search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களைத் தாக்கும் பக்கவாதம்
    X
    பெண்களைத் தாக்கும் பக்கவாதம்

    பெண்களைத் தாக்கும் பக்கவாதம்

    கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
    ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறார். அத்துடன் உலகளவில் இறப்பை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் பாதிப்பாக பக்கவாதம் விளங்குகிறது. நோய்களால் மரணமடையும் 10 பெண்களில் 6 பேர் பக்கவாத பாதிப்புக்குள்ளாகி இறக்கிறார்கள். உடலின் ஒரு பக்கத்தில் உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் குறைபாடு, பேச்சில் தடுமாற்றம், உடல் ஒருங்கிணைப்பை இழப்பது போன்றவை பக்கவாத பாதிப்பின் வெளிப்பாடாகும்.

    மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ, ரத்த நாளங்கள் சிதைவடைவதாலோ பக்கவாதம் ஏற்படலாம். இதனால் மூளை செல்கள் இறக்கக்கூடும். ஆண்களை விட பெண்கள்தான் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பதும், வயது அதிகரிப்பதற்கு ஏற்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதும் பாதகமான அம்சங்களாக இருக்கின்றன. அதிலும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் பக்கவாத பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து போவது அதற்கான காரணமாக அமைந்திருக்கிறது.

    பக்கவாத பாதிப்பு விஷயத்தில் ஆண், பெண் இருவரிடையேயும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. கரோனரி தமனி நோய், இதய செயலிழப்பு போன்றவை ஆண்களுக்கு பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கின்றன. பெரும்பாலும் இதய நோய்கள் பெண்களுக்கு பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கேரளாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் பக்கவாத நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் பெண்களாக இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

    பக்கவாதத்தால் பாதிக்கப்படும் பெண்கள், ஆண்களுடன் ஒப்பிடுகையில் காலதாமதமாகவே மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண் நோயாளிகளை பொறுத்தவரை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் பராமரிப்பாளர் இல்லாமல் போவது பாதிப்பை அதிகப்படுத்திவிடுகிறது.
    Next Story
    ×