என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    நம் நாட்டின் வளையல் காலசாரம் கிமு 2600 முதல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை நம் நாட்டு பெண்கள் அணியும் வளையல்களின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
    கடா வளையல்கள்

    இந்த வகை வளையல்களை மார்வாடி மற்றும் ராஜஸ்தான் பெண்கள் அதிகம் அணிவார்கள். இவ்வகை இரண்டு பெரிய வளையல்கள் நடுவில் சில சிறிய வளையல்களை அணிவர்.

    ஐதராபாத் வளையல்கள்

    முற்றிலும் கற்களால் ஆன வடிவில் அல்லது பூக்கள் போன்ற வடிமைப்பை கொண்டிருக்கும்.

    குத்தன் வளையல்கள்

    கற்கள் பதிக்கப்பட்ட இந்த வகை வளையல்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ் பெற்றவை

    பஞ்சாபி வளைவல்கள்

    பெரும்பாறும் சீக்கியர்களின் திருமணங்களில் மணப்பெண் கைகளில் இந்த வகை வளையல்களை காணலாம்.

    பெங்காலி வளையல்கள்

    பெங்காலி பெண்கள் வளையலை தங்கள் மாங்கல்யத்துக்கு நிகராக எண்ணுவர். தங்கத்தால் செய்யப்படும் இந்த வகை வளையல்களை திருமணமான பெண்கள் கட்டாயம் ஒன்றாவது அணிந்திருப்பர்.

    கேரள வளையல்கள்

    நாம் அணியும் பெரும்பாலான தங்க வளையல்கள் கேரள வகையை சார்ந்தவை தான். முற்றிலும் தங்கத்தினால்  ஆன வளையல்கள் கேரள வளையல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ஜெய்ப்பூர் வளையல்கள்

    முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்திய காலசாரத்தோடு ஒன்றிபோன சில பழக்கங்களில் இதுவும் ஒன்று. பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் இநத் வகை வளையல்கள் பிரசித்தமானவை.
    பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.
    தேவையான பொருட்கள் :

    எள்ளு  - 2 டீஸ்பூன் (லேசாக வறுத்தது)
    வறுத்த வேர்க்கடலை - அரை கப்
    வறுத்த காய்ந்த மிளகாய்  - மூன்று
    தேங்காய் துருவல்  -2  டீஸ்பூன்
    புளி  - ஒரு சிறு துண்டு
    உப்பு  - தேவைகேற்ப
    எண்ணெய்  - ஒரு டீஸ்பூன்
    கடுகு  - கால் டீஸ்பூன்
    கறிவேபில்லை - சிறிதளவு

    செய்முறை :

    எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

    சத்தான எள்ளு வேர்க்கடலை சட்னி ரெடி.
    பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம்.
    மாதவிடாய் என்பது பெண்களுக்கு அசவுகரியமான விஷயம். எவ்வளவு திறமைசாலிகளாக, மன வலிமை கொண்டவர்களாக இருந்தாலும் அந்த நாட்களில் சற்று சோர்ந்துவிடுவார்கள். மாதந்தோறும் கடந்து செல்ல வேண்டிய கடினமான நாட்களாக மாதவிடாய் அமைந்திருக்கிறது. மாதவிடாய் கால சிரமங்களை கூடுமானவரை குறைப்பதற்கான வரப்பிரசாதமாக அமைந்திருப்பவை ‘சானிட்டரி நாப்கின்கள்’. பெண்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு மருத்துவ குணங்களுடனும் இன்றைய காலகட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன. இதை பயன்படுத்துவதன் மூலம் பல அசவுகரியங்களை தவிர்க்கலாம். குறிப்பாக அலுவலகம் செல்லும் பெண்களுக்கு மிகுந்த சவுகரியம் அளிக்கக்கூடியது.

    ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் சானிட்டரி நாப்கின் பற்றிய விழிப் புணர்வு இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அதனை பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த நவீன யுகத்திலும் மாதவிடாய் காலத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பற்றி பெண்கள் மற்றவர்களிடம் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் இருக்கிறது. கடைக்கு சென்று சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு தயங்கும் நிலையும் தொடரத்தான் செய்கிறது. தங்கள் மகளின் நலனில் அக்கறை காண்பிக்கும் பெற்றோர் கூட மாத விடாய் விஷயத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்கள். ஆரம்ப காலகட்டத்திலேயே மாத விடாய் பற்றிய புரிதலை உண்டாக்க வேண்டும். அந்த நாட்களை எப்படி கடக்க வேண்டும் என்பதை மகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது தாயாரின் கடமை.

    அந்த சமயத்திலும் தங்களின் பணிகளை சவுகரியமாக செய்வதற்கு பழக்க வேண்டும். அதை ஒரு பெரிய பாரமாக நினைத்து அன்றாட பணிகளை முடக்கிவிடக்கூடாது. எல்லா நாட்களிலும் இயல்பாக இருப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அது அசவுகரியத்தை தவிர்க்க உதவும். பழங்காலத்தில் மாதவிடாய் சமயத்தில் பெண்களை தீண்ட தகாதவர்களாக கருதி ஒதுக்கி வைக்கும் நிலை இருந்தது. அது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. மாதவிடாய் பற்றிய புரிதலை பெற்றோர் உண்டாக்க முடியாத பட்சத்தில் தகுந்த மருத்துவரிடம் அழைத்து சென்று புரிய வைக்கலாம்.

    மனித உடலில் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் சக்தி ரத்தத்தில் இருக்கும் ‘ஸ்டெம் செல்களுக்கு’ உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த செல்கள் பெண்களின் ரத்தத்தில் நிறைந்திருக்கிறது. ஆண்களின் ரத்தத்தில் அத்தகைய சக்தி கிடையாது. புற்றுநோய் முதல் அத்தனை வகையான நோய்களையும் இந்த ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும். இது பெண்களை காக்கும் சக்தியாக செயல்படக்கூடியது. ஆனால் மாதவிடாய் நாட்களில் உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் ரத்தத்தில் கலந்து வெளியேறுவதால் நோய்த்தொற்று ஏற்படும் என்று கருதி விலகி இருக்கிறார்கள்.

    பொதுவாகவே பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியே சொல்ல தயங்குவார்கள். நம்பிக்கைக்குரியவர்களிடம்தான் மனம் விட்டு பேசுவதற்கு முன் வருவார்கள். ஆனாலும் மாதவிடாய் கால சிரமங்கள் பற்றி பேசுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த விஷயத்தில் தாயார்தான் மகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். மாதவிடாய் கால அசவுகரியங்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்கி கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். இது அவர்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தனி கவனம் செலுத்த வேண்டும். நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கி கூற வேண்டும். எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உடலை எப்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும், உள்ளாடைகளை கிருமி நாசினியால் எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றையெல்லாம் பின்பற்ற வைக்கும்போதுதான் பெற்றோரின் முழு கடமையும் நிறைவு பெறும். சானிட்டரி நாப்கின் தேர்விலும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதெல்லாம் இயற்கை மூலிகை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நாப்கின்கள் புழக்கத்திற்கு வந்திருக்கின்றன. அவை நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக இருக்கின்றன. நாப்கின்கள் மட்டுமின்றி ‘மென்ஸ்ட்ரல் கப்’, ‘டேம்போன்’ உள்ளிட்டவையும் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காதவற்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

    குடும்ப நலன் சார்ந்த முகாம்களில் பெற்றோர்களுக்கு வாழ்க்கை பாடம் கற்றுத்தரப் படுகிறது. அங்கு பிள்ளைகளை வளர்க்கும் விதம் பற்றியும் விளக்கி புரியவைக்கப்படுகிறது. ஆனாலும் டீன் ஏஜ் பெண்கள் மாத விடாய் காலத்தை எதிர்கொள்ளும் பக்குவம் பற்றி பெரும்பாலும் கற்றுத்தரப்படுவதில்லை. மாதவிடாய் சமயத்தில் பிள்ளைகளை அணுகும் முறை சில பெற்றோர்களிடம் மாறுபடும். மற்ற எல்லா நாட்களிலும் அக்கறை கொள்ளும் பெற்றோர், இப்போது மட்டும் ஏன் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள் என்ற குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே அந்த நாட்களில் பெண்களின் மனதில் ஒருவித குற்ற உணர்வு வெளிப்படும். அது தேவையற்றது. இதுபற்றி ‘பேட்மேன்’ படம் மூலம் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் அக்சய் குமார் சொல்கிறார்.

    ‘‘முதலில் இதைப்பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. ஆண் களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று நினைக்க வேண்டாம். நிச்சயமாக சம்பந்தம் இருக்கிறது. நாம் எல்லோரும் உருவாக காரணமாக இருப்பது இந்த உதிரம்தான். தாயின் வயிற்றில் கருவிற்கு சக்தி கொடுப்பது, நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பது இந்த உதிரம்தான். கரு வளர ஆதாரமாக இருப்பதும் இந்த உதிரம் தான். கரு உருவாகாதபோது அந்த உதிரம் வெளியேறி விடுகிறது. அந்த நாட்களில் ஆண்களும் பெண்களிடம் அணுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் கடமை. பெண்களின் உடல் ஆரோக்கியம் மீது ஆண்களும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தரமான சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதுகாப்பு, சவுகரியம், ஆரோக்கியம் பற்றியும் விளக்கி கூற வேண்டும்’’ என்கிறார்.
    பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.
    குழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அவற்றை தவறாமல் பின்பற்ற வைக்கவும் வேண்டும். சில பழக்கவழக்கங்களை முறையாக கடைப் பிடிக்காமல் அசட்டையாக இருப்பார்கள். அதற்காக அவர்கள் மீது கோபமோ, கடுமையோ காண்பிக்கக்கூடாது. அவசியம் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது. அப்படி கட்டாயப்படுத்தினால் விரக்தி அடைவார்கள். அடம்பிடிக்கவும் செய்வார்கள். மென்மையான அணுகுமுறையை கையாண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது. இரவில் குழந்தைகள் தாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சில குழந்தைகள் பகல் பொழுதில் நன்றாக தூங்கிவிட்டு இரவில் தாமதமாக தூங்குவார்கள். அதுவே நாளடைவில் வழக்கமாகிவிடும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கவைக்கும் வழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் அதிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி சிரமப்படுத்தக்கூடாது. காலையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் அடித்து எழுப்பக்கூடாது. மென்மையாக அணுகி தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திவிட வேண்டும்.

    குழந்தைகள் பல் துலக்கும் விஷயத்தில் அலட்சியம் காட்டுவார்கள். பற்களை நன்றாக அழுத்தி தேய்க்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். நன்றாக பல் துலக்குவதால் எந்தெந்த மாதிரியான பல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்கும் வழக்கத்தையும் பின்பற்ற வைப்பது நல்லது.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ‘டேபிள் மேனர்ஸ்’ எனப்படும் சாப்பிடும் விதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். நேர்த்தியாக அமர்ந்து சாப்பாட்டை கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்க வேண்டும். சாப்பாட்டை வீணாக்குவதற்கும் அனுமதிக்கக்கூடாது.

    சிறுவயதிலேயே உடல் தூய்மையை கடைப்பிடிப்பதற்கு பழக்கிவிட வேண்டும். சாப்பிட செல்லும் முன்பு கை, கால்களை கழுவுவது, வெளியே சென்று விளையாடிவிட்டு வந்தால் கை, கால், முகம் கழுவுவது, விளையாட்டு பொருட்களை அந்தந்த இடத்தில் வைப்பது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சுத்தப்படுத்துவது என சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுவதற்கு பழக்கிவிட வேண்டும். வாரம் ஒருமுறை அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும்.

    சிறுவயது முதலே குடும்ப பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். குடும்பத்தின் நிதி நிலையை அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். அப்படி செய்தால் வெளி இடங்களுக்கு செல்லும்போது பிடித்தமான பொருட்களை அழுது அடம்பிடித்து வாங்குவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். அதேவேளையில் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுக்கும் வழக்கத்தை பெற்றோரும் பின்பற்ற வேண்டும். சேமிப்பு பழக்கத்தையும் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.

    தங்களிடம் இருக்கும் விளையாட்டு பொருட்களை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடும் பழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். மற்ற பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் வழக்கத்தையும் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். யாராவது ஒருவர் உதவி செய்யும்போது நன்றி சொல்லும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்குத்தான் விரும்புவார்கள். சிறு வயதிலேயே அவர்கள் கேட்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கிக்கொடுப்பதுதான், அவர்களின் உடல் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் வயதுக்கு பொருத்தமில்லாமல் உடல் பருமனாக காணப்படுவார்கள். சிறுவயதிலேயே உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதற்கு பழக்கிவிட வேண்டும்.

    டி.வி., வீடியோ கேம், செல்போன் போன்ற மின் சாதனங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. அவற்றை கையாள்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கண்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவைகளை உபயோகப்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
    நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் 19 கோடியே 90 லட்சம்பேர் பெண்கள்.

    உலக அளவில் இந்தியாதான் நீரிழிவு நோயின் தலைநகரமாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.

    நீரிழிவு நோயாளிகள் இதய நோய் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் பார் குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் இணை ஆசிரியர் சானே பீட்டர் கூறுகையில், ‘‘ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கால அளவு இதய செயலிழப்புக்கான அபாயத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கு ஆளாகும் ஆண்கள் உட்கொள்ளும் மருந்தை விட பெண்கள் குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதோடு ஆண்களை ஒப்பிடும்போது தீவிர சிகிச்சை மேற்கொள்வதற்கான வாய்ப்பும் பெண்களுக்கு குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.

    ஆண்- பெண் இடையேயான பாலின விகிதாச்சாரம், அதிகார பகிர்வில் ஏற்றத்தாழ்வு, மோசமான உணவு பழக்கவழக்கம், உடல் இயக்க செயல்பாடுகளில் மாறுபாடு, உடல்நல பிரச்சினை ஏற்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு ஆர்வமின்மை போன்றவை நீரிழிவு நோய் தாக்கத்தை அதிகப்படுத்துகின்றன. 2040-ம் ஆண்டுக்குள் உலக அளவில் 31 கோடியே 30 லட்சம் பெண்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளாகுவார்கள் என்று சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு கணக்கிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயால் 21 லட்சம் பெண்கள் மரணத்தை தழுவுகிறார்கள்.
    கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.
    கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. கொரோனா சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது. அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது. அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும். தக்க சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம். உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

    சுவாசிப்பதில் சிரமம்: கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும். உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

    மார்பு வலி: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும். நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும். சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். மூச்சுத்திணறலையும் உணரக்கூடும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

    மனக்குழப்பம்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம்.

    நீல நிற உதடு: உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.

    மூக்கு விரிவடைதல்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும். இத்தகைய அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதையும், சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தையும் வெளிப்படுத்தக்கூடியவை. அதனால் இதனை சாதாரணமாக கருதக்கூடாது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

    மூச்சு பயிற்சி: மூச்சு பயிற்சி மேற்கொள்வது நுரையீரலின் ஆரோக்கியத்தையும், ஆக்சிஜன்அளவையும் மேம்படுத்த உதவும். பல சுவாசப்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றுள் 4-7-8 என்ற சுவாசப்பயிற்சி எளிமையானது, சிறப்பானது. தரையில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். வாயை நன்றாக மூடிவிட்டு, மூக்கு வழியாக 4 விநாடிகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும். அப்போது மனதிற்குள் நான்கு வரை எண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு 7 வினாடிகள் வரை அப்படியே மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். பின்பு வாய் வழியாக 8 வினாடிகள் வரை மூச்சை வெளியே விடவேண்டும். தொடர்ந்து மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 7 வினாடிகள் வரை மூச்சை நிறுத்தி வைத்திருப்பது கடினமாக இருக்கும். ஆனால் நாளடைவில் எளிதாகிவிடும். நான்கு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 7 விநாடிகள் வைத்திருந்து 8 விநாடிகள் வெளியேற்றுவதால் இது 4-7-8 சுவாசப் பயிற்சி எனப்படுகிறது.
    பெண்கள் தங்களுக்கு பிடித்தமான தோழிகளுடன் நெருங்கி பழகுவார்கள். எந்த தோழி எந்த மாதிரியான சுபாவம் கொண்டவள் என்பதை பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கணித்துவிடுவார்கள்.
    ஆண்களை விட பெண்கள் அதிக நட்பு வட்டத்தை கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்தமான தோழிகளுடன் நெருங்கி பழகுவார்கள். ஒருபோதும் அவர்களின் நட்பை கைவிடமாட்டார்கள். அதேவேளையில் தோழிகளின் சுபாவங்கள், குணாதிசயங்களை வகைப்படுத்தி வைத்திருப்பார்கள். எந்த தோழி எந்த மாதிரியான சுபாவம் கொண்டவள் என்பதை பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே கணித்துவிடுவார்கள். அதற்கேற்பவே அந்த தோழிகளிடம் பழகுவார்கள். தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்களை பயன்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய சுபாவம் கொண்ட தோழிகளின் பட்டியல் இது.

    1. நம்பிக்கைக்குரியவர்கள்: மிகவும் நம்பகத்தன்மை கொண்டவர்களின் பட்டியலில் இந்த வகை தோழிகள் இடம் பிடித்திருப்பார்கள். மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். விருந்து நிகழ்ச்சிகள், இரவு நேர பார்ட்டிகள், வெளி இடங்கள் என எங்கு சென்றாலும் இந்த தோழிகளுடன் செல்வதற்கு விரும்புவார்கள். இவர்களை நம்பி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இந்த தோழிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நெருங்கி பழகிக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.

    2. ஷாப்பிங் பிரியர்கள்: இவர்கள் ஆடை தேர்வு விஷயத்தில் மெனக்கெடுவார்கள். தனக்கு மட்டுமல்ல உடன் வருபவர்கள் சிறந்த ஆடையை தேர்வுசெய்வதற்கும் வழிகாட்டுவார்கள். இவர்களுடன் ஷாப்பிங் சென்றால், தேர்வு செய்யும் ஆடைகள், அலங்கார பொருட்கள் பற்றி தயங்காமல் கருத்து கேட்கலாம். இவர்களும் தங்கள் மனதில் தோன்றியதை தயங்காமலும், மறைக்காமலும் சட்டென்று வெளிப்படுத்திவிடுவார்கள். இவர்களின் தேர்வும் சரியானதாகவே இருக்கும். தள்ளுபடி விற்பனை நடைபெறும் சமயத்தில் இவர்களை அழைத்து சென்றால் தரமான, நமக்கு பிடித்தமான பொருட்களை தேர்ந்தெடுப்பதற்கு உதவியாக இருப்பார்கள். கடன் கொடுத்து உதவும் சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

    3. பேச்சு துணைவர்கள்: இவர்கள் பொதுவாக சற்று வயதானவர்களாக இருப்பார்கள். அதாவது அம்மா ஸ்தானத்தில் இருப்பார்கள். அம்மாவிடம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கூட இவர்களிடம் பேசலாம். வாழ்க்கையில் நிறைய அனுபவம் கொண்டிருப்பார்கள். இவர்களும் பேச்சு துணைக்கு மற்றவர்களை எதிர்பார்ப்பார்கள். அதனால் எந்த விஷயத்தையும் இவர்களிடம் தயங்காமல் பேசலாம்.

    4. புலம்பி தீர்ப்பவர்கள்: தோழிகளில் சிலர் எப்போதும் தங்களுடைய பிரச்சினைகளை மற்றவர்களிடம் புலம்பி தீர்த்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொண்டால் போதும். உடனே நெருங்கி பழகும் தோழிகளுக்கு போன் செய்து புலம்பி தீர்த்துவிடுவார்கள். கவலைகள், குமுறல்களை கொட்டி விடுவார்கள். தங்களது மன பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு வந்தபிறகுதான் விடை பெறுவார்கள். அடிக்கடி போன் செய்து தங்கள் பிரச்சினைகளை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

    5. சமூக ஊடக நண்பர்கள்: இவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகி இருப்பார்கள். அல்லது வெளி இடங்களுக்கு சென்றிருந்தபோது சந்தித்து பேசி இருப்பார்கள். அந்த தொடர்பை சமூக வலைத் தளங்கள் மூலம் புதுப்பித்து இருப்பார்கள். இருவருக்கும் இடையே பரஸ்பர அறிமுகம் மட்டுமே இருக்கும். எப்பொழுதாவது மீண்டும் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் நலம் விசாரிப்பார்கள். பொதுவான விஷயங்களை மட்டுமே பேசுவார்கள். அவர்களின் பெயர்கள் கூட மறந்து போயிருக்கும்.

    6. குடும்ப தலைவிகள்: இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும். திருமணத்துக்கு முன்பு வரை தோழிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருப்பார்கள். அதன் பிறகு நட்பு வட்டம் சுருங்கி கொண்டிருக்கும். எப்போதாவது தோழிகளுக்கு போன் செய்து பேசுவார்கள். முன்பு போல் நெருக்கமாக இல்லையே என்ற ஏக்கம் அவர்களின் பேச்சில் வெளிப்படும். பழையபடி நட்பு துளிர்க்காதா? என்ற எண்ணத்தோடு தொடர்பை வலுப்படுத்துவதற்கு முயற்சிப்பார்கள்.

    7. தோழிக்கு நெருக்கமானவர்கள்: சில சமயங்களில் ஏதாவதொரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது நெருங்கி பழகும் தோழி வர முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அவர் தன்னிடம் நெருங்கி பழகும் தோழியை அனுப்பி வைப்பார். அவர், தோழியின் இடத்தை நிரப்பும் ஆபத்பாந்தவனாக இருப்பார்.

    8. வதந்தி பரப்புபவர்கள்: மற்றவர்களை பற்றிய தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். தங்களுக்கு பிடிக்காத தோழிகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் கொள்வார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இனி என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்? அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் கண்காணித்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் பேசுவதற்கும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் பிடிக்காதவர்களை பற்றி வதந்திகளை பரப்பிவிடுவார்கள். தங் களுடைய தோழிகள் வட்டத்தை பற்றிய ‘லேட்டஸ்ட்’ தகவல்களை அறிந்து கொள்வதற்கு இவர்களை தொடர்பு கொண்டால் போதும். அதேவேளையில் தம்மை பற்றிய தகவல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதற்கு விரும்பமாட்டார்கள். தங்களை பற்றிய விஷயம் எதுவும் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்.
    தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன் - 100 கிராம்,
    அன்னாசிப் பழம் - 100 கிராம்,
    பூண்டு - ஒரு பல்,
    வால்நட் - 4,
    துளசி இலை - 5,
    எலுமிச்சம் பழம் - 1,
    மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

    மிளகுத் தூள், வால்நட், பூண்டு, துளசி இலை இவற்றை மிக்ஸியில் போட்டு, எலுமிச்சைச் சாற்றை விட்டு, மையமாக அரைத்து, சாஸ் போல் தயாரிக்கவும்.

    அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோளம், அன்னாச்சி சேர்த்து கலக்கவும்.

    அடுத்து அதில் சாஸ் சேர்த்துக் கலக்கியோ, அல்லது அன்னாசிப் பழம், சோளத்தை சாஸில் முக்கியோ சாப்பிடலாம்.

    சூப்பரான அன்னாசி ஸ்வீட் கார்ன் சாலட்ரெடி.
    சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும், சரும சுருக்கத்தையும் போக்கும் தன்மை கொண்டது, மாதுளை. மாதுளையை எப்படி பயன்படுத்தி சரும பிரச்சனைகளை தீர்க்கலாம் என்று பார்க்கலாம்.
    மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காயவைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.
     
    ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும்.
     
    சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெய்யையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும். தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டைத் தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால்  தோல் சுருக்கம் நீங்கும்.
     
    பருக்களை மறைய வைப்பதில் மாதுளைக்கு நிகர் மாதுளையேதான். மாதுளம்பழத்தை உதிர்த்து ப்ரீசரில் வைத்துவிடுங்கள். பத்து நாட்கள் கழித்து அதை எடுத்தால் நன்றாக விறைத்துப்போய் உடைக்க சுலபமாக இருக்கும். இதை பவுடராக்க வேண்டும்.
     
    ஒரு டீஸ்பூன் இந்த பவுடருடன் ஒரு டீஸ்பூன் பயத்தம் பருப்பு மாவு, அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலக்க வேண்டும். குளிப்பதற்கு முன் இதை முகத்தில் பூசி, காய்ந்த பிறகு கழுவ வேண்டும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இப்படி செய்து வந்தால், பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.
    இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
     
    அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
     
    பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
     
    ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
     
    இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
     
    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.

    படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
     
    அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
    சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
    இன்று ஓடி விளையாட வேண்டிய இளமையில்- பள்ளிக்கூடம் போக வேண்டிய பருவத்தில் கூலி வேலைக்குச் செல்கின்ற சிறுவர்களைக் கண்டால் நெஞ்சு பொறுக்கவில்லை. அவர்களது நிலையையும் அதனைப் போக்கும் வழி வகைகளையும் இங்கு காண்போம்.

    இளமையில் கல் என்பது அவ்வையார் கூறும் அறிவுரை. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நிலை மாறிவிடுகிறது. பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.

    சத்துணவு, ஓய்வு, சுகாதார வசதி ஆகிய பற்றாக்குறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால் ரத்தசோகை, இளைப்பு, காசநோய் ஆகியவற்றிற்கு ஆளாகின்றனர். நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. தோல் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    1986-ம் ஆண்டு அரசு குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றியுள்ளது. அதன் மூலம் கட்டிட வேலை, சாயம் ஏற்றுதல், நெசவாலை, தீப்பெட்டி தயாரித்தல், சுவரொட்டி ஒட்டுதல், உணவு விடுதிகளில் மேசை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை யாரும் வேலைக்கு வைக்கவில்லை என உறுதி செய்து வருகிறது.

    எல்லா குழந்தைகளும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பதே கடமை என்று உணரவேண்டும். வறுமையை காரணம் காட்டியோ, பணத்தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.

    சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இன்னும் சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்து அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி, தினமும் உணவு கிடைப்பதற்கு நமது அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

    பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில் நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை கருத்தில் கொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும். மாணவ செல்வங்களாகிய நீங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவுவகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
    பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் இன்றியமையாதது. நோய்களை எதிர்த்து போராடுவதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடும் உணவுவகைகள், பழக்க வழக்கங்கள், மன ஆரோக்கியம் போன்றவை தாய்ப்பால் சுரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றை முறையாக கையாளாவிட்டால் தாய்ப்பாலின் சுவை மாறுபடக்கூடும். அந்த வாசம் சில சமயம் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது.

    ஏனெனில் குழந்தை கருவில் வளரும்போதே தாய் சாப்பிடும் உணவு பழக்கத்திற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும். குழந்தை பிறந்ததும் தாய் வேறுசில உணவு பழக்கங்களை பின்பற்றும்போது அதன் தாக்கம் தாய்ப்பாலில் வெளிப்படும். தாய்ப்பாலின் சுவையும் மாறுபடும் என்பதால் பாலூட்ட முயற்சிக்கும்போது அழும். தாய்ப்பாலை குடிக்காமல் தவிர்க்கும். குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்துவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். தாய்ப்பாலின் சுவை மாறுபடுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    மசாலா உணவுகள்: பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் காரமான உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். காரமான மசாலா வகைகளையும் விரும்பமாட்டார்கள். ஆனால் குழந்தை பிறந்ததும் காரமான மசாலா உணவுகளை சாப்பிட தொடங்குவார்கள். அத்தகைய மசாலா உணவுகள் தாய்ப்பாலின் சுவையை மாற்றிவிடக்கூடும். அதனால் குழந்தைகள் தாய்ப்பால் பருகுவதற்கு அடம்பிடிக்கக்கூடும். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தில் கார உணவுகளை சாப்பிட்டிருந்தால் கருவில் வளரும் குழந்தைக்கும் அது விருப்பமானதாக மாறி இருக்கும். அதனால் தாய்ப்பால் பருகும்போது சுவை மாறியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடும்.

    கடல் உணவுகள்: மீன் போன்ற கடல் உணவுகள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். ஆனாலும் கர்ப்ப காலத்தில் கட்டுப்பாடுகளுடன்தான் கடல் உணவுகளை சாப்பிட வேண்டியிருக்கும். அதுபோலவே தாய்ப்பால் கொடுக்கும் சமயத்திலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது. ஏனெனில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை மீன்கள் சாப்பிடும்போது அதன் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். அவை நச்சுப்பொருட்களாக மாறி, மீன் உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும் மீனில் உள்ள நச்சுப்பொருட்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு அசவுகரியத்தை உண்டாக்கலாம். கர்ப்பகாலத்திலோ, பாலூட்டும்போதோ கடல் உணவுகளில் உள்ள பாதரச நச்சுக்கள் குழந்தையை சென்றடையும்போது அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாகும்.

    இறைச்சி: கர்ப்பகாலத்தில் சிலர் இறைச்சி வகைகளில் ஈரல், குடல் போன்ற உள் உறுப்புகளை சமைத்து சாப்பிடுவார்கள். தாய்ப்பால் கொடுக்கும்போதும் தொடர்ந்து சாப்பிடுவார்கள். இத்தகைய உள் உறுப்புகளை அதிகம் சாப்பிடும்போது அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்துவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் பாலூட்டும் தாய்மார்கள் இத்தகைய இறைச்சி உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது. ஏனெனில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் இத்தகைய விலங்குகளின் வளர்ச்சிக்கு ஹார்மோன் மருந்து, ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்செலுத்தி இருந்தால் அதில் இருக்கும் நச்சுக்கள் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு பிடிக்காமல் போகலாம்.

    தண்ணீர்: பாலூட்டும் தாய்மார்கள் சுத்தமான நீரை பருக வேண்டும். சமைப்பதற்கும் சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் மாசுபட்ட நீரை உட்கொண்டால் பாலின் சுவையும், தரமும் மாறுபடும். அசுத்தமான பாலை குழந்தைக்கு கொடுக்கும் நிலையும் உண்டாகும். அசுத்த நீரை தொடர்ந்து பருகும்போது தாயாரின் திசுக்களில் நச்சுகள் உருவாகிவிடும். அதனால் குழந்தை தாய்ப்பாலை குடிக்க விரும்பாது.

    மருந்துகள்: பாலூட்டும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்காத ஆர்கானிக் உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பூச்சிக்கொல்லி மருந்துகளில் கலக்கப்படும் கிளைபோசெட் எனும் ரசாயன பொருள் உடல் நல பாதிப்பில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிகம் கலக்காத சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தாய் உண்ணும் உணவு தான் தாய்பாலாக மாறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    தாயார் ஏதேனும் உடல்நல பாதிப்பிற்கு மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளலாம். அந்த மருந்துகளின் வாசத்தால் கூட குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போகலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாற்று மருந்தை பயன்படுத்துவது நல்லது. புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய் பாதிப்பு கொண்டவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

    கொழுப்பு: தாய்ப்பாலில் கலந்திருக்கும் லிபேஸ் என்னும் நொதி, குழந்தைக்கு பால் எளிதில் ஜீரணமாகுவதற்கு உதவும். தாய்ப்பாலில் லிபேஸ் நொதியின் அளவு அதிகமாக இருந்தால் ஒருவித புளிப்பு சுவை கொண்டதாக பால் மாறிவிடும். அந்த புளிப்பு சுவை குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனாலும் பால் குடிப்பதற்கு விரும்பாது.

    மன அழுத்தம்: பாலூட்டும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை உண்டாக்கும். மன அழுத்தத்தால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தாய்ப்பாலில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். தாய்ப்பாலின் சுவையையும் மாற்றிவிடும். ஆதலால் மன அழுத்தமாக இருக்கும் சமயத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது.

    ஒப்பனை: பாலூட்டும் தாய்மார்கள் ஒப்பனை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உலோகங்களின் வீரியம் அதிகமாக இருந்தால் அதுவும் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    ×