என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    காலையில் ஈஸியாக சமைத்து சாப்பிட வேண்டுமெனில் அதற்கு ஆம்லெட் சரியாக இருக்கும். இன்று வெஜிடபிள் சேர்த்து ஆம்லெட் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 2
    வெங்காயம் - 1
    தக்காளி - 1/2
    பச்சை மிளகாய் - 2  
    பீன்ஸ் - 1
    மிளகு தூள் - 1 சிட்டிகை
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின் அதில் பால், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, முன்னும், பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான வெஜிடபிள் ஆம்லெட் ரெடி!!!
    இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது.
    தூக்கம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானதுதான். எந்த பாகுபாடும் இல்லாமல் இருவருமே தினமும் இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கவேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் உடல் அமைப்பும், குடும்ப சூழலும் பெண்களை போதுமான அளவில் தூங்கஅனுமதிப்பதில்லை.

    பழைய காலத்தில் அவர்களுக்கு பெருமளவு வெளிவேலைகள் இருந்ததில்லை. ஆனால் இப்போது பெண்கள் வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே அலுவலக வேலைகளுக்கும் செல்கிறார்கள். ஆனாலும், பின் தூங்கி முன் எழ வேண்டியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களுக்கு பாலினரீதியாக இருக்கும் சில கடமைகளும் அவர்களின் தூக்கத்தை குறைக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. அதாவது மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்பக்காலம், பிரசவ காலம், பெற்றெடுத்த குழந்தையை பாலூட்டி வளர்க்கும் காலம், மெனோபாஸ் போன்றவைகளில் அவர்கள் தூங்கும் நேரம் வெகுவாக குறைந்துபோகிறது.

    மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களிலும், மாதவிலக்கு நாட்களிலும் பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அப்போது தொடர்ச்சியாக சில நாட்கள் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் தூக்கமின்றி அவதிப்படுவார்கள். மாதவிலக்கு நாட்களில் ஏற்படும் மனச்சோர்வும், உடல்சோர்வும் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடுகிறது.

    கர்ப்பிணியாகும் காலகட்டத்திலும் அவர்களது தூக்கத்தில் நெருக்கடி ஏற்படுகிறது. கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த பிரச்சினை உருவாகும். அது ஒன்பதாவது மாதம் வரை நீடிக்கும். கர்ப்பிணிகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தூக்கமின்றி அவதிப்படுவார்கள்.

    பெண்கள் எப்போதுமே தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஆரோக்கியமில்லாவிட்டால் தூக்கம் பாதிப்பதோடு, உடல் நலம் சீர்கெடுவதற்கும் அது காரணமாகிவிடும். நிறைய பெண்கள் நாள்பட்ட மூட்டு வலி, நுரையீரல் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நோய்த்தன்மையால் தொடர்ச்சியாக ஆழ்ந்து தூங்க முடியாமல் தவிப்பார்கள்.

    பெண்கள் தங்கள் வாழ்க்கையில் மெனோபாஸ் காலகட்டத்தில்தான் தூக்கமின்மையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அப்போது உடலில் அதிகமாக சூடு தாக்கும். அடிக்கடி தூங்கவேண்டும் என்பதுபோல் தோன்றும். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்து தூங்கமுடியாமல் இடைஇடையே விழிப்பு வந்து தொந்தரவு தரும். அப்போது அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதுபோல் தோன்றும். மனதில் நிம்மதி இருக்காது. அலைபாயும். பல்வேறு விதமாக மனஉளைச்சல் ஏற்படுவதால் தூக்கமின்றி தவிப்பார்கள்.

    பெண்கள் நன்றாக தூங்கவேண்டுமானால் முதலில் மனதை அமைதியாக்கவேண்டும். தசைகளை நெகிழவைக்கும் பயிற்சிகளை செய்து உடல் இறுக்கத்தை குறைக்கவேண்டும். இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிடவேண்டும். மசாலாக்கள் அதிகம் இல்லாத எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.
    காலையில் எழுந்தவுடன் எத்தனை மணிநேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும் உணவை வேகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் அறிந்து கொள்ளலாம்.
    காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.

    காலை உணவினால் வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். டிபன், சாப்பாடு, பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

    நீரிழிவு நோயாளிகள் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

    அரக்கப்பறக்க அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

    சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை ஆகியவை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
    பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். வாழ்க்கைக்கு தேவையான முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் தாங்கள் கற்றறிந்த அனுபவ பாடங்கள் மூலம் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

    பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் மாற்றக்கூடிய குணங்களை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகள் தாங்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு மிகுந்திருக்கும். வேடிக்கையான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் அப்படி இருப்பதில்லை. தாங்கள் விரும்பிய விஷயங்களை அரிதாகவே செய்வார்கள். ஏதாவதொரு நிர்பந்தத்திற்கு ஆளாகி, கட்டாயத்தின் பெயரில் செய்து முடிக்கவேண்டிய நிலையில் இருப்பார்கள். அது நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கும். அதற்கு இடம்கொடுக்காமல் குழந்தைகளை போல விரும்பிய விஷயங்களை செய்வதற்கு பெரியவர்கள் முயற்சிக்க வேண்டும்.

    மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? என்ன நினைப்பார்களோ? என்று குழந்தைகள் கவலைப்படுவதில்லை. ஆனால் பெரியவர்கள் அடுத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் தங்கள் காரியங்களை செய்வார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களின் விருப்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவர் களின் ஆலோசனைப்படியே செயல்படுவார்கள். குழந்தைகள் அதற்கு இடம் கொடுப்பதில்லை. தாங்கள் விரும்பியபடியே செய்து முடித்து மன நிறைவு அடைவார்கள்.

    குழந்தைகளிடம் நேர்மை குடிகொண்டிருக்கும். அவர்களுடைய மனம் குழப்பமின்றி தெளிவாகவும் இருக்கும். அவர் களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்வார்கள். அந்த பதில் நேர்மையாகவும், சரியாகவும் இருக்கும். அவர்களை போல வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க பெரியவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    பெரியவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சி தொலைந்து போயிருக்கும். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகையை உதிர்ப்பார்கள். குழந்தைகளின் உள்ளமும், முகமும் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொண்டிருக்கும்.

    குழந்தைகள் எளிதில் திருப்தி அடைந்துவிடுவார்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்வார்கள். ஆனால் பெரியவர்கள் நிறைய பேரிடம் எப்போதும் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு காரியத்தை செய்து முடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று எளிதில் மன திருப்தி அடையமாட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையையும் உணர மாட்டார்கள்.

    குழந்தைகள் புதிதாக ஏதேனும் ஒன்றை காணும்போதெல்லாம் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள். அதுபற்றி அறிந்து கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். அறியும் வரை உற்சாகத்துடன் செயல்படவும் செய்வார்கள். பெரியவர்கள் எந்தவொரு வேலையையும் ஆர்வமாக தொடங்குவார்கள். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் மெல்ல மெல்ல குறைய தொடங்கிவிடும்.

    குழந்தைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்களிடம் எதிர்காலம் பற்றிய கவலை எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்து நிகழ்காலத்தை வீணடிக்கிறார்கள். வாழ்க்கையில் கடந்து போகும் தருணங்கள் எதுவும் திரும்ப வராது என்பதை புரிந்து கொள்ள பெரியவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
    பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.
    சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு மருத்துவர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து சேரச் சொல்லலாம். உடனடியாக பிரசவம் இருக்கும் என்று நினைத்தாலும்,  மருத்துவமனையிலிருந்து வீடு அதிக தொலைவில் உள்ளது என்றாலும், பிரசவத் தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் சேரச் சொல்லலாம்.

    மகப்பேறு மருத்துவர்கள் சொல்லும் பிரசவத் தேதிகூட கர்ப்பிணிக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாக வைத்துக் குறிக்கப்படும் ஓர் உத்தேசக் கணக்குதான். ஆனாலும் பிரசவம் குறித்து கர்ப்பிணிக்கு எச்சரிக்கை தருவதற்கு உடலில் இயற்கையாகவே, சில அலார ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவற்றில் பிரசவ வலியும் ஷோ(Show) எனப்படும் நிகழ்வும் பனிக்குடம் உடைவதும் முக்கியமானவை.

    பிரசவ வலியில் பொய் வலி, உண்மையான வலி என இரண்டு வகைஉண்டு. அவற்றைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். கருப்பை சுருங்கி விரிவதால்தான் பிரசவ வலி ஏற்படுகிறது. இடுப்பில் மேலேயிருந்து கீழாக மின்னல் ஒன்று தாக்குவது போல் விட்டுவிட்டு இந்த வலி ஆரம்பிக்கும். 10 நிமிடம், 20 நிமிடம் என்ற இடைவெளியில்தான் இந்த வலி ஏற்படும். அப்படி ஏற்படும் கால இடைவெளியைக் கொண்டு உண்மையான பிரசவ வலியா, பொய் வலியா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

    ஒருமுறை வலி தொடங்கி, அடுத்தமுறை வலி ஆரம்பிக்கும் இடைவெளி ஒரே சீராக இருந்து, வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றால், அது உண்மையான பிரசவ வலி. அடுத்த பிரசவ அலாரம் இது: சளி கலந்த ரத்தம் பிறப்புறுப்பிலிருந்து கசியும். இதுதான் ‘ஷோ’! கருப்பையின் வாய்ப் பகுதியான செர்விக்ஸ் திறக்க ஆரம்பித்துவிட்டது என்பதைக் குறிக்கும் அறிகுறி இது.

    மூன்றாவது அலாரம் பனிக்குடம் உடைந்து அதிலிருந்து நீர் வெளியேறுவது. கருப்பையிலிருந்து குழந்தை இறங்கத் தொடங்கியதும், குழந்தையைச் சுற்றியுள்ள பலூன் போன்ற பனிக்குடமும் பிதுங்கலாக இறங்குகிறது.

    அப்போது பிதுங்கிய ஒரு பகுதி உடைந்துபோகும். இதனால் இளநீர் போன்று பனிக்குட நீர் பிறப்புறுப்பிலிருந்து வெளியேறும். இந்த உண்மை தெரியாத சில கர்ப்பிணிகள், தங்களுக்கு  சிறுநீர்தான் கட்டுப்படாமல் வெளியேறுகிறது என்று தவறாகப் புரிந்துகொள்வதும் உண்டு.

    மேற்சொன்ன 3 அலாரங்களில் எது ஏற்பட்டாலும் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். முக்கியமாக, வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும், பனிக்குட நீர் வெளியேறிவிட்டது என்றால், எந்த தாமதமும் இல்லாமல், உடனே மருத்துவமனைக்குக் கிளம்பிவிட வேண்டும். பனிக்குட நீர் இளநீர் பதத்தில் இல்லாமல், மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், உள்ளே குழந்தை மலம் கழித்து இருக்கிறது என்று பொருள். இப்போது இன்னும் சீக்கிரமாகக் கிளம்பிவிட வேண்டும்.
    கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...
    * குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

    * பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டுள்ளது.

    * ‘பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத்தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் ‘இன்சுலின்' என்று கருதுகிறார்கள்.

    * சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

    * பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ அதிக அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் பாதுகாக்கும்.

    * ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.

    * வைட்டமின்-பி 3, வைட்டமின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.
    வேப்பம்பூவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரம் ஒருமுறை வேப்பம்பூவை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    வேப்பம்பூ -  ஒரு கப்,  
    கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
    வேர்க்கடலை - கால் கப்,
    கடுகு, பெருங்காயம் - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 2,
    உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தனியாக வைத்து கொள்ளவும்.  

    சிறிதளவு எண்ணெயில் கடுகு,  பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து இறக்கவும்.

    வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு அதனுடன் வேர்க்கடலை, உப்பு, புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையல் பதத்தில் அரைக்கவும்.

    அருமையான வேப்பம்பூ வேர்க்கடலை துவையல் ரெடி.

    பலன்கள்: சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும்.  வாய்க் கசப்பைப் போக்கும்.
    கோடை காலங்களில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. சருமத்தின் ஆரோக்கியம் காக்க எல்லா பருவ காலத்திலும் போதுமான அளவு சன்ஸ்கிரீனை உபயோகித்து வர வேண்டும்.
    சரும வறட்சி பிரச்சினையால் நிறைய பேர் அவதிக்குள்ளாவார்கள். சிலரோ எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமத்தால் சிரமப்படுவார்கள். பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளாததே அதற்கு காரணமாகும். சருமம் எப்போதும்போல் பொலிவுடன் காட்சியளிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வறண்ட சரும பிரச்சினை கொண்டவர்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்வது அவசியம். அதற்கு மாய்ச்சுரேஸர்களை பயன்படுத்தலாம். அப்படி பயன்படுத்தியும் சருமத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம். போதுமான அளவு தண்ணீர் பருகி வர வேண்டும். அது சரும ஆரோக்கியத்திற்கு அவசியம். பகல் வேளையில் சருமம் எண்ணெய் பசை தன்மையோ, ஈரப்பதமான தன்மையோ கொண்டிருந்தால் மாய்ச்சுரேஸர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    குறைந்த ஈரப்பதம் காரணமாக சருமம் வறண்டு பொலிவின்றி காணப்படும். ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு ஏற்ற கிரீம்களை பயன்படுத்தலாம். எண்ணெய்யை பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. சருமத்திற்கு நறுமணம் சேர்க்கும் எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தலாம். முதலில் சருமத்திற்கு உகந்த தேங்காய் எண்ணெய், ஆலிவ் போன்றவைகளை தடவிவிட்டு அதன்பிறகு நறுமண எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    வெயிலின் தாக்கம் குறைய தொடங்கியதுமே நிறைய பேர் சன்ஸ்கிரீனை தவிர்த்துவிடுகிறார்கள். கோடை காலங்களில் மட்டும்தான் சன்ஸ்கிரீனை உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. சருமத்தின் ஆரோக்கியம் காக்க எல்லா பருவ காலத்திலும் போதுமான அளவு சன்ஸ்கிரீனை உபயோகித்து வர வேண்டும்.

    பருவ காலத்தில் உணவு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்த சத்தான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமம் பாதிப்புக்குள்ளாமல் காக்க உதவும். சருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கும். மழைக் காலத்தில் பழங்களையும் அதிகம் சாப்பிட வேண்டும். அவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
    பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிக்கு பெண்களைதான் நியமிக்கின்றன. அதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான்.
    உங்களுக்கு தேவை அழகா, வசீகரமா? என்ற கேள்வியை பெண்களிடம் கேட்டால், பலரும் இரண்டும் ஒன்றுதானே என்பார்கள். பெரும்பாலானவர்கள் அழகுதானே முக்கியம் என்றும் சொல்வார்கள். இல்லை! அழகைவிட வசீகரம் உயர்ந்தது. ஏன்என்றால் அழகாக இருக்கும் பலரால் அனைவரையும் வசீகரிக்க முடிவதில்லை. அழகு என்பது ஒரே ஒரு விஷயம். ஆனால் வசீகரம் என்பது பல சிறப்பியல்புகளின் கலவை. அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது பேச்சு. அதனால்தான் அதை பேச்சுக்கலை என்கிறோம்.

    பெண்களுக்கு பல விஷயங்களையும் கையாண்டு பேசத் தெரிந்திருக்கவேண்டும். பேசத் தெரிந்த பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். கூடவே கனிவான அணுகுமுறையும் இருந்தால் அவர்களுடன் கைகோர்க்க பலரும் முன்வருகிறார்கள். அவர்களே தலைவி என்ற அந்தஸ்துக்கு உயர்கிறார்கள்.

    பெண்களின் இயல்பான பேச்சும், அணுகுமுறையும் அவர்கள் இறங்கும் காரியங்களில் வெற்றியை தருகிறது. அதற்கு மிகுந்த பொறுமையும், பயிற்சியும் தேவை. இன்று பல நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் பெண்களுக்கு பேச்சு பயிற்சி அளிக்கின்றன. காரணம், ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. யாருடைய மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்தபடி அவர்களை கையாளுவதில்தான் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது.

    பெரும்பாலான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் பணிக்கு பெண்களைதான் நியமிக்கின்றன. அதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான். இயல்பாகவே பெண்கள் பொறுமைசாலிகள். இருப்பினும் சுற்றுச்சூழலும், வேலைப்பளுவும் அவர்களின் பொறுமையை சோதித்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பெர்சனாலிட்டி டெவலப்மென்ட், பப்ளிக் ரிலேஷன் போன்ற பயிற்சிகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன. அங்கு கிடைக்கும் பயிற்சிகள் அவர்களை வசீகரம் நிறைந்த புதிய பெண்களாக மாற்றுகிறது. அது அவர்கள் தங்கள் பணிகளில் மென் மேலும் உயர வழி வகுக்கிறது. அழகால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடிகிறது. போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும் என்பது உண்மை.

    முக அழகிற்கு பல அழகு சாதனங்கள் உள்ளன. அழகான பேச்சுக்காக எந்த சாதனமும் இல்லை. ஆனால் நம்மை நாமே அழகு படுத்திக் கொள்ள இந்த பேச்சு ஒரு சாதனமாக அமைகிறது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். இதனை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பதற்றமான நேரத்தில் தேவையற்ற பேச்சுகளை பேசக்கூடாது. அந்த சூழலில் பெண்கள் தன்மையாகவும், நம்பிக்கையாகவும் பேசி பதற்ற சூழலைப்போக்கி, அங்குள்ள சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக ஆக்கவேண்டும். அதில்தான் பேச்சுக்கலையின் வெற்றி அடங்கியிருக்கிறது.

    பெண்களின் தன்மையான பேச்சுக்கு ஒரு சக்தியிருக்கிறது. அது அனைவரையும் உங்கள் வசப்படுத்தும். மேலும் அவ்வாறு கனிவாக பேசுவது நற்குணமும், சிறந்த பண்பும் ஆகும். நம்முடைய வார்த்தை பலரால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இத்தகைய வசீகர பேச்சை கையாளலாம். கண்டிப்பில் திருத்த முடியாத குழந்தைகளைக் கூட தன்மையான பேச்சால் திருத்தி விடலாம். அப்போது பெண் களுக்கு வசப்படும் கனிவும், பணிவும் காலப்போக்கில் அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும். நல்ல வார்த்தைகள் பெண்களை அழகாக மற்றவர்களுக்கு காட்டும். உங்களுடைய புறத்தோற்ற அழகு சாதிக்காத ஒன்றை தன்மையான வார்த்தைகள் சாதிக்கும். எதிரியை நண்பனாக்குவதும், நண்பனை எதிரியாக்குவதும் வார்த்தைகள்தான்.

    பெண்கள் அன்றாடம் வாழ்க்கையில் பலரை சந்திப்பார்கள். தங்களைவிட உயர்ந்தவர்களை, பொறுப்பான பதவிகள் வகிப்பவர்களை, பிரபலமானவர்களை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள் நிறைய இருக்கும். அந்த பண்புகளை கற்றுக்கொண்டு, நன்றாக உள்வாங்கிக்கொண்டு, உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். நீங்கள் அழகாக இல்லாவிட்டாலும் அத்தகைய பண்புகள் உங்களை வசீகரமானவராக்கிவிடும்.
    வடுக்களின் தன்மையை பொறுத்து அதனை குணப்படுத்தும் தன்மையும் மாறுபடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே அதிக வீரியம் இல்லாத வடுக்களை விரைவாக மறையச்செய்துவிடலாம்.
    ‘சிக்கன் பாக்ஸ்’ எனப்படும் அம்மை நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களின் சருமத்தில் தென்படும் வடுக்கள் மறைவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். நோயின் வீரியம் அதிகமாக இருக்கும்போது சருமத்தை உராய்வது, சொறிவது கடுமையான வடுக்கள் தோன்ற வழிவகுத்துவிடும். சிலருக்கு அந்த வடுக்கள் மறையாமல் அப்படியே நிலைத்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. வடுக்களின் தன்மையை பொறுத்து அதனை குணப்படுத்தும் தன்மையும் மாறுபடும். ஏதேனும் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை வடுக்களாக மாறிவிடக்கூடும். சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே அதிக வீரியம் இல்லாத வடுக்களை விரைவாக மறையச்செய்துவிடலாம்.

    தேங்காய் எண்ணெய்: இது சருமம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் தரும். அம்மை நோய் பாதிப்பால் ஏற்படும் வடுக்கள் மீது தேங்காய் எண்ணெய்யை தடவலாம். தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவும்.

    கற்றாழை: இதன் குளிர்ச்சித்தன்மை சருமத்திற்கு இதமளிக்கும். சருமத்தில் ஏற்படும் நமைச்சலை போக்குவதற்கு கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்யை கலந்து வடுக்கள் மீது தடவி வரலாம். தொடர்ந்து செய்துவந்தால் வடுக்கள் மறையத்தொடங்கிவிடும்.

    அகன்ற பாத்திரத்தில் 5 சொட்டு எலுமிச்சை சாறு, 5 சொட்டு டீ-ட்ரீ ஆயில், 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 10 சொட்டு ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வடுக்கள் மீது தடவலாம். மென்மையான சருமம் என்றால் அதனுடன் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த எண்ணெய் தடவிய பிறகு சூரிய ஒளிபடும்படி வெளியே செல்லக்கூடாது.

    தேன்: இது கொலோஜனை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தேனை நேரடியாக வடுக்கள் மீது தடவலாம். உலர்ந்ததும் அரை மணி நேரம் கழித்து சருமத்தை நீரில் கழுவிவிடலாம்.
    சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம்? எப்போதெல்லாம் உபயோகிக்கலாம்? சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசத்துக்கு அடுத்தபடியாக சானிடைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிக்கடி கை கழுவுவதற்கு பதிலாக சானிடைசரை சில துளிகள் கையில் தடவுவதை சவுகரியமாக பலரும் கருதுகிறார்கள். அடிக்கடி உபயோகிக்கவும் செய்கிறார்கள். சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம்? எப்போதெல்லாம் உபயோகிக்கலாம்? சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவ வேண்டும்?

    கைகளின் உள்பகுதி மட்டுமின்றி மேற்பரப்பு முழுவதும் ஈரப்பதமாகும் வரை கை முழுவதும் சானிடைசரை தடவி நன்றாக தேய்த்துவிட வேண்டும். சானிடைசர் உலர்ந்து போகும்வரை குறைந்தபட்சம் 20 முதல் 30 வினாடிகள் வரை தேய்க்க வேண்டியது அவசியமானது.

    ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பாதுகாப்பானதா?

    சானிடைசர்களில் உள்ள ஆல்கஹால் எந்தவொரு உடல்நல பிரச்சினைகளையும் உருவாக்குவதில்லை. ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் சிறிதளவு மட்டுமே சருமத்தில் உறிஞ்சப்படுகிறது. மேலும் பெரும்பாலான சானிடைசர் தயாரிப்புகளில் சரும வறட்சியை குறைக்க உதவும் ‘எமோலியண்ட்’ எனும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு மென்மை தன்மையை கொடுக்கக்கூடியது.

    சானிடைசரை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

    உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை தடுப்பதில் ஆண்டிபயாட்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர் பாட்டிலை தொட்டு பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்துமா?

    ‘‘சானிடைசரை தொட்டு கைகளை சுத்தப்படுத்தும்போதே பாட்டிலில் இருந்திருக்கக்கூடிய கிருமிகளையும் சேர்த்தே அழித்துவிடுகிறீர்கள். அப்படி எல்லோரும் பொது இடத்தில் சானிடைசரை பயன்படுத்தும்போது அங்கு கிருமிகளின் ஆபத்து குறைவாகவே இருக்கும். அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கும்.

    அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லதா? கையுறைகளை அணிவது நல்லதா?

    கையுறைகளை அணிவது மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பிற்கு கிருமிகளை கடத்தும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின் கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே கையுறைகளை அணிவார்கள். எனவே கைகளை சுத்தப்படுத்துவதே சிறப்பானது.
    கொரோனா வீட்டு தனிமையில் இருப்பவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்க தலைவர், ஜெயலால் விவரிக்கிறார்.
    கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்கள், மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை முதல் அலையை ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது.

    லேசான கொரோனா அறிகுறிகள், பாதிப்புகளை கொண்டவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையை தொடர்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படி வீட்டு தனிமையில் இருப்பவர்கள், சிகிச்சை பெறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்திய மருத்துவ சங்க தலைவர், ஜெயலால் விவரிக்கிறார்.

    நிலை 1: ஒரு நபர் கொரோனா நோய் பாதிப்பு கொண்டவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டாலோ, காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, வாசனை, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை அனுபவித்தலோ அவர் முதலில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். குடும்பத்தினர் உள்பட மற்றவர்கள் யாருடனும் நேரடியாக பேசுவதை தவிர்க்க வேண்டும். இரவில் நன்றாக தூங்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மருத்துவர் அல்லாத வேறு யாரிடமும் ஆலோசனை பெறக்கூடாது.

    நிலை 2: அடுத்த கட்டமாக அருகில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது கொரோனா நடத்தை விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். அங்கு தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகும் வரை, வீட்டில் தனிமை அறையில் சுய தனிமையை தொடர வேண்டும். சுய தனிமைப்படுத்துதலின் போது அணிந்திருக்கும் துணிகளையும், பயன்படுத்திய பொருட்களையும் தனியாக வைத்திருங்கள். துணிகளை தனியாகத்தான் துவைக்க வேண்டும்.

    வீட்டு உறுப்பினர்களிடம் பேசும்போது மட்டுமின்றி எப்போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்களையும் முக கவசம் அணியச்சொல்ல வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். தலைப்பகுதியில் மட்டுமின்றி வயிற்று பகுதியிலும் தலையணையை வைத்து அழுத்தியபடி குப்புறப்படுத்து தூங்க வேண்டும். மூச்சை நன்றாக ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட பழகிக்கொள்ளவும் வேண்டும். வழக்கத்தை விட தண்ணீர் அதிகம் பருக வேண்டும். தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடலாம். அவை மன அமைதிக்கு வித்திடும்.

    நிலை 3: பரிசோதனை முடிவில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனே மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள்.

    நிலை 4: பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாவிட்டாலோ, லேசான அறிகுறிகள் இருந்தலோ வீட்டில் தனிமையை தொடருங்கள். சுகாதார நிபுணர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்று, அதனை பின்பற்றுங்கள்.

    கொரோனா

    நிலை 5: வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் விறுவிறுப்பான நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், டிரெட்மில்லில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். அதிக உடல் வலியை உணர்ந்தாலோ, சோர்வாக இருந்தாலோ கடினமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம். அதேவேளையில் மூச்சை நன்றாக உள் இழுத்து வெளியிடும் சுவாச பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். யோகாசனம் செய்வதற்கு முடிந்தால் அதனையும் மேற்கொள்ளலாம். ஒருசில சுய பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம். முதலில் ஆக்ஸிமீட்டரில் ஆக்சிஜன் அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அதில் ஆக்சிஜன் அளவு 96 முதல் 100 வரை இருப்பது சிறந்த நிலையாகும். வீட்டுக்குள்ளேயே நடைப்பயிற்சி செய்துவிட்டு மீண்டும் ஆக்ஸிமீட்டரை பயன்படுத்தி ஆக்சிஜன் அளவை அளவிட வேண்டும். அப்போது ஆக்சிஜன் அளவு 5 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தால் சுவாச நோய்த்தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

    நிலை 6: உடல் வெப்பநிலை, இதய துடிப்பு, சுவாச அளவு, ஆக்சிஜன் செறிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை 8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது சரி பார்க்க வேண்டும். நீரிழிவு நோய் இருந்தால் தினமும் இரண்டு முறை ரத்த அழுத்தத்தை சரிபார்த்து மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளலாம். 8 மணி நேரம் தூங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு மணி நேரம் வயிற்றுக்கு அடியில் தலையணையை வைத்து குப்புறப்படுத்து தூங்க வேண்டும்.

    நிலை 7: இதயத்துடிப்பு தொடர்ந்து 100-க்கு அதிகமாக இருந்தாலோ, மூன்று நாட்களுக்கு மேல் வெப்பநிலை 100-க்கு மேல் இருந்தாலோ, கடுமையான தலைவலி அல்லது தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு இருந்தாலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

    நிலை 8: மருத்துவருடன் தொடர்பில் இருந்தபடி, அவரது பரிந்துரையின் பேரில் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாமா? வேண்டாமா? என்பதை மருத்துவர் பரிந்துரை செய்வார். ஒருவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் ரெம்டெசிவிர் அல்லது ஆக்சிஜன் செறிவூட்டலை பெறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள். 10 முதல் 15 சதவீதம் பேருக்கே இவை தேவைப்படும். அவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால் மருத்துவர் நிச்சயம் பரிந்துரைப்பார்.

    நிலை 9: வீட்டு தனிமையில் இருக்கும்பட்சத்தில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் சி.ஆர்.பி. அளவு 10-க்கும் மேல் தொடர்ந்து உயர்ந்திருந்தால் ஆபத்தான அறிகுறியாகும். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பும் வரை டாக்டரின் பரிந்துரையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
    ×