என் மலர்
ஆரோக்கியம்
காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் சிவப்பு அரிசி வேர்க்கடலை கார பணியாரம் செய்து சுவைக்கலாம். அதை மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்,
வேர்க்கடலை - அரை கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
பொடியாக நறுக்கிய கேரட், கோஸ் - தலா கால் கப்,
பச்சை மிளகாய் - 2 (நறுக்கிக் கொள்ளவும்),
உப்பு, பெருங்காயத்தூள், நெய் - தேவையான அளவு.
செய்முறை
அரிசி வகைகள், வேர்க்கடலை இரண்டையும் தனித் தனியாக ஊற வைத்து ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை போட்டு சற்று வதக்கிய பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி அதனுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பணியார கல்லை அடுப்பில் வைத்து குழியில் நெய் ஊற்றி, அதில் கலந்த மாவை ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
சத்தான சுவையான சிவப்பு அரிசி வேர்க்கடலை கார குழிப்பணியாரம் ரெடி.

ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
குழந்தையில்லாமல் தவிக்கும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் இன்றைய நவீன மருத்துவ உலகத்தில் சாத்தியமாகி இருக்கிறது. ஐ.வி.எப் எனப்படும் மருத்துவ சிகிச்சை முறை குழந்தையின்மைக்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. ‘இன் விட்ரோ பெர்டிலைலேஷன்’ எனப்படும் இது கரு உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் இனப்பெருக்கம் சார்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான செயல்முறையாகும். கருச்சிதைவு, பிறவிக் குறைபாடு, அசாதாரணமான கருத்தரிப்பு சூழல்களை தவிர்த்து கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஐ.வி.எப் சிகிச்சைக்கான காலகட்டம் 2 முதல் 3 மாதங்களாகும். 35 முதல் 45 வயதுட்பட்ட பெண்களுக்கு பொருத்தமானது.
ஐ.வி.எப். கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ளும்போது கவனிக்க வேண்டியவை:
1. உடலுக்கு தேவையான ஓய்வு முக்கியம். அது சோர்வை போக்கும். உடல் நலத்தையும் பாதுகாக்கும். குறிப்பாக தினமும் போதுமான நேரம் தூங்கும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
2. குடும்பத்தினரின் அருகாமையும், ஆதரவும் அவசியம். நெருக்கமாக பழகுபவர்கள், குடும்பத்தினரிடம் நேரத்தை செலவளிக்கும்போது மனம் இலகுவாகும். உடல் மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
3. பிரஷ்ஷாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு பழக்கத்தை பின்பற்றுங்கள்.
4. ஆழமாக சுவாசிக்கும் யுக்திகளை கடைப்பிடிப்பது மனதை அமைதிப்படுத்தும் மற்றொரு சிறந்த வழிமுறையாகும். காற்றோட்டமான இடத்தில் சவுகரியமாக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்து சுவாசிக்கலாம். அது மனதை மட்டுமல்ல நரம்புகளையும் வலுப்படுத்தும்.
5. கருத்தரிப்பு சிகிச்சையில் இருக்கும் காலகட்டத்தில் கடினமான வீட்டு வேலைகளை தவிர்த்து சின்ன சின்ன வேலைகளை செய்து வரலாம். காபி அதிகம் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
6. புகையிலை பொருட்களை தவிர்ப்பதும் முக்கியமானது. அது கருவுறுதலில் சிக்கலை ஏற்படுத்திவிடும். முக்கியமாக டாக்டர்களின் ஆலோசனைகளை பின்பற்றி செயல்படவேண்டும். மன உளைச்சலுக்கோ, நெருக்கடிகளுக்கோ உள்ளாகக்கூடாது.

பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. இந்த குறிப்பு இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இதோ....
பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம். இந்த குறிப்பு இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இதோ....
குழந்தையின் வளர்ச்சி :
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. பிறந்த குழந்தையானது...
முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது மாதத்தில் : தவழும்.
9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.
10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும். அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
* கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
* பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நல்லது. அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.

திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள்.
நோய்த்தாக்குதல், பொருளாதார நெருக்கடி, தொழிலுக்காக அடிக்கடி புலம் பெயரும் நிலை போன்ற சிக்கல்களால் திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார்கள். குழந்தைகளை பெற்றுக் கொள்வது எதிர்காலத்தில் தங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார்கள். முன்பு ‘நாமிருவர் நமக்கு இருவர்’ என்ற நிலை இருந்தது. பின்பு ‘நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற கருத்து உருவானது. தற்போது ‘நாமிருவர் நமக்கு எதற்கு இன்னொருவர்’ என்ற சிந்தனையும், ‘நாமே குழந்தை.. நமக்கேன் இன்னொரு குழந்தை’ என்ற எண்ணமும் புதிய தம்பதியரிடையே உருவாகியிருக்கிறது.
எல்லா பெண்களுமே வேலை பார்த்து பணம் சம்பாதித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைக்கிறார்கள். சுயமாக சம்பாதித்து வாழும் பெண்களில் பலர் திரு மணத்தை பற்றியும், தாம்பத்ய வாழ்க்கையை பற்றியும் பெரிதாக கவலைப்படுவதில்லை. காலத்தின் கட்டாயத்தில் திருமணம் செய்து கொண்டாலும் தங்கள் பொருளா தாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று தாய்மையை தள்ளிவைக்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க, `குழந்தை வளர்ப்பு என்பது ஒரு உணர்வு பூர்வமான கடமை. தான் பார்க்கும் உத்தியோகம் அந்த கடமையை நிறைவேற்ற தடைக்கல்லாக அமைந்துவிடுமோ?' என்ற கவலையும் பல பெண்களிடத்தில் எழுந்திருக்கிறது. அதற்கு ஏற்பத்தான் பல தாய்மார்களுடைய வாழ்க்கை சூழலும் அமைந்திருக்கிறது. அவர்கள் சம்பாதிக்கும் இயந்திரங்கள் போல் இயங்குகிறார்கள். குழந்தைகளோடு கழிக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. காலையில் பரபரப்புடன் வேலைக்கு கிளம்பிச் சென்று இரவில் களைப்புடன் வீடு திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குழந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மனம் விட்டு பேசக்கூட அவகாசம் இருப்பதில்லை. அதனால் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகள் பொம்மைகளோடு பொழுதை கழிக்கின்றன. கம்ப்யூட்டரிலே மூழ்கி கனவு காண்கின்றன.
முன்பெல்லாம் குழந்தை இல்லாததால் பல பெண்கள் இல்லற வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். திருமணமாகி பல வருடங்களாக குழந்தைபேறு இல்லாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதை அவர்களால் தடுத்து நிறுத்த இயலாமல் போயிருக்கிறது. அதனால் பல பெண்களின் குடும்ப வாழ்க்கை பாதியிலேயே முடிந்திருக்கிறது. இன்றைய நிலைமை அப்படி இல்லை. உத்தியோகத்தில் இருக்கும் சில பெண்கள், தங்கள் கடமைக்கு தடையாக மாறக்கூடாது என்று குழந்தை பெற்றுக்கொள்ளாமலே காலத்தை கடத்தும் மனநிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
மேலை நாடுகளில் ஒரு பெண் காதலிக்க தொடங்கி, கல்யாணத்தை நோக்கி நகரும்போது, `குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இருக்கிறதா? இல்லையா?' என்ற கேள்வி அவள் முன் வைக்கப்படுகிறது. அந்த முடிவுக்கு தக்கபடிதான் அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளுமா? அல்லது திருமணம் செய்துகொள்ளாமலே வாழுமா? என்பது தெரியவரும். பெண், குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்ளும் நபரை அவள் திருமணம் செய்துகொள்கிறாள். குழந்தைக்கு தந்தையாக விரும்பாத ஆண் என்றால் அவரை அவள் திருமணம் செய்து கொள்வதில்லை.
இந்தியா மக்கள் தொகை அதிகமுடைய நாடுதான் என்றாலும் குழந்தை பெற்றுக்கொள்ள தடை ஏதும் இல்லை. திருமணமும், குழந்தைப் பேறும் மங்களகரமான விஷயமாகவே இன்றும் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் வாழ்க்கையில் அந்த தருணங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவே பாவிக்கப்படுகிறது.
அவரவர் விருப்பப்படி வாழ எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருசில முடிவுகளை எதிர்கால நலன் கருதி எடுக்கவேண்டியதிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு குழந்தை களால் மட்டுமே உருவாகிறது. ஒரு குழந்தை கூட இல்லாமல் கணவன்-மனைவி இருவர் மட்டுமே
குடும்பம் ஆகிவிட முடியாது. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. நிதி நிலைமை, பதவி, அந்தஸ்து இதெல்லாம் மட்டும் வாழ்க்கை ஆகிவிடாது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமூக பாதுகாப்பு என்ற ஒன்று இருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலமே அந்த சமூக பாதுகாப்பை அடைய முடியும். குடும்பத்திற்கு குழந்தைகளும் தேவை.

லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தும் போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு கண்களில் உள்ள விழிவெண்படலத்தை பெருமளவு பாதிக்கின்றன.
மனித உறுப்புகளில் மிகவும் மென்மையானது கண். உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், சம்பந்தப்பட்ட உறுப்புகளை பாதிப்பதோடு அல்லாமல் பல நேரங்களில் கண்களையும் பாதிப்பதுண்டு. அதனால் நாம் கண்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். பொதுவாக கண்களை தூரப்பார்வைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
நம்மில் பெரும்பாலோனோர் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இப்படி நீண்ட நேரமாக செல்போனை கண்களுக்கு அருகே வைத்து பார்ப்பதால் அதன் கதிர்வீச்சுகளால் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் வேலை செய்பவர்கள் தினமும் 12 முதல் 16 மணிநேரம் வரை தொடர்ந்து அவற்றை பயன்படுத்துகின்றனர். அதுபோன்ற நீண்ட நேரம் அவற்றை பயன்படுத்துவதால் அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்ள் கண்களை வெகுவாக பாதிக்கின்றன. கூடவே இலவச இணைப்பாக தலைவலி, கண்வலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.
செல்போன் லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்து போது அவற்றிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு கண்களில் உள்ள விழிவெண்படலத்தை பெருமளவு பாதிக்கின்றன. சாதாரணமாக நாம் ஒரு நிமிடத்தில் பலமுறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் செல்போனை பார்த்து கொண்டிருக்கும் போது குழந்தைகள் கண்களை இமைக்க மறந்து விடுகின்றனர். கூடவே இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட கண்களை இமைக்காமல் செல்போனை கூர்ந்து நோக்கி கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்று நீண்டநேரம் பார்ப்பதால் கண்ணின் விழி வெண்படலத்துக்கு மேலுள்ள ஈரப்பதம் வறட்சியடைந்து கண்களில் எரிச்சல் நீர் வடிதல், அழுத்தம் போன்றவை ஏற்படும். கூடவே கண்கள் சிவந்து தலைவலியும் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள செல்போன், ஐபேட், லேப்டாப் போன்ற கேட்ஜெட்டுகளை குறைந்தபட்சம் 30 செ.மீ. தொலைவில் வைத்து பார்ப்பது நல்லது. இவற்றை அதிக வெளிச்சத்திலோ மிகக்குறைவான வெளிச்சத்திலோ வைத்து பயன்படுத்த வேண்டும். 20 நிமிடத்துக்கு மேலாக தொடர்ந்து இந்த கேட்ஜெட்டுகளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உள்ளிட்ட கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும் போது சிறிது இடைவெளி விட்டு பசுமையான இடங்களை பார்க்க வேண்டும். இப்படி செய்வது சிலியரி தசைகளுக்கு நல்லது.
கண்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸை போக்க சில ஆலோசனைகள்..
* சிறிது நேரம் கண்களை மூடி இமைகள் மீது ஒரு துண்டு வெள்ளிக்காயை வைக்கலாம்.
* கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்தலாம்
* கம்ப்யூட்டர் லேப்டாப் போன்றவற்றில் எழுத்துக்களை பெரிதுபடுத்திகொள்ளலாம். தெளிவாக தெரியும், எளிமையான எழுத்து வகைகளை பயன்படுத்தலாம்.
* கணினியின் திரை கண்பார்வை கோட்டிற்கு கீழே அமையும் படி பார்த்துகொள்ள வேண்டும்.
* கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் போது சிறுசிறு இடைவேளைகளை எடுத்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
* ஏசி இருந்தால் அது முகத்தில் படும்படி அமரக்கூடாது.
* மேஜை விளக்குகளை பயன்படுத்தலாம்.

பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.
முதுமை அல்லது வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் நமது உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள கண்டிப்பாக முடியும். பொதுவாகவே திருமணத்துக்கு பிறகு பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.
இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.
மனநிலை முக்கியம்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
உடல் மேல் கவனம்
நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும். உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.
பொழுதுபோக்கு
டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை...
ஆரோக்கியமான உணவு
நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
நல்ல நட்பு
எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது. நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது நம் மனநிலை. வயதாகிவிட்டது என்ற மனநிலையை தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.

குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் மாலையில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்),
கோதுமை ரவை - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.

எதையும் சாத்தியப்படுத்திய இந்த டெக்னாலஜி ஒரு ஊழியரை நிறுவனத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்றாலும் அதன் வேலைகளையும் ஆன்லைன் மூலமே முடித்து விடுகிறது.
கொரோனா சாத்தியப்படுத்திய விஷயங்களில் முதன்மையானது டிஜிட்டல் உலகம்தான். அதன் வளர்ச்சியால்தான் இன்று ஓரளவு பொருளாதாரத்தை தக்க வைக்க முடிந்துள்ளது. குறிப்பாக ‘ஒர்க் பிரம் ஹோம்’ என்கிற கலாசாரமே தெரியாமல் இருந்த மக்களுக்கு இன்று அது பழகிய ஒன்றாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இது நெருக்கடியாக இருந்தாலும் தற்போது இதற்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக்கொண்டனர்.
ஆன்லைன் நேர்காணல்கள் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதிலும் நீங்கள் பழக்கப்பட்டவராக இருக்க சில அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க முனைகிறது இந்தக் கட்டுரை.
எப்படி ஆன்லைன் நேர்காணலிலும் அசத்தலாம் என்று பார்க்கலாம்.
ஆன்லைனில் நேர்காணல் தொடங்கும் முன் இருட்டு இல்லாத உங்கள் முகம் தெளிவாக தெரியக் கூடிய இடமாக தேர்வு செய்யுங்கள். அங்கு யாருடைய தொந்தரவும் இருக்கக் கூடாது. எந்த ஒலியும் கேட்கக்கூடாது. அந்த கேமராவில் உங்களைத் தவிர எதுவும் தெரியக் கூடாது. அந்த அறை எதிரொலி இல்லாமல் இருக்க வேண்டும்.
இண்டர்நெட் தட்டுப்பாடு இருக்கக் கூடாது:
நேர்காணலுக்கு முன் இணைய வசதி, சிக்னல் சிறப்பாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஆடியோ, லேப்டாப் கேமரா, மைக்ரோபோன் நன்கு வேலை செய்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். செல்போன் சார்ஜ், லேப்டாப் சார்ஜ் முழுமையாக இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்:
ஆன்லைன் இண்டர்வியூ புதிது என்பதால் முன் கூட்டியே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அறிமுகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கேமராவில் நீங்களே பேசி ரெக்கார்ட் செய்து ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆன்லைன் என்பதால் நோட்டில் குறிப்பு கூட எழுதி வைத்துக்கொண்டு அமரலாம்.
உடல் மொழி அவசியம்:
ஆன்லைன் தானே என அலட்சியம் காட்டாமல் நல்ல உடை அணிந்து அமருங்கள். இதுவும் உங்களுக்கு கூடுதல் மதிப்பையும், மதிப்பெண்ணையும் கொடுக்கும். கேமரா ஆன் செய்ததும் மலர்ந்த சிரிப்புடன் ஹலோ/வணக்கம் சொல்லுங்கள். முகத்திலும், உடல் அசைவிலும் நம்பிக்கையை கொண்டு வாருங்கள். நேராக நிமிர்ந்தவாறு அமர்ந்து பேசுங்கள்.
பொறுமை அவசியம் :
ஆன்லைன் என்பதால் சில நேரங்களில் நாம் பேசுவது அல்லது அவர்கள் பேசுவது சிறிது நேரம் கழித்து கேட்கலாம். எனவே பதில் அளிக்கவோ, அவர்கள் பேசுவதை கவனிப்பதிலோ பொறுமை அவசியம். அவர்கள் முழுமையாக பேசி முடித்த பின்பு, நன்கு கேட்டுவிட்டு உங்கள் பதிலை தர தயாராகுங்கள். முன்கூட்டியே வாய் திறக்க வேண்டாம். முடிக்கும்போதும் சிரித்த முகத்துடன் நிறைவு செய்யுங்கள்.

நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.
நிற்பதற்கு நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கும் பலரையும் வீட்டுக்குள் கட்டிப் போட்டு விட்டது கொடிய வைரஸ் கொரோனா. சில நூறு முதலீடு செய்து வயிற்றைக்கழுவும் தெருவோர வியாபாரிகள் முதல் பல நூறு கோடிரூபாய் முதலீடு செய்து தொழிலைப் பெருக்கும் முதலாளிகள் வரை அனைவரும் கொரோனாவின் கெட்ட ஆட்டத்தில்முடங்கிப்போய் விட்டனர்.
இணைய வெளியில்...
பலரின் வாழ்வாதாரம் பறி போனது என்று வேதனைப்படுவதா? அல்லது பலரின் வாழ்வே பறி போய் விட்டதே என்று கண்ணீர் விடுவதா? என்று தெரியாமல் அனைவரும் கலங்கி நிற்கும் தருணம் இதுவாகும்.
இந்தநிலையில் மன உறுதியே மகத்தான மருந்து என்பதும், வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என்பதும் அரசாலும், மருத்துவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் செல்போன்களைத் தொடாதே என்று பெற்றோரால் எச்சரிக்கப்பட்ட மாணவர்கள் இன்று செல்போனும் கையுமாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் எத்தகைய இடர்பாடுகளையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சில இளைய தலைமுறையினர் இணைய வெளியில் கலக்கி புதிய தொழில் முனைவோராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
ஏராளமான வழிகள்
இதுகுறித்து இளைய தலைமுறையினர் கூறியதாவது:-
ஆரம்ப காலங்களில் பொழுது போகாமல் இணையத்துக்குள் உலா வரத்தொடங்கினோம். காலப்போக்கில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம் என்று யோசிக்கத்தொடங்கும் போது தான் ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கு ஏராளமான வழிகள் கொட்டிக் கிடப்பது தெரியவந்தது. அதன்படி ப்ரீலான்ஸ், வேலைகளான நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.
இதுதவிர வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை உருவாக்கி அதிகப்படியானவர்களைக் கவர முடிந்ததால் அதன் மூலமும் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான பின் தொடர்வோரை உருவாக்கி இன்ஸ்ட்டா இன்ப்ளூயன்சராக மாறி ஒவ்வொரு பதிவுக்கும் பணம் சம்பாதிக்கலாம். இதுதவிர ஆன்லைன் மூலம் மூளையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் ஏராளமாக இணையத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எதிர்பாராத ஒன்று
ஒட்டுமொத்தமாக அனைத்து கதவுகளையும் அடைத்து வைக்கும் ஊரடங்கு என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாகும். அதேநேரத்தில் இணையக் கதவுகளை விரியத்திறந்து வைத்துள்ளது இயற்கையின் வழிகாட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.
இணையம் மூலம் உலகம் நம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று பெருமை பீற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நிச்சயமாக சபாஷ் போடலாம்.
இனிவரும் காலங்களில் இணையம் என்பது ஒவ்வொருவரோடும் இணைந்த ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இணையத்தில் இணைந்து தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினால் நல்லது என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

பலாப்பழத்தில் இருக்கும் தாது, வைட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
பலாப்பழம் எல்லோருக்கும் பிடித்தமானது. அனைவரும் அதனை ரசித்து, சுவைப்பார்கள். சத்துக்கள் நிறைந்த பலாப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் உள்ளது. இந்தப் பழத்தின் அனைத்து பகுதிகளுமே உணவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பலாப்பழம் பற்றிய முத்தான பத்து விஷயங்கள்:-
1 பலாப்பழத்தில் எளிதில் ஜீரணமாகக்கூடிய சர்க்கரை சத்துக்களான ப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்றவை உள்ளன. 100 கிராம் பழத்தில் 95 கலோரி உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. 100 கிராம் பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஒருவருக்கு ஒரு நாள் தேவைப்படும் வைட்டமின்-ஏ சத்தின் அளவை ஈடுகட்ட அவர் 200 கிராம் பலாப்பழம் சாப்பிடவேண்டும். 100 கிராம் சாப்பிட்டால் அவரது வைட்டமின்-ஏ தேவையில் பாதி அளவு ஈடுகட்டப்படும்.
2 பலாப்பழ விதைகளை காயவைத்து தூளாக்கி அந்த மாவில் இருந்து பலவகையான பலகாரங்களை தயார் செய்து சுவைக்கலாம்.
3 பலாப்பழ விதைகளும் சத்து நிறைந்ததே. மாமிசத்தில் இருக்கும் புரோட்டீன் சத்து பலாப்பழ விதையில் உள்ளது. பைட்டோ நியூட்ரிஷியன்ஸ், ப்ளோவனாயிட்ஸ் போன்றவை அதிகமாக இருப்பது புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும்.
4 பலாக்காயை ‘ஏழைகளின் இறைச்சி’ என்று குறிப்பிடுவார்கள். காயின் தசைப்பகுதியை மாமிச உணவுகளின் ருசியுடன் தயாரித்து உண்ணலாம். இது இரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் வைட்டமின்-ஏ சத்து பார்வைத் திறனையும் மேம்படுத்தும்.
5 பலாப்பழத்தில் இருக்கும் தாது, வைட்டமின் சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காக்கும்.
6 பலாப்பழத்தில் இருக்கும் நார்ச் சத்து சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பலவகை காய்கறிகளில் இருக்கும் நார்ச்சத்துக்கு ஒப்பானதாக இது இருக்கிறது. பலாப்பழத்தில் இருக்கும் சர்க்கரை சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிரடியாக உயரவிடாமல் வைத்திருக்கும். அதே நேஇரத்தில் சர்க்கரை நோயாளிகள் இரண்டு சுளைக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இதில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தத்தை ஓரளவு சீராக்க இது உதவுகிறது.
7 பலாச்சுளை தவிர மீதமுள்ள பகுதிகளை பலரும் குப்பையில் வீசிவிடுவார்கள். சுளைகளை ஒட்டியுள்ள தசைப்பகுதியில் ‘பெக்டின்’ என்ற சத்து உள்ளது. அது சர்க்கரை நோய், கொழுப்பு, புற்றுநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
8 பலாப்பழத்தின் முள் பகுதிகளை நீக்கிவிட்டு அதன் தசைப்பகுதியை நீரில் போட்டு கொதிக்கவைத்து கூட்டு, பொரியல் போன்றவைகளை செய்தால் அது மாமிச உணவுகளுக்கு ஈடான சுவையும், சத்தும் தரும்.
9 தற்போது குடல் புற்று நோயால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பலாப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் குடலில் புற்றுநோயை உருவாக்கும் வேதி மாற்றங்களை தடுக்கிறது.
10 தாது சத்துக்கள், பொட்டாசியம், வைட்டமின்-பி போன்றவைகளும் பலாப்பழத்தில் உள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் வீட்டிற்குள்ளேயே நாட்களை கடத்தும் நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மனஅழுத்தமும் அதனால் உருவாகும் சச்சரவுகளால் குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய சூழலும் ஏற்படக்கூடும்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்றோர் பணிக்கு செல்வதும் பிள்ளைகள் பள்ளி அல்லது கல்லூரிகளுக்கு செல்வதும், முதியோர்கள் வீட்டின் இதர பணிகளை கவனித்து கொள்வதுமாக வாழ்க்கை நகர்ந்தது. ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறி, அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே நாட்களை கடத்தும் நிலையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மன அழுத்தமும் அதனால் உருவாகும் சச்சரவுகளால் குடும்ப அமைதி குலைந்து விடக்கூடிய சூழலும் ஏற்படக்கூடும். அத்தகைய நிலையை தவிப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம்.
பணிகளை அதற்குரிய நேரத்துக்குள் செய்து முடியுங்கள்..
அலுவலகத்திலிருந்து பணிகளை செய்யும் போது மாலை 6 மணிக்குள் அனைத்து கடமைகளையும் முடித்து விட்டு கிளம்பி விடுவோம். ஆனால் வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளும் போது முறையான கால அவகாசம் என்பது இல்லாமல் நீண்ட நேரம் கணினி முன்பாக அமர்ந்திருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அது பல விதங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பணி காரணமாக குடும்பத்தினருடன் அன்பாக பேச இயலாதது, மன அழுத்தம், பணியை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இயலாதது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உடனுக்குடன் பணியை முடிக்கும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
அவ்வப்போது உடலுக்கு அசைவு முக்கியம்
தொடர்ச்சியாக பணிகளுக்கு இடையில் அவ்வப்போது அர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சற்று தூரம் நடக்கலாம். அல்லது 5 நிமிட நேரம் மற்றவருடன் பேசலாம். குறிப்பாக குழந்தைகளுடன் சிரித்து பேசுவது புன்னகையோடு பேசுவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.
வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வீட்டில் இருப்பதால் இல்லத்தரசிகளுக்கும் வீட்டில் உள்ள பெண்களுக்கும் வழக்கமான சமையல் பணிகளுடன். இனிப்புகள் மற்றும் நொறுக்கு தீனிகள் தயாரிப்பு என்று வேலைப்பளு அதிகமாகக்கூடும். சமையல் வேலை என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்று நினைக்காமல் வீட்டில் உள்ளவர்களும் அதில் பங்கு எடுத்து கொள்ள வேண்டும். சிறுவர் சிறுமிகளுக்கும் சிறிய வேலைகளை பகிர்ந்தளிக்கலாம். இது குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கத்தையும் பொறுப்புணர்வையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும்.
வீட்டிற்குள் விளையாட்டு
தற்போதைய சூழலில் குழந்தைகளுக்கான பாடங்கள் முதல் விளையாட்டு வரை எல்லமே ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது. அதன் காரணமாக அவர்கள் மொபைல் போனில் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, மொபைல் போனையே உற்று நோக்குவது, உடல் அசைவுகள் எதுவும் இல்லாமல் இருப்பது போன்றவற்றால் அவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சகைள் உருவாகலாம். வெளியிடங்களுக்கு விளையாட செல்வதும் நடைமுறைக்கு ஒத்து வராது. அதனால் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வீட்டிற்குள்ளேயே ஏதேனும் விளையாட்டுகளில் ஈடுபடலாம். குறிப்பாக பாடல்கள் பாடுவது, ஆடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடும் போது அனைவரிடமும் மகிழ்ச்சிபெருக்கெடுத்து ஆரோக்கியம் சீராகும்.
மனநலம் முக்கியம்
வீட்டிற்குள்ளேயே அடைந்து இருப்பதால் ஏற்படும் மனச்சோர்வில் இருந்து விடுபட சிறிய தோட்டம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். அதற்காக நிறைய இடவசதி வேண்டியதில்லை. ஜன்னல் ஓரத்தில் சிறிய டப்பாவில் மண்ணை நிரப்பி அதில் புதினா, கொத்தமல்லி, போன்ற செடிகளை எளிமையான வளர்க்கலாம். பசுமையான செடி, கொடிகளை வளர்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் விடுவது மற்றும் அதன் வளர்ச்சியை அனைவரும் கவனித்து வருவது போன்றவற்றால் குடும்ப அங்கத்தினர்களுக்கிடையே நெருக்கமும் அதிகரிக்கும்.

கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். அவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி பிரச்சினையையும் உண்டாக்கும்.
கோடை காலத்தில் கண்களுக்கு குளிர்ச்சி தேவை. உடல் குளிர்ச்சியாக இருந்தால்தான் கண்களும் ஆரோக்கியமாக இருக்கும். மற்ற பருவ காலங்களை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் காலையில் மட்டுமின்றி மாலையிலும் தலைக்கு குளிப்பது நல்லது.
அதுபோல் தலைக்கு தவறாமல் எண்ணெய் தேய்ப்பதும் அவசியமானது. அது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும். கண்கள் குளிர்ச்சியாக இருப்பதற்கும் வழிவகுக்கும்.
தலையை சுத்தமாக பராமரிக்காவிட்டாலும் கண் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியதும் அவசியமானது.
லேப்டாப், கணினி பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் சோர்வு எட்டிப்பார்ப்பது இயல்பானது. கோடையில் இந்த பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி முகம் கழுவுவது நல்லது. கண்களை நன்றாக மூடிய நிலையில் இமைகள் மீது தண்ணீரை ஒற்றியபடி கழுவுவது சிறப்பானது. அது கண்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பும் எட்டிப்பார்க்கும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். அவை கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைவலி பிரச்சினையையும் உண்டாக்கும். கண்களில் ஏதேனும் அசவுகரியம், தொடர்ந்து தலைவலி, பார்வை மங்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் பரிசோதிப்பது அவசியமானது.
கணினி முன்பு அமர்ந்து பணி செய்பவர்கள் அவ்வப்போது இரு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்த்து கண்களில் ஒற்றி எடுக்கலாம். அப்படி இளம் சூட்டுடன் கண்களின் மீது வைப்பது இமைகளுக்கும், கண்களின் உள் அடுக்குகளுக்கும் இதமளிக்கும்.
சுடு நீரில் காட்டன் துணியை முக்கி மிதமான சூட்டில் கண்களின் மீது ஒற்றி எடுக்கவும் செய்யலாம். உபயோகித்த டீ பேக்கையும் கண்களின் மீது வைத்து ஒற்றி எடுக்கலாம்.
கண்களின் ஆரோக்கியம் காப்பதற்கு ஆழ்ந்த தூக்கமும் அவசியம். கோடை காலத்தில் சிலரது தூங்கும் நேரம் குறைந்து போகும். இரவில் தூக்கம் வரும் வரை செல்போனில் ஆழ்ந்திருப்பார்கள். அதுவும் கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
கோடை காலத்தில் கண் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவது பொதுவானது. கண்கள் சிவத்தல், வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும். அதிலும் கணினி முன்பு அமர்ந்து பணிபுரிபவர்களுக்கு கோடை காலத்தில் பாதிப்பு அதிகமாகும். கண் எரிச்சல் பிரச்சினை பிரதானமாக இருக்கும். சூரிய கதிர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதும் கண் சார்ந்த பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணமாக அமைந்திருக்கும்.