search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளசுகளை கவர்ந்த கைப்பைகள்
    X
    இளசுகளை கவர்ந்த கைப்பைகள்

    இளசுகளை கவர்ந்த கைப்பைகள்

    ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகளை பார்க்கலாம்.
    ஷாப்பிங் என்றால் உடை, அலங்கார நகைகள், காலணி ஆகியவற்றுடன் கைப்பைகளும் இப்போது இணைந்து விட்டன. அணியும் உடைக்கு ஏற்ப ஹேண்ட்பேக் வாங்குவது தான் இப்போது பேஷன். அதனாலேயே இதில் தினமும் புதுப்புது டிரெண்டிங் வரத்தொடங்கி விட்டது.

    இவற்றின் ரகங்களை போலவே விலையும் பலவிதம்

    ஹேண்ட்பேக் என்பது அழகு சாதன பொருட்களோடு சில அத்தியாவசிய பொருட்களும் வைக்க ஏற்றதாக வந்துள்ளது. அவற்றில் தற்போது இளசுகளை கவர்ந்த சில ஹேண்ட்பேக்குகள்

    1. இப்போது கைப்பைகளுடன் பர்ஸ், மினி ஹேண்ட்பேக் என ஐந்து இணைப்புகள் இணைந்து வருகின்றன. லெதரில் கிடைக்கும் இந்த ரகபைகள் தான் இப்போது பேஷன் இதில் பணம், மொபைல் உள்ளிட்டவற்றை தனித்தனியாக வைத்துக்கொள்ளும் அளவிற்கு இடவசதி உண்டு. விலைரூ 800 முதல் தொடங்குகிறது.

    2. சூட்கேஸ் வடிவிலான கைப்பைகள் இது கையில் எடுத்து கொள்ளும் வகையில் இலகுவாக இருக்கும் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கைப்பைகள் போல் தோற்றமளித்தாலும், இதன் விலை ரூ900 முதல் துவங்குகிறது. பார்ட்டி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எடுத்து சென்றால் ரிச் லுக் கிடைக்கும். இதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்க கைப்பிடி வைரத்தில் பட்டன் என பதித்து கொள்ளலாம்.

    3. அக்காலத்தில் பாட்டிகள் பயன்படுத்தி வந்த சுருக்குப்பை வடிவத்திலான கைப்பைகள் இப்போதைய இளசுகள் மனதை பெரிதும் ஈர்த்துள்ளது. லெதர் மட்டுமின்றி சணல், துணி வகைகளிலும் இது போன்று கைப்பைகள் கிடைக்கின்றன. சிறிதளவு பணம், மொபைல் போன் உள்ளிட்ட ஒரிரு பொருட்கள் வைத்துகொள்ள ஏற்றதாக இருக்கும். இவற்றின் விலை ரகத்தை பொறுத்து ரூ 300 முதல் ரூ 2000 வரையாகும்.

    4. இந்த ஆண்டின் டிரெண்டிங்காக இருப்பது ஆடைகளுக்கு மேட்சிங்கான கைப்பைகள் தான். இப்போது, ஆடை, அணிகலன், மாஸ்க், கைப்பை காலணி என அனைத்தும் ஒரே மாதிரி அணிவதையே மாடர்ன் இளசுகள் விரும்புகின்றனர். இதனாலேயே இந்த ரக கைப்பைகள் பெரிதும் அவர்களை கவர்ந்துள்ளது. ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் இந்த ரக கைப்பைகள் ஆர்டரின் பேரில் தயாரித்து தரப்படுகிறது. ரூ1600 முதல் இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

    5, முத்து, குந்தன் கற்கள் கொண்டு இவை தயாரிக்கப்படுவதால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பிரபலங்கள் அதிகமாக இந்த ரக விலையுயர்ந்த பர்ஸ்களை பயன்படுத்துகின்றனர். அதில் பதிக்கும் கற்கள் முத்துகளை பொறுத்து ரூ 3000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.

    இதுபோல பல ரகங்கள், வடிவமைப்புகளில் கிடைக்கும் கைப்பைகளை வாங்குபவர்கள் அவற்றை சரியான வகையில் ஆர்கனைஸ் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும். தேவையில்லாத விஷயங்களை அவற்றில் போட்டு நிரப்பாமல் இருந்தால் ஹேண்ட்பேக் அழகு கூடும்.
    Next Story
    ×