்டாக வெட்டி வைக்கவும்.
சிறு பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த பருப்புடன் முள்ளங்கி, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், தனி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அத்துடன் 1/4 கப்பிற்கும் குறைவாக தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேகவைத்த முள்ளங்கி கூட்டில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான முள்ளங்கி கூட்டு ரெடி.