search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சானிடைசர்
    X
    சானிடைசர்

    சானிடைசர் பயன்பாடு: சந்தேகங்களும்.. தீர்வுகளும்..

    சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம்? எப்போதெல்லாம் உபயோகிக்கலாம்? சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசத்துக்கு அடுத்தபடியாக சானிடைசர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அடிக்கடி கை கழுவுவதற்கு பதிலாக சானிடைசரை சில துளிகள் கையில் தடவுவதை சவுகரியமாக பலரும் கருதுகிறார்கள். அடிக்கடி உபயோகிக்கவும் செய்கிறார்கள். சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவலாம்? எப்போதெல்லாம் உபயோகிக்கலாம்? சானிடைசரை பயன்படுத்தும்போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்? என்பது போன்ற வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    சானிடைசரை கைகளில் எவ்வளவு தடவ வேண்டும்?

    கைகளின் உள்பகுதி மட்டுமின்றி மேற்பரப்பு முழுவதும் ஈரப்பதமாகும் வரை கை முழுவதும்
    சானிடைச
    ரை தடவி நன்றாக தேய்த்துவிட வேண்டும். சானிடைசர் உலர்ந்து போகும்வரை குறைந்தபட்சம் 20 முதல் 30 வினாடிகள் வரை தேய்க்க வேண்டியது அவசியமானது.

    ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பாதுகாப்பானதா?

    சானிடைசர்களில் உள்ள ஆல்கஹால் எந்தவொரு உடல்நல பிரச்சினைகளையும் உருவாக்குவதில்லை. ஏனெனில் சானிடைசரில் உள்ள ஆல்கஹால் சிறிதளவு மட்டுமே சருமத்தில் உறிஞ்சப்படுகிறது. மேலும் பெரும்பாலான சானிடைசர் தயாரிப்புகளில் சரும வறட்சியை குறைக்க உதவும் ‘எமோலியண்ட்’ எனும் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது. இது சருமத்திற்கு மென்மை தன்மையை கொடுக்கக்கூடியது.

    சானிடைசரை எத்தனை முறை பயன்படுத்தலாம்?

    உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை தடுப்பதில் ஆண்டிபயாட்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    பொது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசர் பாட்டிலை தொட்டு பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்துமா?

    ‘‘சானிடைசரை தொட்டு கைகளை சுத்தப்படுத்தும்போதே பாட்டிலில் இருந்திருக்கக்கூடிய கிருமிகளையும் சேர்த்தே அழித்துவிடுகிறீர்கள். அப்படி எல்லோரும் பொது இடத்தில் சானிடைசரை பயன்படுத்தும்போது அங்கு கிருமிகளின் ஆபத்து குறைவாகவே இருக்கும். அந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்கும்.

    அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது நல்லதா? கையுறைகளை அணிவது நல்லதா?

    கையுறைகளை அணிவது மேற்பரப்பில் இருந்து மற்றொரு மேற்பரப்பிற்கு கிருமிகளை கடத்தும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். கையுறைகளை அணிந்திருந்தால், அவற்றை அகற்றிய பின் கைகளை நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டுமே கையுறைகளை அணிவார்கள். எனவே கைகளை சுத்தப்படுத்துவதே சிறப்பானது.
    Next Story
    ×