என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    இன்றைய காலகட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகிறது.
    தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1 முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இன்றைய காலகட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகிறது.

    கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவு பழக்கத்தை பலரும் கடைப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருந்து மீள்பவர்கள் ஊட்டச்சத்து விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    1. புரதம் நிறைந்த உணவுகள்:

    கொரோனா பாதிப்பின்போது புரதச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். பால், பாலாடைக்கட்டி, மீன், முட்டை, பருப்பு, தயிர், நன்கு வேகவைத்து சமைக்கப்பட்ட இறைச்சிகள் போன்றவற்றை தினசரி உணவு திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இவை கொரோனா தொற்று பிடியில் இருந்து விரைவாக மீள்வதற்கு வழிவகை செய்யும் முக்கியமான புரத உணவுகளாகும்.

    2. ப்ரீ பயாடிக்குகள் - புரோ பயாடிக்குகள்:

    இவை இரண்டும் உள்ளடங்கி இருக்கும் உணவுகளை உட்கொள்வது இயற்கையான வழியில் உடல் ஆரோக்கியத்தை பேண உதவும். ஏனெனில் இந்த உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. குறிப்பாக வாழைப்பழங்கள், வெங்காயம், பிரெட், தயிர், ஊறுகாய் போன்றவை உணவு பட்டியலில் இடம்பெற வேண்டும். இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் கொரோனாவுக்கு பிந்தைய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ‘புரோ பயாடிக்குகள் மற்றும் ப்ரீ பயாடிக்குகள் நச்சுக்களை எதிர்த்து போராடக்கூடியவை. உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதலையும் அதிகப்படுத்தக்கூடியவை’ என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    3. பருப்பு மற்றும் காய்கறி சூப்கள்:

    பருப்பு மற்றும் காய்கறி சூப்களில் புரதம் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருக்கும். இதனை மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன்பு உட்கொள்ளலாம். அவற்றுடன் ஊட்டச்சத்து கொண்ட மசாலா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் காய்கறி அல்லது பருப்பு சூப் ஒரு கப் பருகுவது நன்மை தரும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    4. மசாலா:

    லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலாக்கள் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியவை. கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளுக்கு மஞ்சள் முக்கியமான மசாலா பொருள். பாலில் மஞ்சளை சேர்த்து பருகலாம். இந்த அனைத்து மசாலா பொருட்களையும் கொண்ட பானம் தொண்டை பிரச்சினைகளை போக்கும். நுரையீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

    5. வைட்டமின் சி

    கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு வைட்டமின் சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேப்சிகம், சிட்ரஸ் பழங்கள், எலுமிச்சை, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி சத்து கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளலாம். இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். அதிக அளவு வைட்டமின் சி நுகர்வது, கொரோனாவில் இருந்து விரைவில் மீட்டெடுக்கும் என்கிறது ஆய்வு முடிவு.

    காரமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள், பேக்கரி பதார்த்தங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள், மது போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும்.
    ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.
    ஆரஞ்சுப் பழத்தோலில் உள்ள வைட்டமின் சி சத்து தவிர, ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்திருப்பதால் இவற்றை ஸ்கின் பேக் எனப்படும் முகத்தின் பொலிவைக் கூட்டி வெண்மையாக்கும் சருமப் பராமரிப்பு பூச்சுகளில் மற்றும் மாஸ்க்குகளில் பயன்படுத்தலாம்.

    சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கருத்து போய்விடும். அவர்கள் ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து முகத்துக்குப் பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

    ஆரஞ்சுத் தோல் கிருமி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் தொற்றுத் தன்மைகளை கொண்டுள்ளதால் உங்களுடைய எண்ணெய் பசை மற்றும் பருக்கள் நிறைந்த சருமத்திற்கு நல்ல பலன் தரும்.

    ஆரஞ்சுத் தோலை வாரம் ஒரு முறை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்கு பதிலாக ஆரஞ்சு பழச்சாறையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முக சருமம் பாதுகாக்கப்படும்.

    ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும். இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் தயிர் கலவை ஒரு அற்புதமான சருமப் பராமரிப்பிற்கு உதவும். இது சுருக்கங்களையும் கோடுகளையும் நீக்குவதோடு உங்கள் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

    ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும்.
    மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம்.
    பெண்களுக்கு மட்டும் இயற்கை குறிப்பிட்ட இனப்பெருக்க உறுப்புகளை படைத்திருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கிறது. அதையே தகர்க்கின்ற வகையில் மாதவிடாய் கால வலி, மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுகின்றன. பெண்களை மட்டுமே தாக்கும் இது போன்ற நோய்களை எப்படி எதிர்கொள்ளவேண்டும்?

    மாதவிடாய் கால வலி இரண்டு வகை

    மாதவிடாய் காலத்தில் 50 சதவீத பெண்கள் அடிவயிற்று வலியால் அவதிப்படுகிறார்கள். இதனை `டிஸ்மெனோரியா' என்று அழைக்கிறார்கள். இதில் பிரைமரி, செகண்டரி என்ற இருவகை உள்ளது. வேறு நோய்கள் எதுவும் இல்லாத நிலையிலும், மாதவிடாயோடு தொடர்புடைய உறுப்புகளில் எந்த காயங்களும் இல்லாத நிலையிலும், மாதவிலக்கு நாட்களில் வலி ஏற்பட்டால் அதை பிரைமரி டிஸ்மெனோரியா என்கிறார்கள். கருப்பையில் இருக்கும் பைபிராய்டுகள் மற்றும் கருப்பையின் உள்ளே தோன்றும் என்டோமெட்ரியத்தில் உருவாகும் என்டோமெட்ரியோசிஸ் போன்ற கருப்பை பாதிப்புகளால் உருவாகும் வலியை செகண்டரி டிஸ்மெனோரியா என்கிறார்கள்.

    மாதவிலக்குக்கு முன்போ- அதன் பிறகோ வலி எதுவும் இல்லாமல் இருக்கும்போது, மாதவிலக்கின்போது மட்டும் ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை ஏற்படும் வலியை பிரைமரியாக எடுத்துக்கொள்ளலாம். பெண் உறுப்பு பகுதியிலும், அடிவயிற்றிலும், முதுகிலும் வலி ஏற்படுவது- வலி தொடைப் பகுதிகளுக்கு பரவுவது- வாந்தி- சிறி தளவு பிசிறாக மலம் வெளியேறுதல்- தலைவலி- ஒற்றை தலைவலி போன்றவை அதன் அறிகுறி. காய்ச்சல் இல்லாவிட்டாலும், அது இருப்பது போன்ற அவஸ்தைகளும் ஏற்படலாம்.

    இறுக்கிப் பிடித்துவிட்டு விடுவதுபோன்று இந்த வலி தோன்றும். ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். இவர்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் கோளாறு ஏற்படுவதில்லை. கருமுட்டையின் செயல்பாடுகளால் உருவாகும் புரோஜஸ்டிரான் ஹார்மோன் தான் மாதவிலக்கு கால வலிக்கு காரணம். 40 வயதை எட்டும்போது சில பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி குறையும்போது தற்காலிகமாக வலி குறையவும் செய்யும். வயதுக்கு வந்த காலகட்டத்தில் இருந்து முதல் மூன்று வருடங்கள் வரை பிரைமரி டிஸ்மெனோரியா தொந்தரவு ஏற்படாது.

    செகண்டரி டிஸ்மெனோரியா பாதிப்பு கொண்ட பெண்களுக்கு மாதவிலக்குக்கு சில நாட்களுக்கு முன்பே வலி தொடங்கிவிடும். மாதவிலக்கு நின்ற பிறகும் சில நாட்கள் நீடிக்கும். மாதவிலக்கு நாட்களில் வலி அதிகரிக்கும். திடீரென்று வலி நின்றுபோகவும் செய்யும். இது போன்ற அறிகுறிகள் செகண்டரியின் வெளிப்பாடாகும். இந்த தாக்கம் கொண்ட பெண்களுக்கு தாம்பத்ய தொடர்புகொள்ளும் நேரத்திலும் வலி ஏற்படக்கூடும். என்டோமெட்ரியோசிஸ், பைபிராய்டு, அடினோமயோசிஸ் மற்றும் இடுப்பு எலும்பான பெல்விக்கில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவைகளாலும், கருத் தடைக்காக பொருத்தப்படும் காப்பர்-டியாலும் செகண்டரி டிஸ்மெனோரியா ஏற்படும்.

    தடுக்கும் வழி

    தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்துவந்தால் பிரைமரி டிஸ்மெனோரியாவால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாதவிலக்கு நாட்களில் நன்றாக ஓய்வெடுத்தல், வயிற்றிலும், முதுகிலும் சூடான ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரண கிரீமை வெளிப் பகுதியில் பயன்படுத்துதல் போன்றவையும் நிவாரணம் தரும். செகண்டரி டிஸ்மெனோரியா என்றால் விரைவாக அதனை கண்டறிந்து, உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.

    சிகிச்சை

    வலியை தாங்கிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி வீரியம் குறைந்த வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின்றி மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவது ஆபத்தானது. முறைப்படி மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டும் வலி குறையாவிட்டால் ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் மாறும்.

    மார்பக புற்றுநோய்

    மார்பக புற்றுநோய் பாரம்பரியத்தாலும், வாழ்வியல் முறைகளாலும் ஏற்படுகிறது. பாரம்பரியத்தால் ஏற்படுவது குறைவு. வாழ்வியல் முறைகளால் ஏற்படுவது அதிகம். ஆனாலும் சரியான காரணங்கள் இன்னும் கண்டுபிடித்து வரையறை செய்யவில்லை. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன், புரோஜஸ்டிரான் ஹார்மோன்கள் சுரப்பதில் ஏற்படும் வித்தியாசங்கள்- மாமிசம், கொழுப்பு அதிகம் சேர்ந்த உணவுகளின் பயன்பாடு- அதிக உடல் எடை- சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்- மிக தாமதமாக மெனோபாஸ் நிலையை அடைதல்- மதுப்பழக்கம்- புகைப்பிடித்தல் அல்லது புகைப்பிடிப்பவரின் அருகில் இருந்ததால் ஏற்படும் பாதிப்பு போன்றவைகள் காரணங்களாக வரிசைப் படுத்தப்படுகின்றன.

    இளம்பெண்கள்தான் புகைப்பிடிப்பதால் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். புகைப் பிடிக்காவிட்டாலும், அந்த புகையை நிரந்தரமாக சுவாசிப்பவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்கு வயது ஏறும்போது மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

    பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம், மாதவிலக்கு நிலைத்துப்போவதற்கான அறிகுறிகள், அதிக ரத்தப்போக்கு, சீரற்ற மாதவிலக்கு சுழற்சிமுறை, மாதவிலக்கு கோளாறுகள் போன்றவைகளுக்கான சிகிச்சையில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக ஆகிவிடுகிறது.

    அதிக காலம் தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதும் மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு களை உருவாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களையும், தைராய்டு பாதிப்புகொண்டவர்களையும், இந்த நோய்த்தாக்கும் அபாயம் அதிகம். அதிக உடல் எடைகொண்ட முதிய பெண்களையும் இந்த நோய் தாக்கலாம்.

    தடுக்கும்வழி

    திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்வதும், அதற்கு தாய்ப்பால் புகட்டுவதும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதை பெருமளவு குறைக்கும். பாலை உற்பத்தி செய்யும் புரோலாட்டின் உற்பத்தியால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதுதான் இதற்கான காரணம்.

    சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்துவர வேண்டும். வயதுக்கு வராவிட்டாலும், அதற்காக 18 வயது வரை காத்திருக்கவேண்டும். 18 வயதிற்கு முன்பு சிகிச்சை மூலம் மாதவிலக்கை உருவாக்காமல் இருக்கவேண்டும்.

    சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை உருவாகாமல் கவனித்துக்கொள்வது அவசியம். குண்டானவர்கள் சிறுவயதில் இருந்தே அதில் கவனம் செலுத்தி, எடையை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். மார்பக புற்றுநோய் இருப்பவர்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளிலும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ்நிலை அதிகம். பாரம்பரியமாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகொண்ட பெண்கள் அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு மிகுந்த விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்தவேண்டும்.

    சிகிச்சை

    தொடக்கத்தில் கண்டறிந்துவிடுவதே விரைவான சிகிச்சைக்கு வழிவகுக்கும். அதனால் அனைவரும் இதில் விழிப்புணர்வு பெறுவதே மிக முக்கியம். மார்பகங்கள் சரியான அமைப்பில் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும். குளிக்கும்போதோ, உடைமாற்றும்போதோ சுயபரிசோதனை மூலம் எந்த விதமான கட்டிகளும் மார்பகத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். மேமோகிராபி பரிசோதனை மூலம் திசுக்களை ஆய்வு செய்து நோயை கண்டறிய முடியும். அதனால் 40 முதல் 45 வயதுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 45 முதல் 55 வயதுகளில் வருடத்திற்கு ஒருமுறையும் மேமோகிராபி பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நோய் தென்பட்டால் அதனை குணப் படுத்த நவீன சிகிச்சைகள் உள்ளன.

    கருப்பை வாய் புற்றுநோய்

    இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது இதுதான். இந்த நோய்க்கு காரணமாக இருப்பது, ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றாகும். இந்த வகை வைரஸில் நூற்றுக்கு மேற்பட்ட வகைகள் இருந்தாலும், அதில் ஒருசில நோய்களை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் சருமத்தின் மூலமான தொடுதல் மூலமும் இந்த தொற்று உருவாகும். குறிப்பிட்டுச்சொல்லவேண்டும் என்றால் சுகாதாரமற்ற உடலுறவு கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கருத்தடை உறை மட்டுமே இதனை கட்டுப்படுத்த போதுமானதல்ல. ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, புகைப் பிடித்தல், கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன் படுத்துதல் போன்றவைகளும் இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

    தடுக்கும் வழி

    புற்றுநோய்களில் தடுப்பூசி இதற்கு மட்டுமே இருக்கிறது. பாலியல் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே இந்த ஊசியை செலுத்திக்கொள்வதே அதிக பயனுள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி பத்து முதல் 26 வயதுக்குள் இதனை செலுத்திக்கொள்ளலாம். 45 வயது வரை இது பலனளிக்கும். கர்ப்பிணிகள் இந்த ஊசியை செலுத்திக்கொள்ளக் கூடாது.

    இந்த ஊசி மருந்தை இரண்டு முறையாக செலுத்தவேண்டும். முதல் முறை செலுத்திய பின்பு, இரண்டு மாதங்கள் கழித்து அடுத்த ஊசியை போட்டுக்கொள்ளவேண்டும். வைரஸ் தொற்று புற்றுநோயாக மாறுவதற்கு முன்பு கண்டறிந்து சிகிச்சையும் பெறலாம்.

    ஐந்து வருடத்திற்குள் இத்தகைய புற்றுநோய் வருமா என்பதை கண்டறிய நவீன பரிசோதனை முறை உள்ளது. அதன் பெயர்: எச்.பி.வி. டி.ஐ.வி.ஏ. இது தவிர பாப்ஸ்மியர் பரிசோதனையும் செய்துகொள்ளலாம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த இரு பரிசோதனை களையும் செய்துகொள்வது நல்லது. விரைவாக இந்த நோயை கண்டறிந்தால் மட்டுமே எளிதாக குணமடைய முடியும்.
    வீடுகளிலோ, அலுவலகங்களிலோ பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
    நாம் இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு தூங்கும்போதும் மூன்றாவது கண்ணாக திகழும் சி.சி.டி.வி. விழித்திருந்து நம்மை சுற்றி நடப்பதை எல்லாம் படம்பிடித்து, நம்மை பாதுகாக்கிறது. வீடுகளிலோ, அலுவலகங்களிலோ பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

    - கட்டிடத்தின் அளவுக்கும், அமைப்பிற்கும் தக்கபடிதான் கண்காணிப்பு கேமரா கட்டமைப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள டி.வி.ஆர். என்ற கருவியின் ஹார்டு டிஸ்கில்தான் கேமராவின் காட்சிகள் ஸ்டோர் செய்யப்படும். சில நாட்களுக்கான காட்சிகளை மட்டும் ஸ்டோர் செய்தால் போதும் என்றால் குறைந்த அளவு ஸ்டோரேஜ் கொண்ட ஹார்டு டிஸ்க் போதுமானது. அதிக நாட்கள் ஸ்டோர் செய்ய விரும்புகிறவர்களுக்கு அதற்கு ஏற்ற ஸ்டோரேஜ் கொண்ட ஹார்டு டிஸ்க் தேவைப்படும்.

    - கண்காணிப்பு கேமராக்களில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவைகளில் உங்களுக்கு பொருத்தமானவற்றை நிதானமாக ஆராய்ந்து தேர்வுசெய்யுங்கள்.

    - குறிப்பிட்ட கோணத்தில் வைடு வியூ கிடைக்க டோம் கேமரா பயன்படுத்தலாம். குறிப்பிட்ட பகுதியில் உள்ள காட்சியை ஜூம் செய்து பார்க்கும் விதத்திலான கேமராக்களும் உள்ளன.

    - இரவில் வெளிச்சம் குறைவாக இருக்கும் சூழலிலும் தெளிவாக காட்சிகளை பதிவுசெய்ய ஸ்பெஷல் சி.சி.டி.வி. கேமராக்கள் தேவை.

    - அதிக மெகாபிக்‌ஷலும், தெளிவாக காட்சிகளையும் தரும் கேமராக்களையே வாங்குங்கள். இப்போதைக்கு இது போதும் என்ற மனநிலையில் ஏதாவது ஒன்றை வாங்கிவிடவேண்டாம். எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமானால் ஒரு மெகாபிக்‌ஷல் சி.சி.டி.வி. கேமராவை பயன்படுத்தி சிறிது தூரத்தில் நிற்கும் வாகனத்தின் எண்களை காண முடிவதில்லை. இருட்டும் மழையும் இருந்தால் வாகனத்தை கூட சரியாக காணமுடியாது. ஆனால் பிக்‌ஷல் அதிகம்கொண்ட `டே அன்ட் நைட்' கேமரா என்றால் காட்சிகளை தெளிவாக காணஇயலும்.

    - கிளவுட் ஸ்டோரேஜ் கட்டமைப்பைக் கொண்ட சி.சி.டி.வி. சிஸ்டமும் கடைகளில் கிடைக்கும். வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர்கள் சி.சி.டி.வி. சிஸ்டத்தை உடைக்கவோ, திருடவோ செய்தாலும் இன்டர்நெட்டில் குறிப்பிட்ட சர்வீசில் லாக் இன் செய்தால் ஆப் ஆக்கி வைத்திருந்த காட்சிகளும் கிடைத்துவிடும்.

    - சி.சி.டி.வி.யில் மோஷன் டிட்டக்‌ஷன் மற்றும் சைரன் உள்ளதும் கிடைக்கிறது. இந்த வகை கேமரா முன்பு ஒருவரின் நடமாட்டம் இருந்தால் அலாரம் ஒலிக்கும். செல்போன் ஆப்ளிகேஷனில் நோட்டிபிகேஷனும் கிடைக்கும்.

    - வீட்டிற்கு வெளியே வைக்கப்படும் கேமரா வாட்டர் புரூப் ஆக இருக்கவேண்டும். வியூவிங் ஆங்கிளிலும் சிறந்ததாக இருப்பது அவசியம்.

    - ஐபி சி.சி.டி.வி.யை வாங்கிப் பொருத்துவது நல்லது. அதனை இன்டர்நெட்டுடன் இணைத்து வீடு, அலுவலகம், சுற்றுப்பகுதி போன்றவைகளை செல் போனிலே லைவ்வாக பார்க்கலாம். அதற்கு இன்டர்நெட் கனெக்‌ஷன் ஸ்பீடு மிக முக்கியம். அப்லோடு ஸ்பீடு குறைந்தது 5 எம்.பி.பி.எஸ்-க்கு மேல் இருக்கும் இன்டர்நெட் கனெக்‌ஷன் தேவைப்படும்.

    - சி.சி.டி.வி. சிஸ்டம் அக்கவுண்ட் கிரியேட் செய்யும்போது கொடுக்கப்படும் மெயில் ஐ.டி. உங்களுடையதுதானா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். டெக்னீஷியனின் அக்கவுண்டுக்கு அதனை செட் செய்துவிட்டால், உங்கள் வீட்டு காட்சிகளை அவர் பார்த்து தவறாக பயன்படுத்திவிட முடியும். டெக்னீஷியன் செட் செய்து தரும் யூசர் நேம், பாஸ்வேர்டு போன்றவைகளை அவர்கள் சென்றதும் நீங்கள் மாற்றிவிட்டு, புதிதாக பதிவுசெய்துகொள்ளுங்கள்.
    அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
    மசாஜ் செய்வதற்கு அதற்குரிய மையங்களைத்தேடி செல்லவேண்டியதில்லை. ஒவ்வொருவரும் சுயமாகவே செய்துகொள்ளலாம். அதன் மூலம் வலி, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை நீக்கலாம். அன்றாட பணிகளுக்கு மத்தியில் சுய மசாஜ் செய்து கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். நரம்புகளை வலுப்படுத்தும். தசை இறுக்கத்தை குறைக்கும். தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் ரத்த வெள்ளைஅணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.

    சுய மசாஜ் செய்துகொள்ளும் முறைகள்:

    கண் மசாஜ்: லேப்டாப், கணினியில் அமர்ந்தபடி தொடர்ச்சியாக வேலை செய்யும்போது கண்களுக்கு அழுத்தம் உண்டாகும். காலப்போக்கில் கண் பார்வை பலவீனமடையும். இதனால் கண்களுக்கு மசாஜ் செய்வது நல்லது. உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிதளவு வெப்பம் உண்டானதும் கண்களில் ஒற்றியபடி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் கண்களில் கதகதப்பை உணரலாம்.

    மார்பு மசாஜ்: இரு கைகளையும் மார்புக்கு அருகே எதிரெதிரே வைத்தபடி தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். மார்பிலும் மென்மையாக மசாஜ் செய்யலாம். அப்படி மசாஜ் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க உதவும். மன அமைதியை உணரலாம்.

    வயிறு மசாஜ்: சாப்பிட்டு முடித்த பிறகு கைவிரல்களை வயிற்றில் மேல் பகுதியில் வைத்தபடி கடிகார சுழற்சியை போல வட்ட வடிவில் வயிற்று பகுதியை வருடி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி மசாஜ் செய்யும்போது சாப்பிட்ட உணவு அதே திசையில் சுழன்று குடலுக்கு இதமளிக்கும். அதனால் செரிமானம் எளிதாக நடைபெறும்.

    கை மசாஜ்: காலை கடன்களை முடித்த பிறகு கிரீம் அல்லது லோஷன் தடவி கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும். பின்பு விரல்களை கொண்டு உள்ளங்கையில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவமான இயக்கத்தில் மசாஜை தொடர வேண்டும். கட்டை விரலை மட்டுமே பயன்படுத்தியும் மசாஜ் செய்யலாம். இப்படி மசாஜ் செய்வது சரும அமைப்பை மேம்படுத்தும். ரத்த ஓட்டத்தையும் துரிதப்படுத்தும்.

    கழுத்து மசாஜ்: நாற்காலியில் அமர்ந்து வேலை செய்பவர்கள் கழுத்துக்கு பின் பகுதியில் கைவிரல்களை அழுத்தி மசாஜ் செய்யலாம். கழுத்தையொட்டிய பகுதியில் உள்ளங்கைகளை அழுத்தி மேல் நோக்கியும், கீழ்நோக்கியும் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்பு தலையை இடது புறமாக சாய்த்து கழுத்து தோள்பட்டை வரை தேய்க்க வேண்டும். பின்பு மறு பக்கத்திலும் தலையை சாய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்துவந்தால் கழுத்துவலி எட்டிப்பார்க்காது.
    முள்ளங்கி ஜூஸை மாதத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
    தேவையான பொருட்கள் :

    முள்ளங்கி இலை - 1 கப்,
    சிறிய முள்ளங்கி - 1,
    சீரகம் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - சிறிது,
    மிளகுத்தூள் - சிறிது,
    உப்பு - தேவைக்கு,
    மஞ்சள்தூள் - சிறிது,
    எண்ணெய் - 1/2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை :

    முள்ளங்கி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முள்ளங்கியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து சீரகத்தை போட்டு பொரிந்ததும், முள்ளங்கி இலை, முள்ளங்கி இரண்டையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

    ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    மற்றொரு பாத்திரத்தில் அரைத்த விழுது, சூப் பதத்திற்கு தேவையான தண்ணீர் விட்டு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும்.

    சூடாக பரிமாறவும்.

    சத்தான முள்ளங்கி சூப் ரெடி

    இதையும் படிக்கலாம்.. மொறு மொறு காராமணி வடை
    ஒரு சிறிய கப் நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து நீரில் தலைமுடியினை அலசுங்கள். பொடுகு மறையும் வரை தினமும் இதனை செய்யலாம்.
    பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ் பாதிப்பு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பொடுகு பிரச்சினையயல் தாய்மார்கள் படும் பாடு அதிகம்.

    சிலருக்கு இவை சில காரணங்களால் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். பொதுவில் பொடுகினை தவிர்க்கவும், ஆரம்ப நிலையில் இருப்பதனை நீக்கவும் கீழ்க்கண்ட முறைகள் வெகுவாய் உதவும். அதிக பாதிப்பிற்கு மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    ‘ மருந்து கடைகளில் கிடைக்கும் சாதாரண ஆஸ்பிரின் மாத்திரை இரண்டினை பொடித்து நைசாக்கி சிறிது தண்ணீரில் கலந்து ஈரமான தலையில் நன்கு தடவி விடுங்கள். 2-3 நிமிடங்கள் ஊற வைத்து தலையை நன்கு நீரில் சுத்தம் செய்து விடலாம்.

    சமையல் சோடா இரு டீஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து ஈர தலையில் மண்டையில் படும்படி தடவி 10 நிமிடங்கள் பொறுத்து குளிர்ந்த நீரில் தலையினை நன்கு அலசி விடவும்.

    ஆப்பிள் சிடார் வினிகர் என்று கடையில் கிடைக்கும். இதனை சிறிதளவு நன்கு தலையில் தடவுங்கள். இதன் மருத்துவ குணம் கிருமி நாசினியாக செயல்படும். 15 நிமிடங்கள் தலையில் டவல் சுற்றி வைத்து பின்பு நன்கு தலையினை அலசி விடுங்கள். வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு தலையை மென்மையாய் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை நன்கு சுத்தம் செய்து விடுங்கள். மிக சிறந்த முடி பராமரிப்பாக இது அமையும்.

    ஒரு சிறிய கப் நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தடவி ஐந்து நிமிடங்கள் கழித்து நீரில் தலைமுடியினை அலசுங்கள். பொடுகு மறையும் வரை தினமும் இதனை செய்யலாம்.

    பொடி உப்பினை சிறிது நீரில் கலந்து ஈரமான தலையில் தடவி ஐந்து நிமிடங்களில் அலசுங்கள். வெள்ளை வெள்ளையாக கொட்டுவது நீங்கும்.

    பூண்ட நசுக்கி சாறு எடுத்து தலையில் தடவி பின்னர் ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.

    ஆலிவ் எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து தலையை அலச முடியின் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.
    நாட்டு நலனில் மாணவர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய மாணவர்களே நாளைய பாரதத்தின் தூண்களாவார்கள். எனவே மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று ஊற்றெடுக்க வேண்டும்.
    நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை’ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.

    இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    சுதந்திர காற்று

    இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அந்நியர் ஆட்சியை எதிர்த்து உப்புச் சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அந்நிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.

    தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலைப் போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

    உறுதிமொழி ஏற்போம்

    மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?

    கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளிப் பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.

    “இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்” என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அந்நிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப் படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!

    ஏராளமான சத்துப்பொருட்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.
    கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து உலகம் முழுமையும் பரவிய கனி, செர்ரி. ஏராளமான சத்துப்பொருட்களையும், நோய் எதிர்ப்புப் சக்தியையும் கொண்டுள்ள செர்ரி பழத்தின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.

    * இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட செர்ரி பழங்கள் உண்டு. இவை இரண்டுமே உடலுக்கு நலம்மிக்க சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன.

    * செர்ரி பழங்கள் மிகக் குறைந்த ஆற்றல் வழங்குபவை. ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தவை.

    * ‘ஆன்தோசயனின் கிளைகோசிட்’ எனும் நிறமி செர்ரியில் மிகுந்துள்ளது. இது அவற்றிற்கு சிகப்பு நிறத்தை வழங்குவதுடன் உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும் செயல்படக் கூடியது.

    * புற்றுநோய், உடல் முதுமை அடைதல், நரம்பு வியாதிகள், நீரிழிவு போன்ற கொடிய பாதிப்புகளுக்கு எதிராக உடலை காக்கும் ஆற்றல் புளிப்பு செர்ரி பழத்திற்கு உண்டு.

    * ‘மெலடானின்’ எனும் நோய் எதிர்ப்பொருள் செர்ரி பழத்தில் அதிகமாக இருப்பதால் வலியை கட்டுப்படுத்துவதிலும், தூக்கமின்மை வியாதி, தலைவலி போன்றவற்றிற்கு எதிராகவும் நோய்த் தடுப்புபணியை செய்கிறது.

    * பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் செர்ரி பழத்தில் நிறைந்துள்ளது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் அவசியமான தாதுவாகும்.

    * புளிப்பு செர்ரி பழத்தில் லுடின், ஸி-சான்தின், பீட்டா கரோட்டின் போன்ற ஆரோக்கியம் வழங்கும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன.

    சாப்பிடும் முறை:-

    செர்ரி பழங்களை கழுவி விட்டு அப்படியே சாப்பிடலாம். பீச் பழம், அன்னாசிப் பழம், திராட்சை போன்ற கனிகளுடன் செர்ரியை சேர்த்து பழக்கலவையாகவோ, பழ சாலட்டாகவோ செய்தும் சுவைக்கலாம். கேக், ரொட்டி, பிஸ்கட், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் உலர்த்தப்பட்ட செர்ரி சேர்க்கப்படுகிறது

    மேற்கிந்திய தீவுகளில் கிடைக்கும் ‘அசெரோலா’ வகை செர்ரி பழங்கள், பிற நாடுகளில் கிடைக்கும் செர்ரி பழங்களைவிட ‘வைட்டமின் சி’ மற்றும் ‘வைட்டமின் ஏ’ மிகுதியாகக் கொண்டது.
    போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.
    போதைப் பொருட்களின் பழக்கம் பலவிதங்களில் படர்ந்து கொண்டிருப்பது, திகிலூட்டும் உண்மை. இதன் வீரியத்தை உணர்த்தும் விதமாக அண்மைக் காலத்தில் ஒருபுறம் போதைப் பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்கள் பெருமளவு போலீசில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் ஏராளமான போதைப் பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த போதை ஆபத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற நீங்கள் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதை மறந்துவிடக்கூடாது.

    பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்துதான் போதை முதலில் அறிமுகமாகிறது. வீட்டில் தந்தை மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருக்கும்போது தானும் அதை சுவைக்கிறார்கள். அடுத்து, நண்பர்களாக பழகுகிறவர்கள் இதில் வழிநடத்திச் செல்கிறார்கள். வளரிளம் பருவத்தில் பெற்றோர் சொல்லைவிட நண்பர்கள் சொல்லுக்கு அதிக மதிப்பளிக்கத் தொடங்குவார்கள். அப்போது திரில்லுக்காக, ஜாலிக்காக, அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்வதற்காக, தானும் ஹீரோதான் என்று காட்டிக்கொள்வதற்காக...! இப்படிப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு அத்தகைய ‘நண்பர்களோடு’ சேருகிறார்கள்.

    (முன்பெல்லாம், ‘அப்பா அம்மாவிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை’, ‘என்னை எல்லோரும் அலட்சியப் படுத்துகிறார்கள்’, ‘காதல் தோல்வி என்னை பாதித்து விட்டது’ என்றெல்லாம் போதையில் விழுந்ததற்கு காரணம் சொன்னார்கள். இப்போது அப்படிப்பட்ட காரணங் களை பெரும் பாலானவர்கள் சொல்வ தில்லை. முன்பு ‘தெரியாமல் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்’ என்று சொன்னவர்கள் அதிகம். இப்போது ‘தெரிந்தேதான் அதை பயன்படுத்தினேன்’ என்று சொல்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்)

    கஞ்சா புகைத்தலுக்கு உள்ளாகி மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் கவுன்சலிங்குக்கு ஒத்துழைத்தபோதும், ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அது வித்தியாசமான கோரிக்கை. ‘நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து புகைக்கிறோம். அவர்களையும் திருத்துங்கள். அப்போதுதான் என்னாலும் திருந்தமுடியும்’ என்றான். இந்த அளவுக்கு போதை நண்பர்களின் நட்பு இறுக்கமானதாக இருக்கிறது. இதில் இருக்கும் இன்னொரு ரகசிய உண்மையையும் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.

    ஸ்டிமுலன்ட் டிரக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப் பொருள், அதை பயன்படுத்துகிறவரை சில நாட்கள் தூங்கவிடாது. இரவும் பகலும் அவர்கள் உற்சாகத்தில் மிதப்பதுபோல் ஒருவித தூண்டுதல் மாயையை தோற்றுவிக்கும். மீண்டும் அவர்கள் தூங்கவேண்டும் என்றால் அதற்கு டிப்ரசன்ட் டிரக்ஸ் வகை போதைப் பொருளை அவர்கள் தேடும் நிலை உருவாகிவிடும். ஆஸ்டலில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளில் ஒருசிலர் முதலில் இருந்தே பரீட்சைக்கு முறையாக தயாராகாமல், பரீட்சை நெருங்கும் நேரத்தில் பயந்துபோய் தூங்காமல் விழித்திருந்து படிக்க முடிவுசெய்வார்கள்.

    அப்படிப்பட்ட தருணத்திற்காக காத்திருக்கும் பிரச்சினைக்குரிய நண்பர்கள், அவர்களை மிக எளிதாக தன்வசப்படுத்தி ஸ்டிமுலன்ட் டிரக்ஸை அறிமுகம் செய்வார்கள். அதை உபயோகிக்கும் அவர்களுக்கு, ஒருசில நாட்கள் கழித்து, தூக்கத்திற்காக டிப்ரசன்ட் டிரக்ஸை கொடுப்பார்கள். இப்படியே அவர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். ஆஸ்டல் மாணவ- மாணவிகள் இப்படிப்பட்டவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டும்.

    இ்ந்த விஷயத்தில் பெற்றோர்களின் கடமை என்ன?

    - உங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்றாலும்- கல்்லூரிக்கு சென்றாலும், ஆஸ்டலில் தங்கிப்படித்தாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணியுங்கள். அவர்களிடம் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்களையும் கவனியுங்கள். ‘என் பிள்ளை அப்படி எல்லாம் செய்யமாட்டான்!’ என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் முதல் வேலையாக அந்த எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். யாரும், எந்த நேரத்திலும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகலாம் என்ற நிஜத்தை ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

    - பிள்ளைகளின் உடையையும், உடலையும் எல்லா நேரங்களிலும் கவனித்துப்பாருங்கள். உடையில் புகைப்பிடித்தலின்போது தீப்பட்ட சிறிய துவாரங்கள் தென்படலாம். உடலில் போதை ஊசிகளை குத்திக்கொண்ட அடையாளம் இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

    - அவர்களது தூக்கத்திலும், உணவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். சிலர் தூங்கவே மாட்டார்கள். சிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுவார்கள். மிக அதிகமான நேரம் டாய்லெட்டில் போய் உட்கார்ந்துகொள்வார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர்கள் நடத்தையிருக்கும். தன்னைவிட அதிக வயதுள்ளவர்களிடம் நெருக்கமாக இருப்பார்கள். இப்படி எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதை தீரவிசாரித்து தெளிவு பெறுங்கள்.

    போதையில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை மீட்டுக் கொண்டுவரவும் இரண்டு அருமையான ‘மருந்துகள்’ இருக்கின்றன. ஒன்று- உடலுக்கு ஊக்கம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது. இரண்டு- தியானம் மேற்கொள்வது. சிறுவயதில் இருந்தே இந்த இரண்டிலும் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். உடலும், மனமும் அதன் மூலம் பலம்பெற்று ஒருநிலைப்படும். அவர்களது வாழ்க்கையும் வளம்பெறும்.

    - விஜயலட்சுமி பந்தையன்.
    பெயரிலேயே இனிப்பு இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும்.
    ‘சர்க்கரை’வள்ளிக்கிழங்கு எனப் பெயரிலேயே இனிப்பு இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடக்கூடாது என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. அது தவறு. உண்மையில் இது மாற்றான குணங்களைக் கொண்டது. இதற்கு சர்க்கரைநோயை வராமல் தடுக்கும் குணமும் உண்டு.

    சர்க்கரைவள்ளிக்கிழங்கில் குறைந்தளவில் கிளைசெமிக் இண்டெக்ஸ் (Lower Glycemic Index)  இருப்பதால், சர்க்கரைநோய் உள்ளவர்களும் இதைச் சாப்பிடலாம். அதாவது, இதைச் சாப்பிடுகிறவர்களுக்கு உடலில் இன்சுலின் சீராகச் சுரக்கவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கவும் உதவும் இந்தக் கிழங்கு. மேலும், ‘இதில் உள்ள நார்ச்சத்து உணவிலுள்ள குளூகோஸை ரத்தத்தில் சேர்க்கும் வேகத்தை வெகுவாகக் குறைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்’ என்றும் சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    சர்க்கரைவள்ளிக் கிழங்கில் GI  ( Glycemic Index) அளவு குறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது, ஆகவே சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஏற்ற வகையில் உங்கள் உணவைத் திட்டமிடுவதிலும் இது உதவும். இவற்றில் அதிக நார்ச்சத்தும் உள்ளது, ஆகவே நீரிழிவுநோய் உள்ளவர்களும் தனது தினசரி உணவுத் திட்டத்தில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த GI இருந்தால், அந்த உணவு உடனடியாக சிதைத்து செரிக்கப்படாது, அதாவது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுகளை உடனடியாக அதிகரிக்காது.

    மொத்தத்தில், சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கருத்தில் கொள்ளும்போது, அதனை நாம் கொண்டாட வேண்டும் எனலாம்! எனினும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், இதனை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவுத்திட்டம் மிகவும் முக்கியம்.

    அஜீரணம், மலச்சிக்கல், வயிறு உப்புசம் இருக்கும்போது சர்க்கரைவள்ளிக்கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
    கணவன் - மனைவி இருவரும் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஆளுக்கொரு வாகனம், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க மற்றொரு வாகனம் இதெல்லாம் குடும்ப பட்ஜெட்டை எகிற வைத்து விடும்.
    இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகள் பெருமளவு அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதனை சமாளிக்க கணவனும் - மனைவியும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டு விட்டது. அப்படி இரு வருமானம் வந்த பிறகும் சேமிப்பு என்பது சிரமமான விஷயமாகவே இருக்கிறது. மாதக்கடைசியில் வரவுக்கும், செலவுக்கும் இடையே பெரும் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் ஒவ்வொரு குடும்பத்திலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிப்பதுதான். பல குடும்பங்களில் மாத பட்ஜெட்டில் துண்டும் விழுந்துவிடுகிறது.

    பொதுவாக குடும்ப செலவுகளில் போக்குவரத்து செலவு முக்கியமானதாக இருக்கிறது. சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்கள் எரிபொருளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது. அந்த செலவை குறைக்க அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் சொந்த வாகனத்தை உபயோகிக்க வேண்டும். மற்ற தேவைகளுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்துவது நல்லது.

    கணவன் - மனைவி இருவரும் அலுவலகத்திற்கு செல்வதற்கு ஆளுக்கொரு வாகனம், பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க மற்றொரு வாகனம் இதெல்லாம் குடும்ப பட்ஜெட்டை எகிற வைத்து விடும். அதுபோல தொலைதூர பயணத்திற்கு சொந்த வாகனத்தை பயன்படுத்துவதாலும் செலவு அதிகரிக்கும். அதற்கு பஸ், ரெயில் போக்குவரத்தை நாடுவது செலவை குறைக்கும்.

    நிறைய வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வாகனங்கள் இருக்கின்றன. சொந்தமாக பெரிய வீடு கட்டி குடியிருந்தாலோ, வாடகை வீட்டில் வசித்தாலோ வீட்டுக்கு முன்பு இரண்டு கார்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி இருப்பதை கவுரவமாக பார்க்கிறார்கள். அவை பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கும். ஆனால் அது தேவையா? என்று சிந்தித்து பாருங்கள். ‘வாகனம் அடுத்தவர்கள் உங்களை மதிப்பதற்கு அல்ல. அத்தியாவசியத்திற்கு தேவையானது’ என்பதை மனதில் நிறுத்தி வாகனங்களின் எண்ணிக்கையை குறையுங்கள். பயனற்ற நிலையில் தேவைக்கு அதிகமாக இருக்கும் வாகனங்களை விற்பது நல்லது. அதன் மூலம் பணம் வரும். பராமரிப்பு செலவும் குறையும். வருடந்தோறும் செலவிடப்படும் இன்சூரன்ஸ் தொகையும் மிச்சமாகும்.

    இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது. ஒரே இடத்தில் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை சொந்த வாகனத்தில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அந்த மாதிரி சூழ்நிலையில் வாகனத்தை ‘ஆப்’ செய்வது எரிபொருளை மிச்சம் பிடிக்க உதவும். ஒரே அலுவலகத்திலோ அல்லது பக்கத்து அலுவலகங்களிலோ பணி புரிபவர்கள் தங்களுக்குள் நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு ஒரு வாரம் ஒருவருடைய வாகனத்தில் பணிக்கு செல்லலாம். மறு வாரம் மற்றொருவர் வாகனத்தில் பயணிக்கலாம். அப்படி இருவரும் ஒரே வாகனத்தில் பயணிக்கும்போது எரிபொருள் செலவு குறைவதோடு நட்பும் மேம்படும்.

    அலுவலகம் செல்லும் நிறைய பேர் வீட்டில் இருந்து கைவீசியபடி செல்ல விரும்புகிறார்கள். ஏதாவதொரு ஓட்டலில் மதிய உணவை சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். தனியாக சாப்பிட செல்ல விரும்பாமல் துணைக்கு இன்னொருவரையும் அழைத்து சென்று விடுகிறார்கள். இதனால் செலவு அதிகமாகும். முடிந்த அளவு வீட்டில் இருந்து மதிய உணவை எடுத்து செல்லும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    குடும்பத்துடன் சேர்ந்து வெளியூர் பயணங்கள் செல்லும்போது முடிந்த அளவு எல்லோருக்குமான உணவை கையோடு எடுத்து செல்வது நல்லது. அதன் மூலம் ஓட்டல் எங்கு இருக்கிறது என்று தேடி அலைவது மிச்சமாகும். பணமும் மிச்சமாகும். ஓட்டல் உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போனால் சிகிச்சைக்கு பணம் செலவழிக்க நேரிடும்.

    தொலைதூர பயணம் செல்பவர்கள் தண்ணீர் பருகுவதற்காக பணத்தை தண்ணீராக செலவிடுகிறார்கள். வாகனங்களை நிறுத்தும் இடங்களிலெல்லாம் மினரல் வாட்டர் வாங்கி பருகுகிறார்கள். மொத்தமாக எவ்வளவு வாங்கி யிருப்பார்கள் என்று கணக்கு பார்த்தால் அதற்கே பெருந்தொகை செலவாகி இருக்கும். சாலையோர பயணத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் வாங்கும் பாட்டில் தண்ணீர் சுகாதாரமானதாக இருப்பதில்லை. வீட்டில் கொதிக்க வைத்து ஆற வைத்த நீரை கொண்டு செல்வதன் மூலம் ஆரோக்கியத்தை பேணலாம். பெருமளவு பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஓட்டல் உணவுகளை சாப்பிடும் சூழல் வரும்போது புதியவகை உணவுகளை தேவையை விட குறைவாக ஆர்டர் செய்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடலாம். அதன் மூலம் எல்லோரும் எல்லா உணவு வகைகளையும் சாப்பிட்ட திருப்தி உண்டாகும். உணவும் வீணாகாது. பணமும் மிச்சமாகும்.

    பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கான கியாஸ் அதிக அளவில் செலவிடப்படுகிறது. 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு சராசரியாக 35 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் போதுமானது. அதற்கு மேல் கியாஸ் செலவானால் தேவைக்கு அதிகமாக கியாஸ் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். அதனை அளவோடு பயன்படுத்த வேண்டும். எண்ணெய்யில் பலகாரங்கள் தயார் செய்யும்போது கடைசி பலகாரத்தை சுட்டெடுக்கும் வரை ஸ்டவ் அடுப்பு எரிந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நான்கைந்து பலகாரங்கள் இருக்கும்போதே ஸ்டவ் அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே மீதி பலகாரங்களை வேகவைத்திட முடியும்.

    உங்கள் வீட்டில் கியாஸ் அதிகமாக செலவாகுவதற்கு பிரிட்ஜில் இருந்து எடுத்த பொருட்களை உடனே சமைப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி உடனே எடுத்து சமைக்கும்போது கியாஸ் நிறைய செலவாகும். உணவில் உள்ள சீதோஷண சமன்பாடும் சரி இல்லாமல் போய்விடும். பிரிட்ஜில் இருந்து எடுத்த பொருட்களை அரை மணி நேரம் வெளியே வைத்துவிட்டு குளிர் நீங்கிய பிறகு சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் கியாஸை மிச்சப்படுத்தி விடலாம்.

    பிரஷர் குக்கர் பயன்படுத்தினால் கியாஸ் செலவு குறையும் என்பது உண்மைதான். ஆனால் சிறிய பொருளை வேக வைப்பதற்கு பெரிய அளவிலான குக்கரை பயன்படுத்தினால் எரிபொருள் செலவு அதிகமாகிவிடும். அதனால் வேக வைக்கும் பொருளுக்கு தகுந்த குக்கரை தேர்ந்தெடுங்கள்.

    சில வீடுகளில் மதியம், இரவு என இரு வேளைக்கும் தனித்தனியாக சமைப்பார்கள். அந்த சமையலை ஒரே நேரத்தில் செய்து முடித்து சூட்டை தக்கவைத்துக்கொள்ளும் தெர்மல் குக்கரில் எடுத்து வைத்து கியாஸ் செலவை குறைக்கலாம். பிறந்தநாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து விருந்து உபசாரம் நடத்தும் வழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. அதற்கு விலை உயர்ந்த ஓட்டல் உணவுகளை ஆர்டர் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஓட்டல்களில் அந்த நிகழ்ச்சியையும் நடத்துகிறார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே விதவிதமாக சமைத்து பரிமாறினால் செலவு குறையும். அன்பும் பெருகும்.

    வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும்போது நிறைய பணம் செலவாகும். சரியான திட்டமிடுதல் மூலம் செலவை பெருமளவு குறைக்க முடியும். பயணம் செல்லும் இடம், அங்கு பார்க்க வேண்டிய இடங்கள், அங்கு கிடைக்கும் உணவு வகைகள், ஓட்டல்கள் பற்றிய தகவல்களை முன் கூட்டியே திரட்டி திட்டமிடுதலுடன் செயல்பட வேண்டும். அங்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையில் இருந்தால் செலவு தாறுமாறாக எகிறிவிடும். சீசன் நேரத்தில் பயணங்கள் செல்லும்போது செலவுகள் அதிகரிக்கும். ஏராளமான மக்கள் குறிப்பிட்ட ஒரே இடத்துக்கு செல்லும்போது கட்டணங்கள் தாறுமாறாக அதிகரித்துவிடும். சீசன் இல்லாத நேரத்தில் பயணத்தை திட்டமிடுவது நல்லது.

    சுற்றுலா செல்லும்போது ஒருசிலரோடு செல்லாமல் குடும்ப நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து செல்வது நல்லது. அப்படி சென்றால் செலவு குறையும். அவர்களுடன் சேர்ந்து உற்சாகமான மனநிலையில் அந்த இடங்களை சுற்றிப்பார்க்கவும் செய்யலாம். பயணங்களின்போது பெருமளவு ரொக்க பணத்தை கையில் எடுத்து செல்வது பாதுகாப்பாக இருக்காது. இஷ்டப்படி செலவு செய்யும் மன நிலை உருவாகிவிடும். அதனால் பணம் தண்ணீர் போல செலவாகிக்கொண்டே இருக்கும். குறைந்த அளவு பணத்தை எடுத்து செல்வதே நல்லது. அத்தியாவசிய தேவைகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற வீட்டு உபயோக பொருட்களை வாங்கும்போது என்ன மாதிரி ஸ்டார் குறியீடு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்டார் குறியீடு கூடுதலாக இருந்தால் மின்சார செலவு குறையும். ஒரு ஸ்டார் கூடும்போது 10 முதல் 30 சதவீதம் வரை மின்சார செலவை குறைக்கலாம். இன்வெட்டர் டெக்னாலஜி உள்ள பொருட்கள் விலை கூடுதலாக இருந்தாலும் மின்சார செலவு குறைவாகத்தான் இருக்கும்.
    ×